தெய்வீக போதனைக்கு எதிராக பேய்களின் போதகங்கள்
“சிலர் வஞ்சிக்கிற ஏவப்பட்ட வசனிப்புகளுக்கும் பேய்களின் போதகங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.”—1 தீமோத்தேயு 4:2, NW.
1. எந்தப் போரின் மத்தியில் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள்?
யுத்தப் பகுதியில் நீங்கள் உங்கள் முழு வாழ்க்கையைக் கழிப்பதாகக் கற்பனைசெய்துபாருங்கள். துப்பாக்கி சூடின் சத்தத்தோடு படுக்கைக்குப் போய், பீரங்கியின் சத்தத்துக்கு காலையில் எழுந்திருப்பது எப்படிப்பட்டதாய் இருக்கும்? துக்ககரமாகவே, உலகின் சில பகுதிகளில் அப்படித்தான் மக்கள் உண்மையில் வாழ்கிறார்கள். ஆவிக்குரிய அர்த்தத்திலோ, எல்லா கிறிஸ்தவர்களும் இப்படித்தான் வாழ்கிறார்கள். கிட்டத்தட்ட 6,000 ஆண்டுகள் கொந்தளித்துக்கொண்டிருந்து, நம் நாட்களில் வலுப்பெற்றிருக்கிற ஒரு பெரிய போராட்டத்தின் மத்தியில் அவர்கள் இருக்கிறார்கள். இந்த நீண்டகாலப் போர் என்ன? சத்தியத்திற்கு எதிராகப் பொய்களும், தெய்வீக போதனைக்கு எதிராகப் பேய்களின் போதகங்களும் கொண்டிருக்கும் போராட்டம். இதை இவ்வாறு அழைப்பது மிகைப்படுத்திக்கூறுதல் அல்ல—எதிரெதிர் பக்கங்களிலுள்ள ஒன்றின் செயல்களைப் பற்றிய பாகத்திலாவது—அது மனிதகுல வரலாற்றின் மிக இரக்கமற்ற, அதிக சாவுக்கேதுவான சண்டை.
2. (அ) பவுலின் பிரகாரம், என்ன இரண்டு பக்கங்கள் ஒன்றுக்குக்கொன்று எதிராக இருக்கின்றன? (ஆ) ‘விசுவாசம்’ என்பதால் பவுல் அர்த்தப்படுத்தினது என்ன?
2 அப்போஸ்தலன் பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதினபோது, இந்தச் சண்டையின் இரண்டு பக்கங்களையும் குறிப்பிட்டார்: “தேவாவியால் ஏவப்பட்ட வார்த்தை திட்டமாகச் சொல்லுகிறது என்னவென்றால், பிற்காலங்களிலே . . . சிலர் வஞ்சிக்கிற ஏவப்பட்ட வசனிப்புகளுக்கும் பேய்களின் போதகங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.” (1 தீமோத்தேயு 4:1, 2, NW) பேய்களின் போதகங்கள் முக்கியமாக “பிற்காலங்களிலே” பாதிப்பை உடையதாக இருக்கும் என்பதைக் கவனியுங்கள். பவுலின் நாளிலிருந்து நோக்குகையில், நாம் அப்படிப்பட்ட ஒரு காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பேய்களின் போதகங்களுக்கு எதிராக இருப்பது ‘விசுவாசம்’ என்பதையும் மனதில் வையுங்கள். இங்கு ‘விசுவாசம்’ என்பது பைபிளிலுள்ள கடவுளின் ஏவப்பட்டெழுதப்பட்ட தெய்வீக வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும் தெய்வீக போதனையைக் குறிக்கிறது. அப்படிப்பட்ட விசுவாசம் உயிர் கொடுப்பதாய் இருக்கிறது. அது ஒரு கிறிஸ்தவனைக் கடவுளுடைய சித்தத்தைச் செய்யும்படிக் கற்பிக்கிறது. அதுவே, நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம்.—யோவான் 3:16; 6:40.
3. (அ) சத்தியத்துக்கும் பொய்களுக்கும் இடையேயான போரில் காயப்பட்டோருக்கு என்ன நேர்கிறது? (ஆ) பேய்களின் போதகங்களுக்குப் பின்னால் இருப்பது யார்?
