உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w94 9/15 பக். 30-31
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
  • இதே தகவல்
  • கடன்! உட்பிரவேசிப்பதும் வெளியேறுவதும்
    விழித்தெழு!—1991
  • பணப் பிரச்சினை, கடன் தொல்லை—சமாளிக்க பைபிள் உதவுமா?
    பைபிள் தரும் பதில்கள்
  • கடனாளியாவதில் லாபமுண்டா?
    விழித்தெழு!—1995
  • நண்பர்களுக்கிடையில் கொடுக்கல் வாங்கல்
    விழித்தெழு!—1999
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
w94 9/15 பக். 30-31

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

பொருளாதாரத்தில் கடினமான இந்தக் காலங்களிலே, அதிகதிகமான தனிநபர்களும் நிறுவனங்களும் திவாலானநிலை நடவடிக்கைகளை நாடுகிறார்கள். ஒரு கிறிஸ்தவர் திவாலானநிலை சலுகைக்காகக் கோருவது வேதப்பூர்வமாகச் சரியானதாக இருக்குமா?

தெளிவாகவே நவீனமாக இருக்கும் காரியங்களின்பேரில் கடவுளுடைய வார்த்தை எப்படி நடைமுறையான வழிநடத்துதலைக் கொடுக்கிறது என்பதற்கு இந்தக் கேள்விக்கான பதில் ஒரு சரியான எடுத்துக்காட்டாக இருக்கிறது. பல தேசங்கள் திவாலானநிலையை ஒழுங்குபடுத்தும் சட்டங்களைக் கொண்டிருக்கின்றன. அந்தச் சட்டங்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன; மேலும் இதைக் குறித்து சட்டப்பூர்வ ஆலோசனையைக் கொடுப்பது கிறிஸ்தவ சபையைச் சார்ந்ததல்ல. ஆனால் திவாலானநிலை சம்பந்தமான சட்டப்பூர்வமான ஏற்பாட்டைப் பற்றி நாம் ஒரு சுருக்கமான கருத்தைப் பெறுவோம்.

தனிநபர்களும் வியாபார நிறுவனங்களும் திவாலானநிலையை அறிவிக்கும்படி அரசாங்கங்கள் அனுமதிப்பதற்கான ஒரு காரணம் என்னவென்றால், பணத்தைக் கடனாகக் கொடுப்பவர்களுக்கு அல்லது கடனுதவி வழங்குபவர்களுக்கு (கடன் கொடுத்தவர்களுக்கு), பணத்தைக் கடன் வாங்கி அல்லது கடன் பெற்றுவிட்டு (கடன் வாங்கியவர்கள்) பட்ட கடனைச் செலுத்தாமல் இருக்கும் மக்கள் அல்லது நிறுவனங்களிலிருந்து ஓரளவு பாதுகாப்பை அளிப்பதே. கடன் வாங்கியவருக்கு திவாலானநிலை ஏற்பட்டுவிட்டதாக அறிவிக்கச் செய்து, பகுதியளவு கடனடைப்பாக அவருடைய ஆஸ்திகளைப் பகிர்ந்துகொள்ள முடியும்படி நீதிமன்றங்களிடம் முறையீடு செய்வதே கடன் கொடுத்தவர்களுக்கு ஒரே வழியாகத் தோன்றக்கூடும்.

திவாலானநிலை உதவக்கூடிய மற்றொரு வழி என்னவென்றால், தங்களுக்குக் கடன் கொடுத்தவர்களை நேர்மையாகவே திருப்திசெய்யமுடியாத கடன் வாங்கியவர்களுக்கு அது ஒரு பாதுகாப்பு வலையாக இருக்கிறது. கடன் வாங்கியவர் திவாலானநிலையின் சலுகைகளுக்காக கோரும்படி அனுமதிக்கப்படக்கூடும்; அப்போது கடன்கொடுத்தவர்கள் அவருடைய ஆஸ்திகளில் சிலவற்றை எடுத்துக்கொள்ளலாம். இருந்தாலும், அவருடைய வீட்டை அல்லது குறிப்பிட்ட குறைந்தளவு ஆஸ்திகளையும் அவர் வைத்துக்கொள்ளவும், தன்னுடைய முன்னாள் கடன்கொடுத்தவர்களால் இழப்பு அல்லது கைப்பற்றப்படுதலின் அச்சுறுத்தல் இல்லாமல் வாழும்படியும் சட்டம் அவரை அனுமதிக்கக்கூடும்.

அப்படியானால், நிதிசம்பந்தமான அல்லது வியாபார நடவடிக்கைகளில், இரு பக்கத்தாருக்கும் ஓரளவான பாதுகாப்பைக் கொடுக்கவே இந்தச் சட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பது தெளிவாக இருக்கிறது. என்றாலும், உதவத்தக்க என்ன ஆலோசனையை பைபிள் கொடுக்கிறது என்று நாம் கவனிப்போம்.

