உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w93 3/15 பக். 29
  • நாஷ் நாணல் சுவடியின் மதிப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நாஷ் நாணல் சுவடியின் மதிப்பு
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நாஷ் நாணல் சுவடியின் பொருளடக்கம்
  • உங்களுக்குத் தெரியுமா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2021
  • தெய்வீக பாதுகாப்பின் சான்றுமூலம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
  • “கடல் கீதம்” இடைவெளியை இணைக்கும் பாலம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
  • ஆராய்ச்சி எண் 5—எபிரெய வேதாகம புத்தகங்கள்
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
w93 3/15 பக். 29

நாஷ் நாணல் சுவடியின் மதிப்பு

ஒரு பழைய எபிரெய பைபிள் கையெழுத்துப்பிரதியின் தேதியை எவ்வாறு நீங்கள் திருத்தமாகக் குறிப்பிடுவீர்கள்? முதல் முதலாக ஏசாயாவின் சவக் கடல் சுருளைக் கண்டபோது, 1948-ல், டாக்டர் ஜான் C. டிரவெர் எதிர்ப்பட்ட பிரச்னை அதுவாகவே இருந்தது. எபிரெய எழுத்துக்களின் அமைப்பு அவருடைய ஆர்வத்தைக் கிளறின. அதன் எழுத்துக்களைக் கொண்டுதான் அவற்றின் வயதைக் குறிப்பிடமுடியும் என்று அவர் அறிந்திருந்தார், ஆனால் அவர் அவற்றை எதை வைத்து ஒப்பிடுவார்? சரியாகவே அவர் முடிவு செய்தார்: நாஷ் நாணல் சுவடியின் பிரதியுடன்தான். ஏன்? இந்தச் சுவடி என்ன, மேலும் அது எங்கிருந்து வந்தது?

நாஷ் நாணல் சுவடி, சுமார் 7.5-ற்கு 12.5 சென்டி மீட்டர் அளவுடைய, எபிரெய எழுத்துக்களாலான 24 வரிகளைக் கொண்ட வெறும் நான்கு துண்டுகளைக் கொண்டிருக்கிறது. ஓர் எகிப்திய வியாபாரியிடமிருந்து, 1902-ல் இதைப் பெற்ற பைபிள் தொல்பொருளியல் சங்கத்தின் செயலராகிய W. L. நாஷ் என்பவரின் பெயரால் இது அழைக்கப்படுகிறது. அதைப் பின்தொடர்ந்த வருடத்தில், அந்தச் சங்கத்தின் பிரசுரமாகிய பிரொசீடிங்ஸ் என்பதில் S. A. குக் என்பரால் பிரசுரிக்கப்பட்டு, இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நூலகத்திற்கு அளிக்கப்பட்டது; அங்கு அது நிலைத்திருக்கிறது. இந்த நாணல் சுவடி துண்டின் மதிப்பு அதன் வயதைச் சார்ந்தே இருக்கிறது. அறிஞர்கள் அது பொ.ச.மு. ஒன்றாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக தேதிகுறிப்பதால், இதுவரை கண்டுப்பிடிக்கப்பட்டவற்றில் மிகவும் துவக்கத்திலுள்ள எபிரெய ஓலை சுவடி அதுவேயாகும்.

டாக்டர் டிரெவர் நாஷ் நாணல் சுவடியின் ஒரு வர்ண படக்காட்சியைத் தனக்கு முன்னிருந்த சுருளுடன் ஒப்பிடுகையில், அவர் தனி எழுத்துக்களின் அமைப்பு மற்றும் வடிவங்களை உன்னிப்பாகப் பார்த்தார். சந்தேகமின்றி, அவை மிகவும் ஒரேவிதமாக இருந்தன. அவ்வாறு இருந்தபோதிலும், அந்தப் பெரிய, புதிதாகக் கண்டெடுக்கப்பட்ட கையெழுத்துப்பிரதி நாஷ் நாணல் சுவடிக்கு ஒத்த ஆரம்பகாலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்பது அவருக்கு நம்பமுடியாததாகத் தோன்றியது. எனினும், காலப்போக்கில் அவருடைய நியாயவாதம் சரியென நிரூபிக்கப்பட்டது. ஏசாயாவின் சவ கடல் சுருள் பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருந்தது!

