உண்மைப் பற்றுறுதியுள்ளோரைப் பாருங்கள்!
“யெகோவாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருப்பர், ஏனெனில் நீர் ஒருவரே உண்மைப் பற்றுறுதியுள்ளவர்.”—வெளிப்படுத்துதல் 15:4, NW.
1. தனக்கு முன் பதவி வகித்தவராகிய சி. டி. ரஸலின் உண்மைப் பற்றுறுதியைக் குறித்து ஜே. எஃப். ரதர்ஃபர்ட் என்ன அத்தாட்சியைக் கொடுத்தார்?
சி.டி. ரஸலுக்குப் பிறகு 1917-ல் உவாட்ச் டவர் சொஸைட்டியின் பிரஸிடென்டாக ஆன ஜோசஃப் எஃப். ரதர்ஃபர்ட், ரஸலின் சவ-அடக்க நிகழ்ச்சியின்போது இவ்வாறு சொல்வதன் மூலம் தன் கருத்துரையை ஆரம்பித்தார்: “சார்ல்ஸ் டேஸ் ரஸல் கடவுளுக்கு உண்மைப் பற்றுறுதியுடனிருந்தார், இயேசு கிறிஸ்துவிற்கு உண்மைப் பற்றுறுதியுடனிருந்தார், மேசியானிய ராஜ்யத்திற்குரிய அக்கறைகளுக்கு உண்மைப் பற்றுறுதியுடனிருந்தார். அவர் உள்ளத்தின் ஆழம்வரையாக உண்மைப் பற்றுறுதியுடனிருந்தார்—ஆம், மரணம்வரையாக—உண்மைப் பற்றுறுதியுடனிருந்தார்.” உண்மையாகவே, யெகோவா தேவனின் உண்மையுள்ள ஊழியக்காரர் ஒருவருக்கு கொடுக்கும் ஒரு நல்ல புகழுரையாக அது இருந்தது. ஒருவர் உண்மைப் பற்றுறுதியின் சவாலில் வெற்றிபெற்றார் என்றும் அவர் உண்மைப் பற்றுறுதியுடனிருந்தார்—உள்ளத்தின் ஆழம்வரையாக உண்மைப் பற்றுறுதியுடனிருந்தார்—என்றும் சொல்வதைவிட ஒரு சிறந்த புகழுரையை எந்த நபராயிருந்தாலும் அவருக்கு நாம் கொடுக்க முடியாது.
2, 3. (அ) ஏன் உண்மைப் பற்றுறுதி ஒரு சவாலாயிருக்கிறது? (ஆ) உண்மைப் பற்றுறுதியுடன் இருப்பதற்கான அவர்களுடைய முயற்சியில் உண்மைக் கிறிஸ்தவர்களுக்கு எதிராக எவருங்கூட அணிவகுத்து நிற்கின்றனர்?
2 உண்மைப் பற்றுறுதி ஒரு சவாலாயிருக்கிறது. ஏன்? ஏனெனில் அது சுயநலத்தோடு மோதுகிறது. கடவுளுக்கு உண்மைப் பற்றுறுதியற்றவர்களாய் இருப்பவர்களில் பிரதானமானவர்கள் கிறிஸ்தவமண்டல குருமார்கள். பின்பு, திருமண உறவில் இன்று காணப்படுவதைப் போல விரிவாக பரவியிருக்கும் உண்மைப் பற்றுறுதியற்ற தன்மை எப்போதுமே இருந்ததில்லை. விபசாரம் சர்வசாதாரணமாயிருக்கிறது. உண்மைப் பற்றுறுதியற்ற தன்மை வியாபார உலகத்திலும்கூட மிதமிஞ்சியிருக்கிறது. இதைக் குறித்து, நாம் சொல்லப்படுகிறோம்: “அநேக நிர்வாகிகளும் வாழ்க்கைத்தொழிலாளர்களும் . . . முட்டாள்களும் ஏமாளிகளும்தான் தங்களுடைய கம்பெனிகளுக்கு இன்று உண்மைப் பற்றுறுதியுள்ளவர்களாக இருக்கின்றனர் என்று நம்புகின்றனர்.” “மிகவும் உண்மைப் பற்றுறுதியுடன்” இருக்கும் ஜனங்கள் ஏளனமாகக் கருதப்படுகின்றனர். “உன்னுடைய முதலும் ஒரே உண்மைப் பற்றுறுதியும் உன்னிடமே இருக்கவேண்டும்” என்பதாக நிர்வாக ஆலோசனை அளிக்கும் மற்றும் அதிகாரிகளைத் தெரிவு செய்யும் ஒரு ஸ்தாபனத்தின் தலைவர் கூறினார். எனினும், தன்னிடமே உண்மைப் பற்றுறுதி காண்பிப்பதைக் குறித்து பேசுவது அந்த வார்த்தையின் அர்த்தத்தை கறைப்படுத்துவதாய் இருக்கும். மீகா 7:2-ல் (NW) குறிப்பிடப்பட்டுள்ளதை இது நமக்கு நினைவுபடுத்துகிறது: “உண்மைப் பற்றுறுதியுள்ளவன் பூமியிலிருந்து அழிந்து போனான்.”
