நீங்கள் காண்பனவற்றிற்கும் அப்பால் பாருங்கள்!
நல்ல கண்பார்வை ஓர் ஆசீர்வாதமாகும். பார்க்கப்போனால், பல ஆட்கள் தங்களிடமுள்ள பலவற்றில் கண்பார்வையே மிகவும் அருமையானது என்று கூறுவர். இருப்பினும், கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலனாகிய பவுலால் கூறப்பட்ட பார்வையின் வகை, நல்ல கண்பார்வையைவிட இன்னும் அதிக மதிப்புள்ளது. ‘நாம் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிறோம்,’ என்று பவுல் எழுதினார். (2 கொரிந்தியர் 4:17) காணக்கூடாதவற்றை ஒருவர் காணும்படி செய்வதால், அது உண்மையிலேயே மிகவும் விசேஷமான பார்வை வகையாக இருக்கவேண்டும்! இதை நாம், பார்வை 20/20 உள்ள ஒரு ஆவிக்குரிய கண்பார்வை வகை என்று அழைக்கலாம்.
ஏன் தேவை?
முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு இந்த வகையான ஆவிக்குரிய கண்பார்வையைக் கொண்டிருப்பதற்கான தேவை உண்மையில் இருந்தது. அவர்கள் தங்களுடைய கிறிஸ்தவ ஊழியத்தை அதிக கஷ்டத்தின்கீழ் செய்துகொண்டிருந்தார்கள். பவுல் அதை இவ்விதம் குறிப்பிட்டார்: “நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை.”—2 கொரிந்தியர் 4:8, 9.
அத்தகைய சூழ்நிலைமைகள் இருந்தபோதிலும், உண்மையுள்ள சீஷர்கள் உறுதியாக நின்றார்கள். கடவுள் பேரிலுள்ள உறுதியான விசுவாசத்தின் காரணமாக அவர்களும் பவுலை போலவே சொல்ல முடிந்தது: “நாங்கள் சோர்ந்து போகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.” இந்தத் தினந்தோறும் புதிதாகுதலை எது கொண்டுவந்தது? பவுல் தொடர்ந்து சொல்கிறார்: “காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.”—2 கொரிந்தியர் 4:16-18.
பவுல் தன்னுடைய ஆவிக்குரிய சகோதரர்களை பிரச்சினைகளும், கஷ்டங்களும், துன்புறுத்துதல்களும்—எந்தவிதமான உபத்திரவமும்—அவர்களுக்கு முன் வைக்கப்பட்டிருந்த மகிமையான பரிசை அவர்களின் பார்வையிலிருந்து மறைத்துவிடாதபடி இருக்க உற்சாகப்படுத்தினார். அவர்கள் அப்போதைய சூழ்நிலைமைகளுக்கு அப்பால் கிறிஸ்தவ வாழ்க்கைப்போக்கின் சந்தோஷமான இறுதி பலன்மீது தங்களுடைய கண்களை ஊன்ற வைக்க வேண்டும். அதுதான் அவர்களுக்குப் போராட்டத்தில் தொடர்ந்திருப்பதற்கான அவர்களின் தீர்மானத்தை தினசரி அளவில் புதுப்பிக்க உதவியது. அதற்கு சரிநிகராகவே இன்றும் கிறிஸ்தவர்கள் அத்தகைய ஆவிக்குரிய கண்பார்வையின் தேவையை உடையவர்களாயிருக்கிறார்கள்.
தற்கால உபத்திரவம் கணநேரமே என நோக்குக!
காண விரும்பாத காரியங்களை விரும்புகிறோமோ இல்லையோ அவற்றை தினமும் காண்கிறோம் நாம். நிலைக்கண்ணாடியில் நம்மை சற்று பார்த்தால், சரீர குறைபாட்டின் அறிகுறிகளான விரும்பப்படாத வடுக்களையும் உடல் குறைபாடுகளையும் காண்பதை தவிர்க்க முடியாது. கடவுளுடைய வார்த்தை என்னும் நிலைக்காண்ணாடியில் நாம் பார்க்கும்போது, நம்மிலும் பிறரிலும் இருக்கும் ஆவிக்குரிய வடுக்களையும் குறைபாடுகளையும் காண்கிறோம். (யாக்கோபு 1:22-25) அநீதி, கொடுமை, அவல நிகழ்ச்சி ஆகியவற்றின் விவரங்களைத் தினசரி செய்தித்தாளிலோ தொலைக்காட்சி திரையிலோ நாம் பார்க்கும்போது விரைவில் கவனத்தை ஈர்ப்பதோடு மனவேதனையையும் அளிக்கின்றன.