நாஷ் நாணல் சுவடியின் பொருளடக்கம்

அதன் 24 வரிகளும் முற்றுப்பெறாததாக, ஒரு வார்த்தை அல்லது எழுத்துக்கள் இரு ஓரங்களிலும் காணப்படாமல் இருந்ததாக நாஷ் நாணல் சுவடியின் வாசகங்களைப்பற்றிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியது. உபாகமம் 5 மற்றும் 6-ம் அதிகாரங்களின் சில வசனங்களுடன்கூட யாத்திராகமம் 20-ம் அதிகாரத்திலுள்ள பத்துக் கட்டளைகளின் சில பாகங்களையும் அது கொண்டிருக்கிறது. ஆகவே இது ஓர் ஒழுங்கான பைபிள் கையெழுத்துப்பிரதி அல்ல, ஆனால் ஒரு விசேஷித்த நோக்கத்தை உடைய கலந்த வாசகமாக இருந்தது. தெளிவாகவே, இது கடவுளிடமாக ஒரு யூதனுடைய கடமையை அவனுக்கு நினைவுபடுத்தும் ஓர் உபதேச தொகுப்பாக இருந்தது. உபகாமம் 6:4-ல் துவங்கும், ஷேமா என்றழைக்கப்படும் ஒரு வசனத் தொகுப்பு அடிக்கடி திரும்பத்திரும்ப குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வசனம் வாசிக்கிறது: “இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் [யெகோவா, NW] ஒருவரே கர்த்தர் [யெகோவா, NW].”

இந்த வசனத்தில், நான்கெழுத்துச் சொல்லாகிய ய்ஹ்வ்ஹ், “யெகோவா,” இந்தச் சுவடியின் கடைசி வரியில் இருமுறை காணப்படுகிறது, இன்னும் ஐந்து இடங்களிலும் இது இருக்கிறது. ஒருமுறை அதன் முதல் எழுத்து மட்டும் இல்லாமல் காணப்படுகிறது.

குறிப்பாக ஷேமா, “கடவுளுடைய தனி ஆளுமை”யை அழுத்திக்காண்பிக்க வேண்டியதாய் இருந்தது. யூத தல்மூடின்படி (பெரகாட், 19எ), அந்த முடியும் வார்த்தை எகத் (“ஒரே”), “ஒவ்வொரு அசையையும் நீட்டி தெளிவாக உச்சரிக்கையில் விசேஷமாக அழுத்திக் காண்பிக்கப்படவேண்டும்.” (W. O. E. ஆஸ்டர்லீ மற்றும் G. H. பாக்ஸ்) கடவுளைக் குறிப்பிடுகையில், இந்த நீட்டியொலிக்கப்பட்ட எகத் அவருடைய தனித்தன்மையையும் அறிவித்தது.

இன்று நாஷ் நாணல் சுவடி, குறிப்பாக, கும்ரானுக்கு அருகாமையிலுள்ள சவக் கடல் கரையோரங்களின் குகைகளில் காணப்பட்ட சுருள்களின் மத்தியில் அநேக சகாக்களைக் கொண்டிருக்கிறது. இவற்றில் அநேக கையெழுத்துப்பிரதிகள் பொ.ச.மு. முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுக்குரியவை என்பதாக விரிவான ஆராய்ச்சி உறுதிப்படுத்தி உள்ளது.a அறியப்பட்டுள்ளதில் மிக ஆரம்பகால எபிரெய கையெழுத்துப்பிரதியாக அது இனிமேலும் இல்லாவிட்டாலும், நாஷ் நாணல் சுவடி இன்னும் அதிக அக்கறைக்குரியதாய் இருக்கிறது. எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட, அவ்வளவு ஆரம்பகால தேதியையுடைய ஒரே எபிரெய பைபிள் கையெழுத்துப்பிரதியாக அது தொடர்ந்து இருக்கிறது. (w92 12/15)

[அடிக்குறிப்புகள்]

a காவற்கோபுரம் (ஆங்கிலம்) ஏப்ரல் 15, 1991, பக்கங்கள் 10-13-ஐ பார்க்கவும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்