உலகளாவிய தண்ணீர்களில் மீன்களைப் பிடிப்பது போல மனிதர்களைப் பிடித்தல்
“சுவிசேஷத்தை நான் பிரசங்கித்து வந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.”—1 கொரிந்தியர் 9:16.
1, 2. (எ) 1 கொரிந்தியர் 9:16-ல் மறைமுகமாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் சவாலை யார் உண்மையிலேயே ஏற்றிருக்கின்றனர், நீங்கள் ஏன் அவ்வாறு பதிலளிக்கிறீர்கள்? (பி) என்ன உத்தரவாதத்தை யெகோவாவின் சாட்சிகள் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்?
மேலே கொடுக்கப்பட்டுள்ள பவுலின் வார்த்தைகள் அளிக்கும் சவாலை இந்த இருபதாம் நூற்றாண்டில் உண்மையிலேயே யார் ஏற்றிருக்கின்றனர்? “ஆவிக்குரிய தேவையைக் குறித்து உணர்வுள்ளவர்களாயிருக்கும்,” ஆண்களையும் பெண்களையும் பிடிப்பதற்கு இந்த உலகத்துக்குள் யார் ஆயிரக்கணக்கில் சென்றிருக்கின்றனர்? (மத்தேயு 5:3, NW) சிறைதண்டனை, மரணம் ஆகியவற்றுக்கு ஆளாகும் நிலையை யார் எதிர்ப்பட்டிருக்கின்றனர்? மத்தேயு 24:14-ல் உள்ள கிறிஸ்துவின் கட்டளையை நிறைவேற்றுவதால் அநேக தேசங்களில் யார் அப்படிப்பட்ட துன்பங்களை அனுபவித்திருக்கின்றனர்?
2 யெகோவாவின் சாட்சிகளே என்று பதிவு பதிலளிக்கிறது. சென்ற வருடம் மட்டும் நாற்பது லட்சத்துக்கும் மேலான சாட்சிகள் 211 தேசங்களிலும் பிராந்தியங்களிலும் வீட்டுக்கு வீடாகச் சென்று 200-க்கும் மேற்பட்ட மொழிகளில் ‘நற்செய்தியை அறிவித்தனர்.’ அவர்களுள் அடங்கியிருப்பவர்கள் பயிற்றுவிக்கப்பட்ட மிஷனரிகள் மட்டுமல்ல. இல்லை, வீட்டுக்கு-வீடு வேலையிலும், ஒவ்வொரு பொருத்தமான சமயத்திலும் பிரசங்கிக்கவும், கற்பிக்கவும் வேண்டிய உத்தரவாதத்தை யெகோவாவின் சாட்சிகள் அனைவரும் உணருகின்றனர். மற்றவர்களோடு தங்களுடைய நம்பிக்கைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியத்தை அவர்கள் ஏன் உணருகின்றனர்? ஏனென்றால் அறிவு உத்தரவாதத்தைக் கொண்டு வருகிறது என்பதை அவர்கள் உணருகின்றனர்.—எசேக்கியேல் 33:8, 9; ரோமர் 10:14, 15; 1 கொரிந்தியர் 9:16, 17.
மனிதர்களைப் பிடிப்பது, ஓர் உலகளாவிய சவால்
3. மீன்பிடிக்கும் வேலை எவ்வளவு விரிவானதாக இருக்க வேண்டும்?
3 இந்த மிகப் பெரிய மீன்பிடிக்கும் வேலை ஒரு நதி அல்லது ஏரி அல்லது கடல் போன்ற ஏதோவொன்றுக்கு கட்டுப்படுத்தப்பட்டதாயில்லை. இயேசு கட்டளையிட்டது போல், இது “எல்லா தேசங்களிலும்,” செய்யப்பட வேண்டும். (மாற்கு 13:10, NW) தம் தகப்பனிடம் ஏறிப் போவதற்கு முன்பு, இயேசு தம் சீஷர்களிடம் சொன்னார்: “நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்.”—மத்தேயு 28:19, 20.
4. (எ) இயேசுவை பின்பற்றின ஆரம்பகால யூதர்களை எது ஆச்சரியமூட்டியிருக்க வேண்டும்? (பி) யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு தங்கள் பிரசங்க வேலையின் அளவை நோக்குகின்றனர்?
4 இயேசுவைப் பின்பற்றின யூதர்களுக்கு அது ஓர் அதிர்ச்சியூட்டும் வேலையாக இருந்திருக்க வேண்டும். எல்லா தேசங்களிலும் இருக்கும் “அசுத்தமான” புறஜாதியாரிடம் அவர்கள் இப்போது சென்று அவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று இயேசு தம் யூத சீஷர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அதன் வலிமையை கிரகித்துக் கொள்வதற்கும், அந்த நியமிப்பின் பேரில் செயல்படுவதற்கும் சில சரிப்படுத்துதல்கள் அவர்களுக்குத் தேவைப்பட்டது. (அப்போஸ்தலர் 10:9-35) ஆனால் அதை அவர்கள் தவிர்க்க முடியவில்லை. “நிலம் உலகம்,” என்று ஓர் உவமையில் இயேசு அவர்களிடம் சொல்லியிருந்தார். எனவே, யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய மீன்பிடிக்கும் உரிமைக்குரிய இடமாக முழு உலகத்தையும் நோக்குகின்றனர். கடவுளிடமிருந்து அவர்கள் பெற்றுக்கொண்டிருக்கும் வேலையை கட்டுப்படுத்த “20 கிலோ மீட்டர் எல்லை”யோ அல்லது “நாட்டுரிமைக் கரையோரக் கடல்பரப்பு” எல்லையோ இல்லை. மத சம்பந்தமான சுயாதீனம் இல்லாத இடங்களில் சில சமயங்களில் விழிப்புடன் இருக்க வேண்டிய நிலை தேவைப்படுகிறது. அப்படியிருந்தாலும், அவசரத்தன்மையோடு அவர்கள் மீன்பிடிக்கின்றனர். ஏன் அப்படி? ஏனென்றால் உலகளாவிய மீன்பிடிக்கும் வேலையின் இறுதி பகுதியில் நாம் இருக்கிறோம் என்பதை உலக சம்பவங்களும், பைபிள் தீர்க்கதரிசன நிறைவேற்றமும் குறிப்பிடுகின்றன.—மத்தேயு 13:38; லூக்கா 21:28-33.
உலகளாவிய மீன்பிடிக்கும் வேலையில் முன்னேற்றம்
5. என்ன வகையான ஜனங்கள் உலகளாவிய மீன்பிடிக்கும் வேலைக்கு பிரதிபலிக்கின்றனர்?
5 அபிஷேகம்பண்ணப்பட்ட ராஜ்ய சுதந்தரவாளிகளில் பெரும்பான்மையர் 1935-ம் வருடத்துக்கு முன்பு தேசங்களிலிருந்து “பிடிக்கப்பட்டனர்.” ஆகையால் அவர்களுடைய முழு எண்ணிக்கை அடிப்படையாக நிறைவு பெற்றுவிட்டது. எனவே, விசேஷமாக 1935-லிருந்து யெகோவாவின் சாட்சிகள் “பூமியைச் சுதந்தரித்துக்”கொள்ளப் போகும் “சாந்தகுணமுள்ளவர்கள்,” என்று விவரிக்கப்பட்டிருக்கும் மனத்தாழ்மையுள்ள நபர்களை தேடிக்கொண்டிருக்கின்றனர். (சங்கீதம் 37:11, 29) “செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற,” ஜனங்கள் இவர்கள். “மிகுந்த உபத்திரவம்,” சாத்தானின் மோசமான, கறைபட்ட காரிய ஒழுங்கு முறையை அடித்து வீழ்த்துவதற்கு முன்பு கடவுளுடைய ராஜ்ய ஆட்சியின் சார்பாக அவர்கள் நடவடிக்கை எடுக்கின்றனர். சாத்தானை வணங்குபவர்கள் இறுதி அழிவாகிய “அக்கினிச் சூளையிலே” போடப்படுவர்.—எசேக்கியேல் 9:4; மத்தேயு 13:47-50; 24:21.
6, 7. (எ) பிரசங்க வேலையைக் குறித்து என்ன படிகள் 1943-ல் எடுக்கப்பட்டன? (பி) விளைவுகள் என்னவாய் இருந்திருக்கின்றன?
6 உலகளாவிய மீன்பிடிக்கும் வேலை இந்நாள் வரையாக வெற்றிகரமானதாக இருந்திருக்கிறதா? உண்மைகள் பேசட்டும். இரண்டாம் உலக யுத்தம் 1943-ல் உச்ச நிலையடைந்து கொண்டிருக்கையில், புரூக்லின், நியூ யார்க்-ல் உள்ள யெகோவாவின் சாட்சிகளின் தலைமைக் காரியாலயத்தில் இருந்த உண்மையுள்ள அபிஷேகம்பண்ணப்பட்ட சகோதரர்கள் மிகப் பெரிய உலகளாவிய மீன்பிடிக்கும் வேலை ஒன்று நிறைவேற்றப்பட வேண்டும் என்று முன்னரே உணர்ந்தனர். ஆகையால், என்ன படிகள் எடுக்கப்பட்டன?a—வெளிப்படுத்துதல் 12:16, 17.
