உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w05 6/1 பக். 3-4
  • உலக ஒற்றுமை எங்கே?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலக ஒற்றுமை எங்கே?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • உலக ஒற்றுமையா அல்லது பூகோள பிரிவினையா?
  • உலகின் எதிர்காலம் என்ன?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • உண்மை வழிபாட்டுக்கு அடையாளம்—ஒற்றுமை
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
  • யெகோவாவின் குடும்பம் அருமையான ஒற்றுமையை அனுபவித்து மகிழ்கிறது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • உலகம் ஒன்றுபடுமா?
    விழித்தெழு!—2000
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
w05 6/1 பக். 3-4

உலக ஒற்றுமை எங்கே?

“இரண்டாம் உலகப் போர் நடந்ததிலிருந்து முதன்முறையாக சர்வதேச சமுதாயம் ஒன்றுபட்டிருக்கிறது. . . . ஆகவே இந்த வாய்ப்பை நழுவ விடாமல், வெகு காலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் புதிய உலகை நிறுவலாம்.”

அமெரிக்க முதல்வர் ஒருவர் 1990-களில் இவ்வாறு நம்பிக்கை தெரிவித்தார். அச்சமயத்தில் நடந்த சர்வதேச சம்பவங்கள், உலக ஒற்றுமை வாசலருகே நிற்பது போன்ற எண்ணத்தை உண்டாக்கின. சர்வாதிகார அரசுகள் ஒன்றன்பின் ஒன்றாகக் கவிழ்ந்தன. பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது; அப்போது, ஐரோப்பிய சரித்திரத்தில் ஒரு புதிய சகாப்தம் பிறந்தது. உலகச் சண்டைகளைத் தூண்டிவிடும் தேசமாக அநேக மேற்கத்திய நாட்டவரால் கருதப்பட்ட சோவியத் யூனியன், சுவடு தெரியாமல் போனது; இது உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பனிப்போர் முடிவுக்கு வந்தது; அணு ஆயுதங்கள் உட்பட அனைத்து ஆயுதங்களையும் குறைப்பது சம்பந்தமாக நம்பிக்கைக் குரல் ஒலித்தது. பெர்சிய வளைகுடாவில் போர் மூண்டது உண்மைதான்; ஆனால் அது வெறும் ஒரு தற்காலிகத் தடங்கலாகவே தோன்றியது; சொல்லப்போனால், சமாதானத்தை இன்னும் முழுமூச்சோடு நாடும்படி உலக மக்களில் பெரும்பான்மையோரை அது தூண்டியது.

அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்ல, வாழ்க்கையின் மற்ற அம்சங்களிலும் நம்பிக்கை ஒளி வீசியது. அநேக நாடுகளில் வாழ்க்கைத்தரம் உயர்ந்துகொண்டே போனது. மருத்துவத் துறையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டதால், சில ஆண்டுகளுக்கு முன்புவரை சாதிக்க முடியாதவையாகக் கருதப்பட்டவற்றை டாக்டர்கள் சாதித்துக் காட்டினர். பொருளாதார வளர்ச்சியில் அநேக நாடுகள் முன்னேற்றம் கண்டதால், உலகமே செல்வச் செழிப்பாக மாறப்போவது போல் தோன்றியது. எல்லாமே சரியான பாதையில் சென்று கொண்டிருப்பது போல் தெரிந்தது.