3 இன்னுமதிக குறிப்பிடத்தக்க அளவில், சாத்தானும் அவனைச் சேர்ந்த பேய்களும் நம்மை கடவுளுக்கு உண்மைப் பற்றுறுதியற்றவர்களாக்குவதன் தீர்மானத்தோடு நமக்கு எதிராக அணிவகுத்து நிற்கின்றனர். ஆகவேதான் எபேசியர் 6:12-ல் கிறிஸ்தவர்களுக்கு இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது: “மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.” ஆம், “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்,” என்ற இந்த அறிவுரைக்கு நாம் செவிசாய்க்க வேண்டும்.—1 பேதுரு 5:8.
4. உண்மைப் பற்றுறுதியுடன் இருப்பதை எந்த மனப்போக்கு கடினமாக்குகிறது?
4 ஆதியாகமம் 8:21-ல் குறிப்பிடப்பட்டிருப்பதுபோல், உண்மைப் பற்றுறுதி காண்பிப்பதைக் கடினமாக்கும் மற்றொன்று நம்முடைய பெற்றோர்களிடமிருந்து நாம் சுதந்தரித்திருக்கும் தன்னல மனப்போக்கு ஆகும்: “மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது”—தன்னலமுள்ளதாயுமிருக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல் தனக்கிருந்ததாக ஒப்புக்கொண்ட அதே பிரச்சினையை நாம் அனைவருமே கொண்டிருக்கிறோம்: “ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்.”—ரோமர் 7:19.
உண்மைப் பற்றுறுதி தனிச்சிறப்புடைய ஒன்று
5, 6. உண்மைப் பற்றுறுதி என்றால் என்ன, அதற்கு என்ன சொற்பொருள் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதைக் குறித்து என்ன சொல்லப்படலாம்?
5 “உண்மைப் பற்றுறுதி” மிகவும் தனிச்சிறப்புடைய ஒரு வார்த்தை ஆகும். வேதாகமத்தின் பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) என்ற புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “எபிரெய மற்றும் கிரேக்க வார்த்தைகளுடைய முழு அர்த்தத்தையும் சரியாகவே எடுத்துக்காட்டும் வார்த்தைகள் எதுவுமிருப்பதாக தெரியவில்லை, ஆனால் ‘உண்மைப் பற்றுறுதி’ என்ற வார்த்தை, தேவபக்தி மற்றும் உண்மைத்தன்மை ஆகிய கருத்தை உட்படுத்தியதாக, கடவுளோடும் அவருடைய ஊழியத்தோடும் சம்பந்தப்படுத்தி பேசப்படும்போது, ஓரளவு சரியான ஒரு அர்த்தத்தை கொடுப்பதற்கு போதுமானதாயிருக்கிறது.”a ‘உண்மைப் பற்றுறுதியை’ குறித்து காவற்கோபுரம் ஒருமுறை குறிப்பிட்டது: ‘உண்மையாயிருத்தல், கடமை, அன்பு, பொறுப்பு, பற்றுறுதி. இந்த வார்த்தைகள் எதைப் பொதுவாக கொண்டிருக்கின்றன? இவை உண்மைப் பற்றுறுதியின் பல்வேறு அம்சங்கள்.’ ஆம், உண்மைப் பற்றுறுதியின் வித்தியாசமான அம்சங்களாக உண்மையிலேயே இருக்கும் மிகப் பல நற்குணங்கள் இருக்கின்றன. உண்மைப் பற்றுறுதியும் நீதியும் எவ்வளவு அடிக்கடி வேதவாக்கியங்களில் இணைத்துப் பேசப்படுகின்றன என்பது உண்மையிலேயே கவனத்திற்குரிய ஒன்று.
