உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w98 10/15 பக். 30-31
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • இதே தகவல்
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • பிறந்தநாள்
    வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்
  • யெகோவாவின் சாட்சிகள் ஏன் பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை?
    யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
  • பார்ட்டிகளுக்கு போவது கடவுளுக்குப் பிடிக்குமா?
    பெரிய போதகரிடம் கற்றுக்கொள்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
w98 10/15 பக். 30-31

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

யெகோவாவின் சாட்சிகளில் அநேகர் திருமண ஆண்டு நிறைவுநாளை கொண்டாடுகின்றனர். பிறந்தநாள் என்பது நாம் பிறந்த தேதியின் நிறைவுநாள். ஆகவே திருமண ஆண்டு நிறைவுநாட்களை கொண்டாடி, பிறந்தநாட்களை மட்டும் ஏன் கொண்டாடுவதில்லை?

வெளிப்படையாக சொன்னால், ஒரு கிறிஸ்தவர் இரண்டையுமே கொண்டாட வேண்டிய அவசியமில்லை. ஆனாலும், இவை இரண்டும் ஒரே முக்கியத்துவம் உள்ளவை என்றோ, திருமண ஆண்டு நிறைவுநாட்களை பிறந்த நாட்களைப்போல கிறிஸ்தவர்கள் கருதவேண்டும் என்றோ இது அர்த்தப்படுத்தாது.

மேலே குறிப்பிட்டபடி, இரண்டுமே ஆண்டு நிறைவுநாட்கள்தான்; ஏனென்றால் “ஆண்டு நிறைவுநாள்” என்பது ‘ஆண்டுதோறும் வரும் ஏதோ ஒரு நிகழ்ச்சியை குறிக்கும் தேதியே.’ எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் ஆண்டு நிறைவுநாள் வரலாம்; மோட்டார் வண்டியால் உங்களுக்கு விபத்து ஏற்பட்ட நாள், சந்திர கிரகணத்தை பார்த்த நாள், குடும்பத்தோடு நீச்சல்குளத்துக்குச் சென்ற நாள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். தெளிவாகவே, கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டு நிறைவுநாளையும் ஒரு முக்கியமான நாளாக அல்லது கொண்டாட வேண்டிய நாளாக கருதுவதில்லை. ஒரு நிகழ்ச்சியைப் பல்வேறு கோணத்தில் பார்த்து, கொண்டாடுவதற்கு பொருத்தமானதா என தீர்மானிக்கலாம்.

உதாரணமாக, பொ.ச.மு. 1513-ல் எகிப்தில் கடவுளுடைய தேவதூதன் இஸ்ரவேலர்களின் வீடுகளைக் கடந்துபோனார்; அதைத் தொடர்ந்து இஸ்ரவேலர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள். அந்தத் தேதியை வருடாவருடம் கொண்டாடும்படி கடவுள் இஸ்ரவேலர்களிடம் திட்டவட்டமாக கட்டளையிட்டிருந்தார். (யாத்திராகமம் 12:14) யூதர்கள் இதை ஒவ்வொரு வருடமும் செய்து வந்தனர்; இயேசுவும்கூட இதைக் கொண்டாடினார்; இது கடவுளுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிவதைக் காட்டியது. ஆனால் இவற்றை பார்ட்டி வைத்தோ பரிசுகள் அளித்தோ கொண்டாடவில்லை. யூதர்கள் ஆலயத்தை மறுபிரதிஷ்டை செய்த நாளையும் ஒரு விசேஷமான ஆண்டு நிறைவுநாளாக கொண்டாடினர். இவ்வாறு கொண்டாடும்படி பைபிளில் சொல்லப்படாதபோதிலும்கூட, யோவான் 10:22, 23 தெரிவிக்கிற விதமாக இயேசு அதை குறைகூறவில்லை. கடைசியில், கிறிஸ்தவர்கள் வருடந்தோறும் இயேசுவின் மரணநாளை விசேஷமாக ஆசரிக்கின்றனர். இது கடவுளுடைய வார்த்தையில் காணப்படும் தெளிவான கட்டளைக்கு இசைவாக இருக்கிறது.—லூக்கா 22:19, 20.

சரி, இப்போது திருமண நிறைவுநாளைக் குறித்து சிந்திக்கலாம். சில தேசங்களில் கணவனும் மனைவியும் திருமண பந்தத்துக்குள் வந்த நாளை வருடாவருடம் கொண்டாடுவது சர்வசாதாரணம். திருமண பந்தம் கடவுள் ஆரம்பித்து வைத்த ஒரு ஏற்பாடு. (ஆதியாகமம் 2:18-24; மத்தேயு 19:4-6) பைபிள் திருமணம் செய்துகொள்வது தவறென்று சொல்வதில்லை என்பதை நாம் அறிவோம்; இயேசுவும்கூட ஒரு திருமண விருந்துக்குச் சென்றார். அந்நிகழ்ச்சியின் மகிழ்ச்சி குலைந்துவிடாமலிருக்கவும் உதவினார்.—யோவான் 2:1-11.

