யெகோவா பெரியளவில் மன்னிக்கிறார்
“துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும்விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; . . . அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார் [பெரியளவில் மன்னிப்பார், NW].”—ஏசாயா 55:7.
1. யெகோவாவிடமிருந்து மன்னிப்பைப் பெறுபவர்கள் இப்போது எவற்றால் ஆசீர்வதிக்கப்படுகின்றனர்?
யெகோவா தவறுசெய்து மனந்திரும்புகிறவர்களை மன்னிக்கிறார்; அவர்கள் இப்போது ஓர் ஆவிக்குரிய பரதீஸில் மனசமாதானத்தை அனுபவிக்கும்படி செய்கிறார். இது ஏனென்றால் அவர்கள் இந்தத் தேவைகளைப் பூர்த்திசெய்கின்றனர்: “கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும்விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார் [பெரியளவில் மன்னிப்பார், NW].”—ஏசாயா 55:6, 7.
2. (எ) ஏசாயா 55:6, 7-ல் குறிப்பிட்டுள்ள ‘யெகோவாவைத் தேடுதல்’ மற்றும் ‘அவரிடத்தில் திரும்புதல்’ என்றால் என்ன? (பி) பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட யூதர்கள் ஏன் யெகோவாவிடம் திரும்ப வேண்டும், அவர்களில் சிலருக்கு என்ன சம்பவித்தது?
2 ‘யெகோவாவைத் தேடுவதற்கும்’ அவர் ஏற்றுக்கொள்ளும்விதத்தில் அவரைக் கூப்பிடுவதற்கும், ஒரு துன்மார்க்கன் தன் தவறான வழியையும் மற்றவர்களுக்குக் கேடு செய்யும் எந்த எண்ணத்தையும் கைவிடவேண்டும். ‘யெகோவாவிடத்தில் திரும்புவதற்கான’ தேவை, அந்தத் தவறுசெய்தவர் ஒரு சமயம் நெருங்கிய உறவு கொண்டிருந்த கடவுளை விட்டுவிலகியிருக்கிறார் என்பதைக் குறிப்பிடுகிறது. யூதாவின் குடிகளிடத்திலும் இதுவே நிகழ்ந்தது; அவர்களுடைய உண்மையற்றதன்மை, அவர்கள் முடிவில் பாபிலோனுக்கு நாடுகடத்தப்படுவதற்கு வழிநடத்தியது. நாடுகடத்தப்பட்ட யூதர்கள், அவர்களுடைய பாபிலோனிய சிறையிருப்பிலும், மற்றும் அவர்களுடைய தேசம், முன்னறிவிக்கப்பட்ட 70 வருடங்கள் பாழாய்கிடப்பதிலும் விளைவடையச்செய்த தவறான காரியங்களுக்காக மனம்வருந்தி யெகோவாவிடம் திரும்பவேண்டிய அவசியம் இருந்தது. பொ.ச.மு. 537-ல், அரசாங்க ஆணையின்படி, பாபிலோனிலிருந்து விடுவிக்கப்பட்ட கடவுள்பயமுள்ள மீதியானோராகிய யூதர்களால் அந்தத் தேசம் திரும்பவும் குடியேற்றப்பட்டது. (எஸ்றா 1:1-8; தானியேல் 9:1-4) திரும்பநிலைநாட்டப்பட்டதன் பலன்கள் அவ்வளவு மகத்தானதாக இருந்ததால், யூதா தேசம் ஏதேனிய பரதீஸுடன் ஒப்பிடப்பட்டது.—எசேக்கியேல் 36:33-36.
3. யூதாவுக்குத் திரும்பிய கடவுள் பயமுள்ள நாடுகடத்தப்பட்டவர்களைப்போன்ற அனுபவம் எப்படி ஆவிக்குரிய இஸ்ரவேலின் மீதியானோருக்கு இருந்தது?