3 விசுவாசத்தைவிட்டு விலகுகிற எவரும் நித்திய ஜீவனைப் பெறுவதில்லை. அவர்கள் யுத்தத்தில் காயப்பட்டவர்களாக இருக்கிறார்கள். பேய்களின் போதகங்களால் வஞ்சிக்கப்பட ஒருவர் தன்னை அனுமதித்ததால் என்னே ஒரு துயரகரமான விளைவு! (மத்தேயு 24:24) தனிப்பட்டவர்களாகக் காயப்படுவதைத் தவிர்ப்பது எப்படி? “பேய்களின் தலைவனாகிய” பிசாசாகிய சாத்தானின் நோக்கத்தையே சேவிக்கும் இப்படிப்பட்ட பொய்யான போதகங்களை முற்றிலும் மறுப்பதன்மூலமே. (மத்தேயு 12:24, NW) எதிர்பார்க்கிறபடி, சாத்தானுடைய போதகங்கள் பொய்களாக இருக்கின்றன, ஏனென்றால் சாத்தான் ‘பொய்க்குப் பிதாவாய்’ இருக்கிறான். (யோவான் 8:44) நம்முடைய முதல் பெற்றோரைத் தவறாக வழிநடத்துவதற்கு அவன் பொய்களை எப்படித் திறமையாகப் பயன்படுத்தினான் என்பதைக் கவனியுங்கள்.
பேய்களின் போதகங்கள் வெளிப்படுத்தப்பட்டன
4, 5. சாத்தான் ஏவாளிடம் என்ன பொய் சொன்னான், அது ஏன் அவ்வளவு பொல்லாததாய் இருந்தது?
4 பைபிளில் ஆதியாகமம் 3:1-5-ல் சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. ஒரு பாம்பை உபயோகிப்பதன்மூலம் பெண்ணாகிய ஏவாளை சாத்தான் அணுகி, அவளிடம் இவ்வாறு கேட்டான்: “நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் [உண்மையில், NW] சொன்னது உண்டோ?” கேள்வி தீங்கற்றதுபோல் தோன்றுகிறது, ஆனால் அதை மறுபடியும் கவனியுங்கள். “உண்மையில் சொன்னது உண்டோ?” சாத்தான், ‘அப்படிப்பட்ட ஒரு காரியத்தை கடவுள் ஏன் சொன்னார்?’ என்று சொல்வதுபோல் ஆச்சரியப்பட்டவனாகத் தொனிக்கிறான்.
5 ஏவாள் தன்னுடைய கபடமற்றத்தன்மையினால், உண்மையில் சொன்னார் என்று குறிப்பிட்டாள். நன்மை தீமை அறியத்தக்க மரத்திலிருந்து சாப்பிட்டால் அவர்கள் மரிப்பர் என்று கடவுள் ஆதாமிடம் சொல்லியிருந்தார் என்ற இந்த விஷயத்தில் தெய்வீக போதனையை அவள் அறிந்திருந்தாள். (ஆதியாகமம் 2:16, 17) சாத்தானின் கேள்வி தெளிவாகவே அவளுடைய அக்கறையைத் தூண்டியது, எனவே அவன் முக்கிய குறிப்பைச் சொல்லும்வரை அவனுக்குச் செவிகொடுத்தாள்: “அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை.” என்னே ஒரு பொல்லாத காரியத்தைச் சொன்னான்! சத்திய தேவன், அன்பின் தேவன், சிருஷ்டிகர் யெகோவா தம்முடைய மனிதப் பிள்ளைகளிடம் பொய்சொல்வதாகச் சாத்தான் குற்றம்சாட்டினான்!—சங்கீதம் 31:5; 1 யோவான் 4:16; வெளிப்படுத்துதல் 4:11.
6 ஆனால் சாத்தான் அதிகத்தைச் சொன்னான். அவன் தொடர்ந்தான்: “நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார்.” சாத்தானின்பிரகாரம், நம்முடைய முதல் பெற்றோருக்கு அவ்வளவு அபரிமிதமாகக் கொடுத்திருந்த யெகோவா தேவன், அற்புதமான ஏதோவொன்றை அவர்களுக்கில்லாததாக ஆக்க விரும்பினார். தேவர்களைப்போல இருப்பதிலிருந்து அவர்களைத் தவிர்க்க விரும்பினார். இப்படியாக, சாத்தான் கடவுளுடைய நற்குணத்தைச் சவால்விட்டான். அவன் சுயநல நாட்டத்தையும் கடவுளுடைய கட்டளைகளை வேண்டுமென்றே அசட்டைசெய்வதையும் இவ்வாறு செய்வது பலனளிக்கும் என்றும் சொன்னான். உண்மையில், சாத்தான், மனிதன் செய்ததில் வரம்புகளை வைப்பதற்கு கடவுளுக்கு உரிமையில்லை என்று குற்றம்சாட்டுவதன்மூலம், கடவுள் தம்முடைய சொந்த சிருஷ்டிப்பின்மீது கொண்டிருக்கும் அவருடைய பேரரசாட்சியை சவால்விட்டான்.
