உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w99 2/1 பக். 14-19
  • மண்பாண்டங்களில் நம் பொக்கிஷம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மண்பாண்டங்களில் நம் பொக்கிஷம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பூர்வ இஸ்ரவேலில் வடிவமைத்தல்
  • ஆவிக்குரிய தேசத்தை வடிவமைத்தல்
  • இன்று தேவனுடைய இஸ்ரவேலரை வடிவமைத்தல்
  • ‘இதோ, திரள் கூட்டம்’
  • மகத்தான குயவரும் அவருடைய கைவண்ணமும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • கிறிஸ்தவ சகாப்தத்தில் தேவராஜ்ய நிர்வாகம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • யெகோவா நம்மை வடிவமைக்கிறார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2016
  • யெகோவா தரும் சிட்சை உங்களை வடிவமைக்கட்டும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
w99 2/1 பக். 14-19

மண்பாண்டங்களில் நம் பொக்கிஷம்

“இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.”—2 கொரிந்தியர் 4:7.

1. இயேசுவின் முன்மாதிரி நம்மை எவ்வாறு உற்சாகப்படுத்த வேண்டும்?

இயேசு இங்கே பூமியில் யெகோவாவால் வடிவமைக்கப்பட்டபோது அவர்தாமே மனிதவர்க்கத்தின் பாடுகளை அனுபவித்தார். உத்தமத்தைக் காத்துக்கொண்ட அவருடைய முன்மாதிரி நம்மை எவ்வளவாய் உற்சாகப்படுத்த வேண்டும்! அப்போஸ்தலன் பேதுரு நமக்கு சொல்கிறார்: “இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.” (1 பேதுரு 2:21) இப்படி வடிவமைக்கப்படுவதற்கு இயேசு இடமளித்ததால் இந்த உலகை வென்றார். வெற்றிவீரர்களாய் திகழ தம்முடைய அப்போஸ்தலருக்கும் தைரியமூட்டினார். (அப்போஸ்தலர் 4:13, 31; 9:27, 28; 14:3; 19:8) அவர்களுக்கு கொடுத்த கடைசி பேச்சின் இறுதியில் என்னே மகத்தான உற்சாகத்தை கொடுத்தார்! அவர் சொன்னார்: “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்.”—யோவான் 16:33.

2. இந்த உலகம் குருடாக இருக்கிறபோதிலும், என்ன ஒளி நம்மிடம் உள்ளது?

2 இதைப் போலவே, ‘இப்பிரபஞ்சத்தின் தேவனால்’ குருடாக்கப்பட்டதை ‘சுவிசேஷத்தின் மகிமையான ஒளியுடன்’ வித்தியாசப்படுத்திக் காண்பித்தப்பின், நம்முடைய மதிப்புமிகு ஊழியத்தைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு சொன்னார்: “இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம். நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை.” (2 கொரிந்தியர் 4:4, 7-9) நாம் எளிதில் உடையத்தக்க ‘மண்பாண்டங்கள்’ என்றாலும், சாத்தானுடைய உலகை முற்றிலும் வெல்ல கடவுள் தம்முடைய ஆவியால் நம்மை வடிவமைத்திருக்கிறார்.—ரோமர் 8:35-39; 1 கொரிந்தியர் 15:57.

பூர்வ இஸ்ரவேலில் வடிவமைத்தல்

3. யூத தேசம் வடிவமைக்கப்படுவதை ஏசாயா எவ்வாறு விவரித்தார்?

3 தனிநபர்களை மட்டுமல்ல, முழு தேசத்தாரையும் யெகோவா வடிவமைக்கிறார். உதாரணமாக, யெகோவாவால் வடிவமைக்கப்படுவதற்கு பூர்வ இஸ்ரவேல் இணங்கியபோது, அது செழித்தோங்கியது. ஆனால் கடைசியில் கீழ்ப்படியாமை எனும் போக்கில் சென்று தன்னை கடினமாக்கிக்கொண்டது. அதனால், இஸ்ரவேலை வடிவமைத்தவர் அதன்மீது ‘கடுந்துன்பத்தை’ கொண்டுவந்தார். (ஏசாயா 45:9) பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டில், இஸ்ரவேலின் அப்பட்டமான பாவத்தைப் பற்றி யெகோவாவிடம் ஏசாயா பேசினார். அவர் சொன்னதாவது: “கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை. . . . இன்பமான எங்களுடைய ஸ்தானங்களெல்லாம் பாழாயின.” (ஏசாயா 64:8-11) இஸ்ரவேல் அழிவுக்கு தகுதியான ஒரு பாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

4. எரேமியாவால் நடித்துக்காட்டப்பட்ட உவமை என்ன?