3 பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டபின் யூதாவுக்குத் திரும்பிவந்த கடவுள்பயமுள்ள யூதர்களுக்கு ஒத்த அனுபவத்தை ஆவிக்குரிய இஸ்ரவேலரும் கொண்டிருந்தனர். (கலாத்தியர் 6:16) முதல் உலக யுத்தத்திற்குப்பின், ஆவிக்குரிய இஸ்ரவேலின் மீதியானோர் தங்கள் வழியிலும் தங்கள் நினைவுகளிலும் சில மாற்றங்களைச் செய்தனர். கடவுளுடைய முழு ஆதரவைப் பெறாமல், பொய்மத உலகப் பேரரசாகிய மகா பாபிலோனின் ஆதிக்கத்திற்கு அவர்கள் நாடுகடத்தப்பட்டிருந்ததன் முடிவை 1919-ம் வருடம் குறித்தது. மனிதருக்கான பயத்தையும் யெகோவாவின் சேவையில் செயலற்றநிலையையும் உட்படுத்திய பாவங்களுக்காக அவர்கள் மனம்வருந்தியதால், அவர்களை அவர் மகா பாபிலோனிலிருந்து விடுவித்து, அவர்களுக்கு உரிமையான ஆவிக்குரிய பண்ணைக்கு அவர்களைத் திரும்பவும் கொண்டுவந்து, ராஜ்ய செய்தியைப் பிரசங்கிப்பதற்காக மீண்டுமாக அவர்களைப் பயன்படுத்தினார். அதுமுதற்கொண்டு, அவருடைய பரிசுத்த நாமத்தின் கனத்திற்காக, கடவுளுடைய மக்கள் மத்தியில் ஓர் ஆவிக்குரிய பரதீஸ் செழித்தோங்கியது. (ஏசாயா 55:8-13) அப்படியென்றால், பூர்வ முன்மாதிரியிலும் நவீன மாதிரிக்குறிப்பிலும், தெய்வீக மன்னிப்பை ஆசீர்வாதங்கள் பின்தொடரும் என்பதற்கும், உண்மையிலே யெகோவா மனந்திரும்புகிறவர்களைப் பெரியளவில் மன்னிக்கிறார் என்பதற்கும் தெளிவான அத்தாட்சியை நாம் கொண்டிருக்கிறோம்.
4 ஆகவே, யெகோவாவின் தற்கால ஊழியர்கள் அவருடைய மன்னிப்பில் நம்பிக்கை வைக்கலாம். இருப்பினும், அவர்களில் சிலர் தங்களுடைய கடந்தகால குற்றங்களின்பேரில் நம்பிக்கையிழந்தவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் குற்ற உணர்ச்சிகளால் ஏறக்குறைய ஆழ்த்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் ஆவிக்குரிய பரதீஸில் தங்குவதற்கு தங்களைத் தகுதியுள்ளவர்களாகக் கருதுவதில்லை. உண்மையில், சிலர் மன்னிக்கமுடியாத பாவத்தை செய்துவிட்டதாகவும் யெகோவாவின் மன்னிப்பை ஒருபோதும் பெறமாட்டார்கள் எனவும் பயப்படுகின்றனர். அவ்வாறு இருக்கக்கூடுமா?
சில பாவங்கள் மன்னிக்கப்பட முடியாதவை
5. சில பாவங்கள் மன்னிக்கப்பட முடியாதவை என்று ஏன் சொல்லப்படலாம்?
5 சில பாவங்கள் மன்னிக்கப்பட முடியாதவையாக இருக்கின்றன. இயேசு கிறிஸ்து சொன்னார்: “எந்தப் பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு [ஆவிக்கு, NW] விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை.” (மத்தேயு 12:31) அப்படியானால், கடவுளுடைய பரிசுத்த ஆவிக்கு அல்லது செயல் நடப்பிக்கும் சக்திக்கு விரோதமான தூஷணம் மன்னிக்கப்படாது. பின்வருமாறு எழுதியபோது பவுல் அப்போஸ்தலன் அத்தகைய பாவத்தைக் குறிப்பிடுகிறார்: “ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், . . . மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புவதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.”—எபிரெயர் 6:4-6.