6 பின்வரும் சொற்பொருள் விளக்கங்களும் உதவியாயிருக்கும்: ‘உண்மைப் பற்றுறுதி என்பது உறுதியற்றத் தன்மையிலிருந்தோ சோதனையிலிருந்தோ பாதுகாக்கப்பட்டிருக்கும் ஒரு நீடிக்கக்கூடிய, நம்பத்தகுந்த உண்மைத்தன்மையையும் பற்றுறுதியையும் ஒருவேளை குறிப்பிடலாம்.’ ‘உண்மைப் பற்றுறுதி ஒருவருடைய வாக்குறுதிக்கு உண்மைத்தன்மை காண்பிப்பதை அர்த்தப்படுத்தலாம் அல்லது தான் அதற்கு ஒழுக்கரீதியில் கடமைப்பட்டிருப்பதாக உணரும் ஒரு அமைப்பிற்கு அல்லது நியமத்திற்கு தொடர்ந்து பற்றுறுதியுடன் இருப்பதை அர்த்தப்படுத்தும்; இந்தப் பதம் பற்றிக்கொண்டிருப்பதை மட்டும் குறிப்பிடாமல் பற்றிக்கொண்டிருப்பதிலிருந்து கவர்ந்திழுக்கப்பட்டு, விலகிப்போகும்படி செய்வதை எதிர்ப்பதையும் அர்த்தப்படுத்தும்.’ இவ்வாறு, சோதனைகள், எதிர்ப்புகள் மற்றும் துன்புறுத்துதல்கள் மத்தியிலும் தொடர்ந்து உண்மையுடன் இருக்கும் ஜனங்கள் ‘உண்மைப் பற்றுறுதியுள்ளவர்கள்’ என்று அழைக்கப்படுவதற்கு தகுதியுள்ளவர்கள்.
7. உண்மைப் பற்றுறுதியையும் உண்மைத்தன்மையையும் எவ்வாறு வித்தியாசப்படுத்தலாம்?
7 எனினும், இதன் சம்பந்தமாக, உண்மைப் பற்றுறுதிக்கும் உண்மைத்தன்மைக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை உதாரணம் கொடுத்து விளக்குவது நல்லதாயிருக்கும். மேற்கு ஐக்கிய மாகாணங்களில், சுமார் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் வெடித்துக்கிளம்பும் ஒரு உஷ்ண நீரூற்று இருக்கிறது. அது அவ்வளவு காலந்தவறாததாய் இருப்பதன் காரணமாக நீண்டகால உண்மைத்தன்மையுடையது என்பதாக அறியப்படுகிறது. சந்திரனைப்போன்ற உயிரற்ற பொருட்களை உண்மைத்தன்மையுள்ளவை என்பதாக பைபிள் சொல்கிறது, ஏனெனில் அவை நம்பத்தகுந்தவை. சங்கீதம் 89:37 (NW) சந்திரனை “ஆகாயமண்டலத்தின் ஒரு உண்மையுள்ள சாட்சி” என்பதாக சொல்கிறது. கடவுளுடைய வார்த்தைகள் உண்மையுள்ளவையாயிருப்பதாக சொல்லப்படுகின்றன. வெளிப்படுத்துதல் 21:5 சொல்கிறது: “சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும் அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.” இவையெல்லாம் உண்மையுள்ளவையாக, நம்பத்தகுந்தவையாக இருக்கின்றன, ஆனால் எந்த ஒரு பிணைப்பையோ அல்லது உண்மைப் பற்றுதியைப்போன்ற ஒழுக்க குணாதிசயங்களையோ கொண்டிருக்க ஆற்றல் அற்றவையாயிருக்கின்றன.
யெகோவா, மிகச் சிறந்த உண்மைப் பற்றுறுதியுள்ளவர்
8. உண்மைப் பற்றுறுதியின் மிகச் சிறந்த முன்மாதிரியை எந்த வேதப்பூர்வ அத்தாட்சி அடையாளம் காட்டுகிறது?