4 ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, கணக்குத்தீர்க்கும் நாள் நெருங்கியபோது, ஒரு மண்பாண்டத்தை எடுத்துக்கொண்டு எருசலேமின் மூப்பர்களோடு இன்னோம் பள்ளத்தாக்குக்கு வரும்படி எரேமியாவிடம் யெகோவா கூறினார்; மேலும் அவரிடம் இவ்வாறு கட்டளையிட்டார்: “உன்னோடே கூடவந்த மனுஷருடைய கண்களுக்கு முன்பாக அந்தக் கலசத்தை உடைத்துப்போட்டு, அவர்களை நோக்கி: திரும்பச் செப்பனிடப்படக்கூடாத குயவனுடைய மண்பாண்டத்தை உடைத்துப்போட்ட வண்ணமாக நான் இந்த ஜனத்தையும் இந்த நகரத்தையும் உடைத்துப்போடுவேன்; புதைக்கிறதற்கு இடமில்லாததினால் தோப்பேத்திலே சவங்களைப் புதைப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.”—எரேமியா 19:10, 11.

5. இஸ்ரவேலின்மீது யெகோவாவின் நியாயத்தீர்ப்பு எந்தளவுக்கு இருந்தது?

5 பொ.ச.மு. 607-ல், நேபுகாத்நேச்சார் எருசலேமை அதன் ஆலயத்தோடு அழித்து உயிரோடிருந்த யூதர்களை பாபிலோனுக்கு சிறைக்கைதிகளாய் கொண்டுபோனார். ஆனால், நாடுகடத்தப்பட்டிருந்த 70 ஆண்டுகளுக்குப் பிறகு, மனந்திரும்பிய யூதர்கள் எருசலேமையும் அதன் ஆலயத்தையும் திரும்ப கட்டுவதற்கு மீண்டும் வரமுடிந்தது. (எரேமியா 25:11) ஆனால், பொ.ச. முதல் நூற்றாண்டிற்குள், அத்தேசம் மீண்டும் மகத்தான குயவரை கைவிட்டு விட்டது, கடவுளுடைய சொந்த குமாரனையே கொலை செய்யும் அளவுக்கு நெறிகெட்டுப்போய் குற்றச்செயலின் உச்சத்திற்கே சென்றுவிட்டது. பொ.ச. 70-ல், யூத காரிய ஒழுங்குமுறையை துடைத்தழித்து எருசலேமையும் அதன் ஆலயத்தையும் தவிடுபொடியாக்கி தண்டனை வழங்குவதற்கு ரோம உலக வல்லரசை கடவுள் பயன்படுத்தினார். ‘பரிசுத்தமும் அழகுமிக்க’ ஒன்றாக மீண்டும் ஒருபோதும் யெகோவாவின் கரத்தால் அத்தேசம் வடிவமைக்கப்படவில்லை.a

ஆவிக்குரிய தேசத்தை வடிவமைத்தல்

6, 7. (அ) ஆவிக்குரிய இஸ்ரவேல் வடிவமைக்கப்படுவதை பவுல் எவ்வாறு விவரிக்கிறார்? (ஆ) ‘கிருபா பாத்திரங்களின்’ மொத்த எண்ணிக்கை என்ன, அது யாராலானது?

6 இயேசுவை ஏற்றுக்கொண்ட யூதர்கள் புதிய தேசத்தின் அடித்தள அங்கத்தினர்களாக, ‘தேவனுடைய இஸ்ரவேலாக’ வடிவமைக்கப்பட்டார்கள். (கலாத்தியர் 6:16) அப்படியானால், பவுலின் வார்த்தைகள் பொருத்தமானவை: “மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ? தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும், தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபா பாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய், அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாய் இருந்தாரானால் உனக்கென்ன?”—ரோமர் 9:21-23.

7 இந்தக் ‘கிருபா பாத்திரங்கள்’ 1,44,000 பேர் என உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு பிற்பாடு தெரியப்படுத்தினார். (வெளிப்படுத்துதல் 7:4; 14:1) பிறவியிலேயே இஸ்ரவேலராக இருந்தவர்கள் அந்த எண்ணிக்கையைப் பூர்த்தி செய்யவில்லை; எனவே, யெகோவா தம்முடைய இரக்கத்தை புறஜாதிகளுக்கு காண்பித்தார். (ரோமர் 11:25, 26) சிசு பருவத்திலிருந்த கிறிஸ்தவ சபை வேகமாய் வளர்ந்தது. 30 ஆண்டுகளுக்குள், நற்செய்தி “வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டு” வந்தது. (கொலோசெயர் 1:23) இதனால், சிதறுண்ட எண்ணற்ற உள்ளூர் சபைகள்மீது தகுந்த மேற்பார்வை செலுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டது.

8. முதல் ஆளும்குழு யாராலானது, இந்தக் குழு எவ்வாறு வளர்ச்சியுற்றது?

