மனதிலும் உடலிலும் சுத்தமாயிருங்கள்
“உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான [ஏற்கத்தகுந்த, NW] ஜீவபலியாக ஒப்புக்கொடு”ங்கள்.—ரோமர் 12:1.
1. அப்போஸ்தலன் பவுல் சொல்கிறபடி, ஏன் மனதிலும் உடலிலும் சுத்தமாயிருப்பது தேவை?
பரிசுத்த கடவுளாகிய யெகோவாவைச் சேவிக்க விரும்புகிற ஒருவன் ஆவிக்குரிய மற்றும் ஒழுக்கப் பிரகாரமாய்த் தூய்மையாக இருக்கவேண்டும். நியாயப்படி, இது மனதிலும் உடலிலும் சுத்தமாயிருப்பதையும் குறிப்பாய் உணர்த்துகிறது. இந்தத் தற்போதைய காரிய ஒழுங்குமுறை இருக்கிற நிலையில், அதிலிருந்து யெகோவாவைச் சேவிக்கும்படி வெளிவரும் ஆட்கள், தங்கள் சிந்திக்கும் பழக்கங்களில் மட்டுமல்லாமல் அடிக்கடி தங்கள் தனிப்பட்ட பழக்கவழக்கங்களிலுங்கூட மாற்றங்கள் செய்யவேண்டியிருக்கிறது. அப்போஸ்தலன் பவுல் ரோமிலிருந்தக் கிறிஸ்தவர்களுக்குப் பின்வருமாறு எழுதினான்: “அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான [ஏற்கத்தகுந்த, NW] ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.” (ரோமர் 12: 1, 2) மனதின் மற்றும் உடலின் சுத்தம் தேவைப்படுத்துவதென்ன?
மனதுக்குரிய சுத்தம்
2. நம்முடைய கண்களும் இருதயமும் எவ்வாறு வேசித்தன நடத்தையில் ஈடுபட நம்மைச் செய்விக்க முடியும், இதைத் தவிர்ப்பதற்கு என்ன தேவைப்படுகிறது?
2 நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்பே, உண்மையுள்ள யோபு, நம்முடைய கண்களையும் இருதயத்தையும் நாம் கட்டுப்படுத்தாவிடில் காமவிகார நடத்தைக்குரிய குற்றஞ்செய்யும்படி அவை நம்மைச் செய்விக்கலாமெனக் காட்டினான். அவன் சொன்னதாவது: “என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி? என் மனம் [இருதயம், NW] யாதொரு ஸ்திரீயின்மேல் மயங்கி[ன], . . . துண்டானால், . . . அது தோஷம், அது நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படும் அக்கிரமமாமே.” (யோபு 31:1, 9-11) பார்வையை அலையவிடும் கண்களும் நிலையற்ற இருதயமும் நமக்கிருந்தால், நமக்கு மனசிட்சை, “உட்பார்வையைக் கொடுக்கும் சிட்சை” தேவை.—நீதிமொழிகள் 1:3, NW.
3, 4. (எ) தாவீது மற்றும் பத்சேபாளின் உதாரணம் என்ன காட்டுகிறது, கெட்ட சிந்தனைப் பழக்கங்களை மாற்றுவதற்கு என்ன தேவை? (பி) முக்கியமாய்க் கிறிஸ்தவ மூப்பர்கள் ஏன் கவனமாயிருக்கவேண்டும்?
3 அரசன் தாவீதின் கண்கள் பத்சேபாளுடன் விபசாரக் குற்றம் செய்யும்படி அவனை வழிநடத்தின. (2 சாமுவேல் 11:2, 4) முக்கியத்துவம் வாய்ந்த நிலையில் யெகோவா பயன்படுத்துகிற மனிதருங்கூட, தங்கள் மனதைச் சிட்சித்துக் கட்டுப்படுத்தாவிடில் பாவத்துக்குள் விழக்கூடுமென இந்த உதாரணம் காட்டுகிறது. நம்முடைய சிந்திக்கும் பழக்கங்களை மாற்றுவதற்கு விடா கடும் முயற்சி எடுக்கவேண்டியிருக்கலாம். அத்தகைய முயற்சியோடு யெகோவாவின் உதவிக்காகக் கேட்கும் ஊக்கமான ஜெபமும் சேர்ந்துசெல்ல வேண்டும். பத்சேபாளோடு செய்தத் தன் பாவத்துக்காக மனஸ்தாபப்பட்டுத் திரும்பினபின்பு, தாவீது பின்வருமாறு ஜெபித்தான்: “தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.”—சங்கீதம் 51:10.
4 முக்கியமாய்க் கிறிஸ்தவ மூப்பர்கள், வினைமையான பாவத்துக்குள் தங்களை வழிநடத்தக்கூடிய தவறான ஆசைகள் தங்களுக்குள் தோன்றிவளர இடங்கொடுக்காதபடி கவனமாயிருக்கவேண்டும். (யாக்கோபு 1:14, 15) கிறிஸ்தவ மூப்பனாகிய தீமோத்தேயுவுக்குப் பவுல் பின்வருமாறு எழுதினான்: “கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச் சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே.” (1 தீமோத்தேயு 1:5) ஒரு மூப்பன், பார்வையை அலையவிடும் தன் கண், அசுத்தச் செயலை நடப்பிக்கும்படியான எண்ணங்களைத் தன் இருதயத்தில் தூண்டிவிட அனுமதித்துக்கொண்டு அதேசமயத்தில் ஆவிக்குரிய தன் கடமைகளை நிறைவேற்றிக்கொண்டிருப்பது நிச்சயமாகவே பாசாங்குத்தனமாயிருக்கும்.
5. மனதின் சுத்தத்தைக் காத்துக்கொள்ள எவற்றைத் தவிர்க்கவேண்டும்?
5 கிறிஸ்தவர்களாகிய நாம் எல்லாரும் மனதில் சுத்தமாயிருக்க நம்மாலான எல்லாவற்றையும் செய்யவேண்டும். இது நம்முடைய சிந்தனையைக் கெடுதியான முறையில் பாதிக்கக்கூடிய இயங்கு திரைபடங்கள், தூர்தர்ஷன் நிகழ்ச்சிநிரல்கள், அல்லது வாசிப்புக்குரிய புத்தகங்கள் ஆகிய எவற்றையும் தவிர்ப்பதைக் குறிக்கிறது. மனநலத்துக்குரிய சுத்தம் “உண்மையுள்ள, . . . நீதியுள்ள, கற்புள்ளக்” காரியங்களின்பேரில் நினைவூன்றியிருக்கச் செய்ய மனமார்ந்த ஊக்க முயற்சி எடுப்பதைத் தேவைப்படுத்துகிறது. அப்போஸ்தலன் பவுல் தொடர்ந்து சொல்வதாவது: “புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.”—பிலிப்பியர் 4:8.
தனிப்பட்டவர் சுத்தம்
6. (எ) இஸ்ரவேலில் தனிப்பட்டவர் முறையிலும் பொதுமுறையிலும் சுகாதார சுத்தம் கட்டளையிடப்பட்டதற்கு லேவியராகமத்திலிருந்து உதாரணங்கள் எடுத்துக் காட்டுங்கள். (பி) அத்தகைய சட்டங்களின் நோக்கமென்ன?
6 “சுத்தம் தெய்வபக்திக்கு அடுத்தது,” என்று சொல்லப்பட்டுள்ளது. ஒழுக்கப்படியும் உடலின்படியும் சுத்தமாயுள்ள ஒருவன் ஒருவேளை தெய்வபக்தியுள்ளவனாக இரான் என்பது உண்மையே. ஆனால் தெய்வபக்தியுள்ள ஒருவன், கட்டாயமாக, ஒழுக்கப்படியும் உடலின்படியும் சுத்தமாயிருக்கவேண்டும். நோய்நுண்மங்கள் பரவிய வீடுகளைச் சுத்திகரிப்பது மற்றும் பலவகை அசுத்த நிலைமைகளில் சொந்த உடலைக் கழுவுதல் ஆகியவற்றின்பேரில் மோசேயின் நியாயப்பிரமாணம் நுட்பதிட்டமான கட்டளைகளைக் கொடுத்தன. (லேவியராகமம், 14-ம் 15-ம் அதிகாரங்களைப் பாருங்கள்.) இஸ்ரவேலர் எல்லாரும் தங்களைப் பரிசுத்தமுள்ளவர்களாய் நிரூபிக்கும்படி கட்டளையிடப்பட்டிருந்தனர். (லேவியராகமம் 19:2) வேத எழுத்துக்களின்பேரில் உட்பார்வை என்ற ஆங்கில பிரசுரம் பின்வருமாறு கூறுகிறது: “கடவுள் [இஸ்ரவேலருக்குக்] கொடுத்த உணவுவிதிமுறைக்குரிய, சுகாதார, மற்றும் ஒழுக்கச் சட்டங்கள், அவர்கள் கடவுளுக்கென்று தனியே ஒதுக்கப்பட்டுள்ளதையும் பரிசுத்தமாயிருப்பதையும் அவர்களுக்கு இடைவிடாமல் உணர்த்தும் நினைப்பூட்டுதல்களாக இருந்தன.”—புத்தகம் 1, பக்கம் 1128.
7. ஒரு ஜனமாக யெகோவாவின் சாட்சிகள் உண்மையில் எவ்வாறிருக்கிறார்கள், ஆனால் பயணக் கண்காணிகள் சிலர் என்ன அறிவிப்பு செய்திருக்கிறார்கள்?
