உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w93 2/1 பக். 21-22
  • ஒரு கல்விமான்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஒரு கல்விமான்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • தர்சு பட்டணத்தான்
  • ஒரு ரோம குடிமகன்
  • சரியான நோக்கு
  • ராஜ்ய ஆசீர்வாதங்களை நீங்களும் அனுபவிக்கலாம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • “என்னுடைய வாதத்தைக் கேளுங்கள்”
    கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி ‘முழுமையாகச் சாட்சி கொடுங்கள்’
  • பைபிள் புத்தக எண் 50—பிலிப்பியர்
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
  • உயர் அதிகாரிகளுக்கு முன்பு நற்செய்தியை ஆதரித்துப் பேசுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2016
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
w93 2/1 பக். 21-22

ஒரு கல்விமான்

“சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை.” (1 கொரிந்தியர் 1:26) இந்த வார்த்தைகள் காண்பிக்கிறபடியே உலகப்பிரகாரமான ஞானத்தில் ஆழ்ந்த ஈடுபாடுள்ளவர்களாக இருப்பதில் அல்லது உயர்ந்த சமுதாய அந்தஸ்தை உடையவர்களாக இருப்பதில் ஓர் ஆபத்து இருக்கிறது. இப்படிப்பட்டக் காரியங்கள் ஒருவர் நற்செய்தியை ஏற்றுக்கொள்வதற்கு தடையாக இருக்கக்கூடும்.—நீதிமொழிகள் 16:5; மாற்கு 10:25.

இருப்பினும், பவுலின் நாளில் மாம்சத்தின்படி ஞானிகளாக இருந்த சிலர் நிச்சயமாகவே சத்தியத்தை ஏற்றுக்கொண்டனர், பவுல்தானே இவர்களில் ஒருவராக இருந்தார். நல்ல கல்வியறிவுள்ளவரும் பிரபலமாகத் தோன்றிய ஒரு குடும்பத்திலிருந்து வந்தவருமான பவுல் வைராக்கியமுள்ள ஒரு சுவிசேஷகனாக இருந்தார். இந்த உலகில் சிலாக்கியம் பெற்றவர்கள் அவர்களுடைய இருதயம் நேர்மையானதாக இருக்குமானால் யெகோவாவை சேவிக்க முடியும் என்பதை இவ்விதமாக காண்பித்தனர். அவர்கள் தங்கள் பொதுக்கல்விச் சார்ந்த திறமைகளையும்கூட யெகோவாவின் சேவையில் பயன்படுத்தலாம்.—லூக்கா 16:9.

தர்சு பட்டணத்தான்

பவுல் தர்சுவில் பிறந்தார், அவர் பின்னர் வருணிக்கிறபடியே அது “கீர்த்திபெற்ற”தாயிருந்தது. (அப்போஸ்தலர் 21:39) ஒருவேளை அங்குதான் அவர் மொழிகளின் அறிவை பெற்றிருக்கவேண்டும்—குறிப்பாக கிரேக்க மொழியில் அவர் தேர்ச்சிபெற்றிருந்தார்—அது அவருடைய மிஷனரி வேலையில் விலைமதிப்புள்ளதாக இருந்தது. தர்சுவில் வாழ்க்கை பவுலை யூதர்களின் வழிகளுக்கு மட்டுமல்லாமல் கிரேக்க கலாச்சாரத்திற்கும்கூட வெளிப்படுத்தியிருக்க வேண்டும். பிற்பட்ட ஆண்டுகளில் புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாக இருந்தபோது, அவர் இந்த அனுபவங்களைப் பயன்படுத்திக்கொண்டார். சத்தியத்தை அவர்கள் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு விதத்தில் எவ்வாறு எடுத்துரைப்பது என்பதை அவர் அறிந்திருந்தார். (1 கொரிந்தியர் 9:21) ஓர் உதாரணத்துக்கு, அப்போஸ்தலர் 17-ம் அதிகாரத்தில் அறிவிக்கப்பட்டுள்ள, அத்தேனே பட்டணத்தாருக்கு அவர் கொடுத்த பேச்சை சிந்தித்துப் பாருங்கள். அங்கே அவர் சத்தியத்தை அறிவிக்கையில், அத்தேனே மதம் பற்றிய குறிப்புரைகளையும் அவர்களுடைய புலவர்களில் ஒருவருடைய மேற்கோளையும் திறம்பட்ட விதத்தில் எடுத்தாண்டிருக்கிறார்.

