உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w02 2/15 பக். 23
  • காற்றுக்கு ஒதுங்கிடமாக

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • காற்றுக்கு ஒதுங்கிடமாக
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • இதே தகவல்
  • காற்றுவிசையை பயன்படுத்திக்கொள்ளுதல்
    விழித்தெழு!—1995
  • காலத்தின் பரீட்சையை தாங்கிநிற்கும் மரங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • உங்களை நடத்துகிறவர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • மூப்பர்களைக் கூப்பிடுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
w02 2/15 பக். 23

காற்றுக்கு ஒதுங்கிடமாக

ஐரோப்பாவில் வானளாவ உயர்ந்தோங்கிய ஆல்பைன் மலைப்பகுதிகளில் ஆல்பைன் ரோஸ் என்ற வலுமிக்க புதர்செடி வளர்ந்திருப்பதை நீங்கள் காணலாம். குட்டையாக வளரும் இந்த ஆல்பைன் ரோஸ், மேட்டு நிலப்பகுதிகளில் வீசும் பலத்த காற்றுக்கு எதிராக பாதுகாத்துக்கொள்ளும் விதத்தில் பெரும்பாலும் நிலத்திற்கு மிகவும் அருகில் அடர்ந்த புதராகவே வளருகிறது. கட்டுக்கடங்காமல் வீசும் காற்று இத்தாவரங்களின் வெப்பநிலையைக் குறைத்து, வளிமண்டலத்தையும் மண்ணையும் உலரச் செய்து, அவற்றை வேரோடு சாய்த்து விடுவதால் அவற்றிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது.

இதனால், ஆல்பைன் ரோஸ் பாறை வெடிப்புகளில் வளர்ந்து காற்றின் நாசவேலையிலிருந்து தன்னை தற்காத்துக்கொள்கிறது. இந்த இடங்களில் அதிகமாக மண் இல்லாவிட்டாலும், பாறை வெடிப்புகள் காற்றிலிருந்து காப்பாற்றி, இத்தாவரம் தண்ணீரை தக்க வைத்துக்கொள்ள உதவுகின்றன. பெரும்பாலும் வருடம் பூராவும் மறைந்திருந்தாலும், கோடையில் இந்தச் செடிகள் கண்ணைப் பறிக்கும் சிவப்பு நிற மலர்களால் மலைப்பகுதிகளை அலங்கரிக்கின்றன.

‘பிரபுக்களை’ கடவுள் நியமிப்பார் என்றும், அவர்கள் ஒவ்வொருவரும் “காற்றுக்கு ஒதுங்கிடமாக” இருப்பார்கள் என்றும் ஏசாயா தீர்க்கதரிசி விளக்கினார். (ஏசாயா 32:1, 2, பொ.மொ.) பிரச்சினைகள் ஆட்டிப்படைக்கையில் அல்லது துன்ப காலங்களில், ராஜாவாகிய கிறிஸ்து இயேசுவின் வழிநடத்துதலில் இந்த ஆன்மீக பிரபுக்கள் அல்லது கண்காணிகள் உறுதியான பாறைகளாய் இருப்பார்கள். துன்பங்களை எதிர்ப்படுகையில் நம்பகமான பாதுகாப்பை கொடுப்பார்கள்; உதவி தேவைப்படுவோர் கடவுளுடைய வார்த்தையிலிருந்து கிடைக்கும் ஆன்மீகத் தண்ணீரை பாதுகாத்துக்கொள்ள உதவி செய்வார்கள்.

ஒரு கிறிஸ்தவர் பாதுகாப்பில்லாமல் இருக்கும்போது துன்புறுத்துதல், சோர்வு, அல்லது பலவீனம் என்ற பெருங்காற்று அவரை அலைக்கழித்து அவருடைய விசுவாசத்தை வாடிப்போகச் செய்யலாம். கிறிஸ்தவ மூப்பர்கள் அவருடைய பிரச்சினையை கவனமாக செவிகொடுத்துக் கேட்டு, பைபிள் அடிப்படையில் புத்திமதிகளைத் தந்து உற்சாகப்படுத்துவார்கள், அல்லது நடைமுறை உதவியை அளிப்பார்கள். நியமிக்கப்பட்ட அரசராகிய கிறிஸ்து இயேசுவைப் போலவே, ‘சிதறப்பட்டவர்களுக்கு’ உதவிசெய்ய வேண்டும் என்பதே அவர்கள் விருப்பம். (மத்தேயு 9:36) பொய் போதனைகள் என்ற காற்றினால் சேதமடைந்திருக்கும் மற்றவர்களுக்கு அவர்கள் உதவ விரும்புகிறார்கள். (எபேசியர் 4:14) ஏற்ற காலத்தில் கிடைக்கும் இப்படிப்பட்ட உதவி மிகவும் இன்றியமையாதது.

“என்னுடைய நெருங்கிய நண்பர்களில் சிலர் சத்தியத்தை விட்டு விலகிப்போன அதே சமயத்தில் என் அப்பாவுக்கு மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டது, அதிர்ச்சியால் உறைந்து என் மனம் புண்ணாகிப்போன சமயம் அது” என்று மிரியாம் கூறுகிறாள். “என் மனச்சோர்வை மேற்கொள்வதற்காக உலகப்பிரகாரமான ஒரு நண்பனோடு வெளியில் சுற்ற ஆரம்பித்தேன். அதன்பின் எதற்கும் லாயக்கற்றவள் என உணர்ந்தபோது, நான் சத்தியத்தைவிட்டு விலக முடிவு செய்துவிட்டதாக சபை மூப்பர்களிடம் சொன்னேன், ஏனென்றால் யெகோவா என்னை நேசிக்க மாட்டார் என்று நான் உறுதியாக நம்பினேன்.

“இந்த இக்கட்டான சமயத்தில்தான், இளகிய நெஞ்சமுடைய ஒரு மூப்பர் நான் ஒழுங்கான பயனியர் ஊழியராக சேவித்த அந்த வருடங்களை எனக்கு நினைப்பூட்டினார். அப்போதெல்லாம் என் கடின உழைப்பைக் கண்டு அவர் வியந்ததுண்டு என்றும் யெகோவா என்மேல் வைத்திருக்கும் அன்பை மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்வதற்காக மூப்பர்கள் எனக்கு உதவிசெய்ய நான் அனுமதிக்க வேண்டும் என்றும் என்னை வருந்திக் கேட்டுக்கொண்டார். அந்த நெருக்கடியான சமயத்தில் என்னை சுற்றி வீசிய அந்த ஆன்மீக பெருங்காற்றில் அவர்கள் காண்பித்த அன்புள்ள அக்கறை ‘ஒதுங்கிடம்’ போல இருந்தது. என் நண்பனோடு வைத்திருந்த நட்பை ஒரே மாதத்திற்குள் முறித்துக்கொண்டு, அப்போது முதற்கொண்டு சத்தியத்தின் வழியில் நடந்து வருகிறேன்.”

ஏற்ற சமயத்தில் கொடுக்கப்பட்ட பாதுகாப்பின் காரணமாக சக கிறிஸ்தவர்கள் ஆன்மீகத்தில் செழித்தோங்குவதைக் காண்கையில் தங்களுக்கு கைமேல் பலன் கிடைத்ததாக மூப்பர்கள் உணருகிறார்கள். இந்த ‘ஒதுங்கிடங்கள்’ கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியில் நாம் அனுபவிக்கும் அளவில்லாத ஆன்மீக உதவியை ருசிபார்ப்பதாக இருக்கின்றன.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்