கடவுள் ஏன் இவ்வளவு பொறுமையாக இருந்திருக்கிறார்?
பட்டினியாய்க் கிடக்கும் பிள்ளையின் வாட்டமான முகத்தைப் பாருங்கள். அவனுடைய மெலிந்த உடலையும் உப்பிய வயிறையும் கவனியுங்கள். அவனுடைய கொடிய பசியைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். அவன் ஏந்திக்கொண்டிருக்கும் காலியான கிண்ணத்தைக் கவனியுங்கள். ஒருவேளை அவனுடைய தாய், குழிவிழுந்த கண்களினூடே பார்த்துக்கொண்டிருக்க, அவளுடைய முகம் நம்பிக்கையிழந்து சோகமே உருவாக காணப்படுகிறது. பின்னர் உங்கள் துயரத்தை அடக்கிக்கொள்ள—ஆம், கண்ணீரை கட்டுப்படுத்திக்கொள்ளப் பாருங்கள்.
சேஹல் என்று அறியப்படும் பஞ்சத்தால் பீடிக்கப்பட்ட 60 லட்சம் மில்லியன் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் பல லட்சக்கணக்கான தடவைகள் இந்தக் காட்சி காணப்படுகின்றது. இது அட்லான்டிக் கரையில் செனிகல்லிலிருந்து சிவந்த சமுத்திரத்தில் எத்தியோப்பியா வரையாக சஹாரா பாலைவனத்துக்குத் தெற்கே ஆப்பிரிக்காவுக்குக் குறுக்காக 4,800 கிலோ மீட்டருக்குப் பரந்து கிடக்கிறது. நிச்சயமாகவே பஞ்சம் மற்ற தேசங்களிலும் திரளான மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதிலும் 110 கோடி மக்கள் கவலைக்குரிய வகையில் நோயுற்றோ அல்லது ஊட்டமான உணவில்லாமலோ இருக்கின்றனர்.
உண்மைதான், பசி மனித துயரத்தின் ஒரு அம்சமேயாகும். மனிதன் பூமியை மாசுப்படுத்திக் கொண்டிருக்கிறான், நாம் அனைவருமே பாதிக்கப்படுகிறோம். அரசியல் அமைப்புகள், பலருக்கு வேதனையையும் மரணத்தையும் கொண்டு வரும் அநீதியையும் போரையும் அங்கீகரிக்கின்றன. கடவுள் ஏன் இப்படிப்பட்ட காரியங்களை அனுமதிக்கிறார்? அவர் நம்மைக் குறித்து அக்கறையுள்ளவராக இருக்கிறாரா?
கடவுள் அக்கறையுள்ளவராக இருக்கிறார்!
நம்முடைய சிருஷ்டிகர் நம்மைக் குறித்து அக்கறையுள்ளவராக இருக்கிறார். அவர் அக்கறையுள்ளவராக இருக்கிறார் என்பதற்கும், நம்முடைய நன்மைக்காகவும், தம்முடைய எல்லாச் சிருஷ்டிகளிலும் ஒத்திசைவு இருக்கும்படியாகவும் காரியங்கள் ஒன்றுசேர்ந்து வேலை செய்யும்படிக்கும் செய்ய அவருக்கிருக்கும் திறமைக்கும் ஏராளமான அத்தாட்சி இருக்கிறது. உதாரணமாக, இங்கே பூக்கள் நிறைந்த ஒரு பழ மரத்தைப் பார்வையிடும் தேனீயின் படத்தைப் பாருங்கள். தேனீ தன்னுடைய ஊட்டத்துக்குத் தேவையான தேனுக்கு பூக்களைச் சார்ந்திருக்கிறது. இந்த மரமோ, தேனீ இதேப் போன்ற ஒரு மரத்திலிருந்து தன் உடலில் சுமந்து வரும் மகரந்தத்தின் மீது சார்ந்திருக்கிறது. இவ்விதமாக பழம் தோன்றுவதற்காக பூக்களில் மகரந்த சேர்க்கை நடைபெறுகிறது. எல்லாப் பழ மரங்களிலுமே இவ்வகையில் மகரந்த சேர்க்கை நடைபெறுவதில்லை, ஆனால் கடவுள் நிச்சயமாகவே இந்தக் காரியத்தில் அசாதாரணமான ஓர் ஒத்துழைப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். ஆனந்தமாக நாம் உண்டு பயனடையும் பழம் அவருடைய நற்குணத்தின் விளைவாக இருக்கிறது.
தேனீ தானே 30,000-க்கும் மேற்பட்ட நன்கு-ஒழுங்கமைக்கப்பட்ட தேனீக்கூட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கின்றது. சில தேனீக்கள் கூட்டுக்குக் காவல் காக்கின்றன, மற்றவை அதைச் சுத்தம் செய்து அல்லது காற்று வசதி செய்கின்றன. இன்னும் மற்றவை தேனையும் மகரந்தத்தையும் சேர்த்து வைத்து, முட்டைப்புழுவுக்கு உணவளித்து அல்லது தேன் கிடைக்கும் புதிய இடங்களைத் தேடி அலைகின்றன. இப்படிப்பட்ட சுறுசுறுப்பான தேனீக்கள், நம்முடைய சுவையுணர்வுக்கு மகிழ்ச்சியூட்டும் இனிப்பான மற்றும் ஊட்டமளிக்கும் தேனைக் கொடுக்கும் போது நாம் பயனடையும் பொருட்டாக கடவுள் காரியங்களை ஏற்பாடு செய்திருக்கிறார்.
தேனீக்களுக்கும் தாவரங்களுக்குமிடையேயும், பூச்சுகளின் மத்தியிலும் காணப்படும் அற்புதமான ஒத்துழைப்பு, உயிருள்ள பொருட்களை ஒன்றோடொன்று ஒத்துழைக்கும்படியாகச் செய்வதற்கு சிருஷ்டிகர் முழுநிறைவாக திறமையுள்ளவர் என்பதற்கிருக்கும் அநேக அத்தாட்சிகளில் ஒன்றாகும். உண்மையில், “தேவன் கலகத்திற்கு [ஒழுங்கின்மைக்கு, NW] தேவனாயிராமல், சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார்.” (1 கொரிந்தியர் 14:33) அப்படியென்றால் இத்தனை அநேகருக்கு அவலநிலையில் விளைவடைந்திருக்கும் இப்பேர்ப்பட்ட ஓர் ஒற்றுமைக்கேட்டில் மனிதவர்க்கம் வாழ அவர் ஏன் அனுமதித்திருக்கிறார்? கடவுள் நம்மைப் பற்றி அக்கறையுள்ளவராக இருந்தால், இந்நிலைமையைச் சரிசெய்ய அவர் ஏன் இவ்வளவு காலம் காத்திருக்கிறார்? ஆம், கடவுள் ஏன் இவ்வளவு பொறுமையாக இருந்திருக்கிறார்?
கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது. தனிச்சிறப்பு வாய்ந்த இப்புத்தகம், யெகோவா தேவன் ஒரு நல்ல காரணத்துக்காகவே பொறுமையாக இருந்திருக்கிறார் என்று நமக்குச் சொல்லுகிறது. அந்தக் காரணம் என்ன? மேலும் கடவுளுடைய பொறுமை இன்னும் எவ்வளவு காலம் நீடித்திருக்கும்? (w91 10/1)