கடனுக்குள் உட்படுவதை பைபிள் உற்சாகப்படுத்துவதில்லை என்பதை உணராமல் பைபிளை முதலிலிருந்து கடைசி வரையாக வாசிப்பது கடினமானதாக இருக்கும். நீதிமொழிகள் 22:7-ல் சொல்லப்பட்டதைப் போன்ற எச்சரிக்கைகளை நாம் காண்கிறோம்: “ஐசுவரியவான் தரித்திரனை ஆளுகிறான்; கடன்வாங்கினவன் கடன்கொடுத்தவனுக்கு அடிமை.”

மத்தேயு 18:23-34-ல், அதிக கடன்பட்டிருந்த ஒரு அடிமையைப் பற்றிய இயேசுவின் உவமையையும் எண்ணிப் பாருங்கள். ‘அவனுடைய எஜமான் அவனையும் அவன் பெண்ஜாதி பிள்ளைகளையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் விற்கும்படி கட்டளையிட்டான்’; ஆனால் பின்னர், அந்த எஜமானாகிய ராஜா மனமிரங்கி, இரக்கம் காண்பித்தான். அந்த அடிமை பின்னர் இரக்கமற்றவனாக நிரூபித்தபோது, அந்த ராஜா அவனை ‘அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் ஒப்புக்கொடுக்கும்படி’ கட்டளையிட்டான். தெளிவாகவே, மிகச் சிறந்த போக்கு, பரிந்துரைக்கப்பட்ட போக்கு என்னவென்றால் பணம் கடன்வாங்குவதைத் தவிர்ப்பதே ஆகும்.

பண்டைய இஸ்ரவேலில் இருந்த கடவுளுடைய ஊழியர்கள் வியாபார செயல்தொடர்புகளைக் கொண்டிருந்தார்கள்; சிலசமயங்களில் கடன் வாங்குதலும் கடன் கொடுத்தலும் சம்பவித்தது. அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று யெகோவா போதித்தார்? ஒரு வியாபாரத்தில் நுழைவதற்கோ ஒரு வியாபாரத்தை விரிவாக்குவதற்கோ பணத்தை ஒருவர் கடன் வாங்க விரும்பினால், ஒரு எபிரெயனுடைய பாகத்தில், வட்டி வசூலிப்பது சட்டப்பூர்வமானதும் இயல்பானதுமாக இருந்தது. என்றபோதிலும், தேவையிலிருக்கும் ஒரு இஸ்ரவேலனுக்கு கடன்கொடுக்கையில் தன்னலமற்றவர்களாக இருக்கும்படி கடவுள் தம்முடைய மக்களை உந்துவித்தார்; வட்டி வசூலிப்பதன்மூலம் ஒரு சாதகமற்ற சூழ்நிலையிலிருந்து லாபத்தைப் பெறக்கூடாது. (யாத்திராகமம் 22:25) உபாகமம் 15:7, 8 சொல்கிறது: “உன் சகோதரரில் எளியவனான ஒருவன் இருந்தால், . . . அவனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறந்து, அவனுடைய அவசரத்தினிமித்தம் அவனுக்குத் தேவையானதைக் கடன்கொடுப்பாயாக.”

கடன் கொடுத்தவர்கள் கடன் வாங்கியவர்களிடமிருந்து, குடும்பத்தின் திரிகைக்கல் அல்லது அவரை இரவில் அனலாக வைப்பதற்குத் தேவையான வஸ்திரம் போன்ற வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகளைக் கைப்பற்றக்கூடாது என்று வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளில் அதேவிதமான தயவு அல்லது கரிசனை காண்பிக்கப்பட்டது.—உபாகமம் 24:6, 10-13; எசேக்கியேல் 18:5-9.

எல்லா யூதர்களும் தங்களுடைய பெரிய நியாயாதிபதி மற்றும் நியாயப்பிரமாணிகரிடமிருந்து வந்த இந்த அன்பான சட்டங்களை ஏற்று அதன் மெய்யான அர்த்தத்தில் பொருத்திப் பிரயோகிக்கவில்லை என்பது மெய்தான். (ஏசாயா 33:22) சில பேராசை மிக்க யூதர்கள் தங்கள் சகோதரரை மிகவும் கடுமையாக நடத்தினார்கள். இன்றும்கூட, கடன் கொடுப்பவர்கள் சிலர் கடுமையாகவும் தங்கள் கோரிக்கைகளில் நியாயத்தன்மையற்றவர்களாகவும் இருக்கக்கூடும்; ஏதோ ஒரு எதிர்பாராத சம்பவத்தின் காரணமாக அந்தச் சமயத்தில் பணத்தைக் கட்டமுடியாமலிருந்த ஒரு நேர்மையான கிறிஸ்தவனிடம்கூட அவ்வாறு நடந்துகொள்ளக்கூடும். (பிரசங்கி 9:11, NW) அவர்களுடைய வளைந்துகொடுக்காத, வற்புறுத்தும் அழுத்தத்தினால், உலகப்பிரகாரமான கடன்கொடுப்பவர்கள் அப்படிப்பட்ட ஒரு கடன்காரரை, தன்னைத்தான் பாதுகாக்க வேண்டும் என்று உணரக்கூடிய ஒரு நிலைமைக்குள் தள்ளிவிடக்கூடும். எப்படி? சில சூழ்நிலைமைகளில், கடன்காரர்கள் நினைக்கக்கூடிய ஒரே காரியம் என்னவென்றால், சட்டப்பூர்வமான படியாகிய திவாலானநிலை சலுகையாகும். ஆகவே தன்னுடைய கடன்களைப் பற்றி பேராசையாகவோ அசட்டையாகவோ இருக்காத ஒரு கிறிஸ்தவர் திவாலானநிலை சலுகைக்காக கோரக்கூடும்.