8 முதல் ஆளும் குழுவை ஏற்படுத்த இயேசு 12 அப்போஸ்தலரை தயார்படுத்தி, அவர்களையும் மற்றவர்களையும் ஊழியத்திற்காக பயிற்றுவித்தார். (லூக்கா 8:1; 9:1, 2; 10:1, 2) பெந்தெகொஸ்தே பொ.ச. 33-ல், கிறிஸ்தவ சபை ஸ்தாபிக்கப்பட்டது; காலப்போக்கில் அதன் ஆளும்குழு ‘எருசலேமிலிருக்கிற அப்போஸ்தலராலும் மூப்பர்களாலும்’ ஆன ஒன்றாக விரிவாக்கப்பட்டது. இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரனாகிய யாக்கோபு—இவர் அப்போஸ்தலனாக இல்லாதபோதிலும்—சிலகாலம் தலைமைதாங்கியதாக தெரிகிறது. (அப்போஸ்தலர் 12:17; 15:2, 6, 13; 21:18) சரித்திராசிரியர் யூஸிபியஸ் சொல்கிறபடி, துன்புறுத்தலுக்கு அப்போஸ்தலர்கள் விசேஷித்த இலக்கானதால், பல இடங்களுக்கு சிதறிப்போனார்கள். பின் அதற்கேற்றவாறு ஆளும்குழுவின் அமைப்பும் மாற்றியமைக்கப்பட்டது.

9. வருந்தத்தக்க என்ன சம்பவம் நடைபெறும் என இயேசு முன்னுரைத்தார்?

9 முதல் நூற்றாண்டின் முடிவில், கோதுமையைப் போன்ற ‘பரலோக ராஜ்யத்தின்’ சுதந்தரவாளிகளுக்கு மத்தியில் ‘சத்துருவாகிய பிசாசு,’ ‘களைகளை விதைக்க’ ஆரம்பித்தான். ‘காரிய ஒழுங்குமுறையின் முடிவில்’ அறுவடை வரை வருந்தத்தக்க இந்த வளர்ச்சி அனுமதிக்கப்படும் என்பதை இயேசு தீர்க்கதரிசனம் உரைத்திருந்தார். அதற்குப் பிறகு, மீண்டும் ‘நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப் போலப் பிரகாசிப்பார்கள்.” (மத்தேயு 13:24, 25, 37-43; NW) அது எப்பொழுது?

இன்று தேவனுடைய இஸ்ரவேலரை வடிவமைத்தல்

10, 11. (அ) நவீனகால தேவனுடைய இஸ்ரவேலரை வடிவமைத்தல் எவ்வாறு ஆரம்பமானது? (ஆ) கிறிஸ்தவமண்டலத்தையும் ஊக்கமான பைபிள் மாணாக்கர்களையும் வேறுபடுத்திக் காட்டும் பைபிள் போதனைகள் யாவை?

10 1870- ல், அ.ஐ.மா. பென்ஸில்வேனியாவிலுள்ள பிட்ஸ்பர்கில் பைபிள் படிப்பு தொகுதி ஒன்றை சார்ல்ஸ் டேஸ் ரஸல் ஏற்படுத்தினார். காவற்கோபுரம் என இன்று அழைக்கப்படும் பத்திரிகையை மாதாந்திர வெளியீடாக 1879-ல் பிரசுரிக்க ஆரம்பித்தார். அப்பொழுது பைபிள் மாணாக்கர்கள் என அழைக்கப்பட்ட இவர்கள், ஆத்துமா அழியாமை, அக்கினி நரகம், உத்தரிக்கும் ஸ்தலம், திரித்துவ கடவுள், குழந்தை ஞானஸ்நானம் போன்ற வேதப்பூர்வமற்ற புறமத போதனைகளை கிறிஸ்தவமண்டலம் ஏற்றுக்கொண்டிருந்ததை விரைவிலேயே கண்டுணர்ந்தார்கள்.

11 ஆனால், மிக முக்கியமாக, பைபிள் சத்தியத்தை நேசிக்கும் இவர்கள், இயேசுவின் கிரயபலியில் மீட்கப்படுதல், கடவுளுடைய ராஜ்யத்தில் சமாதானமான பரதீஸிய பூமியில் நித்திய ஜீவனுக்கு உயிர்த்தெழுதல் போன்ற அடிப்படை பைபிள் போதனைகளை மீண்டும் நிலைநாட்ட ஆரம்பித்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக, சர்வலோகத்தின் உன்னத பேரரசராகிய யெகோவா தேவன் சீக்கிரத்தில் நியாயநிரூபணம் செய்யப்படுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்ற கர்த்தருடைய ஜெபம் பதிலளிக்கப்பட போவதை இந்த பைபிள் மாணாக்கர்கள் நம்பினார்கள். (மத்தேயு 6:9, 10) சமாதானத்தை நேசிக்கும் கிறிஸ்தவர்களின் உலகளாவிய சமுதாயமாக இவர்கள் பரிசுத்த ஆவியால் வடிவமைக்கப்பட்டு வந்தார்கள்.

12. பைபிள் மாணாக்கர்கள் எவ்வாறு முக்கியமான ஆண்டை உணர ஆரம்பித்தனர்?

