உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w94 9/15 பக். 3-4
  • மன்னிப்பவராக இருக்கிறீர்களா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மன்னிப்பவராக இருக்கிறீர்களா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மன்னிப்பது ஒரு சவால்
  • ‘தொடர்ந்து ஒருவருக்கொருவர் தாராளமாய் மன்னியுங்கள்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • மனசார மன்னியுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • ஒருவரையொருவர் தாராளமாக மன்னியுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
  • ஏன் மன்னிப்பவராக இருக்க வேண்டும்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
w94 9/15 பக். 3-4

மன்னிப்பவராக இருக்கிறீர்களா?

பில்லும் அவருடைய 16 வயது மகள் லீசாவும் ஒருவருக்கொருவர் ஒத்துப்போவது கடினமாயிருந்தது. அவர்களுக்கிடையே ஏற்படும் சிறிய கருத்துவேறுபாடுகள் கத்தி சச்சரவு செய்யுமளவுக்கு அடிக்கடி வளர்ந்தது. முடிவில், அந்த மனத்தாங்கல் படிப்படியாக அவ்வளவு மீறிய நிலைக்கு எட்டி, லீசா வீட்டைவிட்டுச் செல்லும்படி சொல்லப்பட்டாள்.a

சிறிது காலத்துக்குப் பின் லீசா, தன்பேரிலேயே குற்றமிருந்ததென்று உணர்ந்து தன் தகப்பனின் மன்னிப்பை நாடித்தேடினாள். ஆனால் லீசாவின் சென்றகால தவறுகளைக் கவனியாமல் விடுவதற்குப் பதிலாக, மனக்கசப்புற்றிருந்த அவளுடைய தகப்பன் சமாதானம் செய்வதற்கான அவளுடைய முயற்சிகளை ஏற்காது தள்ளிவிட்டார். கற்பனை செய்து பாருங்கள்! தன் சொந்த மகளுக்கு இரக்கத்தைக் காட்டுவதற்கு அவர் மனமற்றிருந்தார்!

பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் குற்றமற்ற ஒரு மனிதர் ஒரு பெரும் குற்றத்துக்காக மரிக்கும்படி கண்டனம் செய்யப்பட்டார். சாட்சிகள் பொய்ச்சாட்சி சொன்னார்கள், அரசியல் அதிகாரிகள் அறிந்தும் வேண்டுமென்றே நீதிசெய்ய மறுத்தனர். அந்தக் குற்றமற்ற மனிதர் இயேசு கிறிஸ்துவே. அவர் மரிப்பதற்குச் சற்று முன்பாக, ஜெபசிந்தையுடன்: “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்று கடவுளைக் கேட்டார்.—லூக்கா 23:34.

இயேசு தம்முடைய இருதயத்திலிருந்து தாராளமாய் மன்னித்தார், அவரைப் பின்பற்றினோரும் இந்தக் காரியத்தில் அவருடைய மாதிரியைப் பின்பற்றும்படி ஊக்குவிக்கப்பட்டனர். (எபேசியர் 4:32) எனினும், பில்லைப்போல் பலர் இரக்கமில்லாமல் மன்னிக்க மனமற்றிருக்கின்றனர். இந்தக் காரியத்தில் நீங்கள் எவ்வாறு இருக்கிறீர்கள்? மற்றவர்கள் உங்களுக்கு விரோதமாகப் பாவம் செய்கையில் அவர்களை மன்னிக்க மனமுள்ளவர்களாக இருக்கிறீர்களா? வினைமையான பாவங்களைப்பற்றியதென்ன? இவற்றையும் மன்னிக்க வேண்டுமா?