நாம் பார்க்கும் காரியங்களைக்கொண்டே சாத்தான் நம்மை மனமுறிவடையச் செய்வான் அல்லது வழிவிலகிச்சென்று, விசுவாசத்தில் தள்ளாட தொடங்குபவர்களாக ஆகும்படி செய்வான். இது நடக்காதவாறு எப்படி நாம் தடுக்கமுடியும்? அப்போஸ்தலனாகிய பேதுரு சிபாரிசு செய்ததைப்போன்றே நாம் இயேசு கிறிஸ்துவினால் முன்வைக்கப்பட்ட மாதிரியைப் பின்பற்ற வேண்டும்; அவர் கூறினார்: “இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.” (1 பேதுரு 2:21) வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் இயேசுவே பரிபூரண முன்மாதிரியாக இருந்தார்.
இயேசுவை நமது முன்மாதிரி என பேதுரு சுட்டிக்காட்டும்போது, குறிப்பாக இயேசு பாடுபட்டதையும் குறிப்பிடுகிறார். உண்மையில், இயேசு பூமியில் இருந்தபோது, பெருமளவில் பாடுபட்டார். யெகோவாவின் ‘கைதேர்ந்த வேலையாளாக’ அவர், மனிதவர்க்கத்தின் படைப்பின்போது அருகே இருந்ததால், மனிதர்கள் எவ்விதம் இருக்கவேண்டும் என கடவுள் எண்ணம் கொண்டிருந்தார் என்பதை அப்படியே அறிந்திருந்தார். (நீதிமொழிகள் 8:30, 31, NW) ஆனால் இப்போது, பாவமும் அபூரணமும் அவர்களை என்னவாக ஆக்கிவிட்டது என்பதை அவர் நேரடியாகவே கண்டார். மக்களின் அபூரணங்களையும் பலவீனங்களையும் தினமும் அவர் பார்த்தார், அவற்றை எதிர்ப்பட வேண்டியிருந்தது. அதுவே அவருக்குச் சோதனையாக இருந்திருக்கவேண்டும்.—மத்தேயு 9:36; மாற்கு 6:34.
மற்றவர்களின் உபத்திரவங்களை மட்டுமின்றி, தன்னுடைய உபத்திரவத்தையும் அவர் அனுபவித்தார். (எபிரெயர் 5:7, 8) ஆனால் பரிபூரண ஆவிக்குரிய கண்பார்வையைக் கொண்டு, அவர் அவற்றிற்கும் அப்பால் உத்தமமுள்ள வாழ்க்கைப்போக்கின் பரிசாக தாம் அழிவற்ற வாழ்க்கைக்கு உயர்த்தப்படவிருப்பதைக் கண்டார். பின்பு, மேசியானிய ராஜாவாக, மனிதவர்க்கத்தை அதனுடைய அவலமான நிலையிலிருந்து யெகோவா ஆதியில் நோக்கம் கொண்டதுபோலவே மறுபடியும் பரிபூரண நிலைக்கு உயர்த்தும் சிலாக்கியத்தை அவர் உடையவராயிருப்பார். இந்தக் கண்ணுக்குத் தெரியாத எதிர்கால வாய்ப்பு வளங்களின் பேரில் தம்முடைய பார்வையை ஊன்றவைத்ததானது, நாள்தோறும் உபத்திரவங்களைக் கண்டபோதிலும் தெய்வீக சேவையில் மகிழ்ச்சியை நிலைநிறுத்திக்கொள்ள அவருக்கு உதவியது. பிற்பாடு பவுல் எழுதினார்: “அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.”—எபிரெயர் 12:2.
இக்கட்டுகளையும் சோதனைக்குரிய சூழ்நிலைமைகளையும் தமக்கு மனமுறிவை உண்டாக்க, வழிவிலகிச்செல்ல அல்லது விசுவாசத்தில் தள்ளாட அவர் என்றுமே அனுமதிக்கவில்லை. அவருடைய சீஷர்களாக நாமும் அவருடைய உயரிய முன்மாதிரியை நெருங்கப் பின்பற்றவேண்டும்.—மத்தேயு 16:24.
புலப்படாத நித்திய காரியங்களின்மீது பார்வையை ஊன்றுக!
இயேசு சகித்திருக்க சாத்தியமாக்கியது எது என்று பவுல் கூறுகையில், நமது வாழ்க்கைப்போக்கையும்கூட அவர் சுட்டிக்காட்டினார்; அவர் எழுதினார்: “விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி [“உற்று நோக்கி,” NW], நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்.” (எபிரெயர் 12:1) ஆம், கிறிஸ்தவ வாழ்க்கைப்போக்கில் வெற்றிகரமாகவும் சந்தோஷகரமாகவும் ஓடுவதற்காக, நம் கண்ணுக்குமுன் உடனே தென்படும் காரியங்களுக்கு அப்பால் நாம் பார்க்கவேண்டும். ஆனால், நாம் எப்படி இயேசுவை “உற்று நோக்கி” இருப்பது, மற்றும் அது நமக்கு என்ன செய்யும்?
உதாரணமாக, 1914-ல் கடவுளுடைய ராஜ்யத்தின் அரசராக இயேசு முடிசூட்டப்பட்டார், அவர் பரலோகத்திலிருந்து அரசாளுகிறார். ஐயத்திற்கிடமின்றி, இதெல்லாம் நம்முடைய ஊனக்கண்களுக்குத் தெரியாது. ஆயினும், நாம் இயேசுவை “உற்று நோக்கி” இருப்போமானால், அவர் இந்தப் பொல்லாத ஒழுங்குமுறைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும், சாத்தானையும் அவனுடைய பேய் கூட்டத்தையும் செயலற்ற நிலையில் பிணைத்து அகற்றுவதற்கும் தயார்நிலையில் இருக்கிறார் என்பதைக் காண்பதற்கு நமது ஆவிக்குரிய கண்பார்வை நமக்கு உதவும். அதற்கும் சற்று அப்பால் பார்த்தால், நமது ஆவிக்குரிய பார்வையானது பிரமாதமான புதிய உலகை காண்பிக்கிறது, அதில் ‘இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயிருக்கும்.’—வெளிப்படுத்துதல் 19:11-16; 20:1-3; 21:4.
எனவேதான், ஒருவேளை நாம் தினமும் எதிர்ப்படவிருக்கும் தற்காலிக உபத்திரவங்களால் பாரமாக்கப்படுவதற்கு மாறாக, ஏன் நாம் நித்திய காரியங்களின் பேரில் நமது பார்வையை ஊன்றவைக்கக்கூடாது? விசுவாசம் என்னும் கண்களைக் கொண்டு, இந்த மாசுபடுத்தப்பட்ட உலகிலுள்ள நோய்களுக்கும் பேராசைகளுக்கும் அப்பால் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான, கரிசனையான மக்கள் நிறைந்திருக்கும் ஒரு பரதீஸை ஏன் நாம் பார்க்கக்கூடாது? நமது சரீரத்திற்குரிய மற்றும் ஆவிக்குரிய குறைபாடுகளுக்கு அப்பால் இயேசுவின் கிரய பலியின் பலனாக, என்றென்றும் அவற்றிலிருந்து விடுபட்டிருக்கும் நிலையில் நம்மை வைத்து ஏன் பார்க்கக்கூடாது? போரும், குற்றச்செயலும், வன்முறையும் பின்விட்டுச்செல்கிற படுகொலைகளுக்கு அப்பால் புதிதாக உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள் யெகோவாவின் சமாதானத்திலும் நீதியிலும் போதிக்கப்படுவதை ஏன் நாம் பார்க்கக்கூடாது?
கூடுதலாக, ராஜ்யம் கண்ணுக்குத் தெரியாதிருந்தும், கடவுளுடைய மக்களின் மத்தியில் ஒற்றுமை, அன்பு, சகோதர பாசம், ஆவிக்குரிய செழுமை ஆகியவற்றை ஏற்கெனவே சாதித்துவிட்ட அதன்மீது நமது ஆவிக்குரிய கண்பார்வையை ஊன்றவைப்பதையும்கூட இயேசுவை “உற்று நோக்கி” இருப்பது உட்படுத்துகிறது. தெய்வீக போதனையால் ஒன்றுபட்டிருத்தல் என்ற ஆங்கில வீடியோவை பார்த்தப்பின், ஜெர்மனியிலுள்ள ஒரு கிறிஸ்தவ சகோதரி எழுதினார்: “இத்தனை அநேக கிறிஸ்தவ சகோதரர்களும் சகோதரிகளும் உலகம் முழுவதிலும் யெகோவாவை இதே தருணத்தில் உத்தமத்தோடு சேவிக்கிறார்கள்—இதை அவர்கள் வெளிப்படையான எதிர்ப்பின் மத்தியிலும் செய்கிறார்கள்—என்பதை என் மனதில் வைப்பதற்கு இந்த வீடியோ அதிகம் அதிகமாக உதவியது. வன்முறையாலும் பகைமையாலும் ஆன ஓர் உலகில் நமது சகோதர ஒற்றுமை எவ்வளவு அருமையானது!”
