உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w01 8/15 பக். 30
  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • இதே தகவல்
  • துன்புறும் அநாதைகளையும் விதவைகளையும் ஆதரியுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • எதிர்மறையான உணர்ச்சிகளை சமாளிப்பது எப்படி
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • வயதானவர்களுக்கு மதிப்புக் கொடுங்கள்
    கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
w01 8/15 பக். 30

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

சமீபத்தில் வெளிவந்த காவற்கோபுர இதழ்களை வாசித்து மகிழ்ந்தீர்களா? அப்படியானால் பின்வரும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா என பாருங்களேன்:

• யோபு 38-⁠ம் அதிகாரத்தில் எழுப்பப்பட்ட கேள்விகள், இன்றும் நாம் கவனிக்கத்தக்கவையாக இருப்பது ஏன்?

கடவுள் கவனத்திற்கு கொண்டுவந்த அநேக வியத்தகு செயல்களை நவீன அறிவியலாளர்களாலும் முழுமையாக புரிந்துகொள்ள முடிவதில்லை. ஈர்ப்பு சக்தி பூமியை அதன் சுற்றுப்பாதையை விட்டு விலகாமல் வைப்பது எப்படி, வெளிச்சம் என்பது என்ன, பல்வகை பனிப்படிகங்கள் இருப்பது ஏன், மழைத்துளிகள் உருவாவது எப்படி, இடிமின் புயல்களில் சக்தி இருப்பது எப்படி ஆகிய அனைத்தும் இவற்றில் அடங்கும்.​—⁠4/15, பக்கங்கள் 4-11.

• எதிர்மறையான உணர்ச்சிகளை சமாளிக்க நமக்கு உதவியாக இருக்கும் பைபிள் உதாரணங்கள் யாவை?

ஆசாப், பாரூக், நகோமி ஆகியோர் மனச்சோர்வுள்ள சமயங்களை அல்லது வேறு எதிர்மறையான உணர்ச்சிகளை எதிர்ப்பட்டனர்; அப்படிப்பட்ட சூழ்நிலைகளை அவர்கள் வெற்றிகரமாக சமாளித்தது பற்றிய வேதப்பூர்வ பதிவு நமக்கு உதவியாக இருக்கும்.​—⁠4/15, பக்கங்கள் 22-4.

• கிறிஸ்தவ விதவைகளுக்கு உதவ சில நடைமுறையான வழிகள் யாவை?

நண்பர்கள் தயவோடு, திட்டவட்டமான உதவியை அளிக்க முன்வரலாம். உண்மையான தேவை இருக்கும்போது, குடும்ப அங்கத்தினர்களோ மற்றவர்களோ பணமாகவோ பொருளாகவோ உதவ முன்வரலாம். உடன் கிறிஸ்தவர்களும் நட்புடன் பழகி, ஆன்மீக ஆதரவையும் ஆறுதலையும் அளித்து உதவலாம்.​—⁠5/1, பக்கங்கள் 5-7.

• 1 கொரிந்தியர் 7:39 (NW) சொல்கிறபடி ‘கர்த்தருக்குட்பட்டவரையே மணம் செய்வது’ ஏன் முக்கியம்?

அவிசுவாசிகளை மணந்தவர்களின் வாழ்க்கை பெரும்பாலும் சீரழிந்து போயிருக்கிறது. மேலுமாக, இந்த தெய்வீக ஆலோசனையைப் பின்பற்றுவது யெகோவா தேவனுக்கு உண்மை தவறாதிருப்பதை குறிக்கிறது. கடவுளுடைய வார்த்தைக்கு இசைய நாம் செயல்படுகையில், நம் இருதயம் நம்மை கண்டனம் செய்கிறதில்லை. (1 யோவான் 3:21, 22)​—⁠5/15, பக்கங்கள் 20-1.

• யெகோவா மட்டுமே நம் பாவங்களை மன்னிக்க முடியும், அப்படியென்றால் கிறிஸ்தவர்கள் ஏன் சபையிலுள்ள மூப்பர்களிடம் மோசமான பாவங்களை அறிக்கை செய்ய வேண்டும்?

