வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
மெல்கிசேதேக்கு எனப்பட்ட இந்தப் பூர்வகால ஆசாரியன் உண்மையான ஒரு மனிதனாக இருந்தபோதிலும், அவரை ஏன் ‘வம்சவரலாறு இல்லாதவன்’ என பைபிள் சொல்லுகிறது?
இந்தக் கூற்று எபிரெயர் 7:3-ல் சொல்லப்பட்டுள்ளது. இந்த வசனத்தை அதன் சூழமைவில் கவனியுங்கள்:
“இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும் உன்னதமான கடவுளின் ஆசாரியனுமானவன்; ராஜாக்களைச் சங்காரஞ்செய்து திரும்பிவந்த ஆபிரகாமுக்கு எதிர்கொண்டுபோய் அவனை ஆசீர்வதித்தவன்; ஆபிரகாமிடமிருந்து எல்லாவற்றிலும் தசமபாகம் பெற்றவன். முதலாவது இவன் நீதியின் ராஜா, இது அவன் பெயருக்கு அர்த்தம்; பின்பு சாலேமின் ராஜா, இதற்குச் சமாதானத்தின் ராஜா என அர்த்தம். இவன் தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவன், நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமில்லாதவன்; தெய்வ குமாரனுக்கு ஒப்பானவன். இவன் நித்தியகாலம் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான்.”—எபிரெயர் 7:1-3, தி.மொ.
குறிப்பிடப்பட்டபடி, மெல்கிசேதேக்கு மெய்யான ஒரு மானிடன், தான் நேர்முகமான தொடர்புகள் கொண்ட ஆபிரகாமைப்போலவே மெய்யானவர். (ஆதியாகமம் 14:17-20; எபிரெயர் 7:4-10) இவ்வாறு இருக்க, மெல்கிசேதேக்குவுக்குப் பெற்றோரான ஒரு தகப்பனும் ஒரு தாயும் இருந்திருக்க வேண்டும், மேலும் இவருக்குச் சந்ததியும் இருந்திருக்கலாம். எனவே, ஒரு மனிதனாக அவருக்கு ஒரு வம்சவரலாறு, அல்லது குடும்ப மரம் இருந்தது. அவருடைய மாம்சப்பிரகார வாழ்க்கைக்கு ஒரு முடிவும் இருந்தது. ரோமர் 5:12, 14-ல் அப்போஸ்தலன் பவுலின் கூற்றுக்குப் பொருந்த ஏதோ ஒரு சமயத்தில் அவர் மரித்தார். ஆனால் மெல்கிசேதேக்கு எப்போது மரித்து, அவ்வாறு அவர் ஆசாரியராகச் சேவிப்பது நின்றுபோயிற்றென்பது நமக்குத் தெரியாததால், இந்தக் கருத்தில் அவர் அறியப்படாத எந்த முடிவும் இல்லாமல் சேவித்தார்.
எபிரெயரில், ஈடற்ற உன்னத பிரதான ஆசாரியராக இயேசு கிறிஸ்துவின் பாகத்தைப் பற்றிப் பவுல் பேசுகையில் மெல்கிசேதேக்கைப்பற்றியக் குறிப்புகளைச் சொன்னார். இயேசு வகிக்கும் இந்த ஆசாரிய பாகத்தின் ஓர் எடுத்துக்காட்டாக, அல்லது மாதிரியாக மெல்கிசேதேக்கைக் குறிப்பிட்டு, பவுல் சொன்னதாவது: “இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி . . . பிரதான ஆசாரியரா”னார். (எபிரெயர் 6:20) எந்தக் கருத்தில்?