இதெல்லாம் சம்பவித்து அவ்வளவு ஒன்றும் காலம் ஆகிவிடவில்லை; ஆனால், ‘என்ன ஆயிற்று? உறுதியளிக்கப்பட்ட உலக ஒற்றுமை எங்கே?’ என நம்மால் கேட்காமல் இருக்க முடியவில்லை. சொல்லப்போனால் உலகம் தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவே தெரிகிறது. மனித வெடிகுண்டுகள், தீவிரவாத தாக்குதல்கள், பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களின் தயாரிப்பில் அதிகரிப்பு போன்ற கலக்கமுண்டாக்கும் பல விஷயங்கள் தினசரி செய்திகளில் வந்த வண்ணம் இருக்கின்றன. இவை, உலக ஒற்றுமையை மேன்மேலும் எட்டாக்கனியாக ஆக்குவது போல் தோன்றுகின்றன. பிரசித்திப் பெற்ற ஃபைனான்சியர் ஒருவர் சமீபத்தில் இவ்வாறு சொன்னார்: “கொடூர வன்செயல்கள் மாறி மாறி உருவெடுக்கும் ஒரு நச்சுச் சுழலில் நாம் சிக்கியிருக்கிறோம்.”

உலக ஒற்றுமையா அல்லது பூகோள பிரிவினையா?

ஐக்கிய நாட்டு சங்கம் ஸ்தாபிக்கப்பட்டபோது அதன் நோக்கங்களில் ஒன்று, “தேசங்களுக்கு இடையே நட்புறவுகளை வளர்ப்பது, அதுவும் மக்களின் சம உரிமை, சுய ஆட்சி ஆகிய நியமங்களுக்கு மரியாதை அளிக்கும் விதத்தில் அப்படிப்பட்ட நட்புறவுகளை வளர்ப்பது” என சொல்லப்பட்டது. இப்போது கிட்டத்தட்ட 60 வருடங்களுக்குப் பிறகு, அந்த உயர்ந்த இலட்சியம் நிறைவேறியிருக்கிறதா? நிச்சயமாகவே இல்லை! ‘நட்புறவுகளை’ வளர்ப்பதைவிட ‘சுய ஆட்சி’யின் பேரிலேயே தேசங்கள் அக்கறை காட்டுவதாகத் தெரிகிறது. மக்கள், தனி நபர்களாகவும் இனத் தொகுதியினராகவும் தங்கள் பெயரையும் ஆட்சியுரிமையையும் நிலைநாட்டவே போராடிக் கொண்டிருப்பதால் உலகம் மேன்மேலும் பிளவுற்று வருகிறது. ஐக்கிய நாட்டு சங்கம் உருவான போது அதில் அங்கம் வகித்த நாடுகளின் எண்ணிக்கை 51. இப்போது அந்த எண்ணிக்கை 191-ஆக உயர்ந்திருக்கிறது.

நாம் ஏற்கெனவே பார்த்த விதமாக, உலக ஒற்றுமை வரும் என்ற நம்பிக்கை ஒளி 20-ஆம் நூற்றாண்டின் முடிவில் பிரகாசித்தது. ஆனால் அதன் பிறகோ, உலக சமுதாயம் படிப்படியாக பிளவுற்று வந்திருப்பதால் அந்த ஒளி மங்கிப் போனதை மனிதவர்க்கம் கண்கூடாகப் பார்த்திருக்கிறது. யுகோஸ்லாவியா கவிழ்ந்தபோது ஏற்பட்ட கொடூர சம்பவங்கள், செச்சென்னியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான மோதல்கள், ஈராக் யுத்தம், மத்திய கிழக்கில் மக்கள் கொன்று குவிக்கப்பட்டது ஆகிய அனைத்தும், ஒற்றுமையில் பெரும் விரிசல் ஏற்பட்டு வருவதற்கு அத்தாட்சிகள்.

அநேக சமயங்களில் நேர்மையான, உயர்ந்த நோக்கத்தோடுதான் சமாதான முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை. அப்படியிருந்தும் உலக ஒற்றுமை எட்டாக்கனியாகவே தோன்றுகிறது. ஆகவே, ‘ஏன் உலக ஒற்றுமை கைநழுவிக்கொண்டே போகிறது? இந்த உலகத்தின் எதிர்காலம் என்ன?’ என்றெல்லாம் அநேகர் கேட்கிறார்கள்.

[பக்கம் 3-ன் படங்களுக்கான நன்றி]

AP Photo/Lionel Cironneau

Arlo K. Abrahamson/AFP/ Getty Images

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்