8 எந்த விதமான சந்தேகமுமின்றி, யெகோவா தேவன் உண்மைப் பற்றுறுதியின் மிகச் சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார். மனிதர்கள் நித்திய ஜீவனை அடையும்படி தம் குமாரனையும்கூட கொடுத்தவராக, யெகோவா மனித குலத்திற்கு உண்மைப் பற்றுறுதியுள்ளவராயிருக்கிறார். (யோவான் 3:16) எரேமியா 3:12-ல் நாம் வாசிக்கிறோம்: “சீர்கெட்ட இஸ்ரவேலே, திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள்மேல் என் கோபத்தை இறங்கப்பண்ணுவதில்லை; நான் கிருபையுள்ளவரென்று [“உண்மைப் பற்றுறுதியுள்ளவரென்று,” NW] கர்த்தர் சொல்லுகிறார்.” யெகோவாவின் உண்மைப் பற்றுறுதிக்கு கூடுதலாக சாட்சிபகருவது வெளிப்படுத்துதல் 16:5-ல் உள்ள வார்த்தைகள்: “இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய [“உண்மைப் பற்றுறுதியுள்ளவருமாகிய,” NW] தேவரீர் இப்படி நியாயந்தீர்க்க நீதியுள்ளவராயிருக்கிறீர்.” பின்பு மறுபடியுமாக, சங்கீதம் 145:17-ல் நாம் சொல்லப்படுகிறோம்: “கர்த்தர் தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவருமாயிருக்கிறார் [“உண்மைப் பற்றுறுதியுள்ளவராயிருக்கிறார்,” NW].” உண்மையில், யெகோவா தம்முடைய உண்மைப் பற்றுறுதியில் அவ்வளவு முதன்மையானவராக இருப்பதன் காரணமாக வெளிப்படுத்துதல் 15:4 (NW) இவ்வாறு குறிப்பிடுகிறது: “யெகோவாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருப்பர், ஏனெனில் நீர் ஒருவரே உண்மைப் பற்றுறுதியுள்ளவர்.” யெகோவா தேவன் உச்ச உயர்நிலையில் உண்மைப் பற்றுறுதியுள்ளவர்.
9, 10. இஸ்ரவேல் தேசத்தாரை கையாளும்போது உண்மைப் பற்றுறுதியின் என்ன பதிவை யெகோவா ஏற்படுத்தினார்?
9 குறிப்பாக இஸ்ரவேல் தேசத்தின் சரித்திரம் தம்முடைய ஜனங்களின்பேரில் யெகோவா காண்பித்த உண்மைப் பற்றுறுதியைக் குறித்து ஏராளமான சான்றுகளைக் கொண்டிருக்கிறது. நியாயாதிபதிகளின் நாட்களில், மறுபடியும் மறுபடியுமாக இஸ்ரவேல் உண்மை வணக்கத்திலிருந்து விலகிச் சென்றது, ஆனால் யெகோவா மறுபடியும் மறுபடியுமாக விசனப்பட்டு அவர்களை இரட்சித்தார். (நியாயாதிபதிகள் 2:15-22) இஸ்ரவேலுக்கு ராஜாக்கள் இருந்த அந்த ஐந்து நூற்றாண்டுகள் முழுமையாகவும் அந்தத் தேசத்திற்கு யெகோவா உண்மைப் பற்றுறுதியைக் காண்பித்தார்.
10 2 நாளாகமம் 36:15, 16-ல் குறிப்பிடப்பட்டிருப்பதை போல, யெகோவாவின் உண்மைப் பற்றுறுதி அவரை தம்முடைய ஜனங்களோடு பொறுமையாயிருக்கச் செய்தது: “அவர்களுடைய பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தையும் தமது வாசஸ்தலத்தையும் காப்பதற்கான இரக்கமுள்ளவராயிருந்தபடியால், அவர்களிடத்துக்குத் தம்முடைய ஸ்தானாபதிகளை ஏற்கெனவே அனுப்பினார். ஆனாலும் அவர்கள் தேவனுடைய ஸ்தானாபதிகளைப் பரியாசம்பண்ணி, அவருடைய வார்த்தைகளை அசட்டைசெய்து, அவருடைய தீர்க்கதரிசிகளை நிந்தித்தபடியால், கர்த்தருடைய உக்கிரம் அவருடைய ஜனத்தின்மேல் மூண்டது; சகாயமில்லாமல் போயிற்று.”
