உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w98 5/1 பக். 3-4
  • இவை எல்லாம் யாருடைய கைவண்ணம்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இவை எல்லாம் யாருடைய கைவண்ணம்?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • இதே தகவல்
  • யெகோவா—யார்?
    யெகோவா—யார்?
  • உயிர்வேதியியல் வல்லுநருடன் ஒரு சந்திப்பு
    விழித்தெழு!—2006
  • யார் நமக்குச் சொல்லக்கூடும்?
    வாழ்க்கையின் நோக்கமென்ன? அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?
  • ‘ஏதோவொன்று விட்டுப்போயிருக்கிறது’—அது என்ன?
    விழித்தெழு!—1996
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
w98 5/1 பக். 3-4

இவை எல்லாம் யாருடைய கைவண்ணம்?

அன்ரே மௌஹாட் என்பவர் பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்த 19-ஆம் நூற்றாண்டு ஆய்வுப்பயணி. அவர் கம்போடியாவில் உள்ள சிறு காட்டுக்குள் இருந்த கிளைகள், புதர்களையெல்லாம் வெட்டி அவற்றை அகற்றிக்கொண்டே ஒரு கோவிலைச் சுற்றியிருந்த அகலமான அகழியைச் சென்றடைந்தார். அவர் நின்றுகொண்டிருந்த இடத்திலிருந்து ஏறக்குறைய ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அந்தக் கோவிலின் ஐந்து கோபுரங்கள் 60 மீட்டருக்கும் மேல் உயரே வானவெளியில் நின்றுகொண்டிருந்தன. அதுதான் அங்க்கோர் வாட்; பூமியிலிருந்த மிகப்பெரிய மதசம்பந்தப்பட்ட நினைவுச்சின்னமாய் இருந்தது. மௌஹாட் அதை கண்டுபிடித்தபோது, அது ஏற்கெனவே ஏழு நூற்றாண்டுகளாக சீதோஷ்ண நிலைகளை தாங்கி நிலைத்திருந்தது.

மௌஹாட் பாசியால் மூடப்பட்டிருந்த கட்டடங்கள் மீது வேகமாக ஒரு பார்வை செலுத்தியபோதே அது மனித கைகளினால் செய்யப்பட்ட வேலைப்பாடாய் இருந்தது என்பதை அவரால் சொல்லமுடிந்தது. “யாரோ ஒரு அறியப்படாத பழங்காலத்து மைக்கல்ஆஞ்சலோ அதைக் கட்டியிருக்க வேண்டும், அது கிரீஸ் அல்லது ரோம் விட்டுச்சென்ற எஞ்சிநிற்கும் கட்டட சித்திரக்கலையைக் காட்டிலும் மிக அழகான தோற்றத்தை உடையதாய் இருக்கிறது,” என்று அவர் எழுதினார். பல நூற்றாண்டுகளாக புறக்கணிக்கப்பட்டபோதிலும், கம்பீரமாய் தோற்றமளிக்கும் கட்டட அமைப்புகளுக்குப் பின்னால் ஒரு வடிவமைப்பாளர் இருந்ததில் அவருக்கு சந்தேகமே இருக்கவில்லை.