7. பேய்களின் போதகங்கள் முதலில் எப்போது கேட்கப்பட்டன, இன்று அவை எவ்வாறு அதேப்போல் இருக்கின்றன?
7 சாத்தானின் அந்த வார்த்தைகளுடன், பேய்களின் போதகங்கள் கேட்கப்பட ஆரம்பித்தன. இந்தக் கெட்ட போதகங்கள் இன்னும் இதேபோன்ற தெய்வீகமற்ற நியமங்களுக்கு ஆதரவளித்துவருகின்றன. சாத்தான் ஏதேன் தோட்டத்தில் செய்ததுபோலவே, இப்போது மற்ற கலகத்தனமான ஆவி ஆட்களால் ஆதரவளிக்கப்பட்டு, நடத்தைகளுக்கு தராதரங்களை வைக்கும் கடவுளுடைய உரிமையை இன்னும் சவால்விட்டு வருகிறான். அவன் இன்னும் யெகோவாவின் பேரரசாட்சியைச் சவால்விட்டு, மனிதர்கள் தங்களுடைய பரலோகத் தந்தைக்குக் கீழ்ப்படியாதுபோகும்படி செய்ய முயற்சிசெய்கிறான்.—1 யோவான் 3:8, 10.
8. ஏதேனில் ஆதாமும் ஏவாளும் எதை இழந்தனர், ஆனால் யெகோவா எப்படி உண்மையானவராக நிரூபிக்கப்பட்டார்?
8 தெய்வீக போதனைக்கும் பேய்களின் போதகங்களுக்கும் இடையேயான யுத்தத்தின் அந்த முதல் மோதலில், ஆதாமும் ஏவாளும் ஒரு தவறான தீர்மானத்தை எடுத்து, தங்களுடைய நித்திய ஜீவ எதிர்பார்ப்பை இழந்தனர். (ஆதியாகமம் 3:19) காலம் செல்லச்செல்ல, அவர்களுடைய உடல்கள் மோசமடைய ஆரம்பித்தபோது, ஏதேனில் யார் பொய் சொன்னார்கள், யார் சத்தியம் சொன்னார்கள் என்பது போதுமானளவிற்கு உறுதியாக்கப்பட்டது. எனினும், உடல்சார்ந்த வகையில் மரிப்பதற்கு நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்பு, உயிரின் ஊற்றுமூலராகிய தங்களுடைய சிருஷ்டிகரால் அவர்கள் ஜீவனுக்குத் தகுதியில்லாதவர்களாகத் தீர்மானிக்கப்பட்டபோது, சத்தியத்திற்கும் பொய்களுக்கும் இடையே நடந்த போராட்டத்தின் முதல் காயப்பட்டவர்களாக ஆனார்கள். அவர்கள் ஆவிக்குரிய அர்த்தத்தில் மரித்தபோது, அது நடந்தது.—சங்கீதம் 36:9; ஒப்பிடுக: எபேசியர் 2:1.
இன்று பேய்களின் போதகங்கள்
9. நூற்றாண்டுகளினூடே பேய்களின் போதகங்கள் எவ்வளவு செல்வாக்குமிக்கவையாக இருந்தன?