11. யெகோவாவின் உண்மைப் பற்றுறுதி என்ன உறுதியை அல்லது ஆறுதலை நமக்கு கொடுக்கிறது?
11 யெகோவா உச்ச உயர்நிலைக்குரிய உண்மைப் பற்றுறுதியுள்ளவராயிருப்பதன் காரணமாக, ரோமர் 8:38, 39-ல் பதிவு செய்யப்பட்டிருப்பதை அப்போஸ்தலனாகிய பவுலினால் எழுத முடிந்தது: “மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.” ஆம், யெகோவா நமக்கு உறுதியளிக்கிறார்: “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.” (எபிரெயர் 13:5) யெகோவா தேவன் எப்போதுமே உண்மைப் பற்றுறுதியுள்ளவராயிருக்கிறார் என்பதை அறிவது ஆறுதலளிப்பதாய் இருக்கிறது!
இயேசு கிறிஸ்து, உண்மைப் பற்றுறுதியுள்ள குமாரன்
12, 13. கடவுளுடைய குமாரனின் உண்மைப் பற்றுறுதியைக் குறித்து என்ன அத்தாட்சியை நாம் கொண்டிருக்கிறோம்?
12 அப்போதும் இப்போதும் உண்மைப் பற்றுறுதியின் சவாலில் வெற்றிபெறுவதில் யெகோவாவை பரிபூரணமாக பின்பற்றுபவர் இயேசு கிறிஸ்து ஆவார். சரியாகவே அப்போஸ்தலனாகிய பேதுருவால் சங்கீதம் 16:10-ஐ மேற்கோள்காட்டி அதை அப்போஸ்தலர் 2:27-ல் இயேசு கிறிஸ்துவிற்கு பொருத்த முடிந்தது: “என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர்.” இயேசு கிறிஸ்து “உண்மைப் பற்றுறுதியுடையவர்” என்று தகுந்த விதமாகவே அழைக்கப்படுகிறார். எல்லா விதத்திலும், அவர் தம் தகப்பனுக்கும் கடவுளுடைய வாக்குப்பண்ணப்பட்ட ராஜ்யத்திற்கும் உண்மைப் பற்றுறுதியுடையவராக இருக்கிறார். சோதனைகளை, சுயநலத்திற்கான கவர்ச்சியைப் பயன்படுத்தி இயேசுவுடைய உத்தமத்தன்மையைக் குலைத்துப்போட சாத்தான் முதலில் முயற்சி செய்தான். அதில் தோல்வியுற்றதன் காரணமாக, பிசாசு துன்புறுத்துதலைப் பயன்படுத்தி, முடிவில் கழுமரத்தின்மீது இயேசு மரிக்கும்படி செய்தான். தம்முடைய பரலோக தகப்பனாகிய யெகோவா தேவனுக்கு அவர் காண்பித்த உண்மைப் பற்றுறுதியிலிருந்து இயேசு ஒருபோதும் விலகவில்லை.—மத்தேயு 4:1-11.
13 மத்தேயு 28:20-ல் பதிவுசெய்யப்பட்டிருக்கும் வாக்குறுதியைக் காத்துக்கொள்வதில் தம்மை பின்பற்றினவர்களுக்கு இயேசு கிறிஸ்து உண்மைப் பற்றுறுதியுடன் இருந்திருக்கிறார்: “இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்.” அந்த வாக்குறுதியின் நிறைவேற்றமாக, பொ.ச. 33 பெந்தெகொஸ்தேவிலிருந்து தற்காலம் வரையாக தம்முடைய சபையின்மீது உண்மைப் பற்றுறுதியுடன் தலைமைத்துவத்தை அவர் செலுத்திவந்திருக்கிறார்.
உண்மைப் பற்றுறுதியுடனிருந்த அபூரண மனிதர்கள்
14. யோபு உண்மைப் பற்றுறுதியை வெளிக்காட்டுவதில் என்ன முன்மாதிரியை வைத்தார்?
