உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w06 10/1 பக். 3
  • என்றென்றும் வாழ்வதற்கான ஆவல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • என்றென்றும் வாழ்வதற்கான ஆவல்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • இதே தகவல்
  • மரணமில்லாத பூமி—மலர்வது சாத்தியமா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • “சாவாமை” ஜீனைத் தேடி
    விழித்தெழு!—2000
  • முதுமைக்குக் காரணம்?
    விழித்தெழு!—2006
  • சாவில்லாத வாழ்வைத் தேடி
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2019
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
w06 10/1 பக். 3

என்றென்றும் வாழ்வதற்கான ஆவல்

என்றென்றும் வாழவேண்டும் என்பது மனிதனின் பல்லாண்டு காலக் கனவு. அந்தக் கனவோ நனவாகவில்லை. காரணம்? மரணத்தை வெல்லும் வழியை இதுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை. இருந்தாலும், மனிதர்களின் ஆயுளை கணிசமாக அதிகரிக்கலாம் என்ற நம்பிக்கைக்கு சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சி வலுவூட்டியிருக்கிறது. இது சம்பந்தமாக பல்வேறு விஞ்ஞானத் துறைகளில் நடப்பவற்றை சற்று சிந்திக்கலாம்.

உயிரியலாளர்கள் டெலொமரேஸ் என்ற என்ஸைமை வைத்து ஆராய்ச்சி நடத்தி வருகிறார்கள். தங்களைத் தாங்களே புதுப்பித்துக்கொள்ளும் செல்கள் அவற்றின் வேலையை குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நிறுத்திவிடாமல் தொடர்ந்து செய்வதற்கு வழிதேடி அவர்கள் இந்த ஆராய்ச்சியை நடத்துகிறார்கள். பழைய செல்களும், சிதைந்துவரும் செல்களும் புதிய செல்களால் மாற்றீடு செய்யப்படுவது விஞ்ஞானிகளுக்குத் தெரிந்த விஷயம்தான். சொல்லப்போனால், உடலிலுள்ள பெரும்பாலான செல்கள் மனிதனின் வாழ்நாள் காலத்தில் பலமுறை புதுப்பிக்கப்படுகின்றன. இந்தப் புