உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சமீபத்தில் வெளிவந்த காவற்கோபுர இதழ்களை வாசித்து மகிழ்ந்தீர்களா? அப்படியானால் பின்வரும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா என பாருங்களேன்:
• மதம் உட்பட்ட சட்ட ரீதியிலான என்ன வெற்றிக்கு ஜெர்மனியின் ஃபெடரல் கான்ஸ்ட்டிட்யூஷனல் கோர்ட் பங்களித்தது?
யெகோவாவின் சாட்சிகளுக்கும் அவர்கள் பொதுச் சட்டத்தின்படி ஒரு குழுவாக செயல்படுவதற்கும் எதிராக மற்றொரு நீதிமன்றம் வழங்கிய பாதகமான தீர்ப்பை அந்த நீதிமன்றம் மாற்றியது. மத சுதந்திரத்தின் எல்லைக்குட்பட்டு, ஒருவர் சட்டத்துக்கு கீழ்ப்படிவதைப் பார்க்கிலும் தன்னுடைய ‘மத நம்பிக்கைகளுக்கு கீழ்ப்படிய’ சுதந்திரம் பெற்றிருப்பதாக அந்தச் சாதகமான தீர்ப்பு குறிப்பிட்டது.—8/15, பக்கம் 8.
• யோபு எவ்வளவு காலத்திற்கு துன்பப்பட்டார்?
அவர் நீண்ட காலத்திற்கு துன்பப்பட்டதாக யோபு புத்தகம் சொல்வதில்லை. யோபுவுக்கு நேரிட்ட துன்பமும் அதற்குரிய தீர்வும் சில மாதங்களிலேயே ஒருவேளை ஓர் ஆண்டுக்குள்ளாகவே நிகழ்ந்திருக்கலாம்.—8/15, பக்கம் 31.
• பிசாசு வெறும் மூடநம்பிக்கை மட்டுமல்ல என நாம் ஏன் உறுதியாய் இருக்கலாம்?
உண்மையிலேயே பிசாசு இருப்பதை இயேசு கிறிஸ்து அறிந்திருந்தார். இயேசு தமக்குள் இருக்கும் ஏதோவொரு தீமையால் அல்ல உண்மையான ஒரு நபராலேயே சோதிக்கப்பட்டார். (மத்தேயு 4:1-11; யோவான் 8:44; 14:30)—9/1, பக்கங்கள் 5, 6.
• “ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு அரணான பட்டணம்; ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கப்பண்ணும்” என நீதிமொழிகள் 10:15 சொல்கிறது. இது எப்படி உண்மையாக நிரூபித்திருக்கிறது?
அரணான பட்டணம் அதில் வசிப்பவர்களுக்கு ஓரளவு பாதுகாப்பை அளிப்பது போலவே, வாழ்க்கையின் நிச்சயமற்ற சில சந்தர்ப்பங்களில் செல்வம் பாதுகாப்பை அளிக்கலாம். மறுபட்சத்தில், எதிர்பாராத சில சம்பவங்கள் நேரிடுகையில் ஏழ்மை, நிலைமையை மிகவும் சீர்குலைத்துவிடலாம்.—9/15, பக்கம் 24.
• ஏனோஸின் நாட்களில், என்ன அர்த்தத்தில் “மனுஷர் யெகோவாவுடைய பெயரில் கூப்பிட ஆரம்பித்தார்கள்”? (ஆதியாகமம் 4:26, NW)
மனித வரலாற்றின் ஆரம்பம் முதற்கொண்டே கடவுளுடைய பெயர் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. ஆகவே ஏனோஸின் காலத்தில் யெகோவாவின் பெயரில் கூப்பிட ஆரம்பித்தது, யெகோவாவை விசுவாசத்தோடு கூப்பிடுவதாக இருக்கவில்லை. கடவுளுடைய பெயரை தூஷிக்கும் வகையில் மனிதர்கள் அதை தங்களுக்கே வைத்துக் கொண்டிருக்கலாம் அல்லது இந்தப் பெயர் வைத்திருந்த மற்றவர்கள் மூலம் கடவுளை வணக்கத்தில் அணுகுவதுபோல் பாசாங்கு செய்திருக்கலாம்.—9/15, பக்கம் 29.
• பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ள “சிட்சை” என்ற வார்த்தை எதை அர்த்தப்படுத்துகிறது?
இந்த வார்த்தை, எந்த விதத்திலும் மோசமாக நடத்துவதையோ கொடுமைப்படுத்துவதையோ குறிப்பதில்லை. (நீதிமொழிகள் 4:13; நீதிமொழிகள் 22:15) “சிட்சை” என்பதற்குரிய கிரேக்க சொல், முக்கியமாய் போதனை, கல்வி, திருத்தம் ஆகியவற்றோடு, சில சமயங்களில் கறாராக ஆனால் அன்பாக தண்டிப்பதோடு சம்பந்தப்பட்டுள்ளது. பெற்றோர் யெகோவாவைப் பின்பற்றுவதற்கான முக்கியமான வழிகளில் ஒன்று, தங்கள் பிள்ளைகளுடன் எப்போதும் சகஜமாக பேச்சுத்தொடர்பு கொள்ள முயற்சி செய்வதாகும். (எபிரெயர் 12:7-10)—10/1, பக்கங்கள் 8, 10.
