உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சமீப காவற்கோபுர இதழ்களின் நடைமுறையான மதிப்பை நீங்கள் கண்டிருக்கிறீர்களா? அப்படியானால், பின்வரும் கேள்விகளினால் உங்களுடைய நினைவாற்றலை நீங்கள் ஏன் சோதித்துப் பார்க்கக்கூடாது?
◻ ‘கர்த்தரின் நாளுக்கும்’ ‘யெகோவாவின் நாளுக்கும்’ இடையே உள்ள வித்தியாசம் என்ன? (வெளிப்படுத்துதல் 1:10; யோவேல் 2:11)
வெளிப்படுத்துதல் அதிகாரங்கள் 1 முதல் 22 வரை விவரிக்கப்பட்டுள்ள 16 தரிசனங்களின் நிறைவேற்றத்தையும், இயேசு தம் வந்திருத்தலின் அடையாளத்தைப் பற்றி தம் சீஷர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்து முன்னறிவித்த அடிப்படையான சம்பவங்களையும் ‘கர்த்தரின் நாள்’ உள்ளடக்குகிறது. கர்த்தரின் நாளின் உச்சக்கட்டமாக, சாத்தானின் சீரழிந்த உலகின் மீது யெகோவா நியாயத்தீர்ப்பை நிறைவேற்றும்போது, யெகோவாவின் பயங்கரமான நாள் திடீரென ஆரம்பமாகும். (மத்தேயு 24:3-14; லூக்கா 21:11)—12/15, பக்கம் 11.
◻ மாக்காரியாஸ் பைபிளின் சில சிறப்பு அம்சங்கள் யாவை?
யெகோவா என்ற பெயர் மாக்காரியாஸ் பைபிளில் 3,500 தடவைக்கும் மேல் உள்ளது. ஒரு ரஷ்ய மத இலக்கிய கல்விமான் இவ்வாறு சொன்னார்: “[அந்த] மொழிபெயர்ப்பு எபிரெய வாசகத்திலிருந்து மாறுபடாமலும், மொழிபெயர்ப்பின் மொழிநடை தூய்மையாகவும் பொருளுக்குப் பொருத்தமாகவும் உள்ளது.”—12/15, பக்கம் 27.
◻ நம்மை விடுதலையாக்கும் என்று இயேசு கூறிய “சத்தியம்” எது? (யோவான் 8:32)
தேவ ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட தகவல், விசேஷமாக பைபிளில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் கடவுளுடைய சித்தத்தைப் பற்றிய தகவலே “சத்தியம்” என்பதாக இயேசு அர்த்தப்படுத்தினார்.—1/1, பக்கம் 3.
◻ நவீன-நாளைய யெகூ மற்றும் யோனதாப் யார்?
யெகூ இயேசு கிறிஸ்துவுக்கு படமாக இருக்கிறார், பூமியில் “தேவனுடைய இஸ்ரவேலர்,” அதாவது அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் அவரைப் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். (கலாத்தியர் 6:16; வெளிப்படுத்துதல் 12:17) யெகூவைச் சந்திப்பதற்கு யோனதாப் புறப்பட்டு வந்ததுபோல, இயேசுவின் பூமிக்குரிய பிரதிநிதிகளை ஆதரிப்பதற்கு தேசங்களிலிருந்து “திரளான கூட்டமாகிய ஜனங்கள்” வெளியே வந்திருக்கின்றனர். (வெளிப்படுத்துதல் 7:9, 10; 2 இராஜாக்கள் 10:15)—1/1, பக்கம் 13.
◻ ‘கடவுளோடு நடப்பது’ என்பதன் அர்த்தம் என்ன? (ஆதியாகமம் 5:24; 6:9)
அவ்வாறு நடப்பவர்கள், ஏனோக்கு, நோவா ஆகியோரை போன்று கடவுள் மீது பலமான விசுவாசம் இருப்பதற்கான அத்தாட்சியை அளிக்கும்விதத்தில் தங்களை நடத்திக்கொண்டனர் என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. யெகோவா அவர்களுக்கு கட்டளையிட்டதை அவர்கள் செய்தனர், மனிதவர்க்கத்தோடு அவர் வைத்திருந்த செயல்தொடர்புகளிலிருந்து அவரைப் பற்றி அவர்கள் அறிந்தவற்றுக்கு இசைவாக தங்கள் வாழ்க்கையை ஒழுங்குபடுத்தி நடத்திவந்தனர்.—1/15, பக்கம் 13.
◻ ஒரு நபர் தன் மரணத்திற்கு முன்பாகவே ஏன் திட்டமிட வேண்டும்?
ஒரு கருத்தில், அப்படிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்வது, அவருடைய குடும்பத்திற்கு அவர் அளிக்கும் வெகுமதியாக உள்ளது. அது அன்பைக் காண்பிக்கிறது. அவர் தங்களோடு இல்லாமலிருக்கும்போதும் ‘அவருடைய வீட்டாருக்கு ஏற்பாடு’ செய்வதற்கான விருப்பத்தை அது நிரூபித்துக் காட்டுகிறது. (1 தீமோத்தேயு 5:8)—1/15, பக்கம் 22.
◻ “பழைய உடன்படிக்கை” எதை சாதித்தது? (2 கொரிந்தியர் 3:14)
அது புதிய உடன்படிக்கைக்கு முன்நிழலாக இருந்தது, மேலும், திரும்பத் திரும்ப செலுத்திய பலிகள், பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மனிதனுக்கு மிகவும் அவசரமாகத் தேவைப்பட்ட விடுதலையை வெளிப்படுத்திக் காட்டியது. அது “கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய்” இருந்தது. (கலாத்தியர் 3:24)—2/1, பக்கம் 14.
◻ எந்த வழிகளில் புதிய உடன்படிக்கை நித்தியமானது? (எபிரெயர் 13:20)
முதலாவது, நியாயப்பிரமாண உடன்படிக்கை போல் அல்லாமல், அது ஒருபோதும் மாற்றீடு செய்யப்படாது. இரண்டாவது, அதன் செயல்பாட்டின் விளைவுகள் நிரந்தரமானவை. மூன்றாவது, கடவுளுடைய ராஜ்யத்தின் பூமிக்குரிய பிரஜைகள் தொடர்ந்து ஆயிரமாண்டு முழுவதுமாக புதிய உடன்படிக்கை ஏற்பாட்டிலிருந்து பயனடைவர்.—2/1, பக்கம் 22.
◻ நன்றியுள்ளவர்களாய் இருப்பதன் மூலம் கிடைக்கும் பலன்கள் யாவை?
இருதயத்தில் நன்றியோடிருப்பதன் காரணமாக ஒரு நபர் அனுபவிக்கும் அன்பான உணர்ச்சிகள் அவருடைய சந்தோஷத்திற்கும் சமாதானத்திற்கும் உதவுகின்றன. (நீதிமொழிகள் 15:13, 15-ஐ ஒப்பிடுக.) நன்றி ஒரு உடன்பாடான பண்பாக இருப்பதால், கோபம், பொறாமை, மனக்கசப்பு போன்ற எதிர்மறையான பண்புகளிலிருந்து ஒருவரை பாதுகாக்கிறது.—2/15, பக்கம் 4.
◻ ஆவியால் பிறப்பிக்கப்பட்டவர்கள் எந்த உடன்படிக்கைகளுக்குள் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றனர்?
ஆவிக்குரிய இஸ்ரவேலின் அங்கத்தினர்களோடு யெகோவா செய்யும் புதிய உடன்படிக்கைக்குள்ளும், அவருடைய அடிச்சுவடுகளை பின்பற்றும் அபிஷேகம்செய்யப்பட்டவர்களோடு இயேசு செய்யும் ராஜ்ய உடன்படிக்கைக்குள்ளும் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றனர். (லூக்கா 22:20, 28-30)—2/15, பக்கம் 16.
◻ இஸ்ரவேலர் எந்த மூன்று பெரிய பண்டிகைகளுக்கு ஆஜராகும்படி கட்டளையிடப்பட்டனர்?
நிசான் 14-ன் பஸ்காவை அடுத்து உடனடியாக வந்த புளிப்பில்லா அப்பப் பண்டிகை; நிசான் 16-லிருந்து 50-வது நாள் வந்த வாரங்களின் பண்டிகை; ஏழாவது மாதத்தில் சேர்ப்புக்கால பண்டிகை அல்லது கூடாரப் பண்டிகை. (உபாகமம் 16:1-15)—3/1, பக்கங்கள் 8, 9.
◻ கிறிஸ்தவ கூட்டங்களுக்கு ஆஜராவது ஏன் ஒரு சிலாக்கியம்?
இயேசு சொன்னார்: “இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்.” (மத்தேயு 18:20; 28:20) மேலும், சபைக் கூட்டங்கள் மற்றும் பெரிய கூட்டங்கள் மூலம் ஆவிக்குரிய உணவை உட்கொள்வதற்கு ஒரு முக்கிய வழியாகவும்கூட இருக்கின்றன. (மத்தேயு 24:45)—3/1, பக்கம் 14.
◻ நிம்ரோது என்ற பெயரின் ஆரம்பம் என்ன?
நிம்ரோது என்ற பெயர் பிறப்பின்போது கொடுக்கப்பட்ட பெயர் அல்ல என்று அநேக கல்விமான்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மாறாக, பின்னால் அவனுடைய கலகத்தனமான பண்பு வெளிப்படையாய் காணப்பட்டபிறகு, அதற்கு ஏற்ப பெயர் கொடுக்கப்பட்டது என்று அவர்கள் கருதுகின்றனர்.—3/15, பக்கம் 25.
◻ மனித சமுதாயத்துக்கு குடும்பம் எவ்வளவு முக்கியமானது?
குடும்பம் மனிதருக்கு இன்றியமையாதது. குடும்ப ஏற்பாடு படிப்படியாக அழிகையில், சமுதாயங்கள் மற்றும் தேசங்களின் வலிமையும் பெலவீனமாகிறது என்று சரித்திரம் காண்பிக்கிறது. ஆகையால் சமுதாயத்தின் திடநிலையின் பேரிலும் பிள்ளைகள் மற்றும் எதிர்கால சந்ததிகளுடைய நலனின் பேரிலும் குடும்பம் நேரடியான பாதிப்பை உடையதாயிருக்கிறது.—4/1, பக்கம் 6.
◻ பைபிள் கடவுளுடைய வார்த்தை என்பதற்கு மூன்று விதமான அத்தாட்சிகள் யாவை?
(1) அது விஞ்ஞானப்பூர்வமாய் திருத்தமாக உள்ளது; (2) நவீன வாழ்க்கைக்கு நடைமுறையான கால வரம்பற்ற நியமங்கள் அதில் அடங்கியுள்ளது; (3) சரித்திர உண்மைகளால் நிரூபிக்கப்பட்ட, நிறைவேற்றமடைந்த, திட்டவட்டமான தீர்க்கதரிசனங்கள் அதில் அடங்கியுள்ளது.—4/1, பக்கம் 15.