7 உவாட்ச்டவர் சங்கம் 1943-ல் கிலியட் என்றழைக்கப்பட்ட மிஷனரி பள்ளி ஒன்றை நிறுவியது. (எபிரெய மொழியில் “சாட்சி குவியல்”; ஆதியாகமம் 31:47, 48) பூமி முழுவதும் அடையாளப்பூர்வமான மீனவர்களாக மிஷனரிகளை அனுப்புவதற்காக அது ஒவ்வொரு ஆறு மாதங்களும் நூறு மிஷனரிகளைப் பயிற்றுவிக்க ஆரம்பித்தது. அப்போது மனிதர்களை பிடிக்கும் வேலையில் 54 தேசங்களில் 1,26,329 சாட்சிகள் மட்டுமே சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்தனர். பத்து வருடங்களுக்குள் அந்த எண்ணிக்கைகள் உண்மையில் 143 தேசங்களில் 5,19,982 சாட்சிகள் என்று உயர்ந்தன! நிச்சயமாகவே கிலியட் பள்ளி மனவுரமுள்ள மீனவ ஆண்களையும், மீனவ பெண்களையும் உண்டுபண்ணிக்கொண்டிருந்தது. அவர்கள் பிற நாட்டு கலாச்சாரங்களுக்குச் செல்லவும், புதிய மீன்பிடிக்கும் தண்ணீர்களுக்கு தக்கபடி தங்களை மாற்றியமைத்துக் கொள்ளவும் விருப்பமுள்ளவர்களாய் இருந்தனர். அதன் விளைவாக, ஆயிரக்கணக்கான நேர்மை இருதயமுள்ள ஜனங்கள் பிரதிபலித்தனர். அந்த மிஷனரிகளும், அவர்களோடு வேலை செய்த உள்ளூர் சாட்சிகளும், இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் மகத்தான அதிகரிப்புக்கு அஸ்திபாரம் போட்டனர்.
8, 9. (எ) தலைச்சிறந்த மிஷனரி வேலையின் எடுத்துக்காட்டுகளாக எவற்றைக் குறிப்பிடலாம்? (பி) மிஷனரிகள் எவ்வாறு தங்கள் பிராந்தியங்களில் முனைப்பான வளர்ச்சியைக் கண்டிருக்கின்றனர்? (யெகோவாவின் சாட்சிகளுடைய 1992 வருடாந்தர புத்தகத்தையும் பாருங்கள்.)
8 அந்த ஆரம்ப கால கிலியட் பள்ளியிலிருந்த அநேக உண்மையுள்ள நீடித்த அனுபவமுடையவர்கள் இன்னும் தங்கள் அயல்நாட்டு பிராந்தியங்களில் சேவை செய்து வருகின்றனர். இப்போது அவர்களுக்கு 70 அல்லது 80 வயது இருந்தாலும்கூட அவர்கள் தொடர்ந்து சேவை செய்து வருகின்றனர். அவர்களுள் எடுத்துக்காட்டாக விளங்கும் ஒரு முன்மாதிரி 82 வயது எரிக் பிரிட்டன் என்பவரும் அவருடைய மனைவி கிறிஸ்டினாவும் ஆவர். அவர்கள் 1950-ல் கிலியட் பள்ளியின் 15-வது வகுப்பில் பட்டம் பெற்றவர்கள். அவர்கள் இன்னும் பிரேஸில் என்ற இடத்தில் சேவை செய்து வருகின்றனர். அவர்கள் பிரேஸிலில் சேவை செய்வதற்கு சென்ற போது, 3,000-க்கும் குறைந்த சாட்சிகளே அந்தத் தேசத்தில் இருந்தனர். இப்போது 3,00,000-க்கும் மேற்பட்ட சாட்சிகள் இருக்கின்றனர்! மீன்பிடிக்கும் வேலை பலன்தரக்கூடியதாக இருந்ததால் பிரேஸிலில் நிச்சயமாகவே ‘சிறியவன் பலத்த ஜாதியாக’ ஆகியிருக்கிறான்.—ஏசாயா 60:22.