• கடவுளுடைய ஆட்சியை ஆதரிப்பவர்கள் என்பதை உண்மை கிறிஸ்தவர்கள் இன்று எவ்வாறு காட்டுகிறார்கள்?
யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடைய ராஜ்யத்தைக் குறித்து பேசுகையில் அரசியலை புகுத்துவதோ அல்லது தடையை எதிர்ப்படுகிற தேசங்களிலும்கூட அந்நாட்டு அரசாங்கங்களுக்கு எதிராக கலகத்தை தூண்டிவிடுவதோ இல்லை. (தீத்து 3:1) இயேசுவையும் அவருடைய ஆரம்ப கால சீஷர்களையும் போலவே அவர்களும் பயனுள்ள சேவை செய்கிறார்கள். நேர்மை, ஒழுக்க சுத்தம், நற்செயலுக்கான நெறிமுறைகள் போன்ற பயனுள்ள பைபிள் தராதரங்களை ஏற்றுக்கொள்ள தங்களாலான மட்டும் ஜனங்களுக்கு உதவுகிறார்கள்.—10/15, பக்கம் 6.
• ஆண்டிஸில் ஜீவ தண்ணீர் எவ்வாறு பாய்ந்தோடுகிறது?
அங்குள்ள யெகோவாவின் சாட்சிகள் கச்சுவா அல்லது ஐமராவை எனும் இரு பிராந்திய மொழிகளிலும்கூட பைபிள் சத்தியத்தை மக்களுக்கு அறிவிக்க முயற்சி செய்கிறார்கள். ஏரி தண்ணீரில் வளரும் நாணல்களால் ஆன “மிதக்கும்” தீவு மேடைகளில் வசிப்பவர்கள் உட்பட டிடிகாகா ஏரியிலுள்ள தீவுகளில் வசிப்போரை சாட்சிகள் போய் சந்திக்கிறார்கள்.—10/15, பக்கங்கள் 8-10.
• நவீன பயணி விமானங்களிலுள்ள கம்ப்யூட்டர் வழிகாட்டு திட்டத்திற்கு ஒப்பாக நம்முடைய வழிகாட்டுதலுக்காக கடவுள் எதைக் கொடுத்திருக்கிறார்?
மனிதர்களுக்குக் கடவுள் ஒழுக்கநெறி சார்ந்த வழிகாட்டுதலை, உள்ளான ஒழுக்க உணர்வை அளித்திருக்கிறார். அது நாம் பிறவியிலேயே பெற்ற நம் மனசாட்சி. (ரோமர் 2:14, 15)—11/1, பக்கங்கள் 3-4.
• இயேசுவின் மரணம் ஏன் பெரும் மதிப்புள்ளது?
பரிபூரண மனிதனாகிய ஆதாம் பாவம் செய்தபோது தனக்கும் தன் சந்ததியாருக்கும் மனித ஜீவனை இழந்தான். (ரோமர் 5:12) பரிபூரண மனிதராக இயேசு தம் மனித ஜீவனை பலியாக கொடுப்பதன் மூலம் உண்மையுள்ள மனிதர்கள் நித்திய ஜீவனைப் பெறுவதற்கு வழிசெய்யும் மீட்கும் பொருளை அளித்தார்.—11/15, பக்கங்கள் 5-6.
• கொலோசெயர் 3:11-ல் (தமிழ் கத்தோலிக்க பைபிள்) குறிப்பிடப்பட்டுள்ள சீத்தியர்கள் யார்?
ஐரோப்பிய ஆசிய தரிசு நிலத்தில் சுமார் பொ.ச.மு. 700-லிருந்து 300 வரை ஆட்சி செய்த நாடோடி மக்கள்தான் இந்த சீத்தியர்கள். இவர்கள் மிகச் சிறந்த குதிரைவீரர்களாகவும் மாவீரர்களாகவும் இருந்தார்கள். கொலோசெயர் 3:11, எந்தக் குறிப்பிட்ட ஒரு தேசத்தாரையும் குறிக்காமல் படுமோசமான, காட்டுமிராண்டித்தனமான மக்களையே குறித்திருக்கலாம்.—11/15, பக்கங்கள் 24-5.
• பொன் விதி நாம் தவறாமல் கவனம் செலுத்துவதற்கு உகந்த போதகம் என ஏன் சொல்லலாம்?
யூதேய மதத்திலும், புத்த மதத்திலும், கிரேக்க தத்துவத்திலும் கன்பூசிய மதத்திலும் இந்த ஒழுக்க நியமம் பல விதங்களில் விவரிக்கப்பட்டிருக்கிறது. எனினும் மலைப்பிரசங்கத்தில் இயேசு கூறியதில் மற்றவர்களுக்கு நன்மையான செயல்களை செய்வது உட்பட்டிருக்கிறது, எல்லா இடங்களிலும் எல்லா காலங்களிலும் வாழுபவர்களின் வாழ்க்கையை மிளிர செய்கிறது. (மத்தேயு 7:12)—12/1, பக்கம் 3.