வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
கிறிஸ்தவர்கள் பணத்தைப் பந்தயம் கட்டுவதில்லையென்றாலும், அவர்கள் பரிசுகளைப் பெறக்கூடிய அனுமதிச்சீட்டுக்களை வாங்குவதையோ குலுக்கல்களில் பங்கெடுப்பதையோ செய்யலாமா?
இந்தக் கேள்வி அவ்வப்போது கேட்கப்படுகிறது, எனவே இது ஏற்கெனவே எங்களுடைய பிரசுரங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது. சில மொழிகளில் நாங்கள் எங்களுடைய பிரசுரங்களின் அகரவரிசை அட்டவணைகளைக் கிடைக்கும்படிச்செய்திருக்கிறோம், உதாரணமாக உவாட்ச் டவர் பப்ளிகேஷன்ஸ் இண்டெக்ஸ் 1930-1985 (மேலும் இதே போல் 1986-1990 வரை உள்ளடக்கும் ஒன்று). ஒரு கிறிஸ்தவர் இப்படிப்பட்ட அகரவரிசை அட்டவணைகளை அவருடைய மொழியில் வைத்திருந்தால், திருப்தித்தரும் பதில்களை உடனடியாகத் தேடி எடுப்பதற்கு இவை மிக பயனுள்ளதாக இருக்கும்.
மேலே கேட்கப்பட்டுள்ள கேள்வி, ஓர் எடுத்துக்காட்டாக இருக்கிறது. “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” என்ற தலைப்பின்கீழ் 1930-1985 வரையுள்ள இண்டெக்ஸ்-ல் பார்த்தால், “‘குலுக்கல்கள்,’ கிறிஸ்தவர் அதற்கு அனுமதிச் சீட்டை ஏற்றுக்கொள்ளலாமா?” என்ற உபதலைப்பை ஒருவர் காணக்கூடும். வாசகர், தி உவாட்ச்டவர் பிப்ரவரி 15, 1973, பக்கம் 127-ல் “வாசரிடமிருந்து வரும் கேள்விகள்” என்ற பிரிவிற்கு மேற்கோள் காட்டப்படுகிறார்.a அநேகச் சாட்சிகள் 1973-ம் வருடத்தின் புத்தகத்தொகுப்பை (அல்லது தனிப்பட்ட பிரதிகளை) உடையவர்களாக இருக்கிறார்கள், அல்லது இது அநேக ராஜ்ய மன்றங்களின் நூலகத்தில் இருக்கும்.
கிறிஸ்தவர்கள், சரியாகவே எந்தவித குதிரைப்பந்தய சூதாட்டத்தையோ அல்லது பொருள்வாங்கும் வாய்ப்புகளைத் தரும் குலுக்கல்களிலோ (குலுக்குச் சீட்டு விற்பனை போல) ஏதாவது பரிசைப் பெறுவதற்காகப் பணத்தைச் செலவுசெய்வதைத் தவிர்க்கும்படி 1973-ல் பிரசுரிக்கப்பட்ட கலந்தாராய்ச்சி குறிப்பிட்டது. சுருங்கச் சொன்னால், உண்மையில் பேராசையின் வெளிப்பாடாயிருக்கும் சூதாட்டத்தை நாம் தவிர்க்கிறோம்.—1 கொரிந்தியர் 5:11; 6:10; எபேசியர் 4:19; 5:3, 5.
ஆனாலும், ஒரு கடை அல்லது ஒரு வணிக மையம், குலுக்கல் முறைகளை, விளம்பரப்படுத்தும் ஏதுக்களாக ஒருவேளை பயன்படுத்தலாம். ஒருவர் செய்யவேண்டியதெல்லாம், அவருடைய பெயரைக் கொடுக்கவேண்டும் அல்லது ஒரு நமுனாவையோ ஒரு சீட்டையோ அனுப்பவேண்டும், அவர் எதையும் வாங்கத்தேவையில்லை. குலுக்கல் முறை விளம்பரத்திட்டத்தின் பாகம்; யார் பரிசையோ அல்லது பரிசுகளையோ பெறுகின்றனர் என்று தீர்மானிப்பதில் பட்சபாதமற்ற முறையாக வடிவமைக்கப்படுகிறது. சில கிறிஸ்தவர்கள், ஒரு வணிகமோ கடையோ தங்களுடைய விளம்பரத்திட்டத்தில் இனாமாய்க் கொடுக்கும் மாதிரிகளை (ஃபிரி சாம்பில்ஸ்) அல்லது மற்ற பரிசுகளை நாம் பெறுவதுபோல, சூதாட்டத்தை உட்படுத்தாத ஒரு குலுக்கலில் அவர்கள் பரிசைப் பெற்றுக்கொள்ளலாம் என்று உணரலாம்.
எனினும், மற்றவர்களுக்கு இடறலையோ குழப்பத்தையோ உண்டாக்க விரும்பாதவர்களாக, மேலும் அதிர்ஷ்டத் தேவதை என்றழைக்கப்படுவதை நம்பும்படிச் செய்யும் எந்தவித ஏமாற்றத்திற்கும் அடிமையாகாமல் இருக்க நாடித்தேடுபவர்களாகச் சில கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்ட எதையும் ஒதுக்கிவிடக்கூடும். ஏசாயா 65:11 காண்பிக்கிறப் பிரகாரம், கடவுளுடைய ஊழியர்கள் ‘அதிர்ஷ்டத் தேவதையுடனோ,’ ‘விதித் தெய்வத்திடமோ’ தங்களைத் தொடர்புபடுத்திக்கொள்வதில்லை. பரிசுபெற்றவர்கள் பங்கைப்பெறலாம் என்ற விளம்பரத்தின் பாகமாகவும் அவர்கள் இருக்க விருப்பமில்லாதவர்களாக ஒருவேளை உணரலாம். இவ்வாறு உணர்கிறவர்கள், மற்ற கிறிஸ்தவருடைய அல்லது கிறிஸ்தவர்களுடைய மனசாட்சி அப்படிப்பட்ட குலுக்கல்களில் ஈடுபடுவதை அனுமதிக்கிறதென்றால், அவர்களை நிச்சயமாகவே குற்றங்காண்கிறவர்களாக இருக்கக்கூடாது.—ரோமர் 14:1-4-ஐ ஒப்பிட்டுப்பாருங்கள்.
[அடிக்குறிப்புகள்]
a இதேக் குறிப்பு, “விளம்பரம்,” “வணிகம்,” “சூதாட்டம்,” என்ற தலைப்புகளில் அகரவரிசை அட்டவணையிடப்பட்டிருக்கிறது, எனவே இண்டெக்ஸ்-ன் பல்நோக்கு அமைப்பு முறை, குறிப்பைக் கண்டுபிடிப்பதற்கு உதவிசெய்கிறது.