6. ஒரு பாவம் மன்னிக்கப்படத்தக்கதா இல்லையா என்பதை எது தீர்மானிக்கும்?
6 ஒருவர் மன்னிக்கமுடியாத பாவத்தைச் செய்திருக்கிறாரா என்று கடவுளுக்கு மட்டுமே தெரியும். இருப்பினும் பவுல் இவ்வாறு எழுதியபோது இந்தக் காரியத்திற்கு ஒளியூட்டினார்: “சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதல் இருக்கும்.” (எபிரெயர் 10:26, 27) ஒரு துணிச்சலான ஆள் வேண்டுமென்றே, அல்லது “பிடிவாதமாக, அடிக்கடி தவறான போக்கில் சுயசித்தத்தை உடையவராக” செயல்படுகிறார். (வெப்ஸ்டர்ஸ் நியூ காலெஜியேட் டிக்ஷனரி) சத்தியத்தை அறிந்தபின் வேண்டுமென்றே பிடிவாதமாக பாவம் செய்வதில் தொடரும் எவரும் மன்னிக்கப்படுவதில்லை. எனவே, ஒரு பாவம் மன்னிக்கப்படுமா இல்லையா என்பதைப் பாதிப்பது, அந்த இருதய நிலையிலும், அது எந்த அளவிற்கு வேண்டுமென்றே செய்யப்பட்டிருக்கிறது என்பதிலும் இருக்கும் அளவிற்கு அந்தப் பாவத்தில்தானே இருப்பதில்லை. மறுபட்சத்தில், ஒரு தவறிழைக்கும் கிறிஸ்தவன் தன்னுடைய தவறைக்குறித்து ஆழ்ந்த அமைதியற்றிருந்தால் காரியம் என்னவாக இருக்கக்கூடும்? அவருடைய மிகுதியான அக்கறை ஒருவேளை அவர் உண்மையில் மன்னிக்கமுடியாத தவறிழைக்கவில்லை என்பதைக் குறிப்பிடக்கூடும்.
அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படமுடியாதவை
7. இயேசுவின் மத எதிரிகள் சிலர் மன்னிக்கமுடியாத பாவத்தைச் செய்தனர் என்று நாம் ஏன் சொல்லலாம்?
7 இயேசுவை எதிர்த்த ஒரு சில யூத மதத்தலைவர்கள் வேண்டுமென்றே தவறிழைத்ததால் மன்னிக்கமுடியாத பாவத்தைச் செய்தனர். இயேசு நன்மையான காரியங்களைச் செய்கையில் அற்புதங்களை நடப்பிக்கையில், அவர்கள் பரிசுத்த ஆவியைச் செயலில் கண்டபோதும்கூட அந்தக் குருக்கள் அவருடைய வல்லமையை பெயெல்செபூல் அல்லது பிசாசாகிய சாத்தானுக்கு உரியதாகக் கூறினர். கடவுளுடைய ஆவியின் மறுக்கமுடியாத செயல்படுதலை நன்கு அறிந்திருந்தும் அவர்கள் பாவம் செய்தனர். இவ்வாறாக அவர்கள் மன்னிக்கமுடியாத பாவத்தைச் செய்தனர், ஏனென்றால் இயேசு சொன்னார்: “எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.”—மத்தேயு 12:22-32.
8. யூதாஸ் காரியோத்தின் பாவம் ஏன் மன்னிக்கப்பட முடியாதது?