9 வெளிப்படுத்துதல் புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளபடி, அப்போஸ்தலன் யோவான் ஆவிக்குட்பட்டு, 1914-ல் ஆரம்பித்த ‘கர்த்தரின் நாளுக்குள்’ எடுத்துச்செல்லப்பட்டார். (வெளிப்படுத்துதல் 1:10) அந்தச் சமயத்தில், சாத்தானும் அவனுடைய பேய்களும் பரலோகத்திலிருந்து பூமிக்கு அருகாமையில் தள்ளப்பட்டார்கள்—நம் மகத்தான சிருஷ்டிகருடைய இந்த எதிரிக்கு ஒரு பெரிய வீழ்ச்சி. யெகோவாவின் ஊழியர்களுக்கு எதிராகத் தொடர்ந்து பழிசுமத்தும் அவனுடைய சத்தம் இனிமேலும் பரலோகத்தில் கேட்கப்படுவதில்லை. (வெளிப்படுத்துதல் 12:10) ஆனாலும், ஏதேனிலிருந்து பேய்களின் போதகங்கள் பூமியில் என்ன வளர்ச்சியை அடைந்திருந்தன? பதிவு சொல்கிறது: “உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது.” (வெளிப்படுத்துதல் 12:9) ஒரு முழு உலகமும் சாத்தானின் பொய்களுக்குச் சரணடைந்தது! சாத்தான் “இந்த உலகத்தின் அதிபதி” என்றழைக்கப்படுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை!—யோவான் 12:31; 16:11.
10, 11. எந்த வழிகளில் சாத்தானும் அவனுடைய பேய்களும் இன்று சுறுசுறுப்பாய் செயல்படுகின்றனர்?
10 பரலோகத்திலிருந்து தான் வெளியேற்றப்பட்ட பிறகு சாத்தான் தோல்வியை ஒத்துக்கொண்டானா? நிச்சயமாகவே இல்லை! தெய்வீக போதனைக்கும் அதைப் பற்றிக்கொண்டிருப்போருக்கும் எதிராக அவன் தொடர்ந்து போராட தீர்மானித்தான். சாத்தான் பரலோகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின், தன்னுடைய யுத்தத்தை தொடர்ந்தான்: “வலுசர்ப்பமானது [சாத்தான்] ஸ்திரீயின்மேல் கோபங்கொண்டு தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம்பண்ணப்போயிற்று.”—வெளிப்படுத்துதல் 12:17.
11 கடவுளுடைய ஊழியர்களிடம் சண்டையிடுவதோடு, சாத்தான் மனிதகுலத்தின்மீது தன்னுடைய பிடியை விடாது தக்கவைத்துக்கொள்ள கடுமுயற்சிசெய்பவனாய், உலகத்தை அவனுடைய போதகத்தால் நிறைத்துவருகிறான். கர்த்தரின் நாளுக்குரிய அப்போஸ்தலன் யோவானுடைய வெளிப்படுத்துதல் தரிசனங்கள் ஒன்றில், அவர் மூன்று மூர்க்க மிருகங்களைக் கண்டார். அவை அடையாளப்பூர்வமாக, சாத்தானையும், அவனுடைய பூமிக்குரிய அரசியல் அமைப்பையும், நம் காலத்தினுடைய செல்வாக்குசெலுத்தும் உலக வல்லரசையும் குறித்தன. இந்த மூன்றின் வாய்களிலிருந்து, தவளைகள் வந்தன. இவை எதை அடையாளப்படுத்தின? யோவான் எழுதுகிறார்: “அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள் பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச்சேர்க்கும்படிக்குப் புறப்பட்டுப்போகிறது.” (வெளிப்படுத்துதல் 16:14) தெளிவாகவே, பேய்களின் போதகங்கள் பூமியில் மிகச் சுறுசுறுப்பாகச் செயல்படுகின்றன. சாத்தானும் அவனுடைய பேய்களும் தெய்வீக போதனைக்கு எதிராக இன்னும் சண்டைபோட்டுக்கொண்டிருக்கிறார்கள். மேலும், மேசியானிய ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவால் வலுக்காட்டயமாகத் தடுத்து நிறுத்தப்படும்வரை அவர்கள் அவ்வாறு தொடர்ந்து செய்துவருவார்கள்.—வெளிப்படுத்துதல் 20:2.
பேய்களின் போதகங்களை அடையாளம்காணுதல்
12. (அ) பேய்களின் போதகங்களை ஏன் எதிர்க்கமுடியும்? (ஆ) கடவுளுடைய ஊழியர்களிடம் சாத்தான் தன்னுடைய நோக்கங்களை எப்படிச் சாதிக்க முயற்சிசெய்கிறான்?
