உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w92 3/1 பக். 2-5
  • மதம் உண்மையிலேயே அவசியம்தானா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மதம் உண்மையிலேயே அவசியம்தானா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மதச்சார்பின்மைக் கோட்பாட்டின் வளர்ச்சி
  • மதச்சார்பின்மையின் பின்னடைவு
  • மதத்தில் புதுப்பிக்கப்பட்ட அக்கறை
  • பகுதி 19: 17-19-வது நூற்றாண்டு வரைகிறிஸ்தவமண்டலம் உலக மாற்றத்துடன் போராடுகிறது
    விழித்தெழு!—1991
  • ஏதாவது ஒரு மதம் போதுமானதா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • மதம் ஏதாவது நன்மை உண்டா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • பகுதி 24: இன்றும் என்றென்றும் மெய் மதத்தின் நித்திய அழகுக்கூறுகள்
    விழித்தெழு!—1992
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
w92 3/1 பக். 2-5

மதம் உண்மையிலேயே அவசியம்தானா?

“மதம், ஒடுக்கப்பட்ட சிருஷ்டியின் பெருமூச்சாக, இதயமற்ற உலகின் மனக்கிளர்ச்சியாக, ஆத்துமா இல்லாத நிலையில் ஒர் ஆத்துமாவாக இருக்கிறது. அது மக்களின் அபினி.”

மதம் உங்களுக்கு முக்கியத்துவமுள்ளதாக இருக்கிறதா? நீங்கள் ஒருவேளை ஒரு மதத் தொகுதி அல்லது சர்ச்சின் அங்கத்தினரா? அப்படியானால் பின்னால் 1844-ல் வாழ்ந்த மக்களோடு பொதுவில் நீங்கள் அதிகத்தை உடையவர்களாக இருக்கிறீர்கள். அந்த ஆண்டில்தானே ஜெர்மன் தத்துவ ஞானியான காரல் மார்க்ஸ் இவ்விதமாக எழுதினார்: “மதம் . . . மக்களின் அபினி.” அந்நாட்களில் ஏறக்குறைய அனைவருமே சர்ச்சுக்குச் சென்றார்கள், மதம் சமுதாயத்தின் ஒவ்வொரு நிலையிலும் பலமான செல்வாக்கைச் செலுத்தி வந்தது. இன்று, அது வெகுவாக மாறிவிட்டிருக்கிறது, மதம் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் சற்றேனும் அல்லது எந்த அளவிலும் செல்வாக்கு செலுத்துவதில்லை. நீங்கள் சர்ச்சுக்குப் போகிறவராக இருந்தால், உங்கள் சமுதாயத்திலுள்ள சிறுபான்மையினரில் நீங்கள் இருக்கிறீர்கள்.

மாற்றத்தை உண்டுபண்ணியது எது? ஒரு காரியமானது, காரல் மார்க்ஸ், மிகவும் செல்வாக்குள்ளதாக ஆன மத எதிர்ப்புத் தத்துவம் ஒன்றை தோற்றுவித்தார். மனித முன்னேற்றத்துக்கு மதம் ஓர் இடையூறாக இருப்பதாக காரல் மார்க்ஸ் கருதினார். கடவுளுக்கோ அல்லது பாரம்பரியமான மதத்துக்கோ எந்த இடத்தையும் விட்டு வைக்காத ஒரு தத்துவமாகிய இயற்பொருள்வாதமே மனிதகுலத்தின் தேவைகளை சிறப்பாக நிறைவு செய்ய முடியும் என்பதாக அவர் உரிமைப்பாராட்டினார். இது அவரை இவ்விதமாகச் சொல்ல வழிநடத்தியது: “மனிதரின் மகிழ்ச்சிக்கு இன்றியமையாது தேவைப்படுவது மதத்தை ஒழிப்பதாகும்.”

காரல் மார்க்ஸின் இயற்பொருள்வாத தத்துவம், ஜெர்மன் சமதருமவாதி ஃப்ரெடரிக் எஞ்சல்ஸ் மற்றும் ரஷ்ய கம்யூனிஸ்ட் தலைவர் வால்டிமேர் லெனினால் மேலுமாக விளக்கிச் சொல்லப்பட்டது. அது மார்க்ஸ் கொள்கை–லெனின் பொருளாதார கோட்பாடு என்று அறியப்படலானது. சமீப காலம் வரையிலுமாக, மனிதகுலத்தில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானவர்கள், இந்த நாத்திகத் தத்துவத்தை அதிக அளவிலோ குறைந்த அளவிலோ பின்பற்றும் அரசியல் ஆட்சியின் கீழ் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அநேக ஆண்களும் பெண்களும் இன்னும் அவ்விதமாகவே இருக்கிறார்கள்.

மதச்சார்பின்மைக் கோட்பாட்டின் வளர்ச்சி

ஆனால் கம்யூனிஸ தத்துவம் பரவியது மட்டுமே மனிதகுலத்தின் மீது மதத்தின் பிடிப்பைப் பலவீனப்படுத்திய ஒரே காரியமாக இருக்கவில்லை. அறிவியல் துறையில் முன்னேற்றங்களும்கூட ஒரு பங்கை வகித்தன. உதாரணமாக, பரிணாமக் கோட்பாட்டை மக்கள் விரும்பும்படியாகப் பிரபலப்படுத்தப்பட்டக் காரியம் செய்தது சிருஷ்டிகர் ஒருவர் இருப்பதைப் பற்றி சந்தேகிக்க அநேகரை வழிநடத்தியது. மற்ற காரியங்களும் இருந்தன.

என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா, “முன்னர் தெய்வீக ஆற்றலுக்கு உரித்தாக்கப்பட்ட குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளுக்கு அறிவியல் விளக்கங்களின் கண்டுபிடிப்பு” மற்றும் “மருத்துவம், கல்வி, கலை போன்ற செயல் நடவடிக்கைகளில் ஒழுங்கமைக்கப்பட்ட மதத்தினுடைய செல்வாக்கின் ஒழிப்புப்” பற்றி குறிப்பிடுகிறது. இவைப் போன்ற முன்னேற்றங்கள், மதச்சார்பின்மைக் கோட்பாடு வளர்ச்சிக்கு வழிநடத்தியிருக்கிறது. மதச்சார்பின்மை கோட்பாடு என்பது என்ன? “மதமும் மதசம்பந்தமான சலுகைகளும் புறக்கணிக்கப்பட வேண்டும் அல்லது வேண்டுமென்றே தவிர்க்கப்பட வேண்டும் என்ற ஆதாரத்தின் அடிப்படையில் அமைந்த . . . வாழ்க்கையைப் பற்றிய கருத்து,” என்பதாக விளக்கப்படுகிறது. மதச்சார்பின்மைக் கோட்பாடு கம்யூனிஸம் மற்றும் கம்யூனிஸம் அல்லாத தேசங்களில் செல்வாக்குள்ளதாக இருக்கிறது.

ஆனால் மதச்சார்பின்மை, காரல் மார்க்ஸ் கொள்கைகள்—லெனின் பொருளாதார கோட்பாடு ஆகியவை மாத்திரமே மதத்தின் செல்வாக்கைப் பலவீனப்படுத்தவில்லை. கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். ஏன்? ஏனென்றால் பல நூற்றாண்டுகளாக அவர்கள் தங்கள் அதிகாரத்தை துர்ப்பிரயோகஞ்செய்து வந்திருக்கிறார்கள். பைபிளை கற்பிப்பதற்கு பதிலாக அவர்கள் வேத ஆதாரமற்ற பாரம்பரியங்களையும் மனித தத்துவங்களையும் அடிப்படையாகக் கொண்ட கோட்பாடுகளை கற்பித்திருக்கிறார்கள். ஆகவே, மதச்சார்பின்மை கோட்பாட்டின் தாக்குதலை எதிர்த்து நிற்பதற்கு அவர்களுடைய மந்தையிலிருந்த அநேகர் மிகவும் பலவீனமாயிருந்தனர்.

