உங்களுடைய விலைமதிப்புள்ள பொருட்களால் நீங்கள் யெகோவாவை கனம்பண்ணுகிறீர்களா?
“அருமை சகோதரர்களே: நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்? நான் பெரியவளாகும்போது ஒரு மிஷனரியாக ஆக விரும்புகிறேன். மிஷனரிகளுக்கு உதவுவதற்கு தயவுசெய்து இந்த டாலரை பயன்படுத்துங்கள்” என்று எழுதினாள் மூன்று வயது ஷெல்லி. அவளுடைய சிறு பிள்ளைத்தனமான கிறுக்கலானது அந்த கடிதத்தின் கீழே அவளுடைய தாயால் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.
அதிக இயல்பான விதத்தில் ஸ்டீஃபன் எழுதினதாவது: “அருமை பைபிள் மற்றும் துண்டுபிரதி சங்கமே. நான் 8 வயது சிறுவன், நான் 89-வது தெருவில் வசிக்கிறேன். நீங்கள் ஜாலியாக இருப்பீர்களென்று நான் நம்புகிறேன். ராஜ்ய மன்ற நிதிக்காக நான் உங்களுக்கு ஒரு டாலர் கொடுக்கிறேன். விரைவில் எனக்கு கடிதம் எழுதுங்கள்.”
காவற்கோபுர சங்கத்தின் கிளைக் காரியாலயத்திற்கு ஏன் இந்த இளைஞர்கள் கடிதம் எழுதினார்கள்? ஏனெனில் அவர்கள் தங்களிடமிருந்ததை அவருடைய துதியின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதன் மூலம் யெகோவாவை கனப்படுத்த விரும்பினார்கள். அவைகள் பைபிளின உரிமைக் கட்டளையாக இருந்தன: “உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் [யெகோவாவைக், NW] கனம்பண்ணு.”—நீதிமொழிகள் 3:9.
இந்த கனத்தை பெறுவதற்கு யெகோவா நிச்சயமாகவே தகுதி வாய்ந்தவர். எவரும் அவருக்கு நிகரில்லை. வெளிப்படுத்துதல் 4:11 சொல்லுகிற பிரகாரம்: “கர்த்தாவே [யெகோவா, NW] தேவரீர், மகிமையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக் கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர், நீரே, சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.” “அவருக்குள்ளாகதான் நாம் பிழைத்திருக்கிறோம், செயலாற்றுகிறோம், இருக்கிறோம்” என்பது மட்டுமே அல்ல, ஆனால் அவர் நமக்கு வெகு சிறந்தவற்றையும் அளித்திருக்கிறார். (அப்போஸ்தலர் 17:28) பைபிள் எழுத்தாளர் யாக்கோபு நமக்கு நினைப்பூட்டுகிறபடி “நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும்” அளிப்பவர் கடவுளே.—யாக்கோபு 1:17.
என்றபோதிலும் யெகோவாவை துதிப்பதற்கும் கனப்படுத்துவதற்குமான அவசியத்தை எல்லாருமே மதித்துணருவது இல்லை. மெய்யாகவே, கோடிக்கணக்கான ஆட்கள் அவருடைய பெரையும்கூட அறியாமல் இருக்கின்றனர். “சிருஷ்டிகரை தொழுவதற்கு மாறாக” அநேகர் சிருஷ்டியை தொழுகின்றனர். (ரோமர் 1:25) உண்மை இருதயமுள்ள ஆட்கள் தெளிவு பெறுவதற்கு உதவ வேண்டும். யெகோவா தேவன் விரைவில் தீவிர செயலில் இறங்குவார் என்பதை அவர்கள் அறிவது அவசியம். தமது குமாரனுடைய ஆட்சியின் மூலமாக அவர் இந்த பூமியை ஒடுக்குபவர்களிடமிருந்தும் மற்றும் அவர்களுடைய ஒடுக்குதலிலிருந்து என்றென்றுமாக விடுவித்து மீண்டுமாக காரியங்களை அதன் பூரண சமநிலையிலே நிலைநிறுத்துவார். மேலும் பரதீசையும் பரிபூரண ஆரோக்கியத்துடன் என்றென்றுமாக வாழும் மனிதனின் ஆற்றலையும் திரும்ப நிலை நாட்டுவார். (தானியேல் 2:44; வெளிப்படுத்துதல் 21:1, 3, 4) மெய்யாகவே நீதியை தேடக்கூடியவர்களின் உயிரானது இந்த அறிவை உட்கொண்டு இந்த அறிவின்பேரில் செயற்படுவதன் மீதே சார்ந்திருக்கிறது.—செப்பனியா 2:3; யோவான் 17:3.