12 பேய்களின் போதகங்களைக் கடவுள் பயமுள்ள மனிதர்கள் எதிர்க்கமுடியுமா? இரண்டு காரணங்களுக்காக, உண்மையில் அவர்கள் அவ்வாறு செய்யமுடியும். முதலாவது, தெய்வீக போதனை அதிக பலமிக்கது; இரண்டாவது, நாம் சாத்தனுடைய போர்த்தந்திரங்களை எதிர்க்கமுடியும்படி யெகோவா அவற்றை நமக்கு அம்பலப்படுத்திவிட்டார். அப்போஸ்தலன் பவுல் சொன்னதுபோல, “அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே.” (2 கொரிந்தியர் 2:11) சாத்தான் தன் நோக்கத்தை சாதிப்பதற்குத் துன்புறுத்துதலை ஒரு வழியாகப் பயன்படுத்துகிறான் என்பது நமக்குத் தெரியும். (2 தீமோத்தேயு 3:12) எனினும், கடவுளைச் சேவிக்கிறவர்களின் மனங்களையும் இருதயங்களையும் வசப்படுத்துவதற்கு அவன் மிக அதிக தந்திரமாக முயற்சிசெய்கிறான். அவன் ஏவாளைத் தவறாக வழிநடத்தினான். அவளுடைய இருதயத்தில் தவறான ஆசைகளை வைத்தான். இன்று அவன் அதையேதான் செய்ய முயற்சிசெய்கிறான். கொரிந்தியர்களுக்குப் பவுல் எழுதினார்: “சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப் பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்.” (2 கொரிந்தியர் 11:3) பொதுவாக மனிதகுலத்தின் சிந்தனையை எவ்வாறு அவன் மோசம்போக்கியிருக்கிறான் என்பதைக் கவனியுங்கள்.
13. ஏதேனிலிருந்து மனிதகுலத்திடம் என்ன பொய்களைச் சாத்தான் சொல்லியிருக்கிறான்?
13 சாத்தான் ஏவாளிடம், யெகோவா பொய்சொல்வதாகப் பழிசுமத்தி, மனிதர்கள் தங்களுடைய சிருஷ்டிகருக்குக் கீழ்ப்படியாதிருந்தால் தேவர்களைப் போல இருக்கமுடியும் என்று சொன்னான். இன்று மனிதகுலத்தின் வீழ்ச்சியடைந்த நிலைமை, யெகோவா அல்ல, சாத்தானே பொய்யனாக இருந்தான் என்பதை நிரூபிக்கிறது. இன்றுள்ள மனிதர்கள் தேவர்களல்ல! எனினும், சாத்தான் அந்த முதல் பொய்யை மற்றப் பொய்களுடன் தொடர்ந்தான். அவன் மனித ஆத்துமா அழியாதது, மரிக்காதது என்ற கருத்தை அறிமுகப்படுத்தினான். இவ்வாறு அவன், மற்றொரு வழியில் தேவர்களைப்போல் இருக்கும் வாய்ப்பை மனிதகுலத்திற்கு முன்வைத்தான். பின்பு, அந்தப் பொய்யான கோட்பாட்டின் அடிப்படையில், எரிநரகம், உத்தரிக்கும் ஸ்தலம், ஆவிக்கொள்கை, மூதாதையர் வழிபாடு போன்ற போதகங்களைப் பரப்பினான். இந்தப் பொய்கள் கோடிக்கணக்கானோரை இன்னும் அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றன.—உபாகமம் 18:9-13.
14, 15. மரணம் மற்றும் மனிதனின் எதிர்கால நம்பிக்கை ஆகியவற்றைப் பற்றிய சத்தியம் என்ன?
14 நிச்சயமாகவே, ஆதாமிடம் யெகோவா சொன்னதுதான் சத்தியம். ஆதாம் கடவுளுக்கு விரோதமாகப் பாவம்செய்தபோது, மரிக்கவே மரித்தான். (ஆதியாகமம் 5:5) ஆதாமும் அவனுடைய சந்ததியும் மரித்தபோது, அவர்கள் செத்த ஆத்துமாக்களாக, உணர்வற்றவர்களாக, செயலற்றவர்களாக ஆனார்கள். (ஆதியாகமம் 2:7; பிரசங்கி 9:5, 10; எசேக்கியேல் 18:4) ஆதாமிடமிருந்து பாவத்தைச் சுதந்தரித்ததால், எல்லா மனித ஆத்துமாக்களும் மரிக்கின்றனர். (ரோமர் 5:12) எனினும், ஏதேனில் யெகோவா, பிசாசின் செயல்களை எதிர்த்துச் செயல்படும் ஒரு வித்து வருவதைப் பற்றி வாக்குக்கொடுத்தார். (ஆதியாகமம் 3:15) அந்த வித்து, கடவுளுடைய சொந்த ஒரேபேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவாக இருந்தார். இயேசு பாவமில்லாமல் மரித்தார்; அவருடைய உயிர்ப்பலி மனிதகுலத்தை அவர்களின் மரிக்கும் நிலையிலிருந்து விலைக்குவாங்கும் ஒரு மீட்கும்பொருளாக ஆனது. இயேசுவின்மீது கீழ்ப்படிதலோடு விசுவாசத்தைக் காண்பிப்பவர்கள், ஆதாம் இழந்துபோன நித்திய ஜீவனைப் பெறும் வாய்ப்பை உடையவர்களாக இருக்கின்றனர்.—யோவான் 3:36; ரோமர் 6:23; 1 தீமோத்தேயு 2:5, 6.
