வேலை செய்யுமிடத்தில் பெண்கள்—சோதனைகளும் சவால்களும்
கடந்த மூன்று பத்தாண்டுகளில் முன்னொருபோதுமிராத எண்ணிக்கையில் பெண்கள், நிரந்தரமாக தொழில் ஈடுபாடுள்ள தொழிலாளர்வர்க்கத்தைச் சேர்ந்துக்கொண்டிருக்கிறார்கள்” என்று அறிவிக்கிறது ஆராய்ச்சி சங்கமாகிய உவர்ல்ட் வாட்ச் நிறுவனம். “பணக்கார நாடுகளிலும் ஏழ்மையிலுள்ள நாடுகளிலும் பணவீக்கமானது சம்பளத்துக்காக வேலை பார்க்கும்படி பெண்களைத் தூண்டியிருக்கிறது” என்று அறிக்கை தொடர்ந்து குறிப்பிடுகிறது, அல்லது நைஜீரியாவிலுள்ள ஒரு பெண் சொல்வதுபோல: “பொருளாதார அழுத்தத்தின் காரணமாக நான் கட்டாயமாகவே வெளியே போய் வேலை செய்ய வேண்டியதாக இருக்கிறது.”
பைபிள் காலங்களின் “குணசாலியான ஸ்திரீ”யைப்போலவே, அதே பெண்கள் தங்களுடைய குடும்பத்தின் நலனுக்காக, தேவையான பொருளுதவிகளைச் செய்ய மகிழ்ச்சியுள்ளவர்களாயிருக்கிறார்கள். (நீதிமொழிகள் 31:10, 16, 24) ஒருசிலர் வேலையில் இருப்பது சவாலாகவும் மனநிறைவளிப்பதாகவும் இருப்பதைக் காண்கிறார்கள். ஆனால் உலகப்பிரகாரமான வேலையைச் செய்வதில் நன்மைகள் இருந்தபோதிலும், அதில் சில பிரச்னைகளும்கூட இருக்கக்கூடும்.
உதாரணமாக, ஒரு கடையில் மேலானவராக வேலைபார்க்கும் ஒரு பெண் சொல்லுகிறாள்: “என்னுடைய வேலையை நான் நேசிக்கிறேன். என் முதலாளி மிகவும் பெருந்தன்மையுள்ளவர். என் அலுவலகம் அழகானது, ஆனால் வேலையானது என்னால் தர முடிகிறதற்கும் மேலாக என்னுடைய நேரத்தை எடுத்துக்கொள்ளும்போதுதானே நான் அதை வெறுக்கிறேன். ஏனென்றால் அதன் பின்பு வீட்டில் மற்றொரு வேலை எனக்காக காத்துக்கொண்டிருக்கிறது—ஒரு மனைவி மற்றும் ஒரு தாயின் வேலை எனக்காக காத்துக்கொண்டிருக்கிறது. இன்னும், அநேகப் பெண்கள், வேலையையும் வீட்டையும் குடும்பத்தையும் திறமையோடு கவனித்து வருகிறார்கள். இதற்காக அவர்கள் மனமார பாராட்டப்படவேண்டும்.a
ஆனால் உலகப்பிரகாரமான வேலைகள், வேலை செய்யுமிடத்துக்கு மட்டுமே உரிய பல பிரச்னைகளில் பாதிக்கப்படும் நிலையில் பெண்களை வைக்கின்றன. அநேகருக்கு, பயங்கரமான போட்டி மனப்பான்மையும், அக்கறையின்மையும் நிரம்பிய ஒரு சூழ்நிலையில் வேலை செய்யும் நிர்பந்தம் இருக்கையில், சமநிலையான ஒரு நோக்குநிலையைக் காத்துக்கொள்வது சவாலாக இருக்கிறது. முன்னேற வேண்டும் என்ற ஆசை, சில பெண்களைத் தங்களுடைய வேலையையே தங்கள் வாழ்க்கையின் முக்கிய காரியமாக கருதும்படியாக தூண்டியிருக்கிறது.
சில சமயங்களில் வேலை செய்யுமிடம் ஒழுக்க சம்பந்தமான அழுத்தங்கள் உருவாகும் முக்கிய இடமாகவும்கூட இருக்கிறது. கீழ்த்தரமான பேச்சை கேட்க வேண்டியிருப்பது, வேலை செய்யும் பெண்களில் ஒரு பொதுவான குறையாக இருந்து வருகிறது. இன்னும் மோசமாக, சிலர் இரக்கமில்லாமல் பால் சம்பந்தமான நச்சரிப்புக்கு பலியாட்களாக தங்களை காண்கிறார்கள். “நான் முதல் முதலாக வேலை செய்ய ஆரம்பித்தபோது, அலுவலகத்தில் நான் ஒரே பெண்ணாக இருந்தேன். ஆண்கள் மறைமுகமாக வரம்பு மீறிய வார்த்தைகள் பேசுவார்கள். எனக்கு உண்மையில் அது கடினமாக இருந்தது.”
இப்படிப்பட்ட பிரச்னைகள் தினந்தோறும் அவைகளை எதிர்படும் பெண்களுக்கு உண்மையாக கவலைக்குரியவையாக இருக்கின்றன. விசேஷமாக கிறிஸ்தவ தராதரங்களைக் காத்துக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு அவ்விதமாக இருக்கிறது. அவர்களுக்கு உண்மையான உதவி இருப்பது மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கிறது. (W87 3/1)
a [அடிக்குறிப்புகள்]
1985 பிப்ரவரி 8 தேதியிட்ட எமது கூட்டுப் பத்திரிகையான விழித்தெழு!-வில் “வேலை செய்யும் தம்பதிகள்—சவால்களை எதிர்படுதல்” தலைப்பைப் பார்க்கவும்.