14 இப்பொழுது, அபூரண மனிதர்களைப் பற்றியதென்ன? அவர்கள் கடவுளுக்கு உண்மைப் பற்றுறுதியுடனிருக்க முடியுமா? யோபுவினுடைய தனிச்சிறப்பு வாய்ந்த உதாரணத்தை நாம் கொண்டிருக்கிறோம். அவருடைய விஷயத்தில் சாத்தான் விவாதத்தை தெள்ளத்தெளிவாக்கினான். யோபு, யெகோவா தேவனுக்கு உண்மைப் பற்றுறுதியுள்ளவராயிருந்தாரா, அல்லது சுயநலத்திற்காகத்தான் அவரை சேவித்து வந்தாரா? யோபுவிற்கு தொந்தரவு கொடுப்பதன் மூலமாக யெகோவாவை சேவிப்பதிலிருந்து அவரை விலக்கமுடியும் என்பதாக சாத்தான் வீண்பெருமையுடன் கூறினான். யோபு தன்னுடைய எல்லா உடைமைகளையும், தன்னுடைய எல்லா பிள்ளைகளையும், தன்னுடைய உடலாரோக்கியத்தையும்கூட இழந்துவிட்ட பிறகு, அவருடைய மனைவி அவரை இவ்வாறு உந்துவித்தாள்: “தேவனைத் தூஷித்து ஜீவனை விடும்.” ஆனால் யோபு உண்மைப் பற்றுறுதியுள்ளவராயிருந்தார், ஏனெனில் அவளிடம் இவ்வாறு சொன்னார்: “நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை.” (யோபு 2:9, 10) உண்மையில், அவருக்கு ஆறுதலளிக்கப்போகிறவர்களிடம், யோபு இவ்வாறு சொன்னார்: “அவர் [கடவுள்] என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்.” (யோபு 13:15) யோபு, யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டார் என்பது ஆச்சரியமல்லவே! ஆகவே, யெகோவா, தேமானியனான எலிப்பாசை நோக்கி இவ்வாறு சொன்னார்: “உன்மேலும் உன் இரண்டு சிநேகிதர் மேலும் எனக்குக் கோபம் மூளுகிறது; என் தாசனாகிய யோபு பேசினது போல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை.”—யோபு 42:7, 10-16; யாக்கோபு 5:11.
15. யெகோவா தேவனுடைய அநேக ஊழியக்காரர்களின் உண்மைப் பற்றுறுதியைக் குறித்து என்ன வேதப்பூர்வ அத்தாட்சியை நாம் கொண்டிருக்கிறோம்?
15 எபிரெயர் அதிகாரம் 11-ல் விளக்கப்பட்டிருக்கும் எல்லா விசுவாசமுள்ள ஆண்களும் பெண்களும் உண்மைப் பற்றுறுதியுள்ளவர்கள் என்பதாக சொல்லப்படலாம். அழுத்தங்கள் மத்தியில் அவர்கள் விசுவாசமுள்ளவர்களாக மட்டுமல்ல, ஆனால் உண்மைப் பற்றுறுதியுள்ளவர்களாகவும் இருந்தனர். இவ்வாறு, நாம் வாசிக்கிறோம்: “விசுவாசத்தினாலே . . . சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள், அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள் . . . வேறு சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள். கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள்.”—எபிரெயர் 11:33-37.
16. அப்போஸ்தலனாகிய பவுல் உண்மைப் பற்றுறுதியை வெளிக்காட்டுவதில் என்ன முன்மாதிரியை வைத்தார்?
16 கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துக்களும்கூட அப்போஸ்தலனாகிய பவுலின் கருத்தைக் கவர்கிற முன்மாதிரியை அளிக்கின்றன. தன்னுடைய ஊழியத்தைக் குறித்து தெசலோனிக்காவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு சரியாகவே இவ்வாறு அவரால் சொல்ல முடிந்தது: “விசுவாசிகளாகிய உங்களுக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்தமும் [“உண்மைப் பற்றுறுதியும்,” NW] நீதியும் பிழையின்மையுமாய் நடந்தோமென்பதற்கு நீங்களும் சாட்சி, தேவனும் சாட்சி.” (1 தெசலோனிக்கேயர் 2:10) 2 கொரிந்தியர் 6:3-5-ல் பதிவு செய்யப்பட்டிருக்கும் அவருடைய வார்த்தைகளில் பவுலின் உண்மைப் பற்றுறுதிக்கு கூடுதலான அத்தாட்சியை நாம் கொண்டிருக்கிறோம். அதில் இவ்வாறு நாம் வாசிக்கிறோம்: “எவ்விதத்தினாலேயும், எங்களைத் தேவஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறோம். மிகுந்த பொறுமையிலும், உபத்திரவங்களிலும், நெருக்கங்களிலும், இடுக்கண்களிலும், உபவாசங்களிலும்.” அப்போஸ்தலனாகிய பவுல் உண்மைப் பற்றுறுதியுள்ளவராயிருந்ததன் காரணமாக அவர் சுயமரியாதையை கொண்டிருந்தார் என்பதற்கு இவையெல்லாம் சாட்சி பகருகின்றன.