15 ஆத்துமா மரணத்திற்குப்பின் வாழ்கிறது என்ற ஒரு தெளிவற்ற கருத்தல்ல, மீட்கும்பொருளே மனிதகுலத்திற்கான உண்மையான நம்பிக்கை ஆகும். இது தெய்வீக போதனை. அது சத்தியம். அது யெகோவாவின் அன்பு மற்றும் ஞானத்தின் அற்புதகரமான வெளிப்பாடும் ஆகும். (யோவான் 3:16) இந்தச் சத்தியத்தைக் கற்றுக்கொண்டிருப்பதற்காகவும் இந்த விஷயங்களில் பேய்களின் போதகங்களிலிருந்து விடுதலையாக்கப்பட்டிருப்பதற்காகவும் நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும்!—யோவான் 8:32.
16. மனிதர்கள் தங்களுடைய சொந்த ஞானத்தைப் பின்பற்றும்பொழுது நீண்டகால விளைவுகள் யாவை?
16 ஏதேன் தோட்டத்தில் சாத்தான் தன்னுடைய பொய்கள்மூலம், ஆதாமும் ஏவாளும் கடவுளிடமிருந்து பிரிந்து தன்னிச்சையாக இருப்பதை ஆர்வத்துடன் விரும்பவும் தங்களுடைய சொந்த ஞானத்தின்மீது சார்ந்திருக்கவும் உற்சாகப்படுத்தினான். இன்று நாம், அதன் நீண்டகால விளைவுகளை, குற்றச்செயல், பொருளாதார கஷ்டங்கள், யுத்தங்கள், இன்றைய உலகில் இருக்கும் பெரும் ஏற்றத்தாழ்வு போன்றவற்றில் காண்கிறோம். பைபிள் இவ்வாறு சொல்வதில் ஆச்சரியமேதுமில்லை: “இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது”! (1 கொரிந்தியர் 3:19) எனினும், பெரும்பான்மையான மனிதர்கள் யெகோவாவின் போதனைகளுக்குச் செவிசாய்ப்பதைவிட, கஷ்டப்படுவதைப் பைத்தியகாரத்தனமாகத் தேர்ந்தெடுக்கின்றனர். (சங்கீதம் 14:1-3; 107:17) தெய்வீக போதனையை ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவர்கள், அந்தக் கண்ணியில் அகப்படுவதைத் தவிர்க்கின்றனர்.
17. “அறிவு என்று பொய்யாய் பேர்பெற்றிருக்கிற” எதை சாத்தான் பரப்பிவருகிறான், அதன் பாதிப்புகள் என்ன?