மேலுமாக, சர்ச்சுகள்தாமேயும் கூட, பெரும்பகுதி கடைசியாக மதச்சார்பின்மை கோட்பாட்டுக்கு விட்டுகொடுத்துவிட்டது. 19-வது நூற்றாண்டில், கிறிஸ்தவமண்டலத்திலுள்ள மத கல்விமான்கள், உயர்வகையான ஒரு திறனாய்வுக்கு வழிவகுத்தார்கள். இது அநேகருக்கு கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தையாக பைபிளின் நம்பத்தக்கத் தன்மையை அழித்துவிட்டது. ரோமன் கத்தோலிக்க சர்ச் உட்பட சர்ச்சுகள் பரிணாமக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டன. ஆம், இன்னும் அவை சிருஷ்டிப்பில் நம்பிக்கை வைப்பதாக உரிமைப் பாராட்டின. ஆனால் மனிதனுடைய உடல் பரிணமித்த போது, ஆத்துமா மட்டுமே கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கக்கூடிய சாத்தியத்துக்கு இடமளித்தார்கள். 1960-களின் போது, புராட்டஸ்டன்டு மதம், “கடவுளின் மரணத்தை” அறிவித்த ஓர் இறையியல் புது கருத்தை தெரிவித்தனர். அநேக புராட்டஸ்டன்டு குருமார் பொருள்பற்றுள்ள வாழ்க்கைமுறையை ஆதரித்தனர். அவர்கள் விவாகத்துக்கு முன்னான பாலுறவுக்கும் ஓரினப்புணர்ச்சிக்கும் ஆதரவு தெரிவித்தனர். ஒரு சில கத்தோலிக்க இறையியல் வல்லுநர்கள், கத்தோலிக்க மதத்தை புரட்சிகரமான மார்க்ஸின் கொள்கையோடு கலந்து விடுதலை இறையியலை உருவாக்கினர்.

மதச்சார்பின்மையின் பின்னடைவு

இவ்விதமாக மதச்சார்பின்மை 1960-களின் போதும் 1970-களின் இடைப்பகுதி வரையாகவும் ஆதிக்கம் செலுத்தி வந்தது. பின்னர் காரியங்கள் மறுபடியும் மாறின. பெரும்பகுதியாக மதம் முன்னிலைக்கு வராவிட்டாலும் முக்கியமான சர்ச்சுகள் முன்னிலைக்கு வருவதாகத் தோன்றியது. உலகம் முழுவதிலும் 1970-களின் பிற்பகுதியும் 1980-களும் புதிய மதத் தொகுதிகளின் விரைவான பெருக்கத்தைக் கண்டது.

மதம் புத்துயிர் பெற்றதற்குக் காரணம் என்ன? பிரெஞ்சு மனித சமுதாய வளர்ச்சி ஆய்வாளர் இவ்விதமாக குறிப்பிட்டார்: “பொதுக் கல்வி பயின்ற பாமர மக்கள் . . . மதச்சார்பற்ற கலாச்சாரம் தங்களை முன்னேற வாய்ப்பில்லாத நிலைக்கு வழிநடத்தியுள்ளது என்றும் கடவுளிடமிருந்து விடுதலைப் பெற்றுவிட்டதாக உறுதியாகக் கூறுவதன் மூலம் தங்கள் பெருமையினாலும் வெற்றாரவாரத்தினாலும் அவர்கள் விதைத்திருப்பதைக் குற்றச்செயல், விவாகரத்து, எய்ட்ஸ், போதைவஸ்து துர்ப்பிரயோகம் [மற்றும்] தற்கொலையாக அறுவடை செய்து கொண்டிருப்பதாகவும் உறுதியாக நம்பினார்கள்.”

மதச்சார்பின்மையின் பின்னடைவு, அண்மைக் காலத்தில், தெளிவாக இருந்த மார்க்ஸ் கொள்கை-லெனின் பொருளாதாரக் கோட்பாட்டின் வீழ்ச்சியினால் புதிய வேகத்தைத் திரட்டியது. அநேக ஆட்களுக்கு இந்த நாத்திகத் தத்துவம் ஒரு நிஜமான மதமாகிவிட்டிருந்தது. அப்படியென்றால் அதில் நம்பிக்கை வைத்திருந்தவர்களின் மனகுழப்பத்தைக் கற்பனைச் செய்துப் பாருங்கள்! மாஸ்கோவிலிருந்து வந்த வாஷிங்டன் போஸ்ட் செய்தி, கம்யூனிஸ்ட் கட்சி உயர்நிலைப்பள்ளியின் முன்னாள் தலைவரின் வார்த்தைகளை மேற்கோள் காண்பித்திருந்தது: “ஒரு தேசம், அதன் பொருளாதாரம் மற்றும் நிறுவனங்களைச் சார்ந்து மாத்திரம் அல்ல, ஆனால், தன் புராண இலக்கியங்கள் மற்றும் அதை உருவாக்கிய மூதாதையரைச் சார்ந்தும் வாழ்கிறது. தங்களுடைய மிகப்பெரிய புராண இலக்கியங்கள் உண்மையை அல்ல, ஆனால் பிரச்சாரத்தையும் கற்பனையையுமே ஆதாரமாக கொண்டவை என்பதைக் கண்டுணருவது எந்த ஒரு சமுதாயத்துக்கும் நாசமுண்டாக்கும் ஒரு காரியமாகும். ஆனால் லெனின் மற்றும் புரட்சியின் விஷயத்தில் இப்பொழுது இதைத்தாமே நாம் அனுபவித்து வருகிறோம்.”

