உங்களுக்கு நினைவிருக்கிறதா?
காவற்கோபுர பத்திரிகையின் சமீபத்திய இதழ்களை நடைமுறையில் உங்களுக்கு மதிப்புள்ள ஒன்றாக நீங்கள் கண்டிருக்கிறீர்களா? அப்படியானால் பின்வரும் இந்தக் கேள்விகளைக்கொண்டு ஏன் உங்கள் ஞாபக சக்தியை சோதித்துப் பார்க்கக்கூடாது:
◻ அம்மோனியர்களின் வீழ்ச்சியைக் குறித்ததில் என்ன பாடத்தை நாம் கற்றுக்கொள்ளலாம்? (செப்பனியா 2:9, 10)
யெகோவாவின் தயவுக்குக் கைம்மாறாகப் பகைமை காட்டுவதை யெகோவா அற்பமாகக் கருதுகிறதில்லை, பூர்வ காலங்களில் செய்ததைப்போல், தாம் குறித்திருக்கும் காலத்தில் அவர் நடவடிக்கை எடுப்பார். (சங்கீதம் 2:6-12-ஐ ஒப்பிடுக.)—12/15, பக்கம் 10.
◻ எந்த வழிகளில் கிறிஸ்தவர்கள் சமாதானத்தைப் பெற்றிருக்கின்றனர்?
முதலாவதாக, “[அவர்களுடைய] கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம்” பெற்றிருக்கிறார்கள். (ரோமர் 5:1) இரண்டாவதாக, ‘முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமுள்ளதாயும்’ இருக்கும் ‘பரத்திலிருந்து வருகிற ஞானத்தை’ வளர்த்துக்கொள்வதன் மூலமாக அவர்களுக்குள்ளாகவே சமாதானத்தைப் பெற்றிருக்கிறார்கள். (யாக்கோபு 3:17)—1/1, பக்கம் 11.
◻ கடவுளுடைய வார்த்தை என்ன சில காரியங்களோடு ஒப்பிட்டு பேசப்படுகிறது, இது எவ்வாறு நமக்கு பிரயோஜனமுள்ளதாயிருக்கிறது?
கடவுளுடைய வார்த்தை ஊட்டச்சத்துள்ள பாலுக்கும், பலமான ஆகாரத்திற்கும், புத்துணர்ச்சியளிக்கும் மற்றும் தூய்மையாக்கும் தண்ணீருக்கும், ஒரு கண்ணாடிக்கும், கூர்மையான ஒரு பட்டயத்திற்கும் ஒப்பிடப்படுகிறது. இந்தப் பதங்கள் எடுத்துக்காட்டும் அர்த்தங்களை விளங்கிக்கொள்வது பைபிளை திறம்பட்ட விதத்தில் பயன்படுத்த ஒரு ஊழியருக்கு உதவுகிறது.—1/1, பக்கம் 29.
◻ சமநிலைப்படுத்தப்பட்ட உலகப்பிரகாரமான கல்வி எதைச் செய்வதற்கு நமக்கு உதவி செய்ய வேண்டும்?
நன்றாக வாசிப்பதற்கு, தெளிவாக எழுதுவதற்கு, மனப்பிரகாரமாகவும் ஒழுக்கப்பிரகாரமாகவும் வளருவதற்கு, அன்றாட வாழ்க்கைக்கும் திறம்பட்ட பரிசுத்த சேவைக்கும் தேவைப்படும் நடைமுறையான பயிற்சியைப் பெற்றுகொள்வதற்கு உதவி செய்ய வேண்டும்.—2/1. பக்கம் 10.
◻ கல்வியைக் குறித்து என்ன மதிப்புள்ள பாடத்தை இயேசுவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்?
கல்வி, நம்முடைய மகிமைக்காக அல்லாமல், மிகப் பெரிய கல்விபுகட்டுபவராகிய யெகோவா தேவனுக்கு துதியைக் கொண்டுவருவதற்கு பயன்படுத்தப்பட வேண்டும். (யோவான் 7:18)—2/1, பக்கம் 10.