மனவிருப்பமும் மதித்துணருதலும் தேவைப்படுகிறது. இந்த ஜீவனை காக்கும் வேலையில் நீங்களும்கூட பங்குகொள்ள விரும்புகிறீர்களா? “பூமி முழுவதிலும்” ராஜ்யத்தைப் பற்றிய “நற்செய்தி” பரவுவதில் அதிகம் உட்பட்டிருக்கிறது. (மத்தேயு 24:14) மனவிருப்பமுள்ள வேலையாட்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும். ஆயத்தம் செய்யப்பட்டு பிரசங்கிக்க வெளியே அனுப்பப்பட வேண்டும். 30,00,000-ற்கும் மேற்பட்ட ஆட்கள் உலக முழுவதிலும் ராஜ்ய நற்செய்தியை பிரசங்கிப்பதன் மூலம் யெகோவாவை இப்பொழுது கனப்படுத்துவதை காண்பது எவ்வளவு மகிழ்ச்சியூட்டுவதாயிருக்கிறது! சிறப்பு வாய்ந்த எண்ணிக்கையினர் இதை முழுநேர அடிப்படையில் செய்து வருகின்றனர். வெகு அதிகமான தேவையுள்ள பிராந்தியங்களுக்கு அநேகர் இடம் மாறி செல்வதன் மூலமும் இதை செய்திருக்கின்றனர். பல்லாயிரக்கணக்கான மிஷனரிகள் பிரசங்க வேலையை முதன் முதலாக ஆரம்பிப்பதற்கு மற்ற தேசங்களுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டிருக்கின்றனர். அவர்களுடைய அணியில் கூடுதலான ஆட்கள் தொடர்ந்து சேர்ந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த வேலைகளை கண்காணிக்கவும் தொடர்ந்து பராமரிக்கவும் மற்றும் அதிக விரிவான ஒழுங்கமைப்பு ஏற்பாடுகள் தேவைப்படுகிறது. பூகோள முழுவதிலும் புதிய கிளைக்காரியாலய வசதிகளையும் மற்றும் மிஷனரி வீடுகளையும் கட்ட வேண்டியதாக இருந்திருக்கிறது. மற்றும் அவற்றை விஸ்தாரப்படுத்த வேண்டியதாகவுமிருக்கிறது. முன்னொருபோதுமில்லாத வேகத்தில் தற்போது உள்ளுர் ஆராதனை இடங்களும்—ராஜ்ய மன்றங்கள் மாநாட்டு மன்றங்கள்—கட்டப்படுகின்றன. தங்களிடமிருக்கும் அனைத்தையும் யெகோவாவின் சேவையில் பயன்படுத்துவதற்கு யெகோவாவின் ஜனங்கள் இவ்வளவு மனவிருப்பமுள்ளவர்களாக இருப்பதை காண்பது இருதயத்திற்கு அனல் மூட்டுவதாயிருக்கிறது. (சங்கீதம் 100:3) ஆனால் இந்த கடைசி நாட்களில் நிகழும் கூட்டிசேர்ப்பு வேலையானது “தீவிரப்படுத்தப்படும்” என்ற முன்னறிவிப்பதானது நமது விலைமதிப்புள்ள பொருட்களைக் கொண்டு யெகோவாவை கனப்படுத்துவதற்குரிய நமது மன விருப்பத்தை இப்பொழுது தீவிரமாக்குவதை கேட்கிறது. (ஏசாயா 60:22) அப்படியானால் நம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது?
போற்றுதல் ஒரு காரியமாக இருக்கிறது—யெகோவா நமக்கு கொடுத்திருக்கக்கூடிய எல்லாவற்றிற்காகவும் போற்றுதல் ஆம், நம்மிடமிருக்கும் உடைமைகளனைத்தும் உண்மையில் யெகோவாவிடமிருந்து கிடைக்கபெற்ற வெகுமதிகளே. “அன்றியும் உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக் கொள்ளாதது யாது?” என்று கேட்கிறான் அப்போஸ்தலனாகிய பவுல். (1 கொரிந்தியர் 4:7) மேலும் என்ன நோக்கத்திற்காக கடவுள் அவற்றை நமக்கு கொடுத்திருக்கிறார்? இந்த வெகுமதிகளை அவரை கனப்படுத்துவதற்கு பயன்படுத்தும்படிக்கே!—1 பேதுரு 4:10, 11.