8 யூதாஸ் காரியோத்தின் பாவமும் மன்னிக்கப்பட முடியாததாக இருந்தது. அவன் இயேசுவைக் காட்டிக்கொடுத்தது, ஒரு மாய்மாலமான நேர்மையற்ற போக்கின் துணிச்சலான வேண்டுமென்றே அடையப்பட்ட உச்சமுடிவாக இருந்தது. எடுத்துக்காட்டாக, மரியாள் விலையுயர்ந்த தைலத்தை இயேசுவின்மேல் பூசுவதை யூதாஸ் கண்டபோது, அவன் கேட்டான்: “இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன.” தொடர்ந்து அப்போஸ்தலன் யோவான் கூறினார்: “[யூதாஸ்] தரித்திரரைக்குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறபடியினாலும் இப்படிச் சொன்னான்.” அதன்பிறகு சீக்கிரத்தில், யூதாஸ் இயேசுவை 30 வெள்ளிக் காசுகளுக்குக் காட்டிக்கொடுத்தான். (யோவான் 12:1-6; மத்தேயு 26:6-16) யூதாஸ் மனஸ்தாபப்பட்டுத் தற்கொலை செய்தான். (மத்தேயு 27:1-5) ஆனால் அவனுடைய வேண்டுமென்று செய்யப்பட்ட, விடாப்பிடியான போக்கும் நம்பிக்கைத்துரோகமான செயலும், பரிசுத்த ஆவிக்கு விரோதமாக அவன் பாவம் செய்ததை பிரதிபலித்ததால், அவன் மன்னிக்கப்படவில்லை. இயேசு யூதாஸைக் “கேட்டின் மகன்” என்றழைத்தது எவ்வளவு பொருத்தமானதாகும்!—யோவான் 17:12; மாற்கு 3:29; 14:21.
அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன
துணிச்சலான பாவங்கள் கடவுளால் மன்னிக்கப்பட்ட தவறுகளுடன் ஒரு முனைப்பான மாறுபாட்டுடன் காணப்படுகின்றன. இஸ்ரவேலின் அரசனாகிய தாவீதை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளுங்கள். உரியாவின் மனைவியாகிய பத்சேபாளோடு அவன் விபசாரம் செய்துவிட்டு, பின்னர் போரில் உரியாவின் மரணத்தை ஏற்படுத்தும்படியாகக் காரியங்களை யோவாப் திட்டமிட செய்தான். (2 சாமுவேல் 11:1-27) கடவுள் ஏன் தாவீதுக்கு இரக்கம் காண்பித்தார்? முக்கியமாக ராஜ்ய உடன்படிக்கைக்காக; ஆனால் தாவீதுடைய சொந்த இரக்கத்திற்காகவும் அவருடைய உண்மையான மனந்திரும்புதலுக்காகவும்கூட.—1 சாமுவேல் 24:4-7; 2 சாமுவேல் 7:12; 12:13.
10. பேதுரு வினைமையான பாவம் செய்தபோதிலும், கடவுள் ஏன் அவரை மன்னித்தார்?
10 அப்போஸ்தலன் பேதுருவையும் கவனியுங்கள். அவர் திரும்பவும் திரும்பவுமாக இயேசுவை மறுதலிப்பதன்மூலம் வினைமையான தவறைச் செய்தார். கடவுள் ஏன் பேதுருவை மன்னித்தார்? யூதாஸ் காரியோத்தைப்போலில்லாமல், பேதுரு கடவுளுக்கும் கிறிஸ்துவுக்குமான சேவையில் நேர்மையானவராக நடந்திருந்தார். இந்த அப்போஸ்தலனின் பாவம் மாம்ச பலவீனத்தின் காரணமாக இருந்தது; மேலும், அவர் உண்மையிலேயே மனந்திரும்பி “மனங்கசந்து அழுதான்[ர்].”—மத்தேயு 26:69-75.
11. “மனந்திரும்புதல்” என்பதை எவ்வாறு விளக்குவீர்கள், மேலும் ஒருவர் உண்மையிலே மனந்திரும்புகிறவராக இருந்தால் அவர் என்ன செய்ய வேண்டும்?
