ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
யெகோவா தம்முடைய உண்மையுள்ள ஊழியர்களைக் காக்கிறார்
இயேசு சொன்னார்: “ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல, . . . அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள்.” (யோவான் 15:20) ஆனால் யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்கள், அவர் அவர்களைக் காப்பார் என்று உறுதியளிக்கப்பட்டிருக்கின்றனர். (சங்கீதம் 18:2; நாகூம் 1:7) யெகோவாவின் சாட்சிகளுடைய சமாதானமான வேலை கண்டிப்பாகத் தடைசெய்யப்பட்டிருக்கும் ஓர் ஆப்பிரிக்க தேசத்தில், பின்வரும் அறிக்கை காண்பிக்கிற வண்ணமே, அடிகளின் மத்தியிலும் காவலின் மத்தியிலும் யெகோவா அவருடைய ஊழியர்களை காத்து வந்தார்:
“ஒரு வட்டார கண்காணியும் நான்கு உள்ளூர் சகோதரர்களும் தகுந்த காரணமின்றி கைது செய்யப்பட்டு, தெரு நாய்கள் சாதாரணமாக வைக்கப்படும் ஒரு சிறிய அறைக்குள் தள்ளப்பட்டனர்” என்பதாக அறிக்கைச் சொல்லுகிறது. “அங்கே அவர்கள் 123 நாட்களுக்கு உள்ளாடைகளுடன் வைக்கப்பட்டனர், வெளியே கழிவறைக்கும்கூட செல்ல அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.” சட்ட மன்ற உறுப்பினர் ஒருவர் மனிதாபிமானமில்லாத நிலைமைகளைக் குறித்து கேள்விப்பட்டு இதை எதிர்க்க ஆரம்பித்தார். கடைசியாக 123 நாட்களுக்குப் பின்பு, சகோதரர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். யெகோவா இந்த உண்மையுள்ள சகோதரர்களைத் தம்முடைய ஆவியினால் காத்துவந்தார்.
இதே தேசத்திலிருந்து வரும் மற்றொரு அனுபவம், நம்முடைய பிரசங்க வேலையின் பிரயோஜனமானப் பாதிப்புகளைக் காண்பிக்கிறது. அறிக்கை சொல்கிறது: “ஒரு கிராமத்தில், மக்கள் வன்முறைக்கும் கலகத்துக்கும் பேர்போனவர்களாக இருந்தனர். என்றபோதிலும், யெகோவாவின் சாட்சிகள் அங்கே பிரசங்கித்தப் பிற்பாடு, அநேகர் உள்ளூர் அதிகாரிகளை மதிக்கவும் சாலைகளில் வாராந்தர சமுதாயப் பணியில் பங்குகொள்ளவும் ஆரம்பித்தனர்.” உள்ளூர் தலைவர் ஒருவர் மக்களின் மனநிலையில் ஏற்பட்டிருந்த மாற்றத்துக்கான காரணத்தை அறிந்துகொள்ள விரும்பினார், அவர் இவ்விதமாகச் சொல்லப்பட்டார்: “யெகோவாவின் சாட்சிகளுடைய ‘பாதிரி’யின் போதகமே இதற்குக் காரணம்.” “ஒரு நாள் இந்தத் தலைவர் என்னை அவருடைய வீட்டுக்கு அழைத்தார்” என்று சாட்சி சொல்கிறார். “இந்த நல்ல வேலையைத் தொடர்ந்து செய்யுமாறு என்னை உற்சாகப்படுத்தினார். என் குடும்பத்தோடு சாப்பிடுவதற்காக ஒரு பெரிய கோழியை எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்.” மற்றொரு சந்தர்ப்பத்தில், உள்ளூர் மாநகர் முதல்வர் சகோதரரை சந்திக்க வந்தார். சகோதரர் அவரை உள்ளே வரவேற்று அவருக்குச் சாட்சி கொடுத்தார். மாநகர் முதல்வர் “சில பத்திரிகைகளை கேட்டு பெற்றுக்கொண்டு சொன்னார்: ‘நீங்கள் எந்தத் தீங்கையும் செய்வதாக எங்களுக்குத் தெரியவில்லை. தொடர்ந்து முறையிட்டுக்கொண்டிருங்கள். உங்களைக் கைதுசெய்ய எங்களுக்கு எந்த உத்தரவும் இல்லை. விரைவில் அரசு உங்கள் பிரச்னையைக் கையாளும் என்று நான் நினைக்கிறேன்.’”
ஒரு விசேஷப் பயனியர் எழுதுகிறார்: “அரசியல் கட்சி செயலரிடமிருந்து பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டுகளை வைத்து, உள்ளூர் தலைவர் என்னைக் கைதுசெய்யவும், விலங்குகளின் சிறுநீராலும் உரத்தினாலும் அழுக்கடைந்த ஓர் அருவருப்பான தனியறையில் என்னைக் காவலில் வைக்கவும் உத்தரவிட்டார். இந்த இருட்டில் நான் ஐந்து நாட்கள் வைக்கப்பட்டேன். அங்கு செல்கிற வழியில் நான் யெகோவாவிடம் ஜெபித்து சங்கீதம் 50:15-ஐ நினைவுபடுத்திக் கொண்டேன். காவலாளிகள் என் மீது பரிதாபப்பட்டு, நான் கொஞ்சம் தூய்மையானக் காற்றை சுவாசிக்கும்படி கதவை முழுமையாக மூடாதிருந்தார்கள். இந்தச் சிறையில் ஐந்து நாட்கள் இருந்தபிறகு, நான் சோதனைக்குட்படுத்தப்பட்டேன். காவலுக்கு எந்தத் துணையும் இல்லாமல், உள்ளூர் தலைவர் வீட்டுக்கு எடுத்துச் செல்லுமாறு ஓர் ஆட்டை என்னிடம் கொடுத்தார்கள். நான் ஓடிவிடவில்லை என்பதால், ஒவ்வொரு நாளும் மாலை 3 மணியிலிருந்து 7 மணிவரை எனக்கு விடுதலையளிக்கப்பட்டது. நான் சகோதரர்களைச் சந்திக்கவும் ஒன்றாகச் சேர்ந்து பிரசங்கிக்கவும் முடிந்தது. இந்தக் கடினமான சமயத்தில் நான் நோய்வாய்ப்பட, என் விரோதிகள் நான் மரித்துபோவேன் என்று நம்பியபோதிலும், யெகோவா என்னை ஒருபோதும் கைவிடவில்லை. இந்த அனுபவம் என்னை யெகோவாவிடம் நெருங்கிவரச் செய்திருக்கிறது. யெகோவாவின் மக்களிடமிருந்து துன்புறுத்தல் ஒருபோதும் என்னை பிரித்துவிடாது என்று நான் நிச்சயமாயிருக்கிறேன்.”—ரோமர் 8:35–39 ஒப்பிடவும்.
கடிமானக் காலங்களில் யெகோவா எவ்விதமாகத் தங்களை காக்கிறார் என்பதை யெகோவாவின் சாட்சிகள் போற்றுகிறார்கள். நற்செய்தியைப் பிரசங்கிக்கும் இந்த அதிமுக்கியமான ஜீவனைக் காக்கும் வேலையை செய்து வருகையில் தங்களுக்குத் தயவு காண்பிக்கிறவர்களையும்கூட அவர்கள் போற்றுகிறார்கள். யெகோவா இப்படிப்பட்ட தயவான செயல்களை மறந்து விட மாட்டார்.—மத்தேயு 25:40. (w89 3/1)