இந்த வெகுமதிகளில் அல்லது ஈவுகளில் நமது சரீர சம்பந்தமான, மனசம்பந்தமான, ஆவிக்குரிய சம்பந்தமான, மற்றும் பொருளாதார உடைமைகளும்—ஆம், நமது உயிரும்கூட அடங்கியிருக்கிறது. ஆகவே நம் ஒவ்வொருவருக்கும் யெகோவா ஆ, எவ்வளவு பெருந்தன்மையுள்ளவராக இருந்திருக்கிறார்! கொடுப்பதில் எவ்வளவு சிறந்ததோர் முன்மாதிரி! நிச்சயமாகவே யெகோவாவின் செழுமையிலிருந்து இவ்வளவு அதிகத்தை பெற்றிருப்பது, இப்படிப்பட்ட முன்னேற்பாடுகளுக்கு போற்றுதலை காண்பிப்பதற்கு நம்மை தூண்டவேண்டும். இதன் மூலம் நம்மிடமுள்ளவற்றை கொண்டு அவரை கனப்படுத்துவதற்கு நாம் தூண்டப்படவில்லையா?
உங்களால் என்ன செய்யக்கூடுமோ அது குறைந்ததே என்று நீங்கள் ஒருவேளை உணரக்கூடும். எல்லோருமே தூர தேசத்தில் மிஷனரிகளாக சேவை செய்ய முடியாது. அல்லது முழு நேர சேவையின் ஏதாவதொரு அம்சத்தில் தன்னை அற்பணிக்க முடியாதென்பது உண்மையே. அல்லது சங்கத்தின் கட்டிட வேலைநடக்கும் இடங்களுக்கு சென்று உதவ பெரும்பாலான நமக்கு ஆற்றலோ வசதியோ இருப்பதில்லை. மேலும் முக்கிய பிரசுரங்கள் அதாவது இந்த பத்திரிகை போன்றவை அச்சடிக்கப்படக்கூடிய கிளை அலுவலகங்களில் சேவை செய்வதற்காக தங்கள் வாழ்க்கையை அற்பணிப்பதற்கு தனிப்பட்ட சூழ்நிலைமைகளும்கூட கட்டுப்படுத்தக்கூடும். எனினும் கொடுப்பதினால் வரக்கூடிய மிகுதியான சந்தோஷத்தை ஒவ்வொருவரும் அனுபவித்துக் களிக்கலாம். (அப்போஸ்தலர் 20:35) மேலும் கடவுளை பிரியப்படுத்தக்கூடிய வகைகளில் நமது வாழ்க்கையையும் வார்த்தைகளையும் நாம் அனைவரும் பயன்படுத்தலாம். மேலும் அவருக்கு கனத்தையும் புகழையும் கொண்டு வரலாம்.—கொலோசெயர் 3:23.
இது எப்படி செய்யப்படலாம்
அவ்வளவு சிறுவயதினராக இருந்தபோதிலும் ஷெல்லி மற்றும் ஷ்டீஃபன் ஒரு வழியை கண்டுபிடித்தார்கள். காவற்கோபுர சங்கத்துக்கு அனுப்பப்படும் தங்களுடைய காணிக்கை உலகளாவிய பிரசங்க வேலையின் விரிவாக்கத்துக்கு பயன்படும் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். அவர்களுடைய காணிக்கை தொகை என்னவாக இருந்தபோதிலும் நிச்சயமாகவே அது போற்றப்பட்டது. ஸ்டீஃபன் தன்னுடைய அங்கீகரிப்பு கடிதத்தை பெற்றுக் கொண்டான். அப்படியே சிறுமி ஷெல்லியும் பெற்றுக் கொண்டாள். தொகையின் அளவு அல்ல ஆனால் உள்நோக்கமே முக்கியமுடையதென கருதப்படுகிறது. வெகுமதி ஏற்றுக்கொள்ளப் படத்ததக்கதாக இருக்க வேண்டுமாயின் அது முற்றிலும் மனமுவந்த ஒன்றாயிருக்க வேண்டும். (2 கொரிந்தியர் 9:7) நம்முடைய காணிக்கைகள் பெரியதோ அல்லது சிறியதோ எதுவாயிருப்பினும் அது அவருக்கு நம்முடைய முழு ஆத்துமாவுடன்கூடிய பக்தியை வெளிப்படுத்துமாயின் யெகோவா அதில் பிரியங்கொள்ளுகிறார்.—லூக்கா 21:1-4.