மெல்கிசேதேக்கின் குடும்பப் பரம்பரையை—அவருடைய முற்பிதாக்கள் அல்லது இருந்திருக்கக்கூடிய ஏதாவது சந்ததிகளைப் பற்றிய நுட்பவிவரங்களை பைபிள் பதிவு கொடுக்கிறதில்லை என்பதைப் பவுல் உணர்ந்திருக்க வேண்டும். இந்தத் தகவல் பைபிள் பதிவின் ஒரு காரியமாக இல்லவேயில்லை. ஆகவே, பவுல் அறிந்த அல்லது நாம் அறிகிற நோக்குநிலையிலிருந்து, மெல்கிசேதேக்கு “வம்சவரலாறும் இல்லாத”வராக (தி.மொ.), “தலைமுறை அட்டவணை இல்லாமல்” (W. J. கானிபேயர்), அல்லது “குடும்ப மரபுக்கிளைவழி படம் இல்லாமல்” (J. B. ஃபிலிப்ஸ்), இருந்தாரெனத் திருத்தமாய்ச் சொல்லப்படக்கூடும்.
எவ்வகையில் இயேசு அவ்வாறு இருந்தார்? இயேசுவின் தகப்பன் யெகோவா தேவன் என்றும் அவருடைய மனிதத் தாய் யூதாக் கோத்திரத்து மரியாள் என்றும் நாம் அறிந்திருக்கிறோமென்பது உண்மையே. இருப்பினும், மெல்கிசேதேக்குவுக்கும் இயேசுவுக்கும் ஓர் ஒப்புமை இருந்தது. எவ்வாறு? இயேசு, இஸ்ரவேல் ஜனத்தில் ஆசாரியருக்குரிய கோத்திரமாகிய லேவியின் கோத்திரத்தில் பிறக்கவில்லை. இல்லை, இயேசு மனித வம்சாவழியின் மூலமாய் ஓர் ஆசாரியராகவில்லை. மெல்கிசேதேக்கும் அவ்வாறில்லை, அவர் “மாம்ச சம்பந்தமான கட்டளையாகிய நியாயப்பிரமாணத்தின்படி,” அதாவது, ஆசாரிய கோத்திரத்துக்குள்ளும் குடும்பத்துக்குள்ளும் பிறப்பதனால் ஆசாரியராகவில்லை. (எபிரெயர் 7:15, 16) ஆசாரியராயிருந்த ஒரு மனிதத் தகப்பன்மூலம் ஓர் ஆசாரியராவதைப் பார்க்கிலும், இயேசு “மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார்.”—எபிரெயர் 5:10.
மேலும், இயேசு தம்முடைய ஆசாரியத்துவத்துக்குத் தலைமுறையாய்ப் பின்தொடர்வோர் அல்லது வாரிசுகள் எவரையும் கொண்டில்லை. இந்தக் கருத்திலுங்கூட, அவருக்கு வம்சவரலாறு இல்லை. அவர் உதவுகிற போதகராகத் தன் ஆசாரிய சேவையை நித்தியமாய் நிறைவேற்றுவார். இந்த முடிவில்லாத சேவையின்பேரில் பவுல் விளக்கமளித்து, பின்வருமாறு கூறினார்:
“[இயேசு] என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறபடியினாலே, மாறிப்போகாத [பின்தொடருவோர் இல்லாது, NW] ஆசாரியத்துவமுள்ளவராயிருக்கிறார். மேலும், தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்.”—எபிரெயர் 7:24, 25.
எபிரெயர் 7:3-ல் பவுலின் வார்த்தைகளை நாம் ஆலோசித்தது, நம்முடைய தலையில் சேமித்து வைப்பதற்கான வெறும் ஒரு சிறிய பாகமான அறிவைப் பார்க்கிலும் அதிகப்பட்டதாக இருக்கவேண்டும். நாம் நித்தியமாய்ப் பாவ மன்னிப்பைப் பெறும்படி யெகோவா தேவன் நமக்குச் செய்த இந்த அன்புள்ள ஏற்பாட்டிற்காகவும், நாம் உதவியையும் வழிநடத்துதலையும் என்றென்றும் பெறும்படிக்கு அவர் நமக்கு ஏற்பாடு செய்த இந்த வழிக்காகவும் நம் நன்றியுணர்வை மேலும் ஆழமாக்கி உறுதிப்படுத்தவேண்டும்.