◻ கடவுளுடைய ராஜ்யம் என்பது என்ன?
அந்த ராஜ்யம் கடவுளால் நிறுவப்பட்ட பரலோக அரசாங்கமாகக் கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்றி, பாவம் மற்றும் மரணத்தின் பாதிப்புகளை நீக்கி, பூமியில் நீதியான நிலைமைகளைத் திரும்பக் கொண்டுவருவதாக உள்ளது. (தானியேல் 2:44; வெளிப்படுத்துதல் 11:15; 12:10)—2/1, பக்கம் 16.
◻ வன்முறைக்கு ஒரு நிரந்தரமான முடிவை கொண்டுவரத் தேவைப்படும் கல்வியை எவ்வாறு பைபிள் அளிக்கிறது?
தம்முடைய வார்த்தையாகிய பைபிளின் மூலமாக, சமாதானத்தை நேசிப்பவர்களாகவும் நீதிமான்களாகவும் இருக்க ஜனங்களுக்கு யெகோவா கற்றுக்கொடுக்கிறார். (ஏசாயா 48:17, 18) மனிதனின் இருதயத்திற்குள் ஊடுருவி, அதைத் தொட்டு அவருடைய யோசனையையும் நடத்தையையும் மாற்றும் வல்லமை கடவுளுடைய வார்த்தைக்கு இருக்கிறது. (எபிரெயர் 4:12)—2/15, பக்கம் 6.
◻ எந்த விதத்தில் ஏசாயா அதிகாரம் 35-ல் உள்ள தீர்க்கதரிசனம் மூன்று நிறைவேற்றங்களைக் கொண்டிருப்பதாக சொல்லப்படலாம்?
பொ.ச.மு. 537-ல் பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து யூதர்கள் திரும்பியபோது ஏசாயாவின் தீர்க்கதரிசனம் முதலாம் நிறைவேற்றத்தைக் கொண்டிருந்தது. மகா பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து ஆவிக்குரிய இஸ்ரவேலர் விடுவிக்கப்பட்டது முதற்கொண்டு அது இன்று ஆவிக்குரிய விதத்தில் நிறைவேறிவருகிறது. பூமியிலே சொல்லர்த்தமுள்ள பரதீஸான நிலைமைகளைக் குறித்த பைபிளின் உறுதிமொழியோடு சம்பந்தப்பட்ட ஒரு மூன்றாவது நிறைவேற்றத்தை அது கொண்டிருக்கும். (சங்கீதம் 37:10, 11; வெளிப்படுத்துதல் 21:4, 5)—2/15, பக்கம் 17.
◻ மனிதர்களின்பேரில் கடவுளுக்கிருக்கும் தனிப்பட்ட அக்கறை, எவ்வாறு தம்முடைய குமாரனாகிய இயேசுவால் செய்யப்பட்ட அற்புதங்களில் மெய்ப்பித்துக் காட்டப்பட்டது?
“பிதாவானவர் செய்யக் . . . காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்” என்ற காரணத்தினால், இயேசுவின் இரக்கம் தம்முடைய ஒவ்வொரு ஊழியரின்மேலும் யெகோவாவிற்கு இருக்கும் அன்பான அக்கறையை மனதைத்தொடும் விதத்தில் சித்தரிக்கிறது. (யோவான் 5:19)—3/1, பக்கம் 5.
◻ யோவான் 5:28, 29, NW-ல் ‘ஞாபகார்த்தக் கல்லறைகள்’ என்ற இயேசுவின் பதம் எதை அர்த்தப்படுத்துகிறது?
இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் நிமியோன் [mne·mei’on (ஞாபகார்த்த கல்லறை)] என்ற கிரேக்க வார்த்தை, மரித்துப்போன நபரின் பதிவை, அவனுடைய அல்லது அவளுடைய சுதந்தரிக்கப்பட்ட போக்கும் முழுமையான ஞாபகமும் உட்பட, யெகோவா ஞாபகத்தில் வைத்திருக்கிறார் என்பதை அர்த்தப்படுத்துகிறது. தனிப்பட்ட விதத்தில் மனிதர்கள்மீது கடவுள் அக்கறை கொண்டிருக்கிறார் என்பதற்கு இது பலமான அத்தாட்சியைக் கொடுக்கிறது!—3/1, பக்கம் 6.
◻ செப்பனியாவின் தீர்க்கதரிசனத்தில் எந்த எச்சரிக்கையூட்டும் செய்தி நமக்கு நடைமுறையில் உதவுவதாக இருக்கிறது?
நம்முடைய இருதயங்களில் சந்தேகங்களை வளரவிட அனுமதிப்பதற்கும் யெகோவாவின் நாள் வருவதை நம்முடைய மனங்களில் தள்ளிப்போடுவதற்கும் இது காலமல்ல. மேலுமாக, அசட்டை மனப்பான்மையின் தளர்வூட்டும் விளைவுகளைக் குறித்து நாம் விழிப்புள்ளவர்களாயிருக்க வேண்டும். (செப்பனியா 1:12, 13; 3:8)—3/1, பக்கம் 17.
◻ கடவுளுக்கு உண்மைப் பற்றுறுதியுடனிருப்பது ஏன் ஒரு சவாலாக இருக்கிறது?
ஏனென்றால் உண்மைப் பற்றுறுதி நாம் நம்முடைய பெற்றோர்களிடமிருந்து சுதந்தரித்திருக்கும் சுயநல மனச்சாய்வுகளோடு மோதுகிறது. (ஆதியாகமம் 8:21; ரோமர் 7:19) அதிமுக்கியமாக, கடவுளுக்கு உண்மைப் பற்றுறுதியற்றவர்களாக ஆக்கும் தீர்மானத்தோடு சாத்தானும் அவனுடைய பேய்களும் இருக்கின்றனர். (எபேசியர் 6:12; 1 பேதுரு 5:8)—3/15, பக்கம் 10.
◻ உண்மைப் பற்றுறுதியின் சவாலை எந்த நான்கு அம்சங்களில் நாம் எதிர்ப்பட வேண்டும், அவ்வாறு செய்வதற்கு எது நமக்கு உதவும்?
யெகோவாவிற்கு, அவருடைய அமைப்பிற்கு, சபைக்கு, நம்முடைய திருமணத் துணைவருக்கு உண்மைப் பற்றுறுதியைக் காண்பிப்பதே நான்கு அம்சங்கள். உண்மைப் பற்றுறுதியின் சவால் யெகோவாவின் பேரரசுரிமையை நியாயநிரூபணம் செய்வதோடு நெருக்கமான தொடர்புடையதாயிருக்கிறது என்பதைப் போற்றுவதுதான் இந்தச் சவால்களை எதிர்ப்படுவதற்கான ஒரு உதவியாகும்.—3/15, பக்கம் 20.
◻ உடன்படிக்கைப் பெட்டியை மீண்டும் எருசலேமுக்கு கொண்டுவர முயற்சி செய்ததில் தாவீதின் அனுபவத்திலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? (2 சாமுவேல் 6:2-7)
பெட்டியை தூக்கிச்செல்வதன்பேரில் யெகோவா கொடுத்திருந்த கட்டளைகளை தாவீது புறக்கணித்தார், இது பெருந்துன்பத்தை வரவழைத்தது. பாடம் என்னவென்றால், யெகோவாவின் தெளிவான கட்டளைகளை நாம் புறக்கணிக்கும்போது விளைவடையும் பிரச்சினைகளுக்கு அவரை குற்றம்சாட்டக்கூடாது. (நீதிமொழிகள் 19:3)—4/1, பக்கங்கள் 28, 29.