அப்படியானால் போற்றுதல், செயல்களால் காட்டப்படுகிறது. கடவுளை கனப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படக்கூடிய என்னென்ன விலைமதிப்புள்ள காரியங்கள் நம்மிடமிருக்கிறது என்று நாம் கணக்கெடுத்திருக்கிறோமா? நமது வாழ்க்கையில் நாம் கொண்டிருக்கக்கூடிய வலிமை மற்றும் பலம் எதுவாயிருப்பினும், நிச்சயமாக விலைமதிப்புள்ள ஒன்றாயிருக்கிறது. அவை பயனற்ற வெறுமையான நடவடிக்கைகளில் செலவழிக்கப்படக்கூடாது. யெகோவா தேவனுடன் ஒரு நெருக்கமான தனிப்பட்ட உறவை வளர்த்துக் கொள்வதற்கு எந்த அளவுக்கு நம்மால் கூடுமோ அந்த அளவுக்கு நமது நேரத்தை செலவழிக்கக்கூடுமா? அவருடைய பெயரையும் செய்தியையும் நமது உதடுகளால் எடுத்துரைப்பதன் மூலம் அவரை கனப்படுத்துகிறோமா? (எபிரெயர் 13:15, 16) நம்முடைய இளம் பிள்ளைகளும்கூட யெகோவா தேவனால் கொடுக்கப்பட்ட விலைமதிப்புள்ள உடைமைகளாக இருக்கின்றனர். (சங்கீதம் 127:3) கடவுளுக்குரிய சேவையில் தங்கள் வாழ்க்கையை அற்பணிப்பதற்கு நாம் அவர்களை உற்சாகப்படுத்துகிறோமா?
பின்பு நமது சொல்லர்த்தமான பொருட்களாகிய பொன் வெள்ளி மற்றும் பணம் சம்பந்தப்பட்ட ஆஸ்திகள் இருக்கின்றன. இவ்வகை சார்ந்த காணிக்கைகள் நமது உள்ளுர் சபைகளை ஆதரிக்கிறது. பைபிள் போதனைகள் அளிப்பதற்கும் நமது சமுதாயத்தில் பிரசங்க வேலைகள் நடைபெறுவதற்கும் மைய இடங்களாக பணியாற்றக்கூடிய ராஜ்ய மன்றங்கள் மாநாடு மன்றங்கள் ஆகியவற்றை பராமரித்து வருவதற்கும் இந்த காணிக்கைகள் உதவுகின்றன. காவற்கோபுர சங்கத்தின் தலைமை அலுவலகத்திற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட நாட்டிலிருக்ககூடிய கிளை அலுவலகத்திற்கோ இந்த காணிக்கைகள் அனுப்பப்படுகையில் உலகளாவிய ராஜ்ய பிரசங்கிப்பு வேலையை முன்னேற்றம் செய்வதற்கு உதவுகிறது. நாம் எந்த அம்சத்திற்கு அதனை பயன்டுத்தும்படி நாம் விரும்புகிறோமோ அந்த குறிப்பிட்ட நோக்கத்திற்காக அவை ஒதுக்கி வைக்கப்படும். அந்த இளம் ஷெல்லி மிஷனரி சேவைக்குரிய தனது இலக்கை மனதிற் கொண்டவளாய் மிஷனரிகளுக்கு உதவ விரும்பினாள். ஸ்டீஃபன் நூற்றுக்கணக்கான கூடுதல் ராஜ்ய மன்றங்களுக்குரிய தேவையையும் அதற்கு மிகுதியான செலவு உட்பட்டிருப்பதையும் கேள்விப்படுபவனாய் சங்கத்தின் ராஜ்ய மன்ற நிதி சேமிப்பில் சேர்க்கப்படும்படி விரும்பினான். வேறு சிலர் பெரும் நாசங்கள் ஏற்படும் சமயங்களில் துயர்தீர்ப்பு பணிகள் போன்ற விசேஷ தேவைகளுக்காக காணிக்கைகளை அனுப்புகின்றனர்.