17 தீமோத்தேயுவுக்குப் பவுல் எழுதினார்: “ஓ, தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், [அறிவு என்று, NW] பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு. சிலர் அதைப் பாராட்டி, விசுவாசத்தைவிட்டு வழுவிப்போனார்கள்.” (1 தீமோத்தேயு 6:20, 21) அந்த “அறிவு” என்பதும், பேய்களின் போதகங்களைக் குறிக்கிறது. பவுலின் நாளில், சபைகளில் சிலர் ஆதரித்து, பரப்பிவந்த பொய்ப் போதகக் கருத்துக்களை அது குறித்திருக்கலாம். (2 தீமோத்தேயு 2:16-18) பின்னர், அறிவு என்று பொய்யாய் அழைக்கப்பட்ட, சமரச மறையியல் ஞானக் கோட்பாடு (Gnosticism) மற்றும் கிரேக்க தத்துவம் போன்றவை சபையைக் கெடுத்தன. இன்று உலகில், நாத்திகம், அறியொணாமைக் கொள்கை, பரிணாமக் கொள்கைகள், பைபிளைக் குறைகாணுதல் ஆகிய இவையெல்லாம், நவீன கால பொய்ப் போதகர்களால் பரப்பப்படுகிற வசன ஆதாரமற்ற கருத்துக்கள் அறிவு என்று பொய்யாய் அழைக்கப்படுவதற்கான உதாரணங்களாகும். அறிவு என்று பொய்யாய் அழைக்கப்படுகிற இவை எல்லாவற்றின் பாதிப்புகள் சாத்தானுடைய காரிய ஒழுங்குமுறையைத் தனிப்படுத்திக்காட்டும் ஒழுக்கச் சீர்குலைவு, அதிகாரத்திற்கு அவமரியாதை எங்கும் பரவியிருத்தல், நேர்மையற்றத்தன்மை, சுயநலப்போக்கு ஆகிய காரியங்களில் காணப்படுகின்றன.
தெய்வீக போதனையைப் பற்றிக்கொண்டிருத்தல்
18. இன்று யார் தெய்வீக போதனையை நாடுகிறார்கள்?
18 ஏதேனின் சமயத்திலிருந்தே சாத்தான் பூமியைப் பேய்களின் போதகங்களால் நிரப்பிக்கொண்டிருந்தாலும், தெய்வீக போதனையைத் தேடினவர்கள் சிலர் எப்போதும் இருந்துவந்திருக்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் பல லட்சக்கணக்கான எண்ணிக்கையானோராக இப்போது இருக்கிறார்கள். அவர்கள், பரலோக ராஜ்யத்தில் இயேசுவோடு ஆட்சிசெய்யும் நிச்சயமான நம்பிக்கையையுடைய மீந்திருக்கும் அபிஷேகம்செய்யப்பட்டவர்களையும் அந்த ராஜ்யத்தின் பூமிக்குரிய பகுதியைச் சுதந்தரிக்கும் நம்பிக்கையையுடைய ‘மற்ற ஆடுகளின்’ அதிகரிக்கும் திரள்கூட்டத்தினரையும் உட்படுத்துகிறார்கள். (மத்தேயு 25:34; யோவான் 10:16; வெளிப்படுத்துதல் 7:3, 9) இன்று இவர்கள் எல்லாரும் ஏசாயாவின் வார்த்தைகள் பொருந்தும் ஓர் உலகளாவிய அமைப்பாகக் கூட்டிச்சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்: “உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்.”—ஏசாயா 54:13.
19. யெகோவாவால் போதிக்கப்பட்டிருப்பது எதை உட்படுத்துகிறது?
19 யெகோவாவால் போதிக்கப்பட்டிருப்பது என்பது, முக்கியமாக உண்மையான கோட்பாட்டை அறிவதாக இருந்தாலும், அதைவிட மேலானதை அர்த்தப்படுத்துகிறது. யெகோவா நாம் எப்படி வாழவேண்டும், நம் தனிப்பட்ட வாழ்க்கைக்குத் தெய்வீக போதனையை எப்படிப் பொருத்த வேண்டும் என்பதை நமக்குக் கற்பிக்கிறார். உதாரணமாக, நம்மைச் சுற்றியுள்ள உலகமெங்கும் அவ்வளவு அச்சுறுத்தும் நிலையில் இருக்கும் தன்னலம், ஒழுக்கக்கேடு, சுதந்திரப் போக்கு போன்றவற்றை நாம் ஏற்க மறுக்கிறோம். இந்த உலகத்தில் செல்வத்தைப் பெற கடுமையாகத் தேடுவது மரணத்திற்கு வழிநடத்துகிறது என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். (யாக்கோபு 5:1-3) அப்போஸ்தலன் யோவானின் வார்த்தைகளில் வெளிக்காட்டப்பட்டுள்ள தெய்வீக போதனையை நாம் ஒருபோதும் மறக்காதிருப்போமாக: “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.”—1 யோவான் 2:15.
20, 21. (அ) சாத்தான் மனிதர்களைக் குருடாக்கும் தன் முயற்சிகளுக்கு எதைப் பயன்படுத்துகிறான்? (ஆ) தெய்வீக போதனையைப் பற்றிக்கொண்டிருப்பவர்களுக்கு என்ன ஆசீர்வாதங்கள் வருகின்றன?
