ராஜ்ய பிரசங்கிப்பு வேலைக்குச் சிலர் எப்படி நன்கொடை கொடுக்கிறார்கள்
◻ உலகளாவிய வேலைக்கு நன்கொடைகள்: அநேகர் “சொஸையிட்டியின் உலகளாவிய வேலைக்காக நன்கொடைகள்—மத்தேயு 24:14,” எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் நன்கொடை பெட்டிகளில் போடுவதற்கு ஒரு தொகையை ஒதுக்கி வைத்துவிடுகிறார்கள் அல்லது அதை வரவுசெலவு திட்டத்தில் சேர்த்துக்கொள்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் சபைகள் இந்தத் தொகைகளை அருகாமையிலுள்ள உவாட்ச் டவர் சொஸையிட்டியின் கிளை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கின்றன.
◻ வெகுமதிகள்: பணமாக மனமுவந்து கொடுக்கப்படும் நன்கொடைகளை நேரடியாக Watch Tower Bible and Tract Society-க்கு அனுப்பலாம். நகை அல்லது மற்ற விலைமதிப்புள்ள பொருட்களுங்கூட நன்கொடையாக கொடுக்கப்படலாம். இவை எந்தவித நிபந்தனையும் இல்லாத ஒரு நன்கொடை என்பதைத் தெரிவிக்கும் சுருக்கமான ஒரு கடிதம் இந்த நன்கொடைகளோடு சேர்ந்து வர வேண்டும்.
◻ நிபந்தனைக்குட்பட்ட நன்கொடை ஏற்பாடு: நன்கொடையாளரின் மரணம் வரையாக உவாட்ச் டவர் சொஸையிட்டியின் பொறுப்பாண்மையில் வைத்துக்கொள்ளும்படியாக பணம் கொடுக்கப்படலாம். சொந்தத் தேவை ஏற்பட்டால், நன்கொடையாளருக்கு இந்தப் பணம் திருப்பித் தரப்பட வேண்டும் என்ற நிபந்தனையோடு இது கொடுக்கப்படலாம்.
◻ காப்புறுதி: ஓர் ஆயுள்-காப்புறுதி திட்டத்தின் அல்லது ஓய்வுஊதியத் திட்டத்தின் அனுபவ பாத்தியத்தை உடையதாக உவாட்ச் டவர் சொஸையிட்டி பெயரிடப்படலாம். இத்தகைய ஏற்பாட்டைக் குறித்துச் சொஸையிட்டிக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
◻ வங்கி கணக்குகள்: வங்கி கணக்குகள், வைப்புத் தொகை சான்றிதழ்கள் அல்லது தனிநபரின் ஓய்வு/ஊதிய கணக்குகள், உள்ளூர் வங்கி தேவைகளுக்கு ஏற்ப சொஸையிட்டியின் பொறுப்பாண்மையில் வைக்கப்படலாம் அல்லது மரணம் நேரிடுகையில் உவாட்ச் டவர் சொஸையிட்டி இதைப் பெற்றுக்கொள்ளும்படிச் செய்யப்படலாம். இத்தகைய ஏற்பாடுகள் குறித்துச் சொஸையிட்டிக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
◻ பங்குகளும் கடன் பத்திரங்களும்: பங்குகளும் கடன் பத்திரங்களும் நிபந்தனை இல்லாத ஒரு வெகுமதியாகவோ வருமானம் தொடர்ந்து நன்கொடையாளருக்குக் கொடுக்கப்படும் என்ற ஏற்பாட்டின் கீழோ உவாட்ச் டவர் சொஸையிட்டிக்கு அளிக்கப்படலாம்.
◻ நிலமும் கட்டடங்களும்: விற்கப்படக்கூடிய நிலமும் கட்டடங்களும் நிபந்தனையில்லாத ஒரு வெகுமதியாக உவாட்ச் டவர் சொஸையிட்டிக்கு அளிக்கப்படலாம் அல்லது நன்கொடையாளர் தமது வாழ்நாள் முழுவதும் வைத்திருக்கக்கூடிய உடைமையாக, தம்முடைய வாழ்நாளின்போது தொடர்ந்து அவ்விடத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஏற்பாட்டோடு இது செய்யப்படலாம். எந்த நிலத்தையும் கட்டடங்களையும் பத்திரத்தினால் சொஸையிட்டிக்கு மாற்றுவதற்கு முன்பாக ஒருவர் சொஸையிட்டியோடு தொடர்புகொள்ள வேண்டும்.
◻ உயில்களும் நம்பிக்கை பொறுப்புறுதிகளும்: சொத்து அல்லது பணம் சட்டப்பூர்வமாக நிறைவேற்றப்பட்ட ஓர் உயில் மூலமாக உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டிக்கு ஒப்படைக்கப்படலாம் அல்லது ஒரு பொறுப்பாண்மை ஏற்பாட்டில் அனுபவ பாத்தியத்தை உடைய சொஸையிட்டியாகப் பெயரிடப்படலாம். மத அமைப்புக்கு நன்மை தரும் ஒரு பொறுப்பாண்மை ஒருசில வரி சலுகைகளைத் தரலாம். உயில் அல்லது பொறுப்பாண்மை ஒப்பந்தத்தின் நகல் ஒன்று சொஸையிட்டிக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும்.
இத்தகைய விஷயங்களின் பேரில் கூடுதலான தகவலுக்கு, Watch Tower Bible and Tract Society of India, H–58 Old Khandala Road, Lonavla 410 401, Mah., India என்ற விலாசத்துக்கு எழுதவும்.