என்றபோதிலும் பெரும்பாலான சமயங்களில் தனி நபர்கள் பணம் எவ்வாறு செலவழிக்கப்பட வேண்டும் என்பதை கிளை அலுவலகம் முடிவு செய்வதற்கு விரும்பிகின்றனர். ஏனெனில் எதற்கு அதிக தேவை இருக்கிறது என்பதை அவர்கள் தாமே அறிந்திருக்கின்றனர். காணிக்கை செலுத்தின ஒருவர் எழுதினதாவது: “தயவுசெய்து இத்துடன் இணைந்த காசோலையை (cheque) காணவும். பிரசங்க வேலையின் காரியங்கள் விஸ்தரிப்பதற்கு சங்கம் பொருத்தமாக காண்பவற்றிற்கு பயன்படுத்தலாம். எல்லா யெகோவாவின் ஜனங்களுடைய முயற்சியினால் வேலையில் யெகோவாவின் ஆசீர்வாதத்தோடு அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதை கண்டு நாங்கள் அதிக மகிழ்ச்சியடைகிறோம். மற்றொரு கடிதம் சொன்னதாவது: “சமீபத்தில் நான் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு நான் வேலை செய்து கொண்டிருந்த கம்பெனியிலிருந்து ஒரு மொத்த தொகையை பெற்றேன். எனக்கும் என் மனைவிக்குமுள்ள இருதயப்பூர்வமான ஆசையென்னவெனில் இந்த பணத்தில் சிலவற்றை ராஜ்ய அறிவிப்பு வேலையை அதிகரிக்கும் காரியத்திற்கு உபயோகிக்க வேண்டுமென்பதே. ஆகவே எங்கள் சார்பாகவும் எங்கள் பிள்ளைகள் சார்பாகவும் அளிக்கப்படக்கூடிய காசோலையை இத்துடன் காண்க. இந்த பணம் எவ்வளவு சிறப்பாக பயன்படுத்தப்படலாம் என்பதை நீங்களே தீர்மானிக்கையில் யெகோவா உங்களை ஆசீர்வதிக்கட்டும்.”
நம்முடைய விலைமதிப்புள்ள பொருட்களை கொண்டு தம்மை மகிமைப்படுத்துவதற்குரிய இப்படிப்பட்ட மன விருப்பத்தை காண்பதில் யெகோவா தேவன் ஆனந்தமடைகிறார். அவர் தமது வாக்குறுதியை தொடருகிறார்: “அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்.” பண்டைய இஸ்ரவேலரை போன்று யெகோவா இன்று இப்படிப்பட்ட தாராள குணத்திற்கு அபரிமிதமாய் பலனளிக்கிறார். அவரை கனப்படுத்துவதற்கு ஒருவர் தன்னுடைய விலைமதிப்புள்ள பொருட்களை பயன்படுத்தும்போது இது அவர் வெறுமையாகி விடுவதை குறிக்காது. ஆனால் கொடுத்தவருக்கோ யெகோவாவின் ஆசீர்வாதத்தினால் அவற்றில் அதிகரிப்பு இருக்கும்.—நீதிமொழிகள் 3:9, 10.
“கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவே” நாம் வித்தியாசமானவர்களாகவும் மற்றும் யெகோவாவை கனப்படுத்தக்கூடியவர்களாகவும் இருப்பது பெரியதோர் சிலாக்கியம்! இந்த துன்மார்க்க ஒழுங்குமுறை முடிவடைவதற்கு முன்பாக, செய்யப்படுவதற்காக நமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் அந்த வேலையில் அதாவது ராஜ்ய அறிவிப்பு வேலையில் பங்குகொள்ளக்கூடிய நிலையிலிருப்பது என்னே ஒரு சிலாக்கியம்! (பிலிப்பியர் 2:15; மத்தேயு 24:14; 28:19, 10) “சிருஷ்டிகள் யாவும்” எங்கு இருந்தாலும் யெகோவாவுக்கு சதா காலங்களிலும் கனமும், மகிமையும், வல்லமையும் உண்டாவதாக என்றுரைக்கும் காட்சி, பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்ட தரிசனத்தின் காட்சி விரைவில் நிறைவேற்றமடையும். (வெளிப்படுத்துதல் 5:13; 7:12) எல்லா விதத்திலும் இப்பொழுதேயும்கூட நாம் நம்முடைய விலைமதிப்புள்ள பொருட்களால் யெகோவாவை கனப்படுத்துவோமாக. (w85 12/1)
[பக்கம் 29-ன் பெட்டி]
“எப்படித்தான் உங்கள் வேலை நிதி ஆதரவை பெறுகிறது?”