நம்மைச் சுற்றியிருக்கும் உலகம் ஏன் ஒரு வடிவமைப்பாளரின் படைப்பாக இருக்க வேண்டும் என்பதை விளக்குவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஞான புத்தகம் ஒன்று அதைப் போன்ற நியாயமான விளக்கத்தை பயன்படுத்தியது ஆர்வத்தைத் தூண்டுகிறது. அது நிச்சயமாகவே படைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு எழுதினார்: “எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன்.” (எபிரெயர் 3:4) இவ்வாறு ஒப்பிட்டுப் பேசுவதை சிலர் ஒப்புக்கொள்ளாமல் இருக்கலாம்: ‘இயற்கையின் செயல்பாடுகள் மனிதன் உண்டாக்கியவற்றிலிருந்து வித்தியாசப்படுகின்றன.’ என்றபோதிலும், அந்த மறுப்பை எல்லா விஞ்ஞானிகளுமே ஒப்புக்கொள்வதில்லை. “உயிர்வேதியியல் சார்ந்த அமைப்புகள் சடப்பொருளால் ஆனவை அல்ல” என்பதை ஒப்புக்கொண்ட பிறகு, லேஹி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிர்வேதியியல் துணை பேராசிரியர் மிக்கல் பெஹெ, இவ்வாறு கேட்கிறார்: “உயிருள்ள உயிர்வேதியியல் சார்ந்த அமைப்புகள் அறிவுத்திறத்தோடு வடிவமைக்கப்படமுடியுமா?” அப்படிப்பட்ட மரபியல் சார்ந்த திட்டமிட்டு வகுத்தமைத்தல் போன்ற முறைகளின் மூலம் விஞ்ஞானிகள் இப்போது உயிருள்ள பொருட்களில் அடிப்படையான மாற்றங்களை வடிவமைத்து வருகின்றனர் என்று அவர் கூடுதலாக எடுத்துக் கூறுகிறார். தெளிவாகவே, உயிருள்ள பொருட்களும் உயிரற்ற பொருட்களும் ஆகிய இரண்டுமே திட்டமிட்டு வடிவமைக்கப்படலாம்! நுண்ணோக்காடியின்றி புலப்படாத உயிரணுக்கள் அடங்கிய உலகிற்குள் ஆராய்ந்து பார்க்கையில், செயல்படுவதற்கு ஒன்றோடொன்று சார்ந்திருக்கக்கூடிய ஆக்கக்கூறுகள் அடங்கியுள்ள வியக்கவைக்கும் சிக்கலான அமைப்புகளை பெஹே கலந்தாலோசிக்கிறார். அவருடைய முடிவு? “இப்படி உயிரணுவை அலசி ஆராய்வது, அதாவது அணுமூலக்கூறு நிலையில் உயிரை ஆராய்ந்து பார்ப்பதற்கென ஒன்றுசேர்ந்து படிப்படியாக செய்யப்பட்ட முயற்சிகளின் விளைவு—மிகவும் தெளிவாக முனைப்பாகத் தெரிகிற ‘வடிவமைப்பே!’”

அதேபோல் பிரபஞ்சவியல் வல்லுநர்களும் இயற்பியல் வல்லுநர்களும் இவ்வுலகையும் பிரபஞ்சத்தையும் உற்றுநோக்கி சில வியக்கவைக்கும் உண்மைகளை கண்டுபிடித்திருக்கின்றனர். உதாரணமாக, எந்தவொரு பிரபஞ்சத்தைச் சார்ந்த மாறிலிகளின் மதிப்பில் மிகச்சிறிய மாற்றமும் இருந்திருந்தால்கூட, இந்தப் பிரபஞ்சம் உயிரற்றதாய் இருக்கும் என்பதை அவர்கள் இப்போது அறிந்திருக்கின்றனர். a இந்த உண்மைகளை, எதிர்பாராது ஒரே சமயத்தில் நிகழ்கிற வியக்கவைக்கும் உண்மைகள் என்று பிரபஞ்சவியல் வல்லுநர் பிரான்டன் அழைத்தார். ஆனால் நீங்கள் இரகசியமான, ஒன்றோடொன்று தொடர்புள்ள ஒரே சமயத்தில் நிகழ்ந்த தொடர்நிகழ்ச்சிகளை எதிர்ப்பட்டால், இவற்றுக்கு யாரோ ஒருவர் பொறுப்புள்ளவராய் இருந்தார் என சந்தேகப்பட மாட்டீர்களா?

