உங்களுக்கு நினைவிருக்கிறதா?
காவற்கோபுர பத்திரிகையின் சமீபத்திய இதழ்களை வாசித்து பாராட்டியிருக்கிறீர்களா? அப்படியென்றால் பின்வரும் கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்:
◻ “எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும்,” என்ற இயேசுவின் வார்த்தைகள், கிறிஸ்தவர்கள் பாவங்களை மன்னிக்க முடியும் என்பதை அர்த்தப்படுத்துகின்றனவா?(யோவான் 20:23)
பொதுவில் கிறிஸ்தவர்கள் அல்லது சபையிலுள்ள நியமிக்கப்பட்ட மூப்பர்களும்கூட, பாவங்களை மன்னிப்பதற்கான தெய்வீக அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்று முடிவு செய்வதற்கு எந்த வேதப்பூர்வ அடிப்படையும் இல்லை. மன்னிக்க வேண்டுமா அல்லது மன்னிக்க வேண்டாமா என்பதைக் குறித்த ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த அதிகாரத்தை ஆவியின் செயலாக்கத்தின் மூலமாக அப்போஸ்தலர் அவர்களுக்கு அளித்திருந்தனர் என்று இயேசுவினுடைய வார்த்தைகளின் சூழமைவு காண்பிப்பதாக தோன்றுகிறது. (அப்போஸ்தலர் 5:1-11; 2 கொரிந்தியர் 12:12-ஐக் காண்க.)—4/15, பக்கம் 28.
◻ 1864-ல் முதலில் பிரசுரிக்கப்பட்ட சங்கீத புத்தகத்தின் ஜே. ஜே. ஸ்டூவார்ட் பாரனின் மொழிபெயர்ப்பினுடைய சிறப்பான அம்சம் என்ன?
தன் மொழிபெயர்ப்பில், “எபிரெய வகையை, அதனுடைய மொழிமரபிலும் வாக்கிய உட்பிரிவின் இலக்கண அமைப்பிலும் நெருக்கமாக” பின்பற்ற பாரன் முயற்சி செய்தார். அவ்வாறு செய்கையில் “யெகோவா” என்ற வடிவில் தெய்வீக பெயரை திரும்பவும் உபயோகிப்பதை ஆதரித்தார்.—4/15, பக்கம் 31.
◻ உலக அரசாங்கங்களோடு தங்களுடைய செயல்தொடர்புகளைப் பற்றியதில் இயேசு தம்மைப் பின்பற்றுவோருக்கு என்ன வழிநடத்ததுலைக் கொடுத்தார்?
இயேசு சொன்னார்: “அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள்.” (மத்தேயு 22:21) “ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம்பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ,” என்றும்கூட அவர் சொன்னார். (மத்தேயு 5:41) மனித உறவுகளில் இருந்தாலும் சரி அல்லது அரசாங்கம் கடவுளுடைய சட்டத்துக்கு இசைவாக தேவைப்படுத்துகிறவற்றில் இருந்தாலும் சரி நியாயமான தேவைகளுக்கு மனமுவந்து கீழ்ப்படிய வேண்டிய நியமத்தை இயேசு இங்கே விளக்கிக்கொண்டிருந்தார். (லூக்கா 6:27-31; யோவான் 17:14, 15)—5/1, பக்கம் 12.
◻ ‘சத்தியத்திலே நடப்பது’ என்பது எதை அர்த்தப்படுத்துகிறது? (சங்கீதம் 86:11)
கடவுளுடைய தேவைகளுக்குக் கீழ்ப்படிவதையும் அவரை உண்மைத்தன்மையோடும் உண்மைமனதோடும் சேவிப்பதையும் இது உட்படுத்துகிறது. (சங்கீதம் 25:4, 5; யோவான் 4:23, 24)—5/15, பக்கம் 18.
◻ யெகோவா யோனாவை நினிவேக்கு அனுப்பினதன் மூலம் எதை சாதித்தார்?
அதன் விளைவு என்னவென்றால், மனந்திரும்பிய நினிவே மக்களுக்கும் விசுவாசத்திலும் மனத்தாழ்மையிலும் மிகவும் குறைவுபட்டிருந்த வணங்கா கழுத்துள்ள இஸ்ரவேலருக்கும் இடையே இருந்த வேறுபாட்டை நினிவேயில் யோனா செய்த பிரசங்க வேலை காண்பித்தது. (உபாகமம் 9:6, 13; யோனா 3:4-10-ஐ ஒப்பிடுக.)—5/15, பக்கம் 28.
◻ ஆதியாகமம் 3:15-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்தச் சர்ப்பம் யார், அந்த “ஸ்திரீ” யார்?
அந்தச் சர்ப்பம் தாழ்வான பாம்பு அல்ல, ஆனால் அதைப் பயன்படுத்திய பிசாசாகிய சாத்தானே ஆவான். (வெளிப்படுத்துதல் 12:9) அந்த “ஸ்திரீ” ஏவாள் அல்ல, ஆனால் யெகோவாவின் பரலோக அமைப்பு, பூமியின்மீது ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டிருக்கும் அவருடைய ஊழியர்களுக்குத் தாய். (கலாத்தியர் 4:26)—6/1, பக்கம் 9.
◻ ஒரு நபர் எவ்வாறு மகா பாபிலோனிலிருந்து வெளியேறி பாதுகாப்பை கண்டடையலாம்? (வெளிப்படுத்துதல் 18:4)
அவர் பொய் மத அமைப்புகளிலிருந்தும் அவற்றின் பழக்கங்களிலிருந்தும் மனப்பான்மையிலிருந்தும் தன்னை முழுவதுமாக பிரித்துக்கொண்டு, அதற்குப் பிறகு அவர் யெகோவாவின் தேவராஜ்ய அமைப்புக்குள் பாதுகாப்பை கண்டடைய வேண்டும். (எபேசியர் 5:7-11)—6/1, பக்கம் 18.
◻ வேதாகமத்தில் கழுகு ஏன் அடிக்கடி குறிப்பிடப்பட்டிருக்கிறது?
ஞானம், தெய்வீக பாதுகாப்பு, விரைவாக செயல்படுதல் போன்ற காரியங்களை அடையாளப்படுத்திக் காண்பிப்பதற்கு பைபிள் எழுத்தாளர்கள் கழுகினுடைய பண்புகளை குறிப்பிட்டுக் காண்பித்தனர்.—6/15, பக்கம் 8.
◻ இன்று பூமிக்குரிய நம்பிக்கையுடைய கடவுளுடைய ஊழியர்கள் ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களைப் போன்றே அந்த அளவுக்கு கடவுளுடைய ஆவியைப் பெற்றிருக்கின்றனரா?
டிப்படையாக, பதில் ஆம் என்பதே. இரண்டு வகுப்பாருக்கும் கடவுளுடைய ஆவி சமமான அளவில் கிடைக்கிறது, அறிவையும் புரிந்துகொள்ளுதலையும் இரண்டு வகுப்பாரும் சமமான அளவில் பெற்றுக்கொள்ளலாம், அதைக் கிரகித்துக் கொள்வதற்கு சமமான வாய்ப்புகளும் இருக்கின்றன.—6/15, பக்கம் 31.
◻ எருசலேம் ஆலயத்தில் இஸ்ரவேலின் ஆசாரியர்கள் செய்த பரிசுத்த சேவையை ஆராய்வது இன்று நமக்கு ஏன் பயனுள்ளதாய் இருக்கிறது?
அவ்வாறு செய்வதன் மூலம், பாவமுள்ள மானிடர்கள் இன்று கடவுளோடு ஒப்புரவாகும் அந்த இரக்கமான ஏற்பாட்டை நாம் இன்னும் முழுமையாக மதித்துணர ஆரம்பிக்கலாம். (எபிரெயர் 10:1-7)—7/1, பக்கம் 8.
◻ சாலொமோன் கட்டியதைக் காட்டிலும் எருசலேமில் இரண்டாவதாக கட்டப்பட்ட ஆலயம் எவ்வாறு பெரிதான மகிமையை அடைந்தது?
இரண்டாவது ஆலயம் சாலொமோனின் ஆலயத்தைக் காட்டிலும் 164 வருடங்கள் கூடுதலாக நீடித்திருந்தது. மேலுமதிகமான வணக்கத்தார் பலர் மேலும் பல நாடுகளிலிருந்து இதன் பிரகாரங்களில் கூட்டமாகக் கூடினர். அதிமுக்கியமாக, கடவுளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து இதன் பிரகாரங்களுக்குள் கற்பித்த பெரும் தனி மதிப்பை இந்த இரண்டாவது ஆலயம் அனுபவித்தது.—7/1, பக்கங்கள் 12, 13.
◻ கடவுள் எப்போது தம் ஆவிக்குரிய ஆலயத்தை ஆரம்பித்து வைத்தார்?
இது பொ.ச. 29-ல் இயேசுவின் முழுக்காட்டுதல் ஜெபத்தை கடவுள் அங்கீகரித்தபோது ஆரம்பித்து வைத்தார். (மத்தேயு 3:16, 17) இயேசுவின் சரீரம் அளிக்கப்பட்டதைக் கடவுள் ஏற்றுக்கொண்டதானது, ஆவிக்குரிய கருத்தில், எருசலேமின் ஆலயத்தில் இருந்ததைப் பார்க்கிலும் பெரிய ஒரு பலிபீடம் முன்னிலைக்கு வரலாயிற்று என்று பொருள்பட்டது.—7/1, பக்கங்கள் 14, 15.
◻ நாம் ஏன் மன்னிக்கிறவர்களாய் இருக்க வேண்டும்?
கிறிஸ்தவ ஒற்றுமையை நாம் காத்துக்கொள்ள வேண்டுமானால் வருத்தமுண்டாக்கின ஒருவர் மன்னிப்பு கேட்டுக்கொள்கையில் அவரை மன்னிப்பது முக்கியம். பகைமையும் வன்மத்தை மனதில் பேணி வைப்பதும் நம்முடைய மன சமாதானத்தை கெடுக்கும். நாம் மன்னியாதவர்களாக இருந்தால் ஏதோ ஒரு நாள் யெகோவா தேவன் இனிமேலும் நம் பாவங்களை மன்னியாமல் விடும் ஆபத்துக்குள்ளாகிறோம். (மத்தேயு 6:14, 15)—7/15, பக்கம் 18.
◻ இஸ்ரவேலர் எவ்வாறு பரிசுத்தராகக்கூடும்?
பரிசுத்த கடவுளாகிய யெகோவாவுடன் தங்கள் நெருங்கிய உறவின் மூலமும் அவரை வணங்கும் தங்கள் தூய்மையான வணக்கத்தின் மூலமும் மாத்திரமே பரிசுத்தம் கூடியகாரியமாயிருந்தது. பரிசுத்தத்தில், உடல்சம்பந்தமான மற்றும் ஆவிக்குரிய சுத்தத்தில் அவரை வணங்கும்படி, “மகா பரிசுத்தமானவரைப்” பற்றிய திருத்தமான அறிவு அவர்களுக்குத் தேவைப்பட்டது. (நீதிமொழிகள் 2:1-6; 9:10)—8/1, பக்கம் 11.