12 தானியேல் நான்காம் அதிகாரத்தையும் மற்ற தீர்க்கதரிசனங்களையும் ஆழ்ந்து ஆராய்ந்ததால், மேசியானிய ராஜாவாக இயேசுவின் வந்திருத்தல் சமீபத்தில் இருக்க வேண்டும் என பைபிள் மாணாக்கர்கள் நம்பினார்கள். 1914-தான் ‘புறஜாதிகளின் காலங்கள்’ முடிவடையும் ஆண்டு என்பதை அவர்கள் கண்டுணர்ந்தார்கள். (லூக்கா 21:24; எசேக்கியேல் 21:26, 27) பைபிள் மாணாக்கர்கள் வேகமாக தங்களுடைய நடவடிக்கையை விரிவுபடுத்தினார்கள்; ஐக்கிய மாகாணங்கள் முழுவதிலும் பைபிள் வகுப்புகளை (பின்பு சபைகள் என அழைக்கப்பட்டன) ஏற்படுத்தினார்கள். இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில், அவர்களுடைய பைபிள் கல்வி வேலை ஐரோப்பாவிலும் ஆஸ்திரேலியாவிலும் பரவ ஆரம்பித்தது. நல்ல ஒழுங்கமைப்பு அவசியமானது.

13. பைபிள் மாணாக்கர்கள் பெற்ற சட்டப்பூர்வ அந்தஸ்து என்ன, சொஸைட்டியின் முதல் பிரெஸிடென்ட் செய்த குறிப்பிடத்தக்க சேவை என்ன?

13 பைபிள் மாணாக்கர்களுக்கு சட்டப்பூர்வ அந்தஸ்தை வழங்குவதற்கு, பென்ஸில்வேனியாவிலுள்ள பிட்ஸ்பர்கை தலைமையகமாக கொண்டு 1884-ல் ஐக்கிய மாகாணங்களில் சையோன்ஸ் உவாட்ச் டவர் டிராக்ட் சொஸைட்டி சட்டப்பூர்வ குழுவாக அமைக்கப்பட்டது. அதிலுள்ள இயக்குநர்கள் ஒரு மத்திப ஆளும்குழுவாக சேவித்து, கடவுளுடைய ராஜ்ய செய்தியை உலகளாவ பிரசங்கிக்கும் வேலையை மேற்பார்வை செய்தார்கள். சொஸைட்டியின் முதல் பிரெஸிடென்ட் சார்ல்ஸ் டி. ரஸல், வேதாகமங்களில் படிப்புகள் என்ற ஆறு தொகுதி அடங்கிய ஆங்கில புத்தகத்தை எழுதினார்; பிரசங்கிப்பதற்காக அநேக இடங்களுக்குப் பயணமும் செய்தார். தன்னுடைய பைபிள் ஆராய்ச்சிகளை ஆரம்பிப்பதற்கு முன்பு திரட்டிய செல்வத்தை உலகளாவிய ராஜ்ய வேலைக்கு நன்கொடையாக கொடுத்துவிட்டார். 1916-ல், ஐரோப்பாவில் முதல் உலக மகா யுத்தம் தீவிரமடைந்தபோது, பிரசங்க வேலைக்கு பயணம் செய்கையில் சகோதரர் ரஸல் காலமானார். கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி சாட்சிகொடுக்கும் வேலையை விரிவாக்குவதற்கு தம்மிடமிருந்த அனைத்தையும் கொடுத்துவிட்டார்.

14. ஜே. எஃப். ரதர்ஃபர்டு எவ்வாறு ‘நல்ல போராட்டத்தை போராடினார்?’ (2 தீமோத்தேயு 4:7)

14 மிஸ்ஸோரியில் தற்காலிக நீதிபதியாக பணிபுரிந்த ஜோசஃப் எஃப். ரதர்ஃபர்டு அடுத்த பிரெஸிடென்ட் ஆனார். பைபிள் சத்தியத்தை அவர் பயமின்றி ஆதரித்துப் பேசியதால், ‘தீமையைக் கட்டளையால் பிறப்பிப்பதில்’ கிறிஸ்தவமண்டல பாதிரிமார் அரசியல்வாதிகளுடன் சேர்ந்துகொண்டார்கள். ஜூன் 21, 1918-ல், சகோதரர் ரதர்ஃபர்டும் முக்கிய பைபிள் மாணாக்கர்கள் ஏழுபேரும் சிறையிலடைக்கப்பட்டார்கள்; ஒரேசமயத்தில் 10 அல்லது 20 ஆண்டுகளுக்கு பன்மடங்காக தண்டனை விதிக்கப்பட்டார்கள். பைபிள் மாணாக்கர்கள் எதிர்த்துப் போராடினார்கள். (சங்கீதம் 94:20; பிலிப்பியர் 1:7) மேல்முறையீடு செய்கையில், மார்ச் 26, 1919 அன்று விடுதலை செய்யப்பட்டார்கள்; அதன் பின்பு ராஜதுரோகம் என்ற பொய் குற்றச்சாட்டிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டார்கள்.b இந்த அனுபவம், சத்தியத்தை தைரியத்தோடு ஆதரித்துப் பேசுவதற்கு வடிவமைக்கப்பட உதவியது. மகா பாபிலோனின் எதிர்ப்பின் மத்தியிலும் யெகோவாவின் உதவியால் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் ஆவிக்குரிய போராட்டத்தில் எல்லா முறைகளையும் முயன்று வெற்றிபெற உதவியது. இந்தப் போராட்டம் இன்று வரையாகவும் தொடர்ந்து வந்திருக்கிறது.—ஒப்பிடுக: மத்தேயு, 23-ம் அதிகாரம்; யோவான் 8:38-47.

15. ஏன் 1931 சரித்திரப்பூர்வமாக முக்கிய ஆண்டு?

15 1920-களிலும் 1930-களிலும், அபிஷேகம் பண்ணப்பட்ட தேவனுடைய இஸ்ரவேலர் மகத்தான குயவருடைய வழிநடத்துதலில் தொடர்ந்து வடிவமைக்கப்பட்டார்கள். வேதவசனங்களிலிருந்து தீர்க்கதரிசன ஒளி வீசத்தொடங்கியது, அது யெகோவாவுக்கு மகிமையைக் கொண்டுவந்தது, இயேசுவின் மேசியானிய ராஜ்யத்தின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்தியது. 1931-ல், யெகோவாவின் சாட்சிகள் என்ற புதிய பெயரை ஏற்றுக்கொள்வதில் பைபிள் மாணாக்கர்கள் அதிக சந்தோஷப்பட்டார்கள்.—ஏசாயா 43:10-12; மத்தேயு 6:9, 10; 24:14.

16 மற்றும் 19-ம் பக்கத்திலுள்ள பெட்டிக்கு. எப்பொழுது முழு எண்ணிக்கையாகிய 1,44,000 பூர்த்தி செய்யப்பட்டது, இதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?

16 1930-களில், ‘தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் அழைக்கப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாய்’ இருக்கிறவர்களின் எண்ணிக்கையாகிய 1,44,000 பூர்த்தி செய்யப்பட்டதாக தோன்றியது. (வெளிப்படுத்துதல் 17:14; பக்கம் 19-ல் உள்ள பெட்டியைக் காண்க.) முதல் நூற்றாண்டில் எத்தனை பேர் கூட்டிச் சேர்க்கப்பட்டார்கள் என்பதும் கிறிஸ்தவமண்டலத்தின் பெரும் விசுவாசதுரோக இருண்ட நூற்றாண்டுகளின்போது ‘களைகளிலிருந்து’ எத்தனை பேர் கூட்டிச் சேர்க்கப்பட்டார்கள் என்பதும் நமக்குத் தெரியாது. 1935-ல், பிரஸ்தாபிகளின் மொத்த எண்ணிக்கை 56,153 என்ற உச்சநிலையில் இருந்தது. ஆனால், 52,465 பேர் நினைவு ஆசரிப்பு சின்னங்களில் பங்குகொண்டதன் மூலம் தங்களுடைய பரலோக நம்பிக்கையை தெரிவித்தார்கள். இன்னும் கூட்டிச் சேர்க்கப்படப் போகிறவர்களுடைய நம்பிக்கை என்ன?

‘இதோ, திரள் கூட்டம்’

17. 1935-ல் நிகழ்ந்த சரித்திரப்பூர்வ சம்பவம் என்ன?

17 1935, மே 30 முதல் ஜூன் 3 வரை, அ.ஐ.மா. வாஷிங்டன், டிஸி-யில் நடத்தப்பட்ட ஒரு மாநாட்டில், சகோதரர் ரதர்ஃபர்டு, “பெரும் திரள்கூட்டம்” என்ற தலைப்பில் ஒரு திருப்புமுனை பேச்சை கொடுத்தார். ‘ஒருவனும் எண்ணக்கூடாத’ இந்தத் தொகுதி, 1,44,000 பேர் அடங்கிய ஆவிக்குரிய இஸ்ரவேல் முத்திரை போடப்படுவது முடிவடைகையில் தோன்றும். இவர்களும் ‘ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தின்’ மீட்கும்பொருள் வல்லமையில் விசுவாசம் வைத்து, வணக்கத்திற்கான யெகோவாவின் ஆலய ஏற்பாட்டில் பரிசுத்த சேவை செய்கிறார்கள். ஒரு தொகுதியாக, ‘மரணமில்லாத’ பூமிக்குரிய பரதீஸை சுதந்தரிப்பதற்கு இவர்கள் ‘மிகுந்த உபத்திரவத்திலிருந்து [உயிரோடே] வெளிவருவார்கள்.’ இந்த மாநாட்டிற்கு பல வருடங்களுக்கு முன்பு, இந்தத் தொகுதியினர் யோனதாப் வகுப்பினராக பேசப்பட்டார்கள்.—வெளிப்படுத்துதல் 7:9-17; 21:4; எரேமியா 35:10.

