உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w89 6/1 பக். 6
  • மதமும் நாசிஸமும்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மதமும் நாசிஸமும்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1989
  • இதே தகவல்
  • இழிவான பெயர்பெற்ற அந்த “வேசி” அவளுடைய அழிவு
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1989
  • இழிபேரெடுத்த வேசியை நியாயந்தீர்த்தல்
    வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
  • சர்ச்சுகள் ஏன் மெளனமாக இருந்தன
    விழித்தெழு!—1995
  • செல்வமும் ஞானமும் பெற்றிருந்த ஒரு ராஜா
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1989
w89 6/1 பக். 6

மதமும் நாசிஸமும்

“ஹிட்லர் . . . துணை வேந்தராக ஒரு கத்தோலிக்கரைக் கொண்டிருந்தான்; தன்னுடைய ஆட்சியின் முதல் நாள் முதற்கொண்டு இந்தப் புதிய பேராட்சியினிடமாகக் கத்தோலிக்க உட்கட்சிகளைக் கவர்ந்திட ஃபிரான்ஸ் வான் பேப்பன் கொள்கை பரப்புகிறவனாக ஆனான். அந்தப் பேராட்சியின் ஒவ்வொரு பகுதியிலுமுள்ள உண்மையுள்ள மக்களை அடால்ப் ஹிட்லருக்குக் கண்மூடித்தனமாய்க் கீழ்ப்படிய ஊக்குவித்தான்.”

“1933-ன் ஆரம்பப் பகுதியில், [ஃபிரான்ஸ்] வான் பேப்பன் தலைமையின்கீழ் ஜெர்மனியில் கத்தோலிக்க செயல் நோக்க சங்கக் குழுவால் பின்வரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு செய்யப்பட்டது: ‘ஜெர்மனியைச் சேர்ந்த கத்தோலிக்கராகிய நாங்கள், அடால்ப் ஹிட்லருக்கும் அவருடைய ஆட்சிக்கும் எங்களுடைய முழு ஆத்துமாவுடனும், முழு நம்பிக்கையுடனும் ஆதரவாக நிற்போம். தம்முடைய தந்தை நாட்டுக்கு அவர் கொண்டிருக்கும் அன்பையும், அவருடைய ஆற்றலையும் அவருடைய அரசியல்வாதிக்குரிய ஞானத்தையும் கண்டு நாங்கள் ஆச்சரியப்படுகிறோம். . . . இந்த மூன்றாம் பேராட்சியைக் கட்டுவிப்பதில் ஜெர்மனியைச் சேர்ந்த கத்தோலிக்க மக்கள் சுறுசுறுப்பான பங்கை வகிக்க வேண்டும்.’”

ஃபிரான்ஸ் வான் பேப்பன், தான் பணியாற்றிவந்த ஜெர்மானிய நாசி அரசுக்கும் ரோமின் வத்திக்கனுக்கும் இடையே ஓர் ஒப்பந்த உறவை ஏற்படுத்துவதற்குக் கருவியாயிருந்தவர். அந்த ஒப்பந்தம் ஜூலை 20, 1933-ல் கையெழுத்தாயிற்று. ஒரு விசேஷ அரசு செய்தி பின்வருமாறு குறிப்பிட்டது: “பாஸல்லி மாநிலத்தின் கார்டினலும் செயலாளருமானவர் [பின்னால் போப் பயஸ் XII] இன்று துணை வேந்தராகிய வான் பேப்பனுக்குப் பயஸ் சமயப்பணித்துறை சார்ந்த மேன்மையான சிலுவையை அளித்தார் . . . தேசத்தின் கார்டினலும் செயலாளருமானவருக்குத் துணைவேந்தர் வான் பேப்பன் பேரரசின் வெகுமதியாக மைசன் நகரின் வெள்ளைப் பீங்கானில் உருவாக்கப்பட்ட மரியாள் சிற்பத்தை அளித்தார். . . . அனைத்து வெகுமதிகளுமே இந்த அற்பணிப்புக் கூற்றைக் கொண்டிருந்தன: ‘ஜெர்மன் குடியரசின் 1933-ம் ஆண்டின் ஒப்பந்த நினைவுப் பரிசு.’”—அனைத்து மேற்கோள்களும் H.W. பிளட்-ரையன் எழுதிய ஃபிரான்ஸ் வான் பேப்பன்—அவருடைய வாழ்க்கையும் காலங்களும் (Franz von papen—His Life and Times) என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்