உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • lmd பாடம் 4
  • மனத்தாழ்மை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மனத்தாழ்மை
  • அன்பு காட்டுங்கள்—சீஷராக்குங்கள்
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பவுல் என்ன செய்தார்?
  • பவுலிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
  • பவுல் மாதிரி நடந்துகொள்ளுங்கள்
  • மனத்தாழ்மையுள்ளவர்கள் யெகோவாவுக்குத் தங்கமானவர்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2019
  • பின்பற்றுவதற்கான மனத்தாழ்மையின் முன்மாதிரிகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • உண்மையான மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்ளுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • ‘நான் மனத்தாழ்மையாக இருக்கிறேன்’
    என்னைப் பின்பற்றி வா
மேலும் பார்க்க
அன்பு காட்டுங்கள்—சீஷராக்குங்கள்
lmd பாடம் 4

பேச ஆரம்பிப்பது

ஒரு காவலாளியோடு சேர்த்து அப்போஸ்தலன் பவுல் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறார். அகிரிப்பா ராஜா, ஆளுநர் பெஸ்து மற்றும் பெர்னீக்கேயாளிடம் அவர் மரியாதையோடு பேசுகிறார்.

அப். 26:2, 3

பாடம் 4

மனத்தாழ்மை

நியமம்: “மனத்தாழ்மையினால் . . . மற்றவர்களை உங்களைவிட உயர்ந்தவர்களாகக் கருதுங்கள்.”—பிலி. 2:3.

பவுல் என்ன செய்தார்?

ஒரு காவலாளியோடு சேர்த்து அப்போஸ்தலன் பவுல் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறார். அகிரிப்பா ராஜா, ஆளுநர் பெஸ்து மற்றும் பெர்னீக்கேயாளிடம் அவர் மரியாதையோடு பேசுகிறார்.

வீடியோ: அகிரிப்பா ராஜாவிடம் பவுல் பிரசங்கிக்கிறார்

1. வீடியோவைப் பாருங்கள், அல்லது அப்போஸ்தலர் 26:2, 3-ஐ வாசியுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளை யோசித்துப் பாருங்கள்:

  1. அ. அகிரிப்பா ராஜாவிடம் பேசியபோது பவுல் எப்படி மனத்தாழ்மையைக் காட்டினார்?

  2. ஆ. தன்மேல் கவனத்தைத் திருப்புவதற்குப் பதிலாக, பவுல் எப்படி யெகோவாமேலும் அவருடைய வார்த்தையின்மேலும் கவனத்தைத் திருப்பினார்?—அப்போஸ்தலர் 26:22-ஐப் பாருங்கள்.

பவுலிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

2. நாம் மனத்தாழ்மையோடும் மரியாதையோடும் பேசும்போது, நம் செய்தி மற்றவர்களுடைய மனதைத் தொடும்.

பவுல் மாதிரி நடந்துகொள்ளுங்கள்

3. எல்லாம் தெரிந்தவரைப்போல் காட்டிக்கொள்ளாதீர்கள். உங்களுக்குத்தான் எல்லாம் தெரியும், மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது என்பதுபோல் அவர்களை நினைக்க வைக்காதீர்கள். அவர்களிடம் மரியாதையோடு பேசுங்கள்.

4. பைபிளிலிருந்து பேசுங்கள். கடவுளுடைய வார்த்தையில் இருக்கிற விஷயங்கள் மக்களுடைய மனதைத் தொடும். அதனால், அதிலிருந்து பேசும்போது, சரியான அஸ்திவாரத்தின்மேல் அவர்களுடைய விசுவாசத்தை நம்மால் கட்ட முடியும்.

5. சாந்தமாக நடந்துகொள்ளுங்கள். நீங்கள் சொல்வதுதான் சரி என்பதை நிரூபிக்க முயற்சி செய்யாமல் மனத்தாழ்மையைக் காட்டுங்கள். எப்படி? யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் சாந்தமாக நடந்துகொள்ளுங்கள். ஒருவேளை, அந்த இடத்தைவிட்டு நீங்கள் கிளம்பக்கூட வேண்டியிருக்கலாம். (நீதி. 17:14; தீத். 3:2) நாம் சாந்தமாக நடந்துகொண்டால், வேறொரு சமயத்தில் அவர் நம் செய்தியைக் கேட்கலாம்.

இதையும் பாருங்கள்

ரோ. 12:16-18; 1 கொ. 8:1; 2 கொ. 3:5

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்