11 பெருங்கேடு விளைவிக்கும் பாவங்களைச் செய்யும் ஒருவர்கூட யெகோவாவின் மன்னிப்பைப் பெறலாம் என்று மேற்சொல்லிய உதாரணங்கள் காண்பிக்கின்றன. ஆனால் மன்னிக்கப்படுவதற்கு என்ன மனநிலை தேவையாக இருக்கிறது? தவறுசெய்யும் ஒரு கிறிஸ்தவன் கடவுளால் மன்னிக்கப்படவேண்டுமானால், உண்மையான மனந்திரும்புதல் அத்தியாவசியமாய் இருக்கிறது. மனந்திரும்புதல் என்றால் “கடந்தகால தவறுகளுக்காக வருந்தி பாவத்திலிருந்து திரும்புதல்” அல்லது “தான் செய்ததற்காக அல்லது செய்யத்தவறியதற்காக கவலையாக உணருதல் அல்லது உறுத்தப்படுதல்” ஆகும். (வெப்ஸ்டர்ஸ் தர்ட் நியூ இன்டர்நேஷனல் டிக்ஷனரி) யெகோவாவுடைய பெயருக்கு அல்லது அவருடைய அமைப்பிற்கு தன்னுடைய பாவம் கொண்டுவந்திருக்கும் எந்தவொரு அவதூறு, கவலை அல்லது பிரச்னைகளுக்காகவும், உண்மையாக மனந்திரும்பும் ஒருவர் மனஸ்தாபப்படுவார். மனந்திரும்புதலுக்கேற்ற செயல்களைச் செய்வதன்மூலம், தவறுசெய்து மனந்திரும்புபவர் அதற்கொத்த கனிகொடுப்பார். (மத்தேயு 3:8; அப்போஸ்தலர் 26:20) உதாரணமாக, அவர் யாரையாவது ஏமாற்றி இருந்தால், அந்த நஷ்டத்திற்கு ஈடுசெய்ய நியாயமான படிகளை எடுப்பார். (லூக்கா 19:8) அத்தகைய ஒரு மனந்திரும்பும் கிறிஸ்தவன், யெகோவா பெரியளவில் மன்னிப்பார் என்று உறுதியாய் நம்புவதற்கு நியாயமான வேதப்பூர்வ காரணங்களைக் கொண்டிருக்கிறார். இவை யாவை?
கடவுளுடைய மன்னிப்பில் உறுதியாய் நம்புவதற்கான காரணங்கள்
12. ஒரு மனந்திரும்பும் ஆள் மன்னிப்புக்காக ஜெபிக்கலாம் என்று சங்கீதம் 25:11 எதன் அடிப்படையில் குறிப்பிடுகிறது?
12 தவறுசெய்து மனந்திரும்பும் ஒருவர், யெகோவாவின் நாமத்தின் அடிப்படையில் மன்னிப்பிற்காக உறுதியான நம்பிக்கையுடன் ஜெபிக்கலாம். “கர்த்தாவே, என் அக்கிரமம் பெரிது; உம்முடைய நாமத்தினிமித்தம் அதை மன்னித்தருளும்,” என்று தாவீது கெஞ்சினார். (சங்கீதம் 25:11) தவறுசெய்தவர் கடவுளுடைய நாமத்தின்மேல் கொண்டுவந்த எந்த அவதூறுக்காகவும் மனம்வருந்துவதோடுகூடிய அத்தகைய ஜெபம், வருங்காலத்தில் வினைமையான பாவத்தைச் செய்வதற்கு ஒரு தடையாகவும் செயல்பட வேண்டும்.
13. தெய்வீக மன்னிப்பில் ஜெபம் என்ன பாகம் வகிக்கிறது?
13 தவறுசெய்கிற ஆனால் மனந்திரும்புகிற அவருடைய ஊழியர்களின் இருதயப்பூர்வமான ஜெபங்களுக்கு யெகோவா தேவன் பதிலளிக்கிறார். உதாரணமாக, பத்சேபாளோடு தொடர்புடைய அவருடைய பாவங்களின் பேரளவை உணர்ந்தபின் இருதயத்திலிருந்து ஜெபித்த தாவீதின் ஜெபத்தை யெகோவா வேண்டுமென்றே புறக்கணிக்கவில்லை. உண்மையில், சங்கீதம் 51-லுள்ள தாவீதின் வார்த்தைகள் கெஞ்சிக்கேட்கிற ஒருவரின் உணர்ச்சிகளை நன்கு வெளிக்காட்டுகிறது. “தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும். என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும். தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்,” என்று கெஞ்சினார்.—சங்கீதம் 51:1, 2, 17.
14. இயேசுவின் கிரயபலியில் விசுவாசம் வைக்கிறவர்களை கடவுள் மன்னிக்கிறார் என்று எவ்வாறு வேதவார்த்தைகள் மீண்டுமாக உறுதியளிக்கின்றன?
14 இயேசுவின் கிரயபலியில் விசுவாசம் வைப்போரைக் கடவுள் மன்னிக்கிறார். பவுல் எழுதினார்: “இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.” (எபேசியர் 1:7) இதே அர்த்தத்தில் அப்போஸ்தலன் யோவான் எழுதினார்: “என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்.”—1 யோவான் 2:1, 2.
15. தொடர்ந்து கடவுளுடைய இரக்கத்தை அனுபவிக்க, ஒரு மனந்திரும்பும் பாவி என்ன செய்யவேண்டும்?
15 யெகோவாவின் இரக்கம், தவறுசெய்து மனந்திரும்புகிறவருக்கு அவர் மன்னிக்கப்படலாம் என்ற உறுதியான நம்பிக்கைக்கு ஓர் ஆதாரத்தைக் கொடுக்கிறது. நெகேமியா சொன்னார்: “நீர் . . . வெகுவாய் மன்னிக்கிறவரும், இரக்கமும் மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மகா கிருபையுமுள்ளவருமான தேவன்.” (நெகேமியா 9:17; ஒப்பிடவும் யாத்திராகமம் 34:6, 7.) சந்தேகமின்றி, தொடர்ந்து தெய்வீக இரக்கத்தை அனுபவிப்பதற்கு, அந்தப் பாவம்செய்தவர் கடவுளுடைய சட்டத்தைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யவேண்டும். சங்கீதக்காரன் சொன்னவிதமாக, “நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைப்பதாக; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி. கர்த்தாவே, உம்முடைய இரக்கங்கள் மிகுதியாயிருக்கிறது; உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும்.”—சங்கீதம் 119:77, 156.
16. நம்முடைய பாவமுள்ள நிலையை யெகோவா கருத்தில் கொண்டிருக்கிறார் என்ற உண்மையில் நமக்கு என்ன ஆறுதல் இருக்கிறது?
16 நம்முடைய பாவமுள்ள நிலையை யெகோவா கருத்தில் கொண்டிருக்கிறார் என்ற உண்மையும், தவறுசெய்து மனந்திரும்பும் ஒருவருக்கு ஆறுதலையும் கடவுள் மன்னிப்பார் என்ற உறுதியான நம்பிக்கையுடன் ஜெபிப்பதற்கான காரணத்தையும் கொடுக்கிறது. (சங்கீதம் 51:5; ரோமர் 5:12) பின்வருமாறு அறிவித்தபோது, சங்கீதக்காரனாகிய தாவீது நமக்கு மீண்டுமாக உறுதியளிக்கும் ஆறுதலை அளிக்கிறார்: “அவர் [யெகோவா தேவன்] நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார். பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது. மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார். தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார், நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.” (சங்கீதம் 103:10-14) ஆம், நம்முடைய பரலோகத் தகப்பன் ஒரு மனித பெற்றோரைவிட அதிக இரக்கமும் பரிவுமுள்ளவர்.
17. கடவுளிடமான ஒருவருடைய உண்மையான சேவையின் கடந்தகாலப் பதிவு, மன்னிப்பின்மேல் என்ன பாதிப்பைக் கொண்டிருக்கிறது?
17 மனந்திரும்பும் பாவஞ்செய்தவர், அவருடைய உண்மையான சேவையின் கடந்தகால பதிவை யெகோவா கவனியாமல் இருந்துவிடமாட்டார் என்ற உறுதியான நம்பிக்கையுடன் மன்னிப்பிற்காக ஜெபிக்கலாம். நெகேமியா தன்னுடைய பாவத்தை மன்னிப்பதற்காக மன்றாடிக்கொண்டில்லை, ஆனால் இவ்வாறு சொன்னார்: “என் தேவனே எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்.” (நெகேமியா 13:31) ஒரு மனந்திரும்பும் கிறிஸ்தவன் இந்த வார்த்தைகளிலிருந்து ஆறுதலைக் கண்டடையலாம்: “உங்கள் கிரியையையும், . . . தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.”—எபிரெயர் 6:10.