ஒரு ரோம குடிமகன்

பவுலுக்கு மற்றொரு உலகப்பிரகாரமான அனுகூலமிருந்தது. அவர் ரோம குடிமகனான இருந்தார், நற்செய்தியின் முன்னேற்றத்துக்காக இதையும்கூட அவர் பயன்படுத்திக்கொண்டார். பிலிப்பியில், அவரும் அவருடைய தோழர்களும் விசாரிக்கப்படாமல் அடிக்கப்பட்டு சிறையில் போடப்பட்டார்கள். ஒரு ரோம குடிமகனுக்கு இப்படிச் செய்வது சட்டவிரோதமான காரியமாக இருந்தது. பவுல் இந்த உண்மையை அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவந்தபோது அவர் அடுத்து சென்று சேர வேண்டிய இடத்துக்குப் போகும் வரையாக அவரை அங்கே தங்கியிருக்கவும் சபைக்கு ஊழியஞ்செய்யவும் அவர்கள் அனுமதித்தனர்.—அப்போஸ்தலர் 16:37-40.

பின்னர், பெஸ்து அதிபதிக்கு முன் வந்தபோது, இராயனுக்கு மேல்முறையீடு செய்ய பவுல் தனக்கிருந்த ரோம குடியுரிமையை அனுகூலப்படுத்திக்கொண்டார். இவ்விதமாக ரோம சாம்ராஜ்யத்தின் மிக உயர்ந்த அதிகாரத்திற்கு முன்பாக நற்செய்திக்காக விளக்கமளித்தார்.—அப்போஸ்தலர் 25:11, 12; பிலிப்பியர் 1:7.

பவுலுக்கு பின்னால் பிரயோஜனமுள்ளதாக நிரூபித்த நடைமுறையான பயிற்றுவிப்பை அவர் பெற்றுக்கொண்டார். அவருடைய தந்தை அவருக்கு கூடாரம் பண்ணும் வேலையை கற்றுக்கொடுத்திருக்க வேண்டும். இதன் காரணமாக, பணம் போதாது போகும் போது, அவரால் ஊழியத்தில் தன்னைக் காத்துக்கொள்ள முடிந்தது. (அப்போஸ்தலர் 18:1-3) அவர் தீவிரமான சமயக் கல்வியையும்கூட பெற்றுக்கொண்டார். அவர் “பரிசேயனும் பரிசேயனுடைய மகனுமாக” வளர்க்கப்பட்டார். (அப்போஸ்தலர் 23:6) ஆம், யூத போதகர்களில் மிகவும் பிரசித்திப்பெற்றவராயிருந்த ஒருவரான கமாலியேலின் பாதத்தருகே போதிக்கப்பட்டிருந்தார். (அப்போஸ்தலர் 22:3) இன்றைய பல்கலைக்கழகக் கல்வியின் தரத்துக்கு ஒருவேளை ஒப்பிடப்படக்கூடிய இத்தகைய கல்வி, அவருடைய குடும்பம் மிகவும் பிரபலமானதாக இருந்திருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது.

சரியான நோக்கு

பவுலின் பின்னணியும் பயிற்றுவிப்பும் யூதேய மதத்தில் பிரகாசமான ஓர் எதிர்காலத்தை அவருக்கு அளித்தது. அவர் யூதேய மதத்தில் மிகவும் பிரசித்திப்பெற்றவராயிருந்திருக்கலாம். இருப்பினும், இயேசுவே மேசியா என்பதை ஏற்றுக்கொண்டுவிட்ட பின்னர் பவுலுடைய இலக்குகள் மாறிவிட்டன. பிலிப்பியருக்கு எழுதுகையில் அவருக்கிருந்த ஒரு சில முன்னாள் உலகப்பிரகாரமான அனுகூலங்களைக் குறிப்பிட்டு, பின்னர் சொன்னார்: “எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன். அது மாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.”—பிலிப்பியர் 3:7, 8.