9 ஆப்பிரிக்காவில் இருக்கும் மிஷனரிகளைப் பற்றி நாம் என்ன சொல்லலாம்? அதிக வித்தியாசமான கலாச்சாரத்துக்கு ஏற்ப அநேகர் தங்களை மாற்றியமைத்துக் கொண்டு ஆப்பிரிக்க ஜனங்களை நேசிக்கின்றனர். அதில் எடுத்துக்காட்டாக இருப்பவர்கள் சகோதரர்கள் ஜான் மற்றும் எரிக் குக் என்பவர்களும் அவர்களுடைய மனைவிகள் காத்லென், மெர்ட்டில் என்பவர்களும் ஆவர். அவர்கள் இப்போது தென் ஆப்பிரிக்காவில் சேவை செய்து வருகின்றனர். ஜான், எரிக் என்பவர்கள் 1947-ல் எட்டாவது வகுப்பில் பட்டம் பெற்றவர்கள். அங்கோலா, சிம்பாப்வே, மொஸாம்பிக், தென் ஆப்பிரிக்கா போன்ற தேசங்களில் இச்சகோதரர்கள் சேவை செய்திருக்கின்றனர். சில மிஷனரிகள் ஆப்பிரிக்காவில் நோயின் காரணமாக மரித்தனர். மற்றவர்கள் போர், துன்புறுத்தல் ஆகியவற்றின் காரணமாக மரித்துப் போயினர். லைபீரியாவில் சமீபத்தில் நடந்த உள்நாட்டுப் போர் காரணமாக ஆலன் பட்டி, ஆர்த்தர் லாசன் போன்றவர்கள் மரித்துப் போனார்கள். என்றபோதிலும், ஆப்பிரிக்க தண்ணீர்கள் அதிக பலன்தரும் தண்ணீர்களாக நிரூபித்திருக்கின்றன. இப்போது அந்தப் பரந்த கண்டம் முழுவதும் 4,00,000-கும் மேற்பட்ட சாட்சிகள் பரவி இருக்கின்றனர்.
அனைவருக்கும் ஒரு பங்கு உள்ளது
10. ஏன் மற்றும் எந்த விதத்தில் பயனியர்கள் பாராட்டத்தக்க ஒரு வேலையை செய்துகொண்டிருக்கின்றனர்?
10 அயல்நாட்டு மிஷனரிகள் எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கில் இருக்கின்றனர். ஆனால் உள்ளூர் பிரஸ்தாபிகளும் பயனியர்களும்b லட்சக்கணக்கில் இருக்கின்றனர் என்பதை உணர வேண்டும். பூமி முழுவதும் பிரசங்க வேலையின் பெரும் அளவை அவர்கள் செய்து வருகின்றனர். பயனியர்கள், பயணம் செய்யும் ஊழியர்கள் ஆகியோரின் சராசரி எண்ணிக்கை 1991-ல் 5,50,000-க்கும் மேற்பட்டதாய் இருந்தது. மிகப் பெரிய மீன்பிடிக்கும் வேலையில் பங்குகொள்வதற்கு இப்படிப்பட்ட உண்மையுள்ள சாட்சிகள் எடுக்கும் விசேஷ முயற்சிகளை நாம் சிந்தித்துப் பார்க்கையில் அது எப்படிப்பட்ட கவர்ச்சியான எண்ணிக்கையாய் இருக்கிறது. அவர்கள் ஒவ்வொரு மாதமும் 60-லிருந்து 140 மணிநேரங்கள் சராசரியாக பிரசங்க வேலையில் செலவழிக்கின்றனர். அநேகர் பெருமளவில் தனிப்பட்ட தியாகம், செலவு ஆகியவற்றைச் செய்து இதில் ஈடுபடுகின்றனர். ஆனால் ஏன்? ஏனென்றால் அவர்கள் தங்கள் கடவுளாகிய யெகோவாவில் முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும் அன்பு கூருகின்றனர். தங்களைப் போல் தங்கள் அயலாரையும் அவர்கள் நேசிக்கின்றனர்.—மத்தேயு 22:37-39.
11. யெகோவாவின் ஜனங்கள் மத்தியில் அவருடைய ஆவி கிரியை செய்கிறது என்பதற்கு என்ன நிச்சயமான அத்தாட்சி இருக்கிறது?