அநேகர் இந்த கேள்வியை கேட்கின்றனர். யெகோவாவின் சாட்சிகள் தங்கள் வீடுகளை சந்திக்கும்போது நிதி வசூலிப்பு செய்வதில்லை என்பதை கண்டு அவர்கள் ஆச்சரியப்படுகின்றனர். மற்றவர்களும் அதேபோன்று சாட்சிகளுடைய மாநாடுகளுக்கு வருகையிலும் அல்லது ராஜ்ய மன்றங்களுக்கு முதன் முறையாக ஆஜராகையிலும் நன்கொடை திரட்டுதல் எதுவும் இல்லாததை கண்டு வியப்படைகிற்னர். அப்படியானால் சாட்சி கொடுக்கும் வேலை எவ்வாறு பண ஆதரவை பெறுகிறது? இதற்கு விடை: யெகோவாவை தங்களுடைய விலைமதிப்புள்ள பொருட்களால் கனப்படுத்த வேண்டும் என்று விரும்பக்கூடியவர்களின் மனப்பூர்வமான காணிக்கைகள் மூலமாகவே. இது பின்வரும் சில விதங்களில் நிறைவேற்றப்படுகிறது.
வெகுமதிகள்: பணம் சார்ந்த நன்கொடைகள் நேரிடையாக காவற்கோபுரம் சங்கம் (Watch Tower Bible and Tract Society of Pennsylvania, 25 Columbia Heights, Brooklyn, New York 11201) அல்லது மற்ற நாடுகளில் அமைந்திருக்கும் கிளை அலுவலகங்களுக்கு அனுப்பப்படலாம். இது ஒரு நன்கொடை என்று தெரிவிக்கக்கூடிய சுருக்கமான ஒரு கடிதம் இந்த காணிக்கையோடு சேர்ந்து வரவேண்டும். சொத்துக்களுங்கூட நன்கொடையாக அளிக்கப்படலாம்.
நிபந்தனைக்குட்பட்ட நன்கொடை ஏற்பாடு: பணம், ஸ்டாக்ஸ் (stocks), கடன்பத்திரங்கள் மற்றும் சொத்துகள் சங்கத்திற்கு கொடுக்கப்படலாம். தனக்கு தேவையான சமயத்தில், நன்கொடையளித்தவருக்கு அவை திரும்பித்தரப்படும் என்ற அடிப்படையில் கொடுக்கப்படலாம். மரணத்தின்போது இந்த சொத்துரிமையை சங்கம் பெறுகிறது என்று உறுதியளிக்கப்படுகையில், இந்த முறையானது ஓர் உயிலின் உண்மையை சட்டப்பூர்வமாக நிரூபிக்கும் செலவுகளை தவிர்க்கிறது.
காப்புறுதி (இன்சூரன்ஸ்): ஒரு காப்புறுதி திட்டத்தின் அனுபவ பாத்தியத்தை உடையவராக காவற்கோபுர சங்கம் பெயரிடப்படலாம். இப்படி செய்யப்பட்டிருக்கிறது என்ற தகவல் சங்கத்துக்கு தெரிவிக்கப்பட வேண்டும். அதே போன்று வங்கி சேமிப்பு கணக்குகளும்கூட சங்கத்திற்காக டிரஸ்ட்டில் (trust) வைக்கப்படலாம்.
உயில்கள்: சொத்து அல்லது பணம் சட்டப்பூர்வமாக நிறைவேற்றப்ட்ட ஒரு உயில் மூலமாக காவற்கோபுர சங்கத்திற்கு ஒப்படைக்கப்படலாம். அதன் ஒரு நகல் சங்கத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.
கூடுதலான தகவல்களை அல்லது தெளிவுரைகளை காவற்கோபுர சங்கத்திற்கு (Watch Tower Bible and Tract Society of Pennsylvania, Office of the Secretary and Treasurer, 25 Columbia Heights, Brooklyn, New York 11201) அல்லது உள்ளூர் கிளை அலுவலகத்துக்கு எழுதலாம்.