மூப்பர்களிடமிருந்து உதவி
18. ஒரு கிறிஸ்தவனின் பாவம் அவனை ஆவிக்குரிய நோயாளியாக்கி இருந்தால் என்ன செய்யப்படவேண்டும்?
18 ஒரு கிறிஸ்தவன் ஆவிக்குரிய பரதீஸில் தொடர்ந்திருக்க தகுதியற்றவனாக உணர்ந்தால் அல்லது அவனுடைய பாவம் அவனை ஆவிக்குரிய நோயாளியாகச் செய்ததால் அவனால் ஜெபிக்க முடியவில்லையென்றால் என்ன செய்வது? “அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம் பண்ணக்கடவர்கள்,” என்று சீஷனாகிய யாக்கோபு எழுதினார். “அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.” ஆம், சபை மூப்பர்கள், ஒரு மனந்திரும்பும் உடன்விசுவாசியைத் திரும்ப நல்ல ஆவிக்குரிய ஆரோக்கியத்திற்குக் கொண்டுவரும் நம்பிக்கைகளுடன் அவனோடு அவனுக்காக பலன்தரும்வகையில் ஜெபிக்கலாம்.—யாக்கோபு 5:14-16.
19. ஒருவர் சபைநீக்கம் செய்யப்பட்டிருந்தால், மன்னிக்கப்படவும் திரும்ப நிலைநாட்டப்படவும் அவர் என்ன செய்யவேண்டும்?
19 ஒரு நியாயவிசாரணைக் குழு ஒரு மனந்திரும்பாத பாவியைச் சபைநீக்கம் செய்தாலும்கூட, அவர் மன்னிக்கமுடியாத பாவத்தைச் செய்துவிட்டார் என்பதை அது அர்த்தப்படுத்துவதில்லை. இருந்தாலும், மன்னிக்கப்படுவதற்கும் திரும்பநிலைநாட்டப்படுவதற்கும், அவர் மனத்தாழ்மையாகக் கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து, மனந்திரும்புதலுக்கேற்ற கனிகளைக் கொடுத்து, திரும்பநிலைநாட்டப்படுவதற்காக மூப்பர்களிடம் விண்ணப்பிக்கவேண்டும். பூர்வ கொரிந்து சபையிலிருந்து, வேசித்தனம் செய்ததற்காக ஒருவரை சபைநீக்கம்செய்தபின், பவுல் எழுதினார்: “அப்படிப்பட்டவனுக்கு அநேகரால் உண்டான இந்தத் தண்டனையே போதும். ஆதலால் அவன் அதிக துக்கத்தில் அமிழ்ந்துபோகாதபடிக்கு, நீங்கள் அவனுக்கு மன்னித்து ஆறுதல்செய்யவேண்டும். அந்தப்படி, உங்கள் அன்பை அவனுக்குக் காண்பிக்கும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.”—2 கொரிந்தியர் 2:6-8; 1 கொரிந்தியர் 5:1-13.
கடவுள் பெலனளிக்கிறார்
20, 21. ஒருவேளை மன்னிக்கமுடியாத பாவத்தைச் செய்துவிட்டதாக கவலையுற்றிருக்கும் ஒருவருக்கு எது உதவக்கூடும்?
20 உடல்நலக் குறைவு அல்லது அழுத்தம் போன்ற காரணங்கள், மன்னிக்கமுடியாத பாவத்தைச் செய்துவிட்டதைப்பற்றி கவலையுற்றிருக்கச் செய்தால், போதிய ஓய்வெடுப்பதும் தூக்கமும் உதவக்கூடும். எனினும், முக்கியமாக, நீங்கள் பேதுருவின் வார்த்தைகளை நினைவில் கொள்ளவேண்டும்: “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் [கடவுள்]மேல் வைத்துவிடுங்கள்.” ஒருபோதும் சாத்தான் உங்களைச் சோர்வடையச்செய்ய அனுமதிக்காதீர்கள், ஏனென்றால் பேதுரு தொடர்ந்து சொல்கிறார்: “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே. . . . சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சகாலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக.”—1 பேதுரு 5:6-10.