ஆகவே, தம்பதியினர் திருமண நாளின் மங்காத நினைவுகளை அசைபோடவும், இருவரும் வெற்றிகரமான வாழ்க்கை நடத்துவதற்கான தங்கள் தீர்மானத்தை மீண்டும் உறுதிப்படுத்தவும் தங்கள் திருமண ஆண்டு நிறைவுநாளைக் கழிப்பதில் ஆச்சரியமொன்றுமில்லை. இந்த சந்தோஷத்தை தனிமையிலோ, நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் சேர்ந்தோ அனுபவிக்க விரும்பினால் அது அவர்களுடைய சொந்த விஷயம். இதை சாக்காக வைத்துக்கொண்டு ஒரு பெரிய கூட்டத்தை கூட்டக்கூடாது. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பொருந்தும் அதே நியமங்கள் அன்றும்கூட நம்மை வழிநடத்த நாம் விரும்புவோம். ஆகவே திருமண ஆண்டு நிறைவுநாளை கொண்டாடுகிறோமா இல்லையா என்பது சொந்த விஷயம்.—ரோமர் 13:13, 14.

ஆனாலும், ஒரு பிறந்தநாளை விசேஷமாக கொண்டாடுவதை பற்றி என்ன சொல்லாம்? அப்படிப்பட்ட ஒரு ஆண்டு நிறைவுநாளை பற்றி பைபிள் எதையேனும் தெரிவிக்கிறதா?

சொல்லப்போனால், இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் பைபிள் மாணாக்கர், (யெகோவாவின் சாட்சிகள் முன்பு இவ்வாறே அறியப்பட்டனர்) பிறந்தநாட்களை கொண்டாடினர். அன்றாட பரலோக மன்னா என்ற சிறிய ஆங்கில புத்தகத்தை அநேகர் வைத்திருந்தனர். அதில் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு பைபிள் வசனம் இருந்தது; உடன் பைபிள் மாணாக்கருடைய பிறந்த தேதிக்கு அருகே அவர்களுடைய சிறிய புகைப்படங்களை அநேகர் ஒட்டி வைத்திருந்தனர். பிப்ரவரி 15, 1909 ஆங்கில காவற்கோபுரம், அ.ஐ.மா., ஃப்ளாரிடாவிலுள்ள ஜாக்ஸன்வில்லில் நடந்த மாநாட்டில், சங்கத்தின் அப்போதைய தலைவர் சகோதரர் ரஸல் மேடைக்கு அழைக்கப்பட்டார் என்று சொல்கிறது. ஏன்? வியப்பில் ஆழ்த்தும் வண்ணம், திராட்சை பழங்கள், அன்னாசிப்பழங்கள், ஆரஞ்சுகள் நிறைந்த பெட்டிகள் பிறந்தநாள் பரிசாக அவருக்குக் கொடுக்கப்பட்டன. அது கடந்தகாலத்தை பற்றிய ஒரு காட்சியை நமக்கு கொடுக்கிறது. பிறந்தநாள் கொண்டாடும் பழக்கத்தைப் பற்றி இன்னும் சொல்ல வேண்டுமென்றால், அந்த சமயத்தில் சகோதரர்கள் டிசம்பர் 25-ஐ இயேசு பிறந்த ஆண்டின் நிறைவு நாளாக அல்லது பிறந்த நாளாக கொண்டாடினர்; புரூக்லின் தலைமையகத்தில் கிறிஸ்மஸ் இரவில் தடபுடலான விருந்து நடப்பதும் பழக்கமாக இருந்தது.

நிச்சயமாக, கடவுளுடைய மக்கள் ஆவிக்குரிய விதமாக பெரும் வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள். 1920-களில் அதிகமான ஆவிக்குரிய ஒளியானது, சகோதரர்கள் பின்வருபவற்றை புரிந்துகொள்ள உதவியது:

டிசம்பர் 25-ல் இயேசு பிறக்கவில்லை. அது புறமதத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு தேதி. இயேசுவின் மரணநாளை நினைவுகூரும்படி பைபிள் நமக்கு கட்டளையிடுகிறது; அவருடைய அல்லது மற்றவர்களுடைய பிறந்தநாளை அல்ல. இவ்வாறு செய்வது பிரசங்கி 7:1-ற்கு இசைவாக இருக்கிறது. ஒரு விசுவாசமுள்ள மனிதனுடைய பிறந்தநாளைவிட அவருடைய வாழ்க்கை எப்படி அமைகிறது என்பதே முக்கியம் என்ற இந்த உண்மைக்கு இசைவாக இருக்கிறது. விசுவாசமுள்ள எந்த ஊழியனும் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியதாக பைபிளில் பதிவு இல்லை. புறமதத்தவருடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களையே அது பதிவு செய்திருக்கிறது; அச்சமயத்தில் நடந்த கொடூரமான செயல்களையும் காட்டுகிறது. பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ள பிறந்தநாட்களின் பின்னணியைக் கொஞ்சம் ஆராய்வோம்.

