உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • lmd பாடம் 7
  • விடாமுயற்சி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • விடாமுயற்சி
  • அன்பு காட்டுங்கள்—சீஷராக்குங்கள்
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பவுல் என்ன செய்தார்?
  • பவுலிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
  • பவுல் மாதிரி நடந்துகொள்ளுங்கள்
  • மனத்தாழ்மை
    அன்பு காட்டுங்கள்—சீஷராக்குங்கள்
  • அக்கறை
    அன்பு காட்டுங்கள்—சீஷராக்குங்கள்
  • பொறுமை
    அன்பு காட்டுங்கள்—சீஷராக்குங்கள்
  • ஆர்வம் காட்டுவோரை மீண்டும் சந்தித்தல்—எப்போது?
    நம் ராஜ்ய ஊழியம்—2009
மேலும் பார்க்க
அன்பு காட்டுங்கள்—சீஷராக்குங்கள்
lmd பாடம் 7

மறுபடியும் சந்திப்பது

அப்போஸ்தலன் பவுல், ஒரு பள்ளி அரங்கத்தில் கூடியிருப்பவர்களிடம் நல்ல செய்தியைப் பிரசங்கிக்கிறார்.

அப். 19:8-10

பாடம் 7

விடாமுயற்சி

நியமம்: “அவர்கள் . . . இடைவிடாமல் கற்பித்து, கிறிஸ்துவாகிய இயேசுவைப் பற்றிய நல்ல செய்தியை அறிவித்துவந்தார்கள்.”—அப். 5:42.

பவுல் என்ன செய்தார்?

அப்போஸ்தலன் பவுல், ஒரு பள்ளி அரங்கத்தில் கூடியிருப்பவர்களிடம் நல்ல செய்தியைப் பிரசங்கிக்கிறார்.

வீடியோ: எபேசுவில் பவுல் விடாமுயற்சியோடு சொல்லிக்கொடுக்கிறார்

1. வீடியோவைப் பாருங்கள், அல்லது அப்போஸ்தலர் 19:8-10-ஐ வாசியுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளை யோசித்துப் பாருங்கள்:

  1. அ. ஒருசிலர் எதிர்த்தாலும், ஆர்வம் காட்டிய மற்றவர்களுக்கு பவுல் எப்படித் தொடர்ந்து உதவி செய்தார்?

  2. ஆ. ஆர்வம் காட்டியவர்களுக்கு சொல்லித்தர பவுல் எவ்வளவு அடிக்கடி அவர்களைப் போய்ப் பார்த்தார்? எவ்வளவு காலத்துக்கு இப்படிச் செய்தார்?

பவுலிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

2. மறுசந்திப்புகளை நன்றாகச் செய்வதற்கும் பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதற்கும், நம்முடைய நேரத்தைச் செலவு செய்ய வேண்டும், முயற்சியும் எடுக்க வேண்டும்.

பவுல் மாதிரி நடந்துகொள்ளுங்கள்

3. ஆர்வம் காட்டியவருடைய வசதிக்கு ஏற்ற மாதிரி உங்கள் அட்டவணையை மாற்றிக்கொள்ளுங்கள். இப்படி யோசித்துப் பாருங்கள்: ‘எங்கே, எப்போது போய்ப் பார்ப்பது அவருக்கு வசதியாக இருக்கும்?’ அந்த நேரம் உங்களுக்கு வசதியாக இல்லாவிட்டாலும், அவரைப் போய்ப் பார்ப்பதற்குத் தயாராக இருங்கள்.

4. மறுபடியும் எப்போது சந்திக்கலாம் என்று கேளுங்கள். ஒவ்வொரு தடவை பேசி முடிக்கும்போதும், அடுத்து அவரை எப்போது சந்திக்கலாம் என்று கலந்துபேசி முடிவு செய்யுங்கள். சொன்ன நேரத்துக்கு சொன்னபடி போங்கள்.

5. நம்பிக்கையோடு இருங்கள். ஒருவரை வீட்டில் பார்க்கவே முடியாமல் இருக்கலாம். அல்லது அவர் எப்போதுமே வேலையாக இருக்கலாம். அதற்காக, அவருக்கு ஆர்வமே இல்லை என்று அவசரப்பட்டு முடிவு செய்துவிடாதீர்கள். (1 கொ. 13:4, 7) அவரை மறுபடியும் போய்ப் பார்க்க விடாமுயற்சி செய்யுங்கள். அதேசமயம், உங்கள் நேரம் வீணாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.—1 கொ. 9:26.

இதையும் பாருங்கள்

அப். 10:42; 1 கொ. 9:22, 23; 2 கொ. 4:1; கலா. 6:9

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்