எல்லா மனிதவர்க்கத்துக்கும் ஒரு புத்தகத்தை நீங்கள் எவ்வாறு தெரிந்து கொள்வீர்கள்?
அன்றாடம் செய்யப்பட வேண்டிய அனைத்துக் காரியங்களின் மத்தியிலும், எப்படியாவது ஒரு வாரத்துக்கு உங்களால் ஒரு புத்தகத்தை வாசிக்க முடிந்தால், உங்களுடைய வாழ்நாளில் 3000 புத்தகங்களுக்கும் மேல் நீங்கள் வாசித்து முடிக்கக்கூடியவர்களாக இருப்பீர்கள். அது வியப்பாகத் தோன்றினாலும், ஐக்கிய மாகாணங்களில் மட்டுமே அதைப் போல் 10 மடங்குக்கும் அதிகமான புதிய பிரசுரங்கள் வருடந்தோறும் அச்சடிக்கப்படுவதை நீங்கள் எண்ணிப் பார்க்கையில், இது வாளியிலுள்ள ஒரு துளி நீர் போல இருக்கிறது. அதுவும் கல்வியறிவுள்ள ஒவ்வொரு நபரும் படித்திருக்க வேண்டும் என்பதாகக் கருதப்படும் தரமான ஆயிரக்கணக்கான இலக்கியங்கள் இந்தக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
புத்தகங்களுக்கு வரும் போது, சுமார் 3000 வருடங்களுக்கு முன்பாகச் சொல்லப்பட்ட ஒரு கூற்று எப்போதுமே பொருத்தமாக இருப்பது தெளிவாக இருக்கிறது: “அநேகம் புஸ்தகங்களை உண்டு பண்ணுகிறதற்கு முடிவில்லை; அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு.”—பிரசங்கி 12:12.
ஆனால் எண்ணிக்கையில் பெருகி வரும் இந்தப் புத்தகங்களில், ஒவ்வொருவரும் கட்டாயமாகவே வாசிக்க வேண்டிய ஒரு புத்தகமாக, மற்ற எல்லா புத்தகங்களுக்கும் மேலாக தனிச் சிறப்புடையதாக, அத்தனை மதிப்புள்ளதும் முக்கிமானதுமான ஒரு புத்தகம் இருக்கிறதா? தேசீய, கலாச்சார மற்றும் மொழி சம்பந்தமான தடைகள் அனைத்தையும் கடந்து, எல்லா மனிதவர்க்கத்துக்குமுரிய ஒரு புத்தகமாக அழைக்கப்பட தகுதியைப் பெறும் ஒன்று இருக்கிறதா?
நாம் எதை வாசிக்க வேண்டும் என்பது, கல்வி பயிலும் போது, தேர்வுக்காக நாம் வாசிப்பதை விட அதிகமானதாக இருக்கிறது. ஏனென்றால் இறுதியாக நாம் சிந்திக்கும் விதத்தையும் நம்முடைய மதிப்பீடுகளையும் நம்முடைய தீர்ப்புகளையும் அது பாதிக்கிறது. கடந்த காலத்திலும் இன்றைய நாளிலும், ஆசிரியர்கள், பெற்றோர்கள் இன்னும் மற்றவர்களின் கவனத்தையும் வசப்படுத்தியிருக்கிறது. கட்டாயமாக வாசிக்கப்பட வேண்டியது எது என்பதைக் குறித்து ஏராளமான சுற்றாய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இந்த அய்வுகளின் முடிவுகள் அதிகத்தை வெளிப்படுத்துகின்றன.
வல்லுநர்களின் தெரிவு
1890-ல் புத்தகம் வெளியிடும் ஒருவர், அவருடைய நாளில் முன்னணியிலிருந்த இலக்கிய ஞானமுள்ள ஆட்களிடம், இதன் சம்பந்தமாக தகவலைச் சேகரித்தார். மிகவும் முக்கியத்துவமுள்ளதாக அவர்கள் கருதும் புத்தகங்களின் பெயர்களைக் குறிப்பிடும்படியாக அவர் இவர்களிடம் கேட்டுக் கொண்டார். விடை? “பைபிளும் ஷேக்ஸ்பியரும் ஹோமருமே பத்தொன்பதாவது நூற்றாண்டின்போது எழுத்தாளர்களின் அதிக மதிப்புக்குரிய புத்தகங்களாக இருந்தன” என்பதாக ஒரு குறிப்புரை அறிவிக்கிறது, “சிறப்புப் பெரும் இப்புத்தகங்களின் பட்டியலில் இன்று மாற்றம் இல்லாமலே இருக்கிறது” என்பதாக அது மேலுமாக குறிப்பிடுகிறது.