7 ஒரு ஜனமாக யெகோவாவின் சாட்சிகள் பாபிலோனிய பொய்மதத்தால் எவ்வகையிலும் கறைப்படுத்தப்படாமல் சுத்தமாயும் தங்கள் மத்தியில் ஒழுக்க அசுத்தத்தைக் கண்டியாது விடாமலும் இருக்கிறபோதிலும், தனி நபர்கள் சிலர் சொந்த உடல்நல சுத்தத்துக்கும் நடையுடை தோற்றச் சீரொழுங்குக்கும் கவனஞ்செலுத்தத் தவறுகின்றனரென பயணக் கண்காணிகளிடமிருந்து வரும் அறிக்கைகள் குறிப்பிட்டுக்காட்டுகின்றன. இந்தக் காரியங்களிலும் நாம் சுத்தமாயிருக்கும்படி எவ்வாறு நிச்சயமாயிருக்கலாம்? கிறிஸ்தவ வீடுகள் எல்லாவற்றிற்கும் ஒரு நல்ல மாதிரியாயிருப்பது பெத்தேல் ஆகும், இந்தப் பெயரின் பொருள் “தேவனுடைய வீடு,” என்பதாகும்.
8, 9. (எ) பெத்தேல் குடும்பத்தின் புதிய உறுப்பினர் யாவருக்கும் என்ன அறிவுரை கொடுக்கப்படுகிறது? (பி) பெத்தேல் குடும்பங்களில் பின்பற்றும் என்ன நியமங்களை ஒவ்வொரு கிறிஸ்தவக் குடும்பமும் கைக்கொள்ளவேண்டும்?
8 ஒருவன் உவாட்ச் டவர் சொஸையிட்டியின் தலைமை அலுவலகத்தில் அல்லது உலக முழுவதிலுமுள்ள கிளை அலுவலகங்கள் எவற்றிலாவது உள்ள பெத்தேல் குடும்பத்தின் ஓர் உறுப்பினனாகையில், நிர்வாகக் குழுவால் தயாரிக்கப்பட்ட ஒரு சிறு புத்தகம் அவனுக்குக் கொடுக்கப்படுகிறது. வேலை பழக்கங்களையும் தன் சொந்தப் பழக்கங்களையும் குறித்ததில் அவனிடம் எதிர்பார்க்கப்படுவதை இந்தப் பிரசுரம் விளக்குகிறது. “அறை கவனிப்பும் சுத்தமும்,” என்ற தலைப்பின்கீழ் அதில் சொல்லியிருப்பதாவது: “உடல், ஒழுக்கம், மற்றும் ஆவிக்குரிய சம்பந்தமாக உயர்ந்த தராதரங்களைக் காத்துவருவதை பெத்தேல் வாழ்க்கை தேவைப்படுத்துகிறது. பெத்தேலில் இருக்கும் ஒவ்வொருவரும் தன்னையும் தன் அறையையும் சுத்தமாக வைப்பதில் அக்கறையுடனிருக்கவேண்டும். இது நல்ல சுகாரோக்கியத்துக்கு உதவிசெய்கிறது. எவரும் அசுத்தமாயிருப்பதற்கு எந்தக் காரணமுமில்லை. ஒவ்வொரு நாளும் குளிப்பது நல்லப் பழக்கம். . . . சாப்பாட்டு நேரத்துக்கு முன்னால் கைகளைக் கழுவுவது முக்கியம் மற்றும் எல்லாரிடமும் இது எதிர்ப்பார்க்கப்படுகிறது. உங்கள் அறைத்தோழரின் மற்றும் அறைக்கவனிப்பவரின் நலத்தை எண்ணிப்பார்த்து, முகம் கை கழுவும் தட்டத்தை அல்லது குளிப்பதற்கு அமைக்கப்பட்ட தொட்டியை ஒவ்வொருதடவையும் பயன்படுத்தினபின் கழுவவேண்டும்.”
9 பெத்தேல் வீடுகளில், கக்கூசுகள் வெகு சுத்தமாய் வைக்கப்படுகின்றன, அவற்றைப் பயன்படுத்துவோர் தங்கள் கைகளை உடனடியாகக் கழுவுவதற்கு வசதியான ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பெத்தேல் குடும்ப உறுப்பினர் கக்கூசைப் பயன்படுத்தினபின் சுத்தமாக விட்டுச் செல்லும்படி எதிர்பார்க்கப்படுகின்றனர், இது, தண்ணீர் சரியாக அடித்துச்சென்று சுத்தமாய்விடப்பட்டுள்ளதாவென திரும்பப் பார்த்துச் செல்வதைக் குறிக்கிறது. இது அடுத்தப்படியாகப் பயன்படுத்துபவருக்கு அல்லது அறைக்கவனிப்பவருக்கு அக்கறைகாட்டுவதாகும். ஒவ்வொரு கிறிஸ்தவ குடும்பத்தையும் குடும்பத்தின் ஒவ்வொரு நபரையும் இத்தகைய சிறந்த, அன்புள்ள நியமங்கள் ஆட்கொண்டு நடத்தவேண்டுமல்லவா?