நவீன காலங்களில் உண்மைப் பற்றுறுதியுள்ளவர்கள்
17. ஜே. எஃப். ரதர்ஃபர்ட்டின் எந்த வார்த்தைகள் அவர் உண்மைப் பற்றுறுதியுடன் இருப்பதில் தீர்மானமுள்ளவராயிருந்தார் என்பதைக் காண்பிக்கின்றன?
17 நவீன காலத்திற்கு வரும்போது, நம்முடைய முன்னுரையில் நாம் ஏற்கெனவே கவனித்திருக்கும் ஒரு நல்ல முன்மாதிரி நமக்கு இருக்கிறது. “சமாதானப் பிரபு”வின்கீழ் உலகமெங்கும் பாதுகாப்பு (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில், பக்கம் 146-ல் “சிறையிருப்பின் சமயத்தில் உண்மைப் பற்றுறுதி” என்ற உபதலைப்பின்கீழ் என்ன குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதைக் கவனியுங்கள். அங்கே இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது: “சிறையிருப்பின் சமயத்தில் யெகோவாவின் அமைப்பிற்கு உண்மைப் பற்றுறுதியை வெளிக்காட்டியவராக, உவாட்ச் டவர் சொஸைட்டியின் பிரஸிடென்ட், ஜோஸஃப் எஃப். ரதர்ஃபர்ட், டிசம்பர் 25, 1918-ல் கீழ்க்கண்டவாறு எழுதினார்: ‘நான் பாபிலோனோடு இணங்கிப்போக மறுத்துவிட்டு ஆனால் என்னுடைய ஆண்டவருக்கு உண்மையுடன் சேவை செய்ய முயன்றதன் காரணமாக, நான் சிறையிலிருக்கிறேன், இதற்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். . . . மிருகத்தோடு இணங்கி சென்று அல்லது வளைந்து கொடுத்தும் விடுதலையாக்கப்பட்டும் இந்த முழு உலகத்தின் ஆர்வமான பாராட்டைப் பெற்றிருப்பதைக் காட்டிலும் நான் கடவுளுடைய அங்கீகாரப் புன்முறுவலையும் சிறையிருப்பையுமே விரும்புகிறேன்.”b
18, 19. நவீன காலத்தில் உண்மைப் பற்றுறுதியின் என்ன மிகச் சிறந்த முன்மாதிரிகளை நாம் கொண்டிருக்கிறோம்?
18 துன்புறுத்துதலைச் சகித்திருக்கும் மற்ற அநேக கிறிஸ்தவர்களில் நாம் மிகச் சிறந்த உண்மைப் பற்றுறுதியின் முன்மாதிரிகளை கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட உண்மைப் பற்றுறுதியுள்ள நபர்களில் சிலர், ஆங்கில மொழியில் பரவலாக விநியோகிக்கப்பட்டிருக்கும், பர்ப்பிள் ட்ரையாங்கிள் என்ற வீடியோவில் வருணிக்கப்பட்டிருக்கும் வண்ணமாக, நாசி ஆட்சியின்போதிருந்த ஜெர்மன் யெகோவாவின் சாட்சிகள் ஆவர். மலாவியில் இருப்பவர்களைப்போல உண்மைப் பற்றுறுதியுள்ள அநேக ஆப்பிரிக்க யெகோவாவின் சாட்சிகளும்கூட குறிப்பிடத்தக்கவர்கள். அங்கே, ஒரு சிறைக் காவலாளி சாட்சிகளுடைய உண்மைப் பற்றுறுதிக்கு இவ்வாறு சொல்வதன் மூலம் சாட்சி பகர்ந்தார்: “அவர்கள் எப்போதுமே விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அவர்கள் அதிகரித்துக்கொண்டே போகின்றனர்.”