அதிக அண்மையில் செய்யப்பட்ட சுற்றாய்வுகள் இதை ஒப்புக்கொண்டிருக்கின்றன. உதாரணமாக என்ன ஐந்து புத்தகங்களைக் கல்வியறிவுள்ள ஒவ்வொரு நபரும் படித்திருக்க வேண்டும் என்ற கேள்விக்கு எட்டு சிறந்த பேராசிரியர்கள், சரித்திராசியர்கள் மற்றும் நூல்நிலைய காப்பாளர்களின் பதில்களைச் செப்டம்பர் 1982-ல் டைம் பத்திரிக்கை பிரசுரித்தது. வல்லுநர்களின் மத்தியில் முழுவதுமாக கருத்து ஒற்றுமை இல்லாவிட்டாலும் தெளிவாகப் பெரும்பான்மையாக இருந்த எட்டு பேரில் ஐந்து பேர் அவர்களுடைய சிபாரிசில் பைபிளைச் சேர்த்துக் கொண்டிருந்தார்கள். இது போன்ற ஒரு சுற்றாய்வின் சம்பந்தமாக, சைக்காலஜி டுடே “பெயர் குறிப்பிட்டிருந்த 165 புத்தகங்களில் பைபிளுக்கே அதிக வோட்டுகள் கிடைத்தன:15. வேறு எந்தப் புத்தகமும் இதை நெருங்கி வரவில்லை” என்பதாகக் குறிப்பிடுகிறது.
தேசத்திலுள்ள கிறிஸ்தவர்களல்லாதவர்கள் கிறிஸ்தவ சர்ச்சுகளை எவ்விதமாகக் கருதுகிறார்கள் என்பதைத் தீர்மானிக்க தி கொரியா டைம்ஸ் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. இதன் முடிவு குறிப்பாக அக்கறையைத் தூண்டுவதாக இருக்கிறது. “கிறிஸ்தவர்களல்லாதவர்களோடு ஒப்பிடுகையில் கிறிஸ்தவர்கள் அதிக பெருமையுள்ளவர்களாகவும் அதிகமாகப் பணம் பிடுங்குகிறவர்களாகவும் குறைந்த அளவே மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு நடக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதாக வாக்கெடுப்பு அறிக்கை காண்பித்தது” என்பதாகச் செய்தித் தாள் குறிப்பிடுகிறது, என்றாலும், “அவர்களுடைய அவிசுவாசம் எவ்விதமாக இருந்தபோதிலும், கருத்தறிவிப்பதில் கலந்து கொண்ட 70 சதவிகிதத்தினர் பைபிளின், தனிச் சிறப்பை, மிக உயர்வாக மதிப்பிடுகிறார்கள் என்று அறிக்கை தொடர்ந்து குறிப்பிடுகிறது.
இறுதியான தெரிவு
பல தடவைகள் பைபிள், மற்ற எல்லாவற்றிற்கும் மேலாக மிகச் சிறப்பான ஒரு புத்தகமாகத் தெரிந்து கொள்ளப்பட்டிருப்பதைக் காண்பிக்க, இது போன்ற அநேக வாக்கெடுப்புகளையும் சுற்றாய்வுகளையும் குறிப்பிட முடியும். பல்வேறு காரணங்களுக்காக, அது புத்தகங்களில், கடந்த காலத்திலும் தற்போதும், கிழக்கிலும் மேற்கிலும் முடிவான தெரிவாக இருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் அதிக முக்கியமான, உங்களுடைய தனிப்பட்ட அபிப்பிராயம் என்ன? நீங்கள் ஒரு மேற்கத்திய தேசத்தில் வாழ்ந்து வந்தால் நம்முடைய நவீன விஞ்ஞான உலகில் இனிமேலும் பைபிள் காலத்துக்கு ஒத்து வராது என்றும் இன்றைய பிரச்னைகளைச் சமாளிப்பதில் அது பயனற்றது என்றும் நீங்கள் ஒருவேளை நினைக்கிறீர்களா? நீங்கள் ஒரு கிழக்கத்திய தேசத்தில் வாழ்ந்து வந்தால், பைபிள் ஒரு மேற்கத்திய புத்தகமென்றும், அது உங்களுக்கு உண்மையில் எந்த முக்கியத்துவமுள்ளதாகவும் இல்லை என்றும் நீங்கள் கருதுகிறீர்களா? அல்லது இன்று எல்லா ஜனங்களும் கேட்க வேண்டிய ஒரு செய்தி பைபிளில் இருக்கிறதா? இன்று எல்லா இடங்களிலுமுள்ள ஆட்கள் எதிர்படும் பிரச்னைகளைச் சமாளிக்க அது உதவி செய்கிறதா? அது உண்மையில் எல்லா மனிதவர்க்கத்துக்குமுரிய ஒரு புத்தகமா? (w86 4/15)