ஆம், ஒரு கிறிஸ்தவன் செய்யும் மோசமான பாவங்களுக்கு யெகோவாவிடமே மன்னிப்பு கேட்க வேண்டும். (2 சாமுவேல் 12:13) ஆனால், நாத்தான் தீர்க்கதரிசி தாவீதுக்கு உதவியது போலவே, சபையிலுள்ள முதிர்ச்சி வாய்ந்த மூப்பர்கள் மனந்திரும்பும் பாவிகளுக்கு உதவ முடியும். மூப்பர்களிடம் போவது யாக்கோபு 5:14, 15-⁠ல் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைக்கு இசைவானதாக இருக்கிறது.​—⁠6/1, பக்கம் 31.

• தேவையிலிருக்கும் அநாதைகளையும் விதவைகளையும் கவனிக்க வேண்டும் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?

பண்டைய எபிரெயர்கள் மற்றும் பூர்வ கிறிஸ்தவர்கள் மத்தியில் உண்மை வணக்கத்தின் பாகமாக அப்படிப்பட்ட கவனிப்பு இருந்ததென சரித்திர பதிவு காண்பிக்கிறது. (யாத்திராகமம் 22:22, 23; கலாத்தியர் 2:9, 10; யாக்கோபு 1:27) அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவர்களுக்கு எழுதும்போது, தேவையிலிருக்கும் விதவைகளை கவனிப்பது பற்றிய தெளிவான அறிவுரைகளையும் வேத வசனங்களில் சேர்த்துக்கொண்டார். (1 தீமோத்தேயு 5:3-16)​—⁠6/15, பக்கங்கள் 9-11.

• மகிழ்ச்சியான, அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு திறவுகோல் என்ன?

நமது பரலோக தந்தையாகிய யெகோவாவுடன் சரியான உறவை வளர்த்து காத்துக்கொள்ள வேண்டும். பைபிளைப் படிப்பது அதைச் செய்வதற்கு ஒரு முக்கியமான உதவியாக இருக்கிறது.​—⁠7/1, பக்கங்கள் 4-5.

• மரணத்துக்குப்பின் தொடர்ந்து பிழைத்திருக்கும் அழியாத ஆவியொன்று ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறதா?

ஆத்துமா அல்ல, ஆனால் ஆவி அழியாமல் இருக்கிறது என்பதாக சிலர் நம்பினாலும் பைபிள் அந்தக் கருத்தை ஆதரிப்பதில்லை. ஒரு மனிதன் மரிக்கும்போது, அவன் மண்ணுக்குத் திரும்பி, எங்குமே இல்லாதவனாகிறான் என்றே அது காண்பிக்கிறது. ஆனால் அவனை மீண்டும் உயிருக்குக் கொண்டுவரும் திறமை கடவுளிடமே இருக்கிறது. ஆகவே உயிர்த்தெழுதல் மூலம் அந்த நபருக்கு கிடைக்கும் எதிர்கால வாழ்க்கையைக் குறித்த எந்த எதிர்பார்ப்பும் கடவுளையே சார்ந்திருக்கிறது. (பிரசங்கி 12:7)​—⁠7/15, பக்கங்கள் 3-6.

• தூரா சமவெளியில் மூன்று எபிரெயர்கள் பரீட்சையை எதிர்ப்பட்டபோது தானியேல் எங்கே இருந்தார்?

இதைப் பற்றி பைபிள் ஒன்றும் சொல்வதில்லை. தானியேல் வகித்த உயர் பதவியின் காரணமாக அவர் அங்கிருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்திருக்கலாம், அல்லது அவர் ஏதாவது அலுவலக வேலையின் காரணமாக வெளியே போயிருந்திருக்கலாம். ஆனால் யெகோவாவுக்கு காட்டும் விசுவாசத்தை அவர் விட்டுகொடுக்கவில்லை என்பதில் நாம் நம்பிக்கையோடு இருக்கலாம்.​—⁠8/1, பக்கம் 31.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்