18. 1938 என்ன முறைகளில் திருப்புமுனையாக இருந்தது?

18 இந்த இரண்டு வகுப்பினரை தெளிவாக அடையாளம் கண்டுகொள்வதில் 1938-ம் ஆண்டு திருப்புமுனையாக அமைந்தது. மார்ச் 15 மற்றும் ஏப்ரல் 1, 1938 ஆங்கில காவற்கோபுர இதழ்கள், “அவருடைய மந்தை” என்ற இரண்டு-பாக படிப்புக் கட்டுரையை பிரசுரித்திருந்தது. அது, அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோர் மற்றும் அவர்களுடைய கூட்டாளிகளாகிய திரள் கூட்டத்தாரின் சம்பந்தப்பட்ட ஸ்தானங்களை தெளிவாக விளக்கியது. ஜூன் 1 மற்றும் ஜூன் 15 இதழ்கள், “அமைப்பு” என்ற படிப்பு கட்டுரைகளை தாங்கிவந்தது; அது ஏசாயா 60:17-ன் அடிப்படையில் இருந்தது. உள்ளூர் ஊழியர்களை நியமிப்பதற்கு ஆளும்குழுவை கேட்கும்படி அனைத்து சபைகளும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இவ்வாறாக, முன்னேற்றமடைந்த, கடவுளால் நியமிக்கப்பட்ட தேவராஜ்ய ஏற்பாடு அமைக்கப்பட்டது. சபைகள் அப்படியே செய்தன.

19 மற்றும் அடிக்குறிப்பு. ‘வேறே ஆடுகளுக்கு’ கொடுக்கப்பட்ட பொதுவான அழைப்பு இப்பொழுது 60 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது என்பதை என்ன உண்மைகள் உறுதிப்படுத்துகின்றன?

19 1939 யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தரப் புத்தகத்தில் (ஆங்கிலம்) வெளிவந்த அறிக்கை இவ்வாறு குறிப்பிட்டது: “இப்பொழுது பூமியில் கிறிஸ்துவின் அபிஷேகம் பண்ணப்பட்ட சீஷர்கள் சிலரே இருக்கின்றனர், அவர்களுடைய எண்ணிக்கை ஒருபோதும் அதிகரிக்காது. பைபிளில் இவர்கள், கடவுளுடைய அமைப்பாகிய சீயோன் புத்திரருடைய ‘மீதியானோர்’ என பெயரிடப்பட்டுள்ளார்கள். (வெளி. 12:17, NW) கர்த்தர் இப்பொழுது தம்மிடம் ‘வேறே ஆடுகளை’ கூட்டிச் சேர்த்துவருகிறார்; இவர்களே ‘திரள் கூட்டத்தார்.’ (யோவா. 10:16) மீதியானோருடன் தோளோடு தோள்சேர்ந்து வேலை செய்யும் அவருடைய தோழர்களே இப்பொழுது கூட்டிச் சேர்க்கப்பட்டிருப்பவர்கள். இந்த நேரம் முதற்கொண்டு ‘வேறே ஆடுகளாய்’ ஆகிறவர்கள், ‘திரள் கூட்டத்தார்’ கூட்டிச் சேர்க்கப்படும் வரை எண்ணிக்கையில் அதிகரிப்பார்கள்.” திரள் கூட்டத்தாரை கூட்டிச் சேர்ப்பதற்கு அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோர் வடிவமைக்கப்பட்டிருந்தனர். இப்பொழுது இவர்களும் வடிவமைக்கப்பட வேண்டும்.c

20. 1942 முதல் செய்யப்பட்ட அமைப்பு சார்ந்த மாற்றங்கள் என்ன?

20 ஜனவரி 1942-ல், அதாவது இரண்டாம் உலகப் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, ஜோசப் ரதர்ஃபர்டு காலமானார், அவருக்குப் பின் நேதன் நார் பிரெஸிடென்டாக பொறுப்பேற்றார். சபைகளில் தேவராஜ்ய பள்ளிகளையும் மிஷனரிகளைப் பயிற்றுவிப்பதற்கு கிலியட் பள்ளியையும் ஏற்படுத்தியதற்காக சொஸைட்டியின் மூன்றாவது பிரெஸிடென்ட் அன்போடு நினைவுகூரப்படுகிறார். 1944-ல் நடந்த சொஸைட்டியின் வருடாந்தரக் கூட்டத்தில், சொஸைட்டியின் சாசனத்தை திருத்தியமைத்ததை அறிவிப்பு செய்தார். அதன்படி, பொருளாதார நன்கொடைகளின் அடிப்படையில் அல்ல, ஆனால் ஆவிக்குரிய தகுதியின் அடிப்படையில் உறுப்பினர் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். அடுத்த 30 ஆண்டுகளில், உலகளாவிய பிராந்தியத்தில் வேலைசெய்த ஊழியர்களுடைய எண்ணிக்கை 1,56,299-லிருந்து 21,79,256-ஆக அதிகரித்தது. 1971-75-ல், கூடுதலாக அமைப்பு சார்ந்த மாற்றங்கள் அவசியமாயின. பிரெஸிடென்ட்டாக சேவைசெய்யும் ஒரே நபரே உலகம் முழுவதும் செய்யப்படும் ராஜ்ய வேலையை முழுமையாக மேற்பார்வை செய்ய முடியாது. ஆளும்குழுவில் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 பேராக உயர்த்தப்பட்டது—அதிலுள்ள சேர்மேன் சுழற்சிமுறையில் பொறுப்பு வகிப்பார். அவர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் தங்களுடைய பூமிக்குரிய வாழ்க்கையை முடித்துவிட்டனர்.