19 கிரீஸ், மொஸாம்பிக், போலந்து போன்ற இடங்களிலுள்ள உண்மைக் கிறிஸ்தவர்கள் வெளிக்காட்டும் உண்மைப் பற்றுறுதியினால் கவரப்படாமல் சமீபத்திய யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தரப் புத்தகங்களை (ஆங்கிலம்) ஒருவர் வாசிக்க முடியாது. அவர்களில் அநேகர் கடுவேதனையுள்ள சித்திரவதையை அனுபவித்தனர்; மற்றவர்கள் கொலை செய்யப்பட்டனர். கொலை செய்யப்படும்வரையாக உண்மைப் பற்றுறுதியின் சவாலில் வெற்றிபெற்ற எதியோபியாவிலிருந்த ஒன்பது கிறிஸ்தவ ஆண்களுடைய படங்களை 1992 வருடாந்தரப் புத்தகம் (ஆங்கிலம்) பக்கம் 177-ல் காட்டுகிறது. யெகோவாவின் சாட்சிகளாக, உண்மைப் பற்றுறுதியின் சவாலில் வெற்றிபெற நம்மை உந்துவிக்கிற இத்தனை அநேக நல்ல முன்மாதிரிகளை கொண்டிருப்பதில் நாம் சந்தோஷமடையவில்லையா?
20. நாம் தொடர்ந்து உண்மைப் பற்றுறுதியுடனிருந்தால் என்ன விளைவு உண்டாகும்?
20 சோதனைகளையும் அழுத்தங்களையும் உண்மைப் பற்றுறுதியுடன் எதிர்ப்பதன் மூலமாக, நம்முடைய சுயமரியாதையை நாம் வளர்த்துக்கொள்கிறோம். அப்படியென்றால், உண்மைப் பற்றுறுதியின் விவாதத்தில் யாருடைய பக்கம் நிற்க நாம் விரும்புகிறோம்? உண்மைப் பற்றுறுதியின் சவாலில் வெற்றிபெறுவதன் மூலமாக, நாம் விவாதத்தில் யெகோவா தேவனின் பக்கம் இருப்போம், பிசாசாகிய சாத்தானை வெறுக்கத்தக்க, படுமோசமான பொய்யன் என்பதாக நிரூபிப்போம்! இவ்வாறு நாம் நம்மை படைத்தவராகிய யெகோவா தேவனுடைய அங்கீகாரத்தையும் சந்தோஷமுள்ள நித்திய ஜீவனென்னும் பரிசையும் பெற்றுக்கொள்வோம். (சங்கீதம் 37:29; 144:15ஆ) உண்மைப் பற்றுறுதியின் சவாலில் வெற்றிபெறுவதற்கு என்ன தேவைப்படுகிறது என்பது அடுத்ததாக சிந்திக்கப்படும்.
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியினால் பிரசுரிக்கப்பட்டிருக்கும் இரு தொகுதிகளைக் கொண்ட ஒரு பைபிள் களஞ்சியம்.
b உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியினால் பிரசுரிக்கப்பட்டது.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ உண்மைப் பற்றுறுதியுடனிருப்பது ஏன் சவாலாயிருக்கிறது?
◻ “உண்மைப் பற்றுறுதி” மிகவும் தனிச்சிறப்புடைய ஒரு வார்த்தை என்பதாக ஏன் சொல்லப்படலாம்?
◻ உண்மைப் பற்றுறுதியுடனிருந்த அபூரண மனிதர்களைப் பற்றிய என்ன வேதப்பூர்வ முன்மாதிரிகள் நமக்கு இருக்கின்றன?
◻ உண்மைப் பற்றுறுதிக்கு என்ன நவீன நாளைய முன்மாதிரிகளை நாம் கொண்டிருக்கிறோம்?
[பக்கம் 11-ன் படம்]
சார்ல்ஸ் டேஸ் ரஸல்
[பக்கம் 12-ன் படம்]
இயேசு உண்மையிலேயே யெகோவாவின் “உண்மைப் பற்றுறுதியுள்ளவராக” இருந்தார்
[பக்கம் 13-ன் படம்]
யோபு, அபூரணராய் இருந்தும், கடவுளுக்கு உண்மைப் பற்றுறுதியுடன் இருந்தார்
[பக்கம் 14-ன் படம்]
யெகோவாவிற்கு உண்மைப் பற்றுறுதியைக் காண்பிப்பதில் பவுல் ஒரு சிறந்த முன்மாதிரியை வைத்தார்