கம்யூனிஸ மற்றும் முதலாளித்துவ உலகங்களைக் குறித்துப் பேசுகையில், பிரெஞ்சு மனித சமுதாய வளர்ச்சி ஆய்வாளரும் தத்துவஞானியுமான எட்கர் மாரன் இவ்விதமாக ஒப்புக்கொண்டார்: “பாட்டாளி மக்களுக்கு முன்னால் வைக்கப்பட்ட பிரகாசமான எதிர்காலத்தின் வீழ்ச்சியை நாம் பார்த்திருப்பது மட்டுமல்லாமல், எங்கே அறிவியலும், விவேகமும், குடியாட்சியும் தானாகவே முன்னேற்றமடைந்துவிடும் என்பதாக கருதப்பட்டதோ அந்த மதச்சார்பற்ற சமுதாயத்தின் வளர்ச்சியும் தானாகவேயும் இயற்கையாகவும் வீழ்ச்சியடைவதையும்கூட நாம் பார்த்துவிட்டோம். . . . எந்த வளர்ச்சியும் இப்பொழுது உறுதியளிக்கப்படவில்லை. நாம் நம்பியிருந்த எதிர்காலம் நொறுங்கிவிட்டது.” கடவுள் இல்லாமல் மேம்பட்ட ஓர் உலகைப் படைக்க மனிதனின் முயற்சிகளில் நம்பிக்கை வைக்கும் அநேகருடைய வெறுமையான உணர்ச்சி இப்படித்தான் இருக்கிறது.

மதத்தில் புதுப்பிக்கப்பட்ட அக்கறை

உலகெங்கும் காணப்படும் இந்த ஏமாற்ற உணர்வு, உண்மை மனதுள்ள அநேகரைத் தங்கள் வாழ்க்கையில் ஆவிக்குரிய அம்சத்துக்கு ஓர் இடமளிப்பதற்கான தேவையை உணரும்படியாக செய்துகொண்டிருக்கிறது. அவர்கள் மதத்துக்கான தேவையை காண்கிறார்கள். ஆனால் அவர்கள் செல்வாக்குமிக்க சர்ச்சுகளில் திருப்தியற்றவர்களாகவும், சில புதிய மதங்களைக் குறித்து—சுகமளித்தலைச் செய்யும் கருத்து வேறுபாட்டுக் குழுக்கள், காரிஸ்மாட்டிக் கூட்டத்தார், மத உட்பிரிவுகள் மற்றும் சாத்தான் வணக்கத்தார்களின் சில தொகுதிகள் உட்பட—அவைகளைக் குறித்து சந்தேகமுடையவர்களாகவும் இருக்கிறார்கள். மதவெறியும்கூட அதன் அருவருப்பான தலையைத் தூக்குகிறது. ஆம், மதம் மீண்டும் உயிர்பெற்று வருகிறது. ஆனால் இப்படியாக மதம் திரும்பிவருவது, மனிதருக்கு ஒரு நல்ல காரியமா? ஆம், மனிதகுலத்தின் ஆவிக்குரியத் தேவைகளை ஏதாவது ஒரு மதம் உண்மையில் நிறைவு செய்கிறதா? (w91 12/1)

[பக்கம் 3-ன் படம்]

‘‘மதம், ஒடுக்கப்பட்ட சிருஷ்டியின் பெருமூச்சாக, இதயமற்ற உலகின் மனக்கிளர்சியாக, ஆத்துமா இல்லாத நிலையில் ஓர் ஆத்துமாவாக இருக்கிறது. அது மக்களின் அபினி.’’

[படத்திற்கான நன்றி]

Photo: New York Times, Berlin—33225115

[பக்கம் 4-ன் படம்]

காரல் மார்க்ஸ் மற்றும் வால்டிமர் லெனின் மதம் மனித முன்னேற்றத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கண்டார்கள்

[படத்திற்கான நன்றி]

Musée d’Histoire Contemporaine—BDIC (Universitiés de Paris)

[பக்கம் 5-ன் படம்]

மார்க்ஸிய–லெனின் கருத்து, இலட்சக்கணக்கான மக்களின் இருதயங்களில் உயர்வான நம்பிக்கைகளை உருவாக்கியிருந்தது

[பக்கம் 2-ன் படங்களுக்கான நன்றி]

Cover photo: Garo Nalbandian

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்