உங்கள் பக்கத்தில் யெகோவாவும், இயேசு கிறிஸ்துவும், விசுவாசமுள்ள தேவதூதர்களும், லட்சக்கணக்கான உடன் கிறிஸ்தவர்களும் நிற்பதை நீங்கள் ‘பார்க்கவும்’ செய்கிறீர்களா? அப்படி செய்கிறீர்களானால், ‘உலகக்கவலையைக்’ குறித்து அளவுக்கதிகமாகக் கவலைப்படமாட்டீர்கள், அது உங்களை மனத்தளர்வடைந்த நிலையில் ஸ்தம்பிக்கச்செய்து, கிறிஸ்தவ சேவையில் ‘பலனற்றுப் போகும்படி’ செய்யும். (மத்தேயு 13:22) ஆகவே, கடவுளுடைய ஸ்தாபிக்கப்பட்ட ராஜ்யத்திலும், அதனுடைய தற்போதைய மற்றும் எதிர்கால ஆசீர்வாதங்களின் பேரில் உங்களுடைய ஆவிக்குரிய கண்பார்வையை ஊன்றச்செய்வதன் மூலம் இயேசுவை “உற்று நோக்கி” இருங்கள்.
கண்ணுக்குத் தெரியாததைக் காண வாழுதல்!
கடவுளுடைய நித்திய புதிய உலகிற்கும் இன்றைய நொறுங்கிக்கொண்டிருக்கும் பழைய உலகிற்கும் இடையே உள்ள நேரெதிரான வித்தியாசத்தைப் பார்க்கையில், இன்று நாம் விசுவாசம் என்னும் கண்களால் மாத்திரம் காணக்கூடிய காரியங்களை நேரடியாகவே காண உயிரோடிருக்க தகுதியானவர்களாக கருதப்படும் வகையில் நம்மைநாமே நடத்திக்கொள்ள தூண்டப்படவேண்டும். உயிர்த்தெழுப்பப்படும் பெரும் எண்ணிக்கையினர், மரித்தபோது இருந்த உலகத்திலிருந்து முற்றும் வித்தியாசமான ஒரு நீதியான புதிய பரதீஸ் பூமியைக் காண்பதற்காக எழுப்பப்படுகையில் தாங்கள் காண்பதை நம்பமுடியாதவர்களாக இருப்பார்கள். அவர்களை வரவேற்பதற்கும் கடவுள் செய்திருக்கும் காரியங்களை அவர்களுக்கு விளக்குவதற்கும் நாம் உயிரோடு இருப்பதன் மகிழ்ச்சியைக் கற்பனை செய்துபாருங்கள்!—யோவேல் 2:21-27-ஐ ஒப்பிடுக.
ஆம், ஆவிக்குரிய நல்ல கண்பார்வை எவ்வளவு அருமையானது, மற்றும் அதைக் கூர்மையாக வைத்திருப்பது எவ்வளவு இன்றியமையாதது! ஒழுங்காகத் தனிப்பட்ட பைபிள் படிப்பில் ஆழ்ந்திருத்தல், கிறிஸ்தவ கூட்டங்களுக்கு ஆஜராதல், பைபிளை அடிப்படையாகக்கொண்ட நமது நம்பிக்கையைக்குறித்து மற்றவர்களிடத்தில் பேசுதல், அனைத்துக்கும் மேலாக தெய்வீக வழிநடத்துதலுக்காக ஜெபித்தல் ஆகியவற்றை செய்வதன் மூலம் நாம் இதைச் செய்யலாம். இது நமது ஆவிக்குரிய கண்பார்வையைக் கூர்மையாகவும் உன்னிப்பாகவும் வைத்திருக்கும், நாம் காண்பனவற்றிற்கும் அப்பால் பார்க்க வழிவகுக்கும்!