20 கொரிந்தியர்களுக்கான பவுலின் வார்த்தைகளிலிருந்து, பேய்களுடைய போதகங்கள் அதன் பலியாட்கள்மீதாகக் கொண்டிருக்கும் பாதிப்பைக் காணலாம்: “தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, [சாத்தான்] அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.” (2 கொரிந்தியர் 4:4) இந்த வகையிலும் உண்மைக் கிறிஸ்தவர்களைக் குருடாக்க சாத்தான் விரும்புவான். ஏதேனில், கடவுளுடைய ஊழியர்களில் ஒருவரைத் தவறாக வழிநடத்துவதற்காக ஒரு சர்ப்பத்தைப் பயன்படுத்தினான். இன்று, அவன் வன்முறையான அல்லது ஒழுக்கக்கேடான திரைப்படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பயன்படுத்துகிறான். வானொலி, இலக்கியம், இசை போன்றவற்றை தன்னலத்திற்காகப் பயன்படுத்துகிறான். அவனுடைய ஆதிக்கத்தில் இருக்கிற வல்லமைமிக்க ஆயுதம், தவறான கூட்டுறவு ஆகும். (நீதிமொழிகள் 4:14; 28:7; 29:3) அப்படிப்பட்ட காரியங்கள், கண்ணிகள் மற்றும் பேய்களின் போதகங்களாய் இருக்கின்றன என்பதை எப்போதும் அடையாளம் கண்டுகொள்வோமாக.
21 ஏதேனில் சாத்தானுடைய வார்த்தைகள் பொய்களாக இருந்தன; யெகோவாவின் வார்த்தைகள் உண்மையாக நிரூபித்தன. அந்த ஆரம்ப நாட்களிலிருந்து, அதேதான் தொடரும் காரியமாக இருக்கிறது. சாத்தான் எப்போதும் ஒரு பொய்யனாக நிரூபித்திருக்கிறான். தெய்வீக போதனை தவறாது உண்மையாக இருந்திருக்கிறது. (ரோமர் 3:4) நாம் கடவுளுடைய வார்த்தையைப் பற்றிக்கொண்டிருந்தால், சத்தியம் மற்றும் பொய்களுக்கு இடையேயான யுத்தத்தில் வெற்றியின் பக்கத்தில் எப்போதும் நாம் இருப்போம். (2 கொரிந்தியர் 10:4, 5) எனவே, பேய்களின் எல்லா போதகங்களையும் வெறுத்து ஒதுக்கும் தீர்மானத்தோடு செயல்படுவோமாக. அந்த வழியில், உண்மைக்கும் பொய்க்கும் இடையேயுள்ள யுத்தம் முடிந்திருக்கும் காலம் வரும்வரை நாம் சகித்திருப்போமாக. சத்தியம் ஜெயித்திருக்கும். சாத்தான் இருக்கமாட்டான். தெய்வீக போதனை மட்டுமே பூமியெங்கும் கேட்கப்படும்.—ஏசாயா 11:9.
நீங்கள் விளக்கமுடியுமா?
◻ எப்போது பேய்த்தனமான போதகங்கள் முதலில் கேட்கப்பட்டன?
◻ சாத்தான் மற்றும் அவனுடைய பேய்களால் பரப்பப்படுகிற சில பொய்கள் யாவை?
◻ இன்று என்ன வழிகளில் சாத்தான் மிக அதிக சுறுசுறுப்பாகச் செயல்படுகிறான்?
◻ பேய்களின் போதகங்களைப் பரப்புவதற்கு சாத்தான் எதைப் பயன்படுத்துகிறான்?
◻ தெய்வீக போதனையைப் பற்றிக்கொண்டிருப்பவர்களுக்கு என்ன ஆசீர்வாதங்கள் உரியதாய் இருக்கின்றன?
6. யெகோவாவின் நற்குணத்தையும் பேரரசாட்சியையும் சாத்தான் எப்படிச் சவால்விட்டான்?
[பக்கம் 9-ன் படம்]
பேய்த்தனமான போதகம் ஏதேன் தோட்டத்தில் முதலில் கேட்கப்பட்டது
[பக்கம் 10-ன் படம்]
மீட்கும்பொருள் மற்றும் ராஜ்யம் பற்றிய தெய்வீக போதனை மனிதகுலத்திற்கு ஒரே நம்பிக்கையை அளிக்கிறது