10. (எ) ஒருவர் தன்னையும் தன் பிள்ளைகளையும் சுத்தமாக வைப்பதற்கு ஏன் எல்லா நவீன வசதிகளுமடங்கிய குளிக்கும் அறை தேவையில்லை? (பி) இஸ்ரவேலுக்குக் கொடுக்கப்பட்ட என்ன சட்டங்கள் நல்ல சுகாரோக்கியத்துக்கு உதவியாயிருந்தன, இதிலிருந்து இன்று யெகோவாவின் ஜனங்கள் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?
10 இயல்பாய், நாட்டுக்குநாடு நிலைமைகள் வேறுபடுகின்றன. சில இடங்களில், வீடுகளில் குளிப்பதற்குத் தொட்டி அல்லது துவலைக்குழாய் இருப்பதில்லை. எனினும், பொதுவாய்ச் சொல்ல, கிறிஸ்தவ ஆண்களும் பெண்களும் தங்கள் சொந்த உடலைச் சுத்தமாக வைக்கவும் தங்கள் பிள்ளைகள் சுத்தமாயிருக்கும்படி பார்த்துக்கொள்ளவும் போதிய சோப்பும் தண்ணீரும் அவர்களுக்குக் கிடைக்கும்.a உலக முழுவதிலும் பல வீடுகள் கழிவுநீக்கும் சாக்கடை அமைப்போடு இணைக்கப்பட்டில்லை. ஆனால், இஸ்ரவேலருக்கு இராணுவ முகாம்களிலுங்கூட செய்யும்படி கட்டளையிடப்பட்ட முறையில், கழிவைப் புதைப்பதன்மூலம் தீங்குவிளைவிக்காதபடி ஒழித்துப்போடலாம். (உபாகமம் 23:12, 13) இதுமட்டுமல்லாமல், முகாம் வாழ்க்கையை ஆட்கொண்ட யெகோவாவின் சட்டங்கள் அடிக்கடி உடைகளைத் துவைப்பதையும் குளிப்பதையும், நோய்க்குறிகளைக் கண்டு நோயை விரைவில் தீர்மானித்து மருத்துவம் செய்வதையும், செத்தப் பிணங்களைச் சரியான முறையில் கையாளுவதையும், சுத்தமான தண்ணீர் மற்றும் உணவு அளிப்பைக் காத்துவரும்படியும் கட்டளையிட்டன. இந்த எல்லாச் சட்டங்களும் அந்த ஜனத்தின் சுகநலத்துக்கு உதவிசெய்தன. இன்று யெகோவாவின் ஜனங்கள் தங்கள் சொந்தப் பழக்கவழக்கங்களில் எவ்வகையிலாவது சுத்தத்தில் குறைந்தவர்களாய் இருக்கலாமா?—ரோமர் 15:4.
துப்புரவான வீடுகளும் மோட்டார் வண்டிகளும்
11. (எ) மிக அதிக ஏழ்மையான கிறிஸ்தவ வீடுங்கூட எவ்வாறு வைக்கப்பட்டிருக்கவேண்டும்? (பி) பெத்தேல் குடும்பத்தின் எல்லா உறுப்பினரிடமும் என்ன ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுகிறது?
11 நம்முடைய வீடுகள், எவ்வளவு தாழ்ந்தவையாயிருந்தாலும் சரிதான் அவை ஒழுங்காயும் சுத்தமாயும் வைக்கப்படலாம், ஆனால் இது குடும்ப நிலையில் நல்ல அமைப்பைத் தேவைப்படுத்துகிறது. ஒரு கிறிஸ்தவ தாய், பிரசங்க வேலை உட்பட ஆவிக்குரிய காரியங்களில் தன்னால் கூடிய அதிக நேரத்தைச் செலவிட விரும்புவாள், ஆகையால் ஒவ்வொரு நாளும் குடும்ப உறுப்பினர் உடை, புத்தகங்கள், செய்தித்தாள்கள், பத்திரிகைகள் முதலியவற்றை அங்குமிங்கும் கிடக்க விட்டுச் சென்றபின் சீர்ப்படுத்தித் துப்புரவாக்குவதற்கு அவள் நேரத்தைச் செலவிடும்படி இருக்கக்கூடாது. பெத்தேலில், அறைக்கவனிப்பவர்கள் இருந்து அவர்கள் சுத்தம் செய்கிறபோதிலும், குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் காலையில் தன் படுக்கையைச் சரிப்படுத்தி தன் அறையை ஒழுங்குடன் சுத்தமாய் விட்டுச்செல்லும்படி எதிர்பார்க்கப்படுகிறது. ஒழுங்காயும் சுத்தமாயுமுள்ள நம் ராஜ்ய மன்றங்களையும் மாநாட்டு மன்றங்களையும் நாமெல்லாரும் நன்றியோடு மதிக்கிறோம். நம்முடைய வீடுகளுங்கூட நாம் யெகோவாவின் சுத்தமும் பரிசுத்தமுமான ஜனத்தின் ஒரு பாகமென சாட்சிபகரட்டும்!