11 முழு நேர ஊழியத்தில் இல்லையென்றாலும் தங்களுடைய சூழ்நிலைக்கு ஏற்றபடி யெகோவாவின் சேவையில் 100 சதவீதம் செய்யும் முப்பத்தைந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மற்ற சாட்சிகளைப் பற்றி நாம் என்ன சொல்லலாம்? சிலர் மனைவிகளாக இருக்கின்றனர், சிறு பிள்ளைகளை கவனித்துக்கொள்ளும் தாய்மார்களும்கூட உலகளாவிய மீன்பிடிக்கும் வேலைக்கு தங்கள் விலைமதிப்புள்ள நேரத்தை ஒதுக்கி வைக்கின்றனர். அவர்களில் அநேகர் முழு-நேர உலகப்பிரகாரமான வேலையையுடைய கணவன்மாராகவும் தகப்பன்மாராகவும் இருக்கின்றனர்; என்றபோதிலும், அந்நியர்களுக்கு சத்தியத்தை கற்பிக்க வார-இறுதி நாட்களிலும், மாலைகளிலும் அவர்கள் நேரத்தை ஒதுக்குகின்றனர். பிறகு, பிரசங்க வேலையில் பங்குகொண்டு, தங்கள் நடத்தையின் மூலம் சத்தியத்தை சிபாரிசு செய்யும் மணமாகாத ஆண்கள், பெண்கள், இளைஞர் ஆகியோர் அடங்கிய திரள் கூட்டம் ஒன்று இருக்கிறது. சம்பளமின்றி மனமுவந்து ஒவ்வொரு மாதமும் கடவுளுடைய ராஜ்ய ஆட்சியின் நற்செய்தியை பிரசங்கிக்கும் நாற்பது லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை வேறு எந்த மதத் தொகுதி கொண்டிருக்கிறது? யெகோவாவின் ஆவி கிரியை செய்வதை இது நிச்சயமாகவே வெளிப்படையாகக் காண்பிக்கிறது!—சங்கீதம் 68:11; அப்போஸ்தலர் 2:16-18; சகரியா 4:6-ஐ ஒப்பிடவும்.
வளர்ச்சிக்கு உதவியளிக்கும் காரணக்கூறுகள்
12. ஏன் மற்றும் என்ன எண்ணிக்கையில் ஜனங்கள் சத்தியத்துக்கு பிரதிபலித்துக் கொண்டு வருகின்றனர்?
12 இந்த மிகப் பெரிய பிரசங்க வேலை ஒவ்வொரு வருடமும் குறிப்பிடத்தக்க விளைவுகளை கொண்டு வருகிறது. 1991-ல் 3,00,000-க்கும் மேற்பட்ட புதிய சாட்சிகள் தண்ணீரில் முழுவதுமாக மூழ்குவதன் மூலம் முழுக்காட்டப்பட்டனர். ஒவ்வொரு சபையிலும் 100 சாட்சிகளைக் கொண்ட 3,000-க்கும் மேற்பட்ட சபைகளுக்கு அது சமமாக இருக்கிறது! இவையனைத்தும் எவ்வாறு சாதிக்கப்பட்டது? இயேசு கூறியதை நாம் நினைவுபடுத்திப் பார்ப்போம்: “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். . . . எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்.” எனவே, வெறும் மனித முயற்சியால் மட்டுமே ஒருவர் உலகளாவிய மீன் பிடிக்கும் வேலைக்கு பிரதிபலிப்பதில்லை. அப்படிப்பட்ட தகுதியானவர்களின் இருதய நிலைமையை யெகோவா கூர்ந்து கவனித்து தன்னிடமாக இழுத்துக்கொள்கிறார்.—யோவான் 6:44, 45; மத்தேயு 10:11-13; அப்போஸ்தலர் 13:48.
13, 14. என்ன சிறந்த மனநிலையை அநேக சாட்சிகள் வெளிக்காட்டியிருக்கின்றனர்?
13 இருப்பினும், ஆட்களைத் தன்னிடம் ஈர்த்துக்கொள்ள மனிதர்களை மீனவ ஏதுக்களாக யெகோவா உபயோகிக்கிறார். ஆகையால், மீன்பிடிக்கும் பிராந்தியத்தை குறித்தும், ஜனங்களைக் குறித்தும் அவர்களுக்கு இருக்க வேண்டிய மனநிலை முக்கியமானதாய் இருக்கிறது. கலாத்தியர்களுக்கு பவுல் எழுதின வார்த்தைகளை பெரும்பான்மையர் தங்கள் இருதயங்களில் ஏற்றுக்கொண்டிருப்பதைக் காண்பது எவ்வளவு உற்சாகமூட்டுவதாய் இருக்கிறது: “நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.”—கலாத்தியர் 6:9.