21 ஆகவே, நீங்கள் மனம்வருந்தி, ஆனால் மன்னிக்கமுடியாத பாவத்தைச் செய்ததாகக் குற்ற உணர்வுடையவர்களாய் இருந்து, பயந்திருந்தால், கடவுளுடைய வழிகள் ஞானம், நியாயம் மற்றும் அன்பானவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, விசுவாசத்துடன் ஜெபியுங்கள். “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன்” மூலமாக அவர் கொடுக்கும் ஆவிக்குரிய உணவைத் தொடர்ந்து உட்கொள்ளுங்கள். (மத்தேயு 24:45-47) உடன் விசுவாசிகளுடன் கூட்டுறவுகொண்டு, கிறிஸ்தவ ஊழியத்தில் ஒழுங்காகப் பங்கெடுங்கள். இது உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்தி, கடவுள் உங்கள் பாவத்தை மன்னித்திருக்கமாட்டார் என்ற எந்தப் பயத்திலிருந்தும் உங்களை விடுதலையாக்கும்.
22. நாம் அடுத்ததாக எதைக் கவனிப்போம்?
22 ஆவிக்குரிய பரதீஸில் தங்குபவர்கள், யெகோவா பெரியளவில் மன்னிக்கிறார் என்றறிந்திருப்பதில் ஆறுதலடையலாம். இருப்பினும், அவர்களுடைய வாழ்க்கை இன்று பிரச்னைகளற்றதாக இல்லை. ஓர் அன்பானவர் மரித்துவிட்டதால் அல்லது ஓர் அருமையான நண்பர் மிகவும் நோய்வாய்ப்பட்டு இருப்பதால் ஒருவேளை அவர்கள் சோர்வுற்றிருக்கலாம். நாம் பார்க்கப் போகிறபடி, இந்த மற்றும் அநேக சூழ்நிலைகளில் யெகோவா தமது பரிசுத்த ஆவியின்மூலமாக தம்முடைய மக்களுக்கு உதவியையும் வழிநடத்தலையும் கொடுக்கிறார். (w92 9/15)
உங்களுடைய பதில்கள் என்ன?
◻ யெகோவா ‘பெரியளவில் மன்னிக்கிறார்’ என்பதற்கு என்ன சான்று இருக்கிறது?
◻ எந்தப் பாவத்திற்கு மன்னிப்பு கிடையாது?
◻ எந்தச் சூழ்நிலைகளில் ஒருவருடைய பாவம் மன்னிக்கப்படுகிறது?
◻ தவறுசெய்து மனந்திரும்புகிறவர்கள் ஏன் கடவுளுடைய மன்னிப்பில் உறுதியாய் நம்பலாம்?
◻ தவறுசெய்து மனந்திரும்புகிறவர்களுக்கு என்ன உதவி கிடைக்கிறது?
4. யெகோவாவின் ஊழியர்கள் சிலர் என்ன பயத்தைக் கொண்டிருக்கின்றனர்?
9. பத்சேபாளுடன் தொடர்புடைய தாவீதின் பாவங்களை ஏன் கடவுள் மன்னித்தார்?
[பக்கம் 10-ன் படம்]
தாவீதும் பேதுருவும் மன்னிக்கப்பட்டிருக்கையில் யூதாஸ் காரியோத்து ஏன் மன்னிக்கப்படவில்லை என்று உங்களுக்குத் தெரியுமா?
[பக்கம் 12-ன் படம்]
சபை மூப்பர்களின் உதவி ஒரு கிறிஸ்தவனுக்கு ஆவிக்குரிய விதத்தில் உதவ அதிகத்தைச் செய்யலாம்