12, 13. (எ) யெகோவாவின் சேவையில் பயன்படுத்தப்படும் போக்குவரத்து சாதனங்களைக் குறித்து என்ன அறிவுரை கொடுக்கப்படுகிறது, அது ஏன் அதிக நேரம் எடுக்கவேண்டியதில்லை? (பி) உடலைச் சுத்தமாய் வைத்துக்கொள்வதற்கும் வீடுகளையும் போக்குவரத்து சாதனங்களையும் சீர்ப்பட்ட ஒழுங்கான முறையில் வைத்துக்கொள்வதற்கும் என்ன ஆவிக்குரிய காரணம் இருக்கிறது?
12 இன்று யெகோவாவின் ஊழியர்களில் பலர் கூட்டங்களுக்கும் வெளி ஊழியத்துக்கும் செல்வதற்கு மோட்டார் வண்டி போன்றவற்றைப் பயன்படுத்துகின்றனர். சில நாடுகளின் மோட்டார் வண்டி யெகோவாவைச் சேவிப்பதற்கான ஒரு கருவியைப்போல் நடைமுறையில் இன்றியமையாததாய்விட்டிருக்கிறது. இவ்வாறிருக்க, அதை, நம் வீடு இருப்பதுபோல் ஒழுங்காயும் சுத்தமாயும் வைக்கவேண்டும். நிச்சயமாகவே, உலகப்பிரகாரமான ஆட்கள் சிலர் செய்வதுபோல் கிறிஸ்தவர்கள் தங்கள் மோட்டார் வண்டிகளைச் சிறப்பாக்குவதற்கு மட்டுக்குமீறிய நேரம் செலவிடமுடியாது. ஆனால் அந்த மீறிய நிலைக்குச் செல்லாமல், யெகோவாவின் ஊழியர்கள் தங்கள் மோட்டார் சாதனங்களைப் போதியளவு சுத்தமாயும் நல்ல ஒழுங்கான முறையிலும் வைக்க முயற்சி செய்யவேண்டும். சில நாடுகளில் வாயு நிரப்பு நிலையத்தில் ஒரு மோட்டார் வண்டியைக் கழுவுவதற்கு அதிக செலவுமெடுப்பதில்லை நேரமுமெடுப்பதில்லை. மோட்டார் வண்டியின் உட்புறத்தைக் குறித்ததில், சுத்தப்படுத்துவதற்கும் சீர்ப்படுத்துவதற்கும் பத்து நிமிடங்கள் செலவிடுவது ஆச்சரியமான பலன்தரும். முக்கியமாய், மூப்பர்களும் உதவி ஊழியர்களும், இந்தக் காரியத்தில் முன்மாதிரிகளாயிருக்கப் பிரயாசப்படவேண்டும், ஏனெனில் அவர்கள் பிரஸ்தாபிகளின் தொகுதிகளை வெளி ஊழியத்துக்குக் கொண்டுசெல்லும்படியான போக்குவரத்துக்குத் தங்கள் மோட்டார் வண்டிகளை அடிக்கடி பயன்படுத்துகின்றனர். அக்கறைகாட்டும் ஒருவரை ஒரு பிரஸ்தாபி தன் மோட்டார் வண்டியில் ஏற்றி கூட்டத்துக்கு அழைத்துச் செல்கையில், அந்த வண்டி அழுக்காயும் சீர்குலைந்தும் இருந்தால் அது நிச்சயமாகவே நல்ல சாட்சிபகருவதாகாது.
13 இவ்வாறு, உடலில் சுத்தமாயிருக்கவும் வீடுகளையும் போக்குவரத்து சாதனங்களையும் சுத்தமாயும் துப்புரவாயும் வைக்கவும் நாம் எடுக்கும் முயற்சிகளால், யெகோவாவின் சுத்தமான அமைப்பின் உறுப்பினராக நாம் யெகோவாவைக் கனப்படுத்துகிறோம்.
ஆவிக்குரிய பலிகளைச் செலுத்துகையில் சுத்தமாயிருத்தல்
14. இஸ்ரவேலில் என்ன சட்டங்கள் ஆசார சுத்தத்தைக் கட்டுப்படுத்தின, இந்தச் சட்டங்கள் எதை உணர்த்திக் காட்டின?