14 படிப்படியாக வெளிப்படும் உலக நிலைமைகளை உன்னிப்பாக கவனித்துக்கொண்டே பல பத்தாண்டுகளாக அநேக உண்மையுள்ள சாட்சிகள் பிரசங்கித்துக் கொண்டு வந்திருக்கின்றனர். நாசிஸம், பாசிஸம், மற்ற சர்வாதிபத்திய ஆட்சி முறைகள் ஆகியவற்றின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் அவர்கள் கண்டிருக்கின்றனர். சிலர் 1914-ம் ஆண்டு முதற்கொண்டு நடந்து வந்திருக்கும் அநேக போர்களைப் பார்த்திருக்கின்றனர். உலகத் தலைவர்கள் முதலில் சர்வதேச சங்கத்தின் மீதும், பின்னர் ஐக்கிய நாட்டு சங்கத்தின் மீதும் தங்கள் நம்பிக்கையை வைப்பதை அவர்கள் பார்த்திருக்கின்றனர். அநேக தேசங்களில் யெகோவாவின் வேலை முதலில் தடை செய்யப்பட்டு பின்னர், அங்கீகாரம் பெற்றதை அவர்கள் கண்டிருக்கின்றனர். மனிதர்களைப் பிடிக்கும் வேலை உட்பட இவையனைத்தின் ஊடேயும், யெகோவாவின் சாட்சிகள் நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருந்திருக்கின்றனர். எப்படிப்பட்ட தலைச்சிறந்த உத்தமத்தன்மையின் பதிவு!—மத்தேயு 24:13.
15. (எ) நம்முடைய உலகளாவிய பிராந்தியத்தின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்வதற்கு நமக்கு என்ன உதவி இருந்திருக்கிறது? (பி) உங்களுடைய பிராந்தியத்தில் பிரசுரங்கள் எவ்வாறு உதவியிருக்கின்றன?
15 இந்த உலகளாவிய வளர்ச்சிக்கு உதவியாக இருந்த மற்ற காரணங்களும் இருக்கின்றன. பிராந்தியத்தின் தேவைகளைக் குறித்து மனிதர்களைப் பிடிப்பவர்களின் வளைந்துகொடுக்கும் மனநிலை ஒரு காரணமாகும். வித்தியாசமான கலாச்சாரங்கள், மதங்கள், மொழிகள் ஆகியவற்றைச் சேர்ந்த ஜனங்கள் நாடுவிட்டு நாடு செல்வதால், இந்தப் பல்வேறு வித்தியாசப்பட்ட நோக்குநிலைகளைப் பற்றிய புரிந்துகொள்ளுதலை யெகோவாவின் சாட்சிகள் விரிவாக்கி உள்ளனர். பைபிள்கள், பைபிள் பிரசுரங்கள் ஆகியவற்றை 200 மொழிகளுக்கும் மேலாக தயாரிப்பதன் மூலம் உலகளாவிய சபை பெருமளவில் உதவி செய்திருக்கிறது. பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இப்போது செக், ஸ்லோவாக் மொழிகள் உட்பட 13 மொழிகளில் இருக்கிறது. பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்! என்ற புரோஷுர் அல்பேனியனிலிருந்து ஸுலு வரை 198 மொழிகளில் இப்போது கிடைக்கிறது. 720 லட்சம் பிரதிகள் அச்சிடப்பட்டிருக்கிறது. எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் என்ற புத்தகம் 69 மொழிகளில் கிடைக்கக்கூடியதாக இருக்கிறது. மனிதவர்க்கம் கடவுளைத் தேடுதல் என்ற புத்தகம் 29 மொழிகளில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. உலகின் பெரிய மத அமைப்புகளின் ஆரம்பம், நம்பிக்கைகள் ஆகியவற்றைக் குறித்து அது உட்பார்வை கொடுக்கிறது. உலகளாவிய மீன்பிடிக்கும் வேலையில் தனிச்சிறப்பு வாய்ந்த உதவி புத்தகமாக அது நிரூபித்து வருகிறது.
16. மற்ற தேசங்களில் இருக்கும் தேவைகளுக்கு சிலர் எவ்வாறு பிரதிபலித்திருக்கின்றனர்?
16 உலகளாவிய மீன்பிடிக்கும் வேலையை வேறு எது அதிகரிக்கச் செய்திருக்கிறது? ‘மக்கெதோனிய அழைப்புக்கு’ பிரதிபலிக்க ஆயிரக்கணக்கானோர் விருப்பமுள்ளவர்களாய் இருந்திருக்கின்றனர். கடவுள் அழைத்த போது பவுல் ஆசியாவிலிருந்து ஐரோப்பாவில் இருக்கும் மக்கெதோனியாவுக்கு செல்ல விருப்பமாயிருந்தது போல, ராஜ்ய பிரசங்கிப்பாளர்கள், மூப்பர்கள், உதவி ஊழியர்கள் ஆகியோருக்கான தேவை அதிகமாக இருக்கும் தேசங்களுக்கும், பிராந்தியங்களுக்கும் அநேக சாட்சிகள் சென்றிருக்கின்றனர். உள்ளூர் தண்ணீர்களில் இருக்கும் மீன்கள் நன்றாக பிடிக்கப்பட்டிருப்பதால், குறைவான படகுகளும், ஏராளமான மீன்களும் இருக்கும் தண்ணீர்களுக்கு செல்லும் சொல்லர்த்தமான மீனவர்களைப் போன்று அவர்கள் இருந்திருக்கின்றனர்.—அப்போஸ்தலர் 16:9-12; லூக்கா 5:4-10.