21. ராஜ்யத்திற்கான சிறுமந்தையைச் சேர்ந்த அங்கத்தினர்களை எது தகுதிபெற செய்திருக்கிறது?

21 சிறுமந்தையைச் சேர்ந்த மீதியானோர் பல்லாண்டுகளாக அனுபவித்த சோதனைகளால் வடிவமைக்கப்பட்டிருக்கிறார்கள். ‘ஆவியின் சாட்சியை’ பெற்ற இவர்கள் நல்ல தைரியமுள்ளவர்களாய் இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. அவர்களைப் பற்றி இயேசு இவ்வாறு சொன்னார்: “எனக்கு நேரிட்ட சோதனைகளில் என்னோடேகூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே. ஆகையால், என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினதுபோல், நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன். நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் போஜன பானம்பண்ணி, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாய்ச் சிங்காசனங்களின்மேல் உட்காருவீர்கள்.”—ரோமர் 8:16, 17, NW; லூக்கா 12:32; 22:28-30.

22, 23. சிறுமந்தையும் வேறே ஆடுகளும் எவ்வாறு வடிவமைக்கப்படுகிறார்கள்?

22 பூமியில் வசிக்கும் ஆவியால்-அபிஷேகம் பண்ணப்பட்டோருடைய எண்ணிக்கை குறைந்திருப்பதால், திரள் கூட்டத்தைச் சேர்ந்த முதிர்ச்சியுள்ள சகோதரர்கள் உலகம் முழுவதிலுமுள்ள கிட்டத்தட்ட எல்லா சபைகளிலும் ஆவிக்குரிய மேற்பார்வை செய்ய நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அபிஷேகம் பண்ணப்பட்ட சாட்சிகளில் மீதியானோர் அனைவருமே தங்களுடைய பூமிக்குரிய வாழ்க்கையை முடிக்கையில், வேறே ஆடுகளைச் சேர்ந்த இளவரசர்களாகிய சரிம் (sa·rimʹ), பூமியிலுள்ள அதிபதியின் நிர்வாக வேலைகளை நிறைவேற்றுவதற்கு நன்கு பயிற்றுவிக்கப்பட்டிருப்பார்கள்.—எசேக்கியேல் 44:3; ஏசாயா 32:1.

23 சிறுமந்தையும் வேறே ஆடுகளும் ஒன்றுபோலவே கனத்திற்குரிய பாத்திரங்களாக தொடர்ந்து வடிவமைக்கப்படுகிறார்கள். (யோவான் 10:14-16) நம்முடைய நம்பிக்கை ‘புதிய வானத்தில்’ இருந்தாலும்சரி அல்லது ‘புதிய பூமியில்’ இருந்தாலும்சரி, யெகோவாவின் அழைப்புக்கு நாம் முழு இருதயத்தோடு பிரதிபலிப்போமாக: “நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்; இதோ, [பரலோக] எருசலேமைக் களிகூருதலாகவும், அதின் ஜனத்தை மகிழ்ச்சியாகவும் சிருஷ்டிக்கிறேன்.” (ஏசாயா 65:17, 18) பலவீன மானிடர்களாகிய நாம் எப்பொழுதும் தாழ்மையோடு சேவித்து, ‘இயல்புக்கும் அப்பாற்பட்ட வல்லமையால்’—கடவுளுடைய பரிசுத்த ஆவியின் வல்லமையால்—வடிவமைக்கப்படுவோமாக.—2 கொரிந்தியர் 4:7; யோவான் 16:13.