14 இஸ்ரவேலில் வணக்கம் சம்பந்தப்பட்டதில் ஆசார சுத்தம் கட்டளையிடப்பட்டது, அதைத் தவறுவது மரணதண்டனையைக் கொண்டுவந்தது. யெகோவா மோசேயினிடமும் ஆரோனிடமும் பின்வருமாறு கூறினார்: “இஸ்ரவேல் புத்திரர் தங்கள் நடுவே இருக்கிற என்னுடைய வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தி, தங்கள் தீட்டுகளால் சாகாதபடிக்கு, இப்படி நீங்கள் அவர்கள் தீட்டுகளுக்கு அவர்களை விலக்கிவைக்கக்கடவீர்கள்.” (லேவியராகமம் 15:31) பிராயச்சித்த நாளில், பிரதான ஆசாரியன் தன் மாம்சத்தை இருமுறை தண்ணீரில் குளித்துக் கழுவவேண்டும். (லேவியராகமம் 16:4, 23, 24) ஆசரிப்புக்கூடாரத்தினருகில் வைக்கப்பட்டிருந்த செம்பு தொட்டியும், பின்னால் ஆலயத்தினருகில் வைக்கப்பட்ட மிகப் பெரும் செம்பு கடல்தொட்டியும், ஆசாரியர்கள் யெகோவாவுக்குப் பலிகளைச் செலுத்துவதற்கு முன்னால் தங்களைக் கழுவுவதற்குத் தண்ணீரை அளித்தன. (யாத்திராகமம் 30:17-21; 2 நாளாகமம் 4:6, தி.மொ.) பொதுவில் இஸ்ரவேலரைப் பற்றியதென்ன? அவர்கள் எந்தக் காரணத்தினிமித்தமாவது ஆசாரமுறைப்படி அசுத்தரானால், சுத்திகரிப்புக்கான தேவைகளை அவர்கள் நிறைவேற்றித் தீரும் வரையில் வணக்கத்தில் பங்குகொள்வதிலிருந்து தடுத்துவைக்கப்பட்டனர். (எண்ணாகமம் 19:11-22) பரிசுத்த கடவுளாகிய யெகோவாவை வணங்குகிறவர்கள் உடல்சம்பந்தச் சுத்தமுள்ளோராய் இருக்கவேண்டியதை இதெல்லாம் அறிவுறுத்தின.
15. மிருக பலிகள் ஏன் இனிமேலும் தேவையில்லை, ஆனால் என்ன கேள்விகள் எழுப்பப்படுகின்றன?
15 உண்மைதான், இன்று யெகோவாவின் ஜனங்கள் பூமிக்குரிய ஓர் ஆலயத்தில் மிருக பலிகளைச் செலுத்தும்படி கட்டளையிடப்படுகிறதில்லை. நியாயப்பிரமாணத்தின்கீழ்ச் செலுத்தின பலிகள் “இயேசு கிறிஸ்துவினுடைய சரீரம் [எல்லாக் காலத்துக்கும், NW] ஒரேதரம் பலியிடப்பட்டதினால்” அவற்றின் இடத்தை ஏற்றது. (எபிரெயர் 10:8-10) நாம் “பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளு”கிறோம். (யோவான் 4:23, 24) ஆனால் இது நம்முடைய பரிசுத்த கடவுளாகிய யெகோவாவுக்குச் செலுத்த நமக்கு எந்தப் பலிகளும் இல்லையென பொருள்படுகிறதா? மேலும் சுத்தமாயிருப்பது இஸ்ரவேலரிடம் கேட்கப்பட்டதற்கும் குறைவாக நம்மிடம் கேட்கப்படுகிறதா?
16. மல்கியா 3:3, 4-ன் தீர்க்கதரிசனம் அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள்மீது 1918 முதற்கொண்டு எவ்வாறு நிறைவேற்றமடைந்திருக்கிறது, ஏற்கத்தகுந்த என்ன பலிகளை அவர்கள் யெகோவாவுக்குச் செலுத்தலாம்?
16 இந்த முடிவின் காலத்தில் பூமியிலிருக்கும் அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் ஆலய சேவைக்காகப் புடமிடப்படுவார்கள், அல்லது சுத்திகரிக்கப்படுவார்களென மல்கியாவின் தீர்க்கதரிசனம் காட்டுகிறது. இந்தப் புடமிடுதல் 1918-ல் தொடங்கினதென சரித்திரம் காட்டுகிறது. 1919 முதற்கொண்டு இந்த அபிஷேகஞ்செய்யப்பட்ட மீதிபேர் நிச்சயமாகவே “யெகோவாவுக்குரியவர்களாகி [யெகோவாவின் ஜனங்களாகி, NW] நீதியிலே காணிக்கை செலுத்”திக்கொண்டிருக்கிறார்கள், அவர்கள் “செலுத்தும் காணிக்கை யெகோவாவுக்குகந்ததா”யிருக்கிறது. (மல்கியா 3:3, 4, தி.மொ.) இவ்வாறு, அவர்கள் “இயேசுகிறிஸ்துவின்மூலமாய்க் கடவுளுக்குகந்த ஆவிக்குரிய பலிகளைச் செலுத்”தக் கூடியவர்களாக இருக்கிறார்கள். (1 பேதுரு 2:5, தி.மொ.) அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு எழுதினான்: “அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.”—எபிரெயர் 13:15.