17. ‘மக்கெதோனிய அழைப்புக்கு,’ பிரதிபலித்திருப்பவர்களின் என்ன உதாரணங்கள் நமக்கு இருக்கின்றன?
17 கிலியட் மிஷனரி பள்ளியின் சமீபத்திய வகுப்புகளில் பல்வேறு ஐரோப்பிய தேசங்களிலிருந்து வந்த மாணாக்கர்கள் இருந்தனர். அவர்கள் ஆங்கில மொழியை கற்றுக்கொண்ட பின்னர் மற்ற தேசங்களிலும் கலாச்சாரங்களிலும் சேவை செய்வதற்காக தங்களை அர்ப்பணித்திருக்கின்றனர். அதே போன்று, ஊழிய பயிற்சி பள்ளியின் மூலம் அநேக மணமாகாத சகோதரர்களுக்கு இரண்டு மாதங்கள் தீவிரமான பயிற்சி கொடுக்கப்படுகிறது. பிறகு அவர்கள் சபைகளையும் வட்டாரங்களையும் பலப்படுத்துவதற்கு மற்ற தேசங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். கிழக்கத்திய ஐரோப்பாவிலும் முந்தைய சோவியத் குடியரசுகளிலும் இப்போதும் திறக்கப்பட்டுக் கொண்டுவரும் பிராந்தியங்களில் மற்ற தனிச்சிறப்பு வாய்ந்த மீன்பிடிக்கும் இடங்கள் இருக்கின்றன.—ரோமர் 15:20, 21-ஐ ஒப்பிடுங்கள்.
18. (எ) பயனியர்கள் ஏன் பொதுவாக திறம்பட்ட ஊழியர்களாக இருக்கின்றனர்? (பி) அவர்கள் எவ்வாறு சபையில் இருக்கும் மற்றவர்களுக்கு உதவி செய்யலாம்?
18 உலகளாவிய மீன்பிடிக்கும் வேலைக்கு ஒரு கூடுதலான உதவி, ஒழுங்கான பயனியர்கள் ஆஜராகும் பயனியர் ஊழியப் பள்ளி ஆகும். பயனியர்களுக்கென்று தயாரிக்கப்பட்டிருக்கும் உலகத்தில் ஒளிகளாகப் பிரகாசித்தல் என்ற பிரசுரத்தை இரண்டு வாரங்கள் ஊக்கமாக சிந்திக்கின்றனர். “அன்பின் வழியை நாடித்தொடருதல்,” “இயேசுவை மாதிரியாக பின்பற்றுங்கள்,” “கற்பிக்கும் கலையைப் படிப்படியாக வளர்த்தல்,” போன்ற பொருள்களை சிந்திக்கையில் அவர்கள் தங்கள் ஊழிய திறமையை மேம்படுத்துகின்றனர். இந்த மிகப் பெரிய மீன்பிடிக்கும் வேலையில் மற்றவர்களைப் பயிற்றுவிக்கக்கூடிய இப்படிப்பட்ட தகுதிவாய்ந்த வீட்டுக்கு-வீடு செல்லும் மீனவ குழுக்களை கொண்டிருக்க எல்லா சபைகளும் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கின்றன!—மத்தேயு 5:14-16; பிலிப்பியர் 2:15; 2 தீமோத்தேயு 2:1, 2.
நாம் மேம்படுத்த முடியுமா?
19. அப்போஸ்தலனாகிய பவுலைப் போன்று நாம் எவ்வாறு நம்முடைய ஊழியத்தில் முன்னேறலாம்?