என்றாலும், நாம் காரியத்தின் மறுபக்கத்தைக் குறித்தும் கவனமாக இருக்கவேண்டும். ஒரு கிறிஸ்தவன் எவ்வளவு அல்லது எப்படிச் செலவுசெய்தான் என்பதைக் குறித்ததில் சுயக்கட்டுப்பாட்டை பயன்படுத்தாததாலோ தன்னுடைய வியாபார தீர்மானங்களில் நியாயமான முன்னறிவைப் பயன்படுத்தாததாலோ கடன்பட்டிருக்கக்கூடும். அவர் அந்தக் கடனைக் குறித்து வெறுமனே ஏனோதானோவென்று இருந்து, திவாலானநிலை சலுகையின் மூலம் நிவாரணத்தை நாடி, தன்னுடைய தவறான தீர்மானத்தால் மற்றவர்களை வருத்தப்படுத்தவேண்டுமா? நிதிசம்பந்தமாக அப்படிப்பட்ட பொறுப்பற்ற தன்மையை பைபிள் ஆதரிப்பதில்லை. கடவுளுடைய ஊழியக்காரனுடைய ஆம் என்பது ஆம் என்பதை அர்த்தப்படுத்தவேண்டும் என்று அது உந்துவிக்கிறது. (மத்தேயு 5:37) ஒரு கோபுரத்தைக் கட்டுவதற்குமுன் செல்லுஞ்செலவைக் கணக்குப் பார்ப்பது பற்றிய இயேசுவின் குறிப்புகளையும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். (லூக்கா 14:28-30) அதற்கு இசைவாக, பணசம்பந்தமான கடனை வாங்குவதற்கு முன்னர், ஒரு கிறிஸ்தவர், சாத்தியமான வேண்டாத விளைவுகளைக் கவனமாகச் சிந்திக்க வேண்டும். கடனை வாங்கிவிட்டாரென்றால், தான் பணத்தைக் கடன்பட்டிருக்கிற தனி நபர்களுக்கோ நிறுவனங்களுக்கோ அதைத் திரும்பச் செலுத்தவேண்டிய தன் பொறுப்பை உணர்ந்தவராக இருக்கவேண்டும். மற்ற அநேகர் ஒரு கிறிஸ்தவரை பொறுப்பற்றவராகவோ நம்பத்தகாதவராகவோ கண்டால், அவர் முயன்று பெற்றிருந்த நற்பெயரைக் கெடுத்துக்கொண்டிருக்கக்கூடும்; மேலும் இதன் காரணமாக புறம்பே இருப்பவர்களிடம் இனிமேலும் நற்சாட்சி பெற்றவராக இருக்கமாட்டார்.—1 தீமோத்தேயு 3:2, 7.

யெகோவா வரவேற்கக்கூடிய வகையான நபராக இருப்பவரைக் குறித்து நமக்கு சங்கீதம் 15:4 என்ன சொல்கிறது என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். நாம் வாசிக்கிறோம்: “[கடவுள் அங்கீகரிக்கக்கூடிய ஒருவன்] ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான்.” ஆம், கிறிஸ்தவர்கள், தாங்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்று விரும்புவார்களோ அவ்வாறு தங்களுக்குக் கடன் கொடுத்தவர்களையும் நடத்த வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறார்.—மத்தேயு 7:12.

அப்படியென்றால், சுருங்கச்சொன்னால், ஒரு மட்டுக்குமீறிய சூழ்நிலையில் இராயனுடைய திவாலானநிலை சட்டங்களால் அளிக்கப்படும் பாதுகாப்பை ஒரு கிறிஸ்தவர் பயன்படுத்திக்கொள்ளும் சாத்தியத்தை பைபிள் ஒதுக்கிவிடுவதில்லை. என்றபோதிலும், கிறிஸ்தவர்கள் நேர்மை மற்றும் நம்பகத்தன்மையைக் குறித்ததில் தனிச்சிறப்பு வாய்ந்தவர்களாக இருக்கவேண்டும். இவ்வாறாக, தங்களுடைய நிதிசம்பந்தமான கடமைகளை நிறைவேற்றுவதற்கான நேர்மையான விருப்பத்தில் அவர்கள் சிறந்த முன்மாதிரிகளாக இருக்கவேண்டும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்