17 “திரள் கூட்டத்தார்” அபிஷேகஞ்செய்யப்பட்ட மீதிபேரைப்போல் ஆலய ஆசாரிய சேவைக்கு அழைக்கப்படாதபோதிலும், அவர்கள் அவருடைய ஆவிக்குரிய ஆலயத்தின் பூமிக்குரிய பிரகாரத்தில் “இரவும் பகலும் [யெகோவாவுக்கு] பரிசுத்த சேவை செலுத்துகிறார்கள்.” (வெளிப்படுத்துதல் 7:9, 10, 15, NW) ஆசாரியரல்லாத இஸ்ரவேலர் ஆசரிப்புக் கூடாரத்தில் அல்லது, பின்னால், ஆலயத்தில் வணக்கத்தில் பங்குகொள்ள ஆசாரமுறைப்படி சுத்தமாயிருக்க வேண்டியிருந்ததை நினைவுபடுத்திக்கொள்ளலாம். இவ்வாறே, மற்றச் செம்மறியாடுகளின் இந்தத் திரள் கூட்டத்தார், ஆலயத்தில் சேவித்து “அவருடைய பெயரை யாவரறிய அறிக்கை செய்வதனால்” ‘கடவுளுக்குத் துதியின் பலியைச் செலுத்துவதில்’ மீதிபேரோடு பங்குகொள்ள விரும்பினால், உடல், மனம், ஒழுக்கம், மற்றும் ஆவிக்குரிய பிரகாரமாய் அவர்கள் சுத்தமாயிருக்க வேண்டும்.
வெளி ஊழியத்துக்கும் கூட்டத்துக்கும் செல்கையில் சுத்தமாயும் ஒழுங்காயும் இருத்தல்
18. வெளிப்படையான சாட்சிபகரும் வேலையில் ஈடுபட்டிருக்கையிலும் கூட்டங்களுக்கு ஆஜராகையிலும், நம் உடல் சுத்தம், உடை, பாதரட்சை ஆகியவற்றைக் குறித்து நம் அக்கறை என்னவாயிருக்கவேண்டும்?
18 நடைமுறையில் இது குறிப்பதென்ன? நாம் உடல்சம்பந்தமாய்ச் சுத்தமாயும் சரியான முறையில் உடை உடுத்தியும் இராவிடில், வீட்டுக்குவீடு ஊழியத்தில், வீதிகளில், அல்லது ஒருவருடைய வீட்டில் நாம் யெகோவாவைப் பிரதிநிதித்துவம் செய்வது முற்றிலும் தகாதது மேலும் அது யெகோவாவுக்கு அவமரியாதை செய்வதைக் குறிக்கும். ஆகையால் அத்தகைய காரியங்களைப் பற்றி நாம் அக்கறையற்றவர்களாய் இருக்கக்கூடாது. யெகோவாவின் பெயரைத் தாங்கியுள்ள ஊழியர்களுக்குப் பொருத்தமான முறையில் நாம் நடக்கும்படி, அவற்றிற்குக் கவனமான அக்கறை செலுத்தவேண்டும். நம்முடைய உடை விலையுயர்ந்ததாயிருக்க வேண்டியதில்லை, ஆனால் அது சுத்தமும், நல்தோற்றமும், அடக்கமுமுள்ள முறையில் இருக்கவேண்டும். நம்முடைய பாதரட்சையும் நன்றாய்ச் செப்பனிட்டு நல்லத் தோற்றத்தை அளிக்கவேண்டும். இவ்வாறே, சபை புத்தகப் படிப்பு உட்பட, எல்லாக் கூட்டங்களிலும் நம் உடல் சுத்தமாயிருக்கவேண்டும், நாம் ஒழுங்காயும் தகுந்த முறையிலும் உடுத்தியிருக்கவேண்டும்.
19. கிறிஸ்தவ ஊழியர்களாக நம்முடைய சுத்தமான மற்றும் ஒழுங்கான தோற்றத்தின் பலனாக என்ன ஆவிக்குரிய நன்மைகள் உண்டாகின்றன?