இந்தக் கல்விமான் தன் உலகப்பிரகாரமான கல்வியைக் கொண்டு என்ன செய்திருக்கலாம் என்பதைக் குறித்து ஏக்கத்தோடு பின்னோக்கிப் பார்க்கவில்லை. அல்லது அவருக்கிருந்த “அதிகக் கல்வியை” மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி கீழ்ப்படுத்துவதற்கு அவர் பயன்படுத்தவில்லை. (அப்போஸ்தலர் 26:24; 1 கொரிந்தியர் 2:1-4) மாறாக யெகோவா தேவனில் முழு விசுவாசத்தை வைத்து, தனக்கு முந்தியிருந்த எதிர்பார்ப்புகளைக் குறிப்பிட்டு இவ்வாறு சொன்னார்: “பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.” (பிலிப்பியர் 3:13, 14) பவுல் ஆவிக்குரிய காரியங்களை உயர்வாக கருதினார்.

இருப்பினும், பவுல் அந்த முந்திய பயிற்றுவிப்பை யெகோவாவின் சேவையில் பயன்படுத்திக்கொண்டார். யூதர்களைக் குறித்து, “தேவனைப் பற்றி அவர்களுக்கு வைராக்கியமுண்டென்று அவர்களைக் குறித்துச் சாட்சிசொல்லுகிறேன்,” என்று சொன்னபோது, அவர் சொந்த அனுபவத்திலிருந்து பேசினார். (ரோமர் 10:2) மதத்தை அப்பியாசிக்கிற ஒரு பரிசேயனாக, கடவுளிடமும் வேதாகமத்திடமும் அவர் நிச்சயமாகவே வைராக்கியமுள்ளவராக இருந்தார். பவுல் கிறிஸ்தவனாக மாறின பின்பு, அவருடைய வைராக்கியத்தை திருத்தமான அறிவு பக்குவப்படுத்திற்று, அவருடைய தொடக்கக்கால கல்வியை அவரால் நியாயமான ஒரு நோக்கத்துக்காக பயன்படுத்த முடிந்தது. உதாரணமாக எபிரெயர் புத்தகத்தில் கிறிஸ்தவ முறைமையின் உயர்வானத் தன்மையைக் காண்பிப்பதற்கு இஸ்ரவேலரின் வரலாற்றையும் ஆலய வணக்கத்தையும் பற்றி தனக்கிருந்த ஆழமான அறிவை அவர் பயன்படுத்திக்கொண்டார்.

இன்று மாம்சத்தின்படி ஞானிகளாக இருக்கும் சிலரும்கூட நற்செய்திக்குப் பிரதிபலிக்கிறார்கள். எல்லாவிதமான கல்வி தகுதியுள்ளவர்களும் எல்லாவிதமான வாழ்க்கைத் தொழில் மற்றும் கைத்தொழில்களிலுமுள்ள உறுப்பினர்களும் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு தங்களுடைய முந்திய பயிற்றுவிப்பை யெகோவாவின் சேவையில் பயன்படுத்தியிருக்கிறார்கள். இருப்பினும் அவர்களுடைய உலகப்பிரகாரமான கல்வி என்னவாக இருந்தாலும், அத்தியாவசியமான தகுதிகள் ஆவிக்குரியவையாக இருப்பதை கிறிஸ்தவர்கள் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. இவை “அதிமுக்கியமான காரியங்கள்,” ஏனென்றால் அவை நம்மை நித்திய ஜீவனுக்கு வழிநடத்தக்கூடும்.—பிலிப்பியர் 1:10, NW.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்