19 பவுலைப் போல் ஓர் உடன்பாடான, முன்னாக எதிர்பார்த்து நோக்கும் மனநிலையை நாம் கொண்டிருக்க விரும்புவோம். (பிலிப்பியர் 3:13, 14) அவர் எல்லா விதமான ஜனங்களுக்கும், சூழ்நிலைமைகளுக்கும் ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டார். பொதுவான அடிப்படையை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதையும், உள்ளூர் மனநிலைகள், கலாச்சாரம் ஆகியவற்றின் அடிப்படையில் எவ்வாறு நியாயங்காட்டிப் பேசுவது என்பதையும் அவர் அறிந்திருந்தார். ராஜ்ய செய்தியினிடமாக வீட்டுக்காரரின் பிரதிபலிப்புகளுக்கு விழிப்புள்ளவர்களாய் இருந்து, பின்னர் அந்த நபரின் தேவைகளுக்கு ஏற்ப நம்முடைய பிரசங்கத்தை மாற்றியமைத்துக் கொள்வதன் மூலம் நாம் பைபிள் படிப்புகளை ஆரம்பிக்கலாம். பல்வேறு வகையான பைபிள் படிப்பு உதவி புத்தகங்களை நாம் வைத்திருப்பதால், அந்தத் தனிப்பட்ட நபரின் மனநிலைக்குப் பொருத்தமாயிருக்கும் ஒன்றை நாம் அளிக்கலாம். பலன்தரும் மீன்பிடிக்கும் வேலையில் நம்முடைய வளைந்துகொடுக்கும் தன்மை, விழிப்பு நிலை ஆகியவையும்கூட முக்கிய காரணக்கூறுகள் ஆகும்.—அப்போஸ்தலர் 17:1-4, 22-28, 34; 1 கொரிந்தியர் 9:19-23.
20. (எ) நம்முடைய மீன்பிடிக்கும் வேலை இப்போது ஏன் அவ்வளவு முக்கியமானதாய் இருக்கிறது? (பி) இப்போது நம்முடைய தனிப்பட்ட உத்தரவாதம் என்ன?
20 இந்தத் தனிச்சிறப்புவாய்ந்த உலகளாவிய மீன்பிடிக்கும் வேலை ஏன் இப்போது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருக்கிறது? ஏற்கெனவே நடைபெற்ற சம்பவங்களிலும், இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் சம்பவங்களிலும் நிறைவேறும் பைபிள் தீர்க்கதரிசனங்களிலிருந்து சாத்தானின் உலக அமைப்பு ஒரு விபரீதமான உச்சக்கட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருப்பது தெளிவாக இருக்கிறது. ஆகையால் யெகோவாவின் சாட்சிகளாகிய நாம் என்ன செய்துகொண்டிருக்க வேண்டும்? பூகோள தண்ணீர்களின் நம்முடைய பகுதியில் மீன்பிடிக்கும் வேலையில் சுறுசுறுப்பாகவும், வைராக்கியத்தோடும் இருக்க வேண்டிய நம்முடைய உத்தரவாதத்தை இப்பத்திரிகையில் இருக்கும் மூன்று படிப்பு கட்டுரைகள் சிறப்பித்துக் காட்டியிருக்கின்றன. நம்முடைய ஊக்கமான மீன்பிடிக்கும் வேலையை யெகோவா மறந்துவிடமாட்டார் என்ற உறுதியான நம்பிக்கையை நாம் பைபிளிலிருந்து பெற்றிருக்கிறோம். “நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ் செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்து விடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே. உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம்.”—எபிரெயர் 6:10-12.
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச்டவர் சங்கம் பிரசுரித்திருக்கும் வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது!, பக்கங்கள் 185, 186-ஐயும் பார்க்கவும்.
b “பயனியர் பிரஸ்தாபி . . . யெகோவாவின் சாட்சிகளின் முழு-நேர ஊழியர்.”—Webster’s
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ யெகோவாவின் சாட்சிகள் ஏன் முழு உலகத்தையும் மீன்பிடிக்கும் வேலைகளுக்குரிய இடமாக நோக்குகின்றனர்?
◻ மீன்பிடிக்கும் வேலைக்கு கிலியட் மிஷனரி பள்ளி எத்தகைய ஆசீர்வாதமாக இருந்திருக்கிறது?
◻ யெகோவாவின் சாட்சிகளின் வெற்றிக்கு உதவியிருக்கும் சில காரணகூறுகள் யாவை?
◻ நம்முடைய கிறிஸ்தவ ஊழியத்தில் நாம் தனிப்பட்ட விதமாக எவ்வாறு முன்னேறலாம்?
[பக்கம் 24-ன் அட்டவணை]
சர்வதேச மீன்பிடிக்கும் வேலையின் பலன்கள்
வருடம் தேசங்கள் சாட்சிகள்
1939 61 71,509
1943 54 1,26,329
1953 143 5,19,982
1973 208 17,58,429
1983 205 26,52,323
1991 211 42,78,820
[பக்கம் 25-ன் படம்]
கலிலேய மீனவர்கள் மத்தியில் சாட்சி கொடுக்கும் வேலை இன்றும் செய்யப்பட்டு வருகிறது