மன்னிப்பது ஒரு சவால்

மன்னிப்பளிப்பது எப்போதும் எளிதாக இருப்பதில்லை. மேலும் இந்தக் கொடிய காலங்களில், மனித உறவுகள் என்றுமில்லாத வகையில் அதிகப் பிரச்சினையுள்ளதாகிவிட்டன. முக்கியமாய்க் குடும்ப வாழ்க்கை அடிக்கடி நெருக்கடிகளாலும் தொல்லைகளாலும் நிரம்பியுள்ளது. “கடைசி நாட்களில்” இத்தகைய நிலைமைகள் நிலவியிருக்குமென்று கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பவுல் வெகு காலத்திற்கு முன்னால் சொன்னார். அவர் சொன்னதாவது: “மனுஷர் தற்பிரியரும் பணப்பிரியரும் வீம்புக்காரரும் அகந்தையுள்ளவர்களும் . . . நன்மையை ஆசியாதவர்களும் துரோகிகளும் துணிகரமுள்ளவர்களும் இறுமாப்புள்ளவர்களு”மாயிருப்பார்கள்.—2 தீமோத்தேயு 3:1-4, திருத்திய மொழிபெயர்ப்பு.

அவ்வாறெனில், தவிர்க்கமுடியாதபடி, நாம் எல்லாரும், மற்றவர்களுக்கு மன்னிக்கும் நம்முடைய திறமையைச் சோதிக்கும் புறம்பான நெருக்கடிகளை எதிர்ப்படுகிறோம். இவற்றோடுகூட, உள்ளத்தின் போராட்ட சக்திகளுக்கெதிராகவும் நாம் போராட வேண்டியுள்ளது. பவுல் இவ்வாறு புலம்பினார்: “நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன். அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது.” (ரோமர் 7:19, 20) இதன் விளைவாக நாம் இருக்க விரும்புகிற அளவுக்கு மன்னிக்கிறவர்களாக நம்மில் பலர் இல்லை. சுதந்தரிக்கப்பட்ட அபூரணமும் பாவமும் நம்மெல்லார்மீதும் வல்லமைவாய்ந்த செல்வாக்கைச் செலுத்துகின்றன, சில சமயங்களில் உடனொத்த மனிதருக்கு இரக்கம் காண்பிப்பதிலிருந்தும் நம்மைத் தடுத்துவைக்கின்றன.

ஒரு சிறிய குற்றத்துக்காக மற்றொருவரை மன்னிக்கும்படி ஊக்குவிக்கப்பட்டபோது, ஓர் அம்மாள்: “மன்னிப்பதற்குத் தேவைப்படும் முயற்சிக்கு ஒருவரும் தகுதியாக இல்லை” என்று பதிலுரைத்தாள். இத்தகைய குறிப்பு மேலோட்டத்தில், உணர்ச்சியற்றதுபோலும் உள்ளக்கடினத்தைப்போலும் மனிதப் பண்பற்றதுபோலும்கூடத் தோன்றலாம். எனினும், ஆழ்ந்து நோக்குகையில், தன்னலமும் கவலைப்படாததும் பகைமையுள்ளதுமானதென தாங்கள் கருதும் ஓர் உலகத்தை எதிர்ப்படுகையில் பலர் உணரும் மனத்தாங்கலான உணர்ச்சியை இது வெளிப்படுத்துகிறதென்று நாம் காண்கிறோம். ஒருவர் பின்வருமாறு கூறினார்: “நீங்கள் மன்னிக்கையில் ஆட்கள் உங்கள் தயவை மட்டுக்குமீறி அனுகூலப்படுத்திக்கொள்கின்றனர், இது நாமே மிதிக்கப்படுவதுபோலாகிறது.”

அப்படியிருக்க, இந்தக் கடைசி நாட்களில் மன்னிக்கும் மனப்பான்மையை வளர்ப்பது கடினமாயுள்ளதென்பது ஆச்சரியமாயில்லை. இருப்பினும், தயவாய் மன்னிக்கும்படி பைபிள் நம்மை ஊக்குவிக்கிறது. (2 கொரிந்தியர் 2:7-ஐ ஒத்துப்பாருங்கள்.) நாம் ஏன் மன்னிப்பவராக இருக்க வேண்டும்?

[அடிக்குறிப்புகள்]

a பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்