19 சாட்சிபகரும் வேலையில் ஈடுபட்டிருக்கையிலும் நம்முடைய கூட்டங்களிலும் நாம் சுத்தமான மற்றும் ஒழுங்கான தோற்றத்துடன் இருப்பது “தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிப்ப”தற்கு ஒரு வழியாகும். (தீத்து 2:9) அதுதானேயும் ஒரு சாட்சியாயுள்ளது. நம்முடைய சுத்த மற்றும் ஒழுங்கான நிலை பலருடைய மனதைக் கவர்ந்திருக்கிறது, இது நீதியுள்ள புதிய வானங்களையும் சுத்திகரிக்கப்பட்ட புதிய பூமியையும் குறித்த யெகோவாவின் அதிசயமான நோக்கங்களைப் பற்றிய நம்முடைய செய்திக்குச் செவிகொடுக்கும்படி அவர்களைத் தூண்டி இயக்கியுள்ளது.—2 பேதுரு 3:13.
20. மனதிலும் உடலிலும் நாம் சுத்தமாயிருப்பதிலிருந்து மேலுமான என்ன நல்ல பலன்கள் உண்டாகின்றன?
20 யெகோவாவின் புதிய ஒழுங்குமுறை நெருங்கிக் கொண்டிருக்கையில், நாம் எல்லாரும் நம்முடைய சிந்தனையில் அல்லது நம்முடைய தனிப்பட்ட சொந்த பழக்கங்களில் ஏதாவது சரிப்படுத்தலைச் செய்ய வேண்டியுள்ளதாவெனக் காண நம்மைநாமே சோதித்துப் பார்க்கவேண்டும். பவுல் பின்வருமாறு எழுதினான்: “உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிறபிரகாரமாய்ப் பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள்.” (ரோமர் 6:19) ஆவிக்குரிய சுத்தமும் உடல் சுத்தமும் இப்பொழுதேயும் நல்ல பலனைக் கொண்டுவருகிறது, “பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்திய ஜீவன்.” (ரோமர் 6:22) ஆகையால், ‘நம்முடைய சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான [ஏற்கத்தகுந்த, NW] ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கையில்,’ மனதிலும் உடலிலும் நாம் சுத்தமாயிருப்போமாக.—ரோமர் 12:1.
(w89 6⁄1)
[அடிக்குறிப்புகள்]
a பல்வேறு சூழ்நிலைமைகளில் சுகாதார சுத்தத்தின்பேரில் நடைமுறை ஆலோசனைகளுக்கு, விழித்தெழு! பத்திரிகை நவம்பர் 8, 1989-ன் வெளியீட்டில், பக்கங்கள் 8-11-ல் பிரசுரிக்கப்பட்டுள்ள “சுத்தம் என்ற சவாலை சந்தித்தல்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
நினைவுபடுத்துவதற்குக் குறிப்புகள்
◻ எவ்வாறு நம்முடைய கண்களும் இருதயமும் நம்மை வேசித்தனத்தில் ஈடுபட செய்விக்க முடியும்?
◻ பொதுமுறையான மற்றும் தனிமுறையான சுகாதாரத்தின்பேரில் கொடுக்கப்பட்ட யெகோவாவின் சட்டங்களுக்கு இஸ்ரவேலர் கீழ்ப்படிந்தபோது என்ன நன்மைகளை அடைந்தனர்?
◻ பெத்தேல் குடும்பங்களில் பின்பற்றும் என்ன நியமங்களை ஒவ்வொரு கிறிஸ்தவ குடும்பத்திலும் கைக்கொள்ளவேண்டும்?
◻ முக்கியமாய், எப்பொழுது, நாம் நம்முடைய தோற்றத்தைப்பற்றிக் கவனமாயிருக்கவேண்டும்?
◻ தங்கள் வீடுகளையும் போக்குவரத்து சாதனங்களையும் சுத்தமாயும் ஒழுங்காயும் வைக்க யெகோவாவின் ஊழியர்களுக்கு என்ன ஆவிக்குரிய காரணங்கள் இருக்கின்றன?
17. “திரள் கூட்டத்தார்” அந்த அரச-ஆசாரியத்துவத்தின் பாகமாயிராதபோதிலும், அவர்கள் ஏன் உடல், மனம், ஒழுக்கம், மற்றும் ஆவிக்குரிய பிரகாரமாய்ச் சுத்தமாயிருக்கவேண்டும்?
[பக்கம் 15-ன் படம்]
“உடல், ஒழுக்கம், மற்றும் ஆவிக்குரிய சம்பந்தமாக உயர்ந்த தராதரங்களைக் காத்துவருவதை பெத்தேல் வாழ்க்கை தேவைப்படுத்துகிறது”
[பக்கம் 16-ன் படம்]
சிந்தனையற்றக் குடும்ப உறுப்பினர் சென்றபின் சுத்தம் செய்வதற்குத் தாயார் கூடுதலான நேரத்தை ஒவ்வொருநாளும் செலவிடவேண்டுமா?
[பக்கம் 17-ன் படம்]
காரின் உட்புறத்தைச் சுத்தம் செய்ய பத்து நிமிடங்கள் செலவிடுவது அதிசயமானதை நிறைவேற்றக்கூடும்