முழு உலகமும் அழிக்கப்பட்டது!
உங்களை சுற்றியுள்ள உலகை—நகரங்கள், கலாச்சாரங்கள், அறிவியல் சாதனைகள், கோடாகோடி மக்கள் நிறைந்த உலகை—பாருங்கள். அது நிரந்தரமாக இருப்பது போல் தோன்றுவதால் எளிதில் நம் இதயத்தைக் கொள்ளை கொள்கிறது. என்றாவது ஒருநாள் இந்த உலகம் அடியோடு அழிந்துவிடும் என நீங்கள் நினைக்கிறீர்களா? அதை கற்பனை செய்து பார்ப்பது உங்களுக்கு கடினமாக இருக்கலாம். ஆனால் நம்பகமான தகவலின்படி, இதற்கு முன்பிருந்த ஓர் உலகம் பூண்டோடு அழிக்கப்பட்டது உங்களுக்குத் தெரியுமா?
பழங்குடியினர் வாழ்ந்த ஓர் உலகைப் பற்றி நாங்கள் சொல்லவில்லை. அழிந்த அந்த உலகம் நாகரிக வளர்ச்சி கண்ட உலகம்; நகரங்கள், கலையுலக சாதனைகள், அறிவியல் அறிவு படைத்த உலகம். ஆனால் திடீரென ஒருநாள்—இரண்டாம் மாதம் 17-ம் தேதி, அதாவது முற்பிதாவாகிய ஆபிரகாம் பிறப்பதற்கு 352 ஆண்டுகளுக்கு முன்பு—ஜலப்பிரளயம் வந்து முழு உலகையும் வாரிக்கொண்டு போனதாக பைபிள் பதிவு சொல்கிறது.a
அந்தப் பதிவை நம்ப முடியுமா? இப்படிப்பட்ட சம்பவம் உண்மையில் நிகழ்ந்ததா? பல்வேறு அம்சங்களில் சிறப்புற்று விளங்கிய பண்டைய உலகம் ஒன்று உண்மையிலேயே இருந்ததா, பின்பு அது அழிக்கப்பட்டதா? அப்படியானால், ஏன் அழிக்கப்பட்டது? என்ன தவறு நிகழ்ந்தது? அதற்கு ஏற்பட்ட மரண அடியிலிருந்து நாம் ஏதாவது பாடம் பயில முடியுமா?
பண்டைய உலகம் உண்மையிலேயே அழிக்கப்பட்டதா?
இப்பேர்ப்பட்ட படுபயங்கரமான பேரழிவு நிகழ்ந்திருந்தால், அது ஒருகாலும் அடியோடு மறக்கப்பட்டு போயிருக்காது. ஆகவே, அந்த அழிவிற்குரிய தடயங்கள் பல்வேறு நாடுகளில் காணப்படுகின்றன. உதாரணமாக, பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ள துல்லியமான தேதியைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். பூர்வீக நாட்காட்டியின்படி இரண்டாம் மாதம் என்பது இப்பொழுது நாம் அழைக்கிற அக்டோபர் மாத மத்திபத்திலிருந்து நவம்பர் மாத மத்திபம் வரை குறிக்கிறது. ஆகவே, 17-ம் தேதி என்பது கிட்டத்தட்ட நவம்பர் முதல் தேதிக்கு ஒத்திருக்கிறது. அப்படியானால், பல நாடுகளில், வருஷத்தில் அந்த மாதத்தில் இறந்தவர்களுக்காக பண்டிகைகள் கொண்டாடுவது ஏதோ எதேச்சையாக ஏற்பட்ட ஒன்றல்ல.
ஜலப்பிரளயத்தைப் பற்றிய வேறுசில அத்தாட்சிகள் மனிதகுலத்தின் பாரம்பரியங்களிலேயே இருக்கின்றன. தங்களுடைய முன்னோர்கள் உலகளாவிய ஜலப்பிரளயத்தில் தப்பிப்பிழைத்ததைப் பற்றிய பழங்கதைகள் கிட்டத்தட்ட எல்லா பண்டைய மக்களிடமும் இருக்கின்றன. ஆப்பிரிக்க குள்ளர்களும் ஐரோப்பிய கெல்டிய இனத்தவர்களும் தென் அமெரிக்க இன்காக்களும் சொல்லி வரும் பழங்கதைகள், அலாஸ்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, சீனா, நியூ ஜீலாந்து, மெக்ஸிகோ, மைக்ரோனீஷியா, லிதுவேனியா, வட அமெரிக்காவின் சில பகுதிகள் ஆகியவற்றை சேர்ந்த மக்கள் சொல்லி வரும் பழங்கதைகளுக்கு ஒப்பாகவே இருக்கின்றன. இவையெல்லாம் சில உதாரணங்களே.
காலங்கள் கடந்து செல்லச் செல்ல இந்தப் பழங்கதைகளுக்கு காது மூக்கெல்லாம் வைத்து புனைந்திருப்பது உண்மைதான், ஆனால் அவற்றில் காணப்படும் பல அம்சங்கள் மூலக் கதையை ஒத்திருக்கின்றன: மனிதகுலத்தின் பொல்லாப்பைக் கண்டு கடவுள் கோபமடைந்தார். அவர் பெரும் வெள்ளத்தைக் கொண்டுவந்தார். முழு மனிதகுலமும் அழிக்கப்பட்டது. ஆனால் நீதிமான்கள் சிலர் காப்பாற்றப்பட்டார்கள். இவர்கள் ஒரு பேழையைக் கட்டினார்கள், அதில் மனித இனமும் விலங்கினங்களும் காப்பாற்றப்பட்டன. சிலகாலத்திற்குப் பின், உலர்ந்த தரையைக் கண்டுபிடிக்க பறவைகள் அனுப்பப்பட்டன. கடைசியில், அந்தப் பேழை ஒரு மலையில் வந்து நின்றது. உயிர் தப்பியவர்கள் அதிலிருந்து வெளியே வந்தவுடன் பலி செலுத்தினார்கள்.