யோசேப்பின் காலத்தில் வாழ்ந்த பார்வோனின் பிறந்தநாளே பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் பிறந்தநாள். (ஆதியாகமம் 40:20-23) ஹேஸ்டிங்ஸ் என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் ரிலிஜன் அண்ட் எதிக்ஸ்-ல் பிறந்தநாட்களைப் பற்றிய ஒரு கட்டுரை இவ்வாறு தெரிவித்தது: “பிறந்தநாள் காலக்கணக்கின்படி கொண்டாடப்படுகிறது, அந்த கொண்டாட்டப் பழக்கவழக்கங்களோ பண்டைய மதக் கொள்கைகளோடும் சம்பந்தப்பட்டுள்ளன.” பிறகு, பழங்கால எகிப்தின் ஆய்வாளர் சர் ஜெ. கார்டனர் வில்கின்சன்னுடைய கூற்றை இந்த என்ஸைக்ளோப்பீடியா மேற்கோள் காட்டுகிறது: “எகிப்தியர்கள் பிறந்தநாளுக்கும் பிறந்த மணிநேரத்துக்கும்கூட அதிக முக்கியத்துவம் கொடுத்தனர்; பெர்சியாவிலிருந்ததைப் போலவே, ஒவ்வொருவரும் பெரும் குதூகலத்தோடு பிறந்தநாளைக் கொண்டாடினர். நண்பர்கள் வரவேற்கப்பட்டனர்; அச்சமுதாயத்திலிருந்த எல்லா விதமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் இருந்தன; பயங்கர தடபுடலாக விருந்தும் பரிமாறினர்.”

பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கும் மற்றொரு பிறந்தநாள் கொண்டாட்டம் ஏரோது ராஜாவுடையது. அந்நிகழ்ச்சியின்போதுதான் முழுக்காட்டுபவராகிய யோவானின் தலை வெட்டப்பட்டது. (மத்தேயு 14:6-10) த இண்டர்நேஷனல் ஸ்டாண்டர்ட் பைபிள் என்ஸைக்ளோப்பீடியா (1979-ம் பதிப்பு) இத்தகைய உட்பார்வையை அளிக்கிறது: “கிரேக்க கலாச்சாரம் ஆரம்பிப்பதற்கு முன்பு வாழ்ந்த கிரேக்கர்கள் கடவுட்களின், பிரபலமானவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடினர். ஜெனெத்லியா என்ற கி[ரேக்]க பதமே இத்தகைய கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டது; இறந்துபோன பிரசித்திபெற்ற நபரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு ஜெனெசியா என்ற பதம் பயன்படுத்தப்பட்டது. 2 மக்[கபேயர்] 6:7-ல் நான்காம் அந்தியோகியஸின் மாதாந்திர ஜெனெத்லியா-வைப் பற்றி வாசிக்கிறோம். அச்சமயத்தில் ‘பலிப்பொருள்களில் பங்குகொள்ளுமாறு’ யூதர்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். . . . ஏரோது பிறந்தநாளைக் கொண்டாடியது அவர் கிரேக்க பழக்கத்திற்கிசைவாக நடந்ததைக் காட்டியது: கிரேக்க கலாச்சாரம் பரவுவதற்கு முன்பு இஸ்ரவேலர்கள் பிறந்தநாளைக் கொண்டாடியதற்கு எந்த ஆதாரமும் இல்லை.”

மெய் கிறிஸ்தவர்கள் இன்றுள்ள ஒவ்வொரு பழக்கவழக்கத்தின் ஆரம்பத்தைக் குறித்தும் பண்டைய கால மதத்தோடு அதற்கிருந்த தொடர்பைக் குறித்தும் அதிக கவலைப்படுவதில்லை. அதே சமயத்தில் கடவுளுடைய வார்த்தை தெள்ளத்தெளிவாக சுட்டிக்காட்டும் கருத்துக்களை அசட்டை செய்யவும் அவர்கள் தயாராயில்லை. பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ள பிறந்தநாள் கொண்டாட்டங்கள் புறமத ஆட்களுடையதுதாமே என்பதும் அச்சமயத்தில் கொடூர சம்பவங்கள் நடந்தன என்பதும் இதில் அடங்கும். எனவே, பிறந்தநாள் கொண்டாட்டத்தைக் குறித்து வேத வசனங்கள் சாதகமான கருத்தைக் கொடுப்பதில்லை; இதை உண்மைக் கிறிஸ்தவர்கள் புறக்கணிப்பதில்லை.

இதன் காரணமாக, கிறிஸ்தவர்கள் தங்கள் திருமண ஆண்டு நிறைவுநாளை கொண்டாடுவது முற்றிலும் சொந்த விஷயமாக இருந்தபோதிலும், பிறந்தநாட்களை கொண்டாடுவதிலிருந்து விலகியிருப்பதற்கு நல்ல காரணங்கள் இருக்கின்றன.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்