உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w02 11/15 பக். 30-31
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • இதே தகவல்
  • “நீ ஏதாவது நேர்ந்துகொண்டால், அதை நிறைவேற்று”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2017
  • நம்முடைய பொருத்தனையைத் தினந்தோறும் நிறைவேற்றுதல்
    நம் ராஜ்ய ஊழியம்—1996
  • உங்கள் திருமண உறுதிமொழிக்கு இணங்க வாழுதல்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • நேர்ந்துகொண்ட பலி
    சொல் பட்டியல்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
w02 11/15 பக். 30-31

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

கடவுளுக்கு செய்யும் பொருத்தனைகளை எப்போதும் நிறைவேற்ற வேண்டுமா?

பைபிளின்படி பொருத்தனை என்பது ஒரு காரியத்தை செய்ய, பலிசெலுத்த, ஒரு சேவையில் ஈடுபட அல்லது ஒரு பாகத்தை வகிக்க அல்லது சட்டவிரோதமாக கருதப்படாதபோதிலும் சில காரியங்களை செய்யாமல் விலகியிருக்க கடவுளிடத்தில் பயபக்தியுடன் வாக்குறுதி அளிப்பதாகும். நிபந்தனையின் பேரில் செய்யப்பட்ட பொருத்தனைகளைப் பற்றிய பதிவுகள் பைபிளில் உள்ளன; கடவுள் முதலில் தனக்கு எதையாவது செய்தால், தான் இன்னின்னபடி செய்வதாக உறுதி கூறுவதை இவ்வித பொருத்தனைகள் உட்படுத்துகின்றன. உதாரணமாக, சாமுவேல் தீர்க்கதரிசியின் தாய் அன்னாள், “சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் . . . உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை பண்ணினாள்.” (1 சாமுவேல் 1:11) நிபந்தனையின்றி மனப்பூர்வமாக செய்யப்படுகிற பொருத்தனைகளைப் பற்றியும் பைபிள் விவரிக்கிறது. கடவுளுக்கு செய்யப்படும் பொருத்தனைகள் எந்தளவுக்கு நிறைவேற்றப்பட வேண்டும்?

“நீ தேவனுக்கு ஒரு பொருத்தனை பண்ணிக்கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே” என பூர்வ இஸ்ரவேல் அரசனாகிய சாலொமோன் கூறுகிறார். “நீ நேர்ந்துகொண்டதைச் செய். நீ நேர்ந்துகொண்டதைச் செய்யாமற் போவதைப்பார்க்கிலும், நேர்ந்துகொள்ளாதிருப்பதே நலம்” என்றும் அவர் கூறுகிறார். (பிரசங்கி 5:4, 5) மோசே மூலமாக இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பொருத்தனை பண்ணியிருந்தால், அதைச் செலுத்தத் தாமதஞ்செய்யாதே; உன் தேவனாகிய கர்த்தர் அதை நிச்சயமாய் உன் கையில் கேட்பார்; அது உனக்குப் பாவமாகும்.” (உபாகமம் 23:21) கடவுளுக்கு பொருத்தனை செய்வது ஒரு முக்கியமான விஷயம் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. அது ஒரு நல்ல உள்நோக்கத்துடன் செய்யப்பட வேண்டும்; தான் அளிக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற முடியுமா என்ற எவ்வித சந்தேகமும் பொருத்தனை செய்பவருக்கு இருக்கக் கூடாது. அல்லது அவர் பொருத்தனை செய்யாமல் இருப்பது நல்லது. என்றாலும் நேர்ந்துகொண்ட பொருத்தனைகளை எல்லாம் நிறைவேற்ற வேண்டுமா?

ஒன்றை செய்வதாக பொருத்தனை செய்த பிற்பாடு அது கடவுளுடைய சித்தத்திற்கு இசைவானதல்ல என்பது தெரியவருகையில் என்ன செய்வது? ஒருவேளை அந்த பொருத்தனை ஏதாவதொரு விதத்தில் ஒழுக்கயீனத்தை மெய் வணக்கத்தோடு இணைப்பதாக இருந்ததென்றால் என்ன செய்வது? (உபாகமம் 23:18) அப்படிப்பட்ட பொருத்தனையை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை என்பதில் சந்தேகமில்லை. மேலும், மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி, ஒரு பெண்பிள்ளை செய்துகொண்ட பொருத்தனை அவளுடைய தகப்பனால் அல்லது கணவனால் நிராகரிக்கப்படலாம்.​—⁠எண்ணாகமம் 30:3-15.