இது எதை நிரூபிக்கிறது? ஒப்புமைகள் ஏதோ எதேச்சையாக நிகழ முடியாது. மனிதவர்க்க உலகம் மாபெரும் வெள்ளத்தில் அழிக்கப்பட்டது, அதில் தப்பிப்பிழைத்தவர்களிலிருந்து எல்லா மனிதரும் பிறந்தனர் என்ற பைபிளின் பூர்வீக அத்தாட்சியை இந்தப் பழங்கதைகளின் ஒருங்கிணைந்த அத்தாட்சி ஆதரிக்கிறது. ஆகவே, என்ன சம்பவித்தது என்பதை நாம் அறிந்துகொள்ள பழங்கதைகளையோ கட்டுக்கதைகளையோ நாட வேண்டியதில்லை. பைபிளின் எபிரெய வேதாகமத்தில் கவனமாக பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள பதிவு நம்மிடம் இருக்கிறது.—ஆதியாகமம், 6 முதல் 8 அதிகாரங்கள்.
உயிர் தோன்றிய காலம் முதற்கொண்ட சரித்திர பதிவு பைபிளில் ஏவப்பட்டு எழுதப்பட்டுள்ளது. ஆனால் இது ஏதோ பழங்கால சரித்திரம் மட்டுமேயல்ல என்பதை அத்தாட்சி நிரூபிக்கிறது. துல்லியமாக நிறைவேறியுள்ள அதன் தீர்க்கதரிசனங்களும் அதில் புதைந்துள்ள ஞானமும், கடவுளிடமிருந்து மனிதகுலத்திற்கு கிடைத்த வரப்பிரசாதமே இந்த நூல் என்பதை மெய்ப்பிக்கின்றன. கட்டுக்கதைகளைப் போலின்றி, சந்ததியையும் பூகோளத்தையும் பற்றிய தெளிவான விவரங்களும் பெயர்களும் தேதிகளும் பைபிளின் சரித்திரப் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஜலப்பிரளயத்திற்கு முன்பு வாழ்க்கை எப்படி இருந்தது என்பதைப் பற்றிய காட்சியை பைபிள் நமக்குத் தருகிறது, ஏன் முழு உலகமும் திடீரென முடிவுக்கு வந்தது என்பதையும் வெளிப்படுத்துகிறது.
ஜலப்பிரளயத்திற்கு முன்பு வாழ்ந்த அந்த சமுதாயத்தினர் செய்த தவறு என்ன? பின்வரும் கட்டுரை இந்தக் கேள்வியை சிந்திக்கிறது. இன்றைய நாகரிகத்தின் எதிர்காலம் எந்தளவு பாதுகாப்பானது என்பதை யோசிப்பவர்களுக்கு இது ஒரு முக்கியமான கேள்வி.
[அடிக்குறிப்பு]
[பக்கம் 4-ன் அட்டவணை]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
உலகளாவிய ஜலப்பிரளய பழங்கதைகள்
நாடு ஒற்றுமைகள் 1 2 3 4 5 6 7 8 9 10
கிரீஸ் 7 ◆ ◆ ◆ ◆ ◆ ◆ ◆
ரோம் 6 ◆ ◆ ◆ ◆ ◆ ◆
லிதுவேனியா 6 ◆ ◆ ◆ ◆ ◆ ◆
அசீரியா 9 ◆ ◆ ◆ ◆ ◆ ◆ ◆ ◆ ◆
டான்ஜானியா 7 ◆ ◆ ◆ ◆ ◆ ◆ ◆
இந்தியா - இந்து 6 ◆ ◆ ◆ ◆ ◆ ◆
நியூ ஜீலாந்து - மயோரி 5 ◆ ◆ ◆ ◆ ◆
மைக்ரோனீஷியா 7 ◆ ◆ ◆ ◆ ◆ ◆ ◆
வாஷிங்டன் அ.ஐ.மா. - யாக்கிமா 7 ◆ ◆ ◆ ◆ ◆ ◆ ◆
மிஸ்ஸிஸிபி அ.ஐ.மா. - சாக்டாவ் 7 ◆ ◆ ◆ ◆ ◆ ◆ ◆
மெக்ஸிகோ - மிக்கோகன் 5 ◆ ◆ ◆ ◆ ◆
தென் அமெரிக்கா - கியூசுவா 4 ◆ ◆ ◆ ◆
பொலிவியா - சிரிகுவானோ 5 ◆ ◆ ◆ ◆ ◆
கயானா - அரவாக் 6 ◆ ◆ ◆ ◆ ◆ ◆
1:பொல்லாப்பைக் கண்டு கடவுள் சினமடைந்தார்
2:ஜலப்பிரளயத்தால் அழிவு
3:கடவுளால் கட்டளையிடப்பட்டது
4:தெய்வீக எச்சரிப்பு கொடுக்கப்பட்டது
5:சில மனிதரே தப்பிப்பிழைத்தனர்
6:ஒரு கப்பலில் காப்பாற்றப்பட்டனர்
7:மிருகங்கள் காப்பாற்றப்பட்டன
8:பறவை அல்லது வேறொரு பிராணி வெளியே அனுப்பப்பட்டது
9:கடைசியில் ஒரு மலையின் மேல் நின்றது
10:பலி செலுத்தப்பட்டது