[அடிக்குறிப்புகள்]

a பூர்வ இஸ்ரவேலினால் முன்நிழலாக காண்பிக்கப்படும் விசுவாசதுரோக கிறிஸ்தவமண்டலத்திற்கும் யெகோவாவிடமிருந்து இதுபோன்ற நியாயத்தீர்ப்பே வரும் என்பது எச்சரிப்பாய் இருப்பதாக.—1 பேதுரு 4:17, 18.

b பைபிள் மாணாக்கர்களை ஜாமீனில் விடுவதற்கு மறுத்த ரோம கத்தோலிக்க நீதிபதி மன்ட்டன், லஞ்சம் வாங்கியதற்காக குற்றத்தீர்ப்பளித்து பிற்பாடு சிறையிலடைக்கப்பட்டார்.

c 1938-ல் உலகம் முழுவதும் நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்தோர் 73,420 பேர்; 39,225 பேர்—ஆஜராயிருந்தவர்களில் 53 சதவீதத்தினர்—அடையாளச் சின்னங்களில் பங்கெடுத்தனர். 1998-க்குள்ளாக, ஆஜரானோரின் எண்ணிக்கை 1,38,96,312-க்கு உயர்ந்திருந்தது; 8,756 பேர் மட்டுமே பங்குகொண்டனர்; ஒவ்வொரு 10 சபைகளுக்கும் சராசரியாக ஒருவர்.

ஞாபகமிருக்கிறதா?

◻ தம் பிதாவால் வடிவமைக்கப்படுவதற்கு இடமளிக்கையில், நம் முன்மாதிரியானவராகிய இயேசு எப்படி இருந்தார்?

◻ பூர்வ இஸ்ரவேலில் நடந்த வடிவமைப்பு என்ன?

◻ ‘தேவனுடைய இஸ்ரவேலர்’ எவ்வாறு இன்றுவரை வடிவமைக்கப்படுகின்றனர்?

◻ என்ன நோக்கத்திற்காக ‘வேறே ஆடுகள்’ வடிவமைக்கப்படுகின்றனர்?

[பக்கம் 18-ன் பெட்டி]

கிறிஸ்தவமண்டலத்தில் கூடுதலான வடிவமைத்தல்

கிரீஸிலுள்ள ஆதன்ஸ் நகரிலிருந்து வரும் ஒரு கூட்டாண்மை பத்திரிகை, சமீபத்தில் நியமிக்கப்பட்ட கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச் பாதிரி பற்றி இவ்வாறு அறிக்கை செய்தது: “அவர் சமாதான தூதுவராக இருக்க வேண்டும். ஆனால் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச் தலைவர் போருக்குத் தயாராகும் ஜெனரல் போல் செயல்படுகிறார்.

“‘தேவைப்பட்டால், இரத்தம் சிந்தவும் தியாகம் செய்யவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். சர்ச்சாக நாங்கள் சமாதானத்திற்காக ஜெபிக்கிறோம். . . . ஆனால் தேவைப்படும்போது நாங்கள் பரிசுத்த ஆயுதங்களை ஆசீர்வதிக்கிறோம்.’ ஆர்ச் பிஷப் கிறிஸ்டோடியூலஸ் சமீபத்தில் கன்னி மரியாளின் விண்ணேற்பு நாளில் சொன்னார், கிரீஸ் ஆயுதப் படை நாளைப் போலவே இதுவும் கொண்டாடப்படுகிறது.”

[பக்கம் 19-ன் பெட்டி]

“இனிமேல் சேர்க்கைகள் இல்லை”

பூமிக்குரிய நம்பிக்கையுடைய வேறே ஆடுகள் அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோரென உரிமைபாராட்டும் ஒருவரை முழுக்காட்டும் வாய்ப்பைப் பற்றி 1970-ல் நடந்த கிலியட்டில் உவாட்ச் டவர் சொஸைட்டியின் அப்போதைய வைஸ் பிரெஸிடென்ட் ஃப்ரெட்ரிக் ஃப்ரான்ஸ் சொன்னார். அது சம்பவிக்குமா? வேறே ஆடுகளைச் சேர்ந்த யோவான்ஸ்நானன் இயேசுவையும் அப்போஸ்தலரில் சிலரையும் முழுக்காட்டினார் என அவர் விளக்கினார். இன்னும் அதிக மீதியானோரை கூட்டிச் சேர்ப்பதற்கான அழைப்பு இருக்குமா என்று அவர் கேட்டார். “இல்லை, இனிமேல் சேர்க்கைகள் இல்லை!” என்று சொன்னார். “அந்த அழைப்பு 1931-35-லேயே முடிவடைந்துவிட்டது! இனிமேல் சேர்க்கைகள் இல்லை. அப்படியானால், நினைவு ஆசரிப்பு சின்னங்களில் பங்குகொள்ளும் புதியவர்களைப் பற்றியென்ன? அவர்கள் மீதியானோராக இருந்தால், மாற்றீடு செய்யப்படுகிறவர்களே அவர்கள்! அபிஷேகம் செய்யப்பட்டவர்களுடன் சேர்க்கப்பட்டவர்கள் அல்ல, ஆனால் வழிவிலகிப்போனவர்களுக்கு மாற்றீடு செய்யப்படுகிறவர்கள்.”

[பக்கம் 15-ன் படம்]

நாம் செய்யும் சேவையை எவ்வளவு பொக்கிஷமாய் மதிக்கிறோம்!

[பக்கம் 16-ன் படம்]

பூர்வ இஸ்ரவேல் அழிவுக்கான பாத்திரமானது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்