ஒண்டியாக இருக்கப்போவதாக கடவுளிடம் பொருத்தனை செய்து, ஆனால் இப்போது தர்மசங்கடமான நிலையில் இருக்கும் ஒருவரைப் பற்றியும்கூட சிந்தித்துப் பாருங்கள். அவர் செய்த பொருத்தனையை நிறைவேற்றுவது, ஒழுக்கம் சம்பந்தப்பட்ட கடவுளின் தராதரத்தை மீறும் நிலையில் அவரை வைப்பதாக உணருகிறார். இந்த சூழ்நிலையிலும் தன் பொருத்தனையை நிறைவேற்ற அவர் முயல வேண்டுமா? ஒழுக்கக்கேடு எனும் பாவத்தை சுமப்பதிலிருந்து தன்னைக் காத்துக்கொண்டு பொருத்தனையை நிறைவேற்றாமல் கடவுளுடைய இரக்கத்தை தேடி மன்னிப்புக்காக அவரிடத்தில் கெஞ்சுவது சிறந்ததல்லவா? இந்த விஷயத்தின் பேரில் அவராகவே தீர்மானம் செய்ய வேண்டும். மற்ற எவரும் அவருக்காக தீர்மானம் செய்ய முடியாது.

பொருத்தனை செய்கிற ஒருவர் அதை அவசரப்பட்டு செய்ததாக பிற்பாடு உணர்ந்தால் என்ன செய்வது? அதற்கு பின்பும் அதை நிறைவேற்ற முயல வேண்டுமா? யெப்தா தான் கடவுளுக்கு செய்த பொருத்தனையை நிறைவேற்றுவது மிகக் கடினமாக இருந்தது; ஆனாலும் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு அதை நிறைவேற்றினார். (நியாயாதிபதிகள் 11:30-40) ஒருவர் பொருத்தனையை நிறைவேற்ற தவறுவது கடவுளுடைய ‘கோபத்தை’ தூண்டிவிடலாம்; தான் சாதித்தவை சுக்குநூறாகிவிடவும் வழிநடத்தலாம். (பிரசங்கி 5:6) பொருத்தனையை நிறைவேற்றுவதை துச்சமாக கருதுவது கடவுளுடைய தயவை இழப்பதற்கு வழிநடத்தலாம்.

‘உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்’ என்று இயேசு கிறிஸ்து கூறினார். (மத்தேயு 5:37) ஒரு கிறிஸ்தவர் பொருத்தனைகளை நிறைவேற்றுவதில் மட்டுமல்ல, கடவுளிடத்திலும் பிறரிடத்திலும் தன் வார்த்தைகளை காத்துக்கொள்வதிலும் கவனமுள்ளவராய் இருக்க வேண்டும். ஒருவர் மற்றொருவருடன் செய்துகொண்ட ஒப்பந்தம் முதலில் நல்லதாக தெரிந்தாலும், அதை நன்கு ஆலோசித்த பின்பு அவ்வாறு செய்தது முட்டாள்தனமாக தோன்றும் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக்கொண்டால் என்ன செய்வது? அப்படிப்பட்ட விஷயங்களை அவர் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஆனால், ஒப்பந்தத்தில் உட்பட்டிருந்தவரோடு மனந்திறந்து பேசுவதால், அவர் அந்த ஒப்பந்தத்திலிருந்து இவரை விடுவிக்க தீர்மானிக்கலாம்.​—⁠சங்கீதம் 15:4; நீதிமொழிகள் 6:​2-4.

பொருத்தனைகளையும் மற்ற எல்லா காரியங்களையும் குறித்ததில் நம் முக்கிய அக்கறை எதுவாக இருக்க வேண்டும்? யெகோவா தேவனிடத்தில் நல்லுறவை காத்துக்கொள்ள எப்போதும் முயலுவதே நம் அக்கறையாக இருப்பதாக.

[பக்கம் 30, 31-ன் படங்கள்]

அன்னாள் தன் பொருத்தனையை நிறைவேற்ற தயங்கவில்லை

[பக்கம் 30, 31-ன் படங்கள்]

தான் செய்த பொருத்தனையை நிறைவேற்றுவது யெப்தாவுக்கு கடினமாக இருந்தாலும் அதை நிறைவேற்றினார்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்