இந்த எல்லா சிக்கலான அமைப்புகளுக்கும் மிகவும் சரியாக பொருந்தக்கூடிய “ஒரே சமயத்தில் நிகழ்ந்தவற்றுக்கும்” பொறுப்புள்ள ஒரு வடிவமைப்பாளர் உண்மையிலேயே இருக்கிறார். அவர் யார்? பேராசிரியர் பெஹே, “விஞ்ஞான வழிமுறைகளின் மூலம் அந்த வடிவமைப்பாளரை அடையாளம் கண்டுபிடிப்பது மிகவும் கடினம்” என்று ஒப்புக்கொள்கிறார்; மேலும், “தத்துவமும் இறைமையியலும்” பதிலளிக்க முயலுவதற்கு அவர் அந்தக் கேள்வியை விட்டுவிடுகிறார். அந்தக் கேள்வி உங்களுக்கு பொருத்தமற்றதாய் இருப்பதாக நீங்கள் தனிப்பட்ட முறையில் ஒருவேளை உணரலாம். இருப்பினும், உங்களுக்குத் தேவையான பொருட்கள் நிரம்பியுள்ள அழகாக பேக் செய்யப்பட்டிருக்கும் ஒரு பாக்கெட்டை நீங்கள் பெற்றுக்கொண்டால், உங்களுக்கு அதை யார் அனுப்பி வைத்தது என்பதை நீங்கள் அறிந்துகொள்ள விரும்பமாட்டீர்களா?

சொல்லப்போனால், நாம் அப்படிப்பட்ட ஒரு பாக்கெட்டை தான் பெற்றிருக்கிறோம்—நாம் உயிர்வாழ்ந்து வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவிப்பதை சாத்தியமாக்கும் அதிசயமான வெகுமதிகள் நிரம்பியுள்ள ஒரு பாக்கெட். தொடர்ந்து உயிர்வாழ்வதற்குத் தேவையான எல்லா தனிச்சிறப்புவாய்ந்த அமைப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ள இந்த பூமியே அந்த பாக்கெட். இந்த வெகுமதிகளை நமக்கு யார் கொடுத்தது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டுமல்லவா?

மகிழ்ச்சி தரும் விதத்தில், அந்த பாக்கெட்டை அனுப்பியவர் அதோடு சேர்த்து ஒரு தகவலையும் அனுப்பியுள்ளார். அந்தத் “தகவல்,” முன்பு குறிப்பிடப்பட்ட அந்தப் பழங்கால ஞான புத்தகமாகிய பைபிளே. நமக்கு அந்தப் பாக்கெட்டை கொடுத்தவர் யார் என்ற கேள்விக்கு பைபிள் அதன் ஆரம்ப வார்த்தைகளில் மிகச்சிறந்த விதத்தில் எளிமையாகவும் தெளிவாகவும் பதிலளிக்கிறது: “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.”—ஆதியாகமம் 1:1.

சிருஷ்டிகர் தம்முடைய “தகவலில்” தம்மை பெயரால் அடையாளம் காண்பிக்கிறார்: “வானங்களைச் சிருஷ்டித்து . . . பூமியை, அதிலே உண்டானவைகளோடு பரப்பினவரும், அதிலுள்ள ஜனங்களுக்குச் சுவாசத்தையும் . . . கொடுத்தவருமான யெகோவாவாகிய கடவுள் சொல்லுகிறதைக் கேளுங்கள்.” (ஏசாயா 42:5, தி. மொ.) ஆம், இந்தப் பிரபஞ்சத்தை வடிவமைத்து, பூமியின்மீது ஆண்களையும் பெண்களையும் உண்டாக்கின கடவுளுடைய பெயர் யெகோவா. ஆனால் யெகோவா யார்? அவர் எப்படிப்பட்ட கடவுள்? பூமியிலுள்ள எல்லா ஜனங்களும் அவருக்கு ஏன் செவிகொடுக்க வேண்டும்?

[அடிக்குறிப்பு]

a பிரபஞ்சம் முழுவதிலும் மாற்றமடையாததாய்த் தோன்றும் மதிப்புகளே “மாறிலிகள்.” ஒளியின் வேகமும் புவி ஈர்ப்பு விசைக்கு பொருண்மையோடு உள்ள தொடர்புமே அதற்கான இரண்டு உதாரணங்கள்.

[பக்கம் 3-ன் படம்]

மனிதர்கள் கட்டிய அங்க்கோர் வாட்

[பக்கம் 4-ன் படம்]

நீங்கள் ஒரு வெகுமதியை பெற்றுக்கொண்டால், அதை யார் அனுப்பியது என்பதை அறிந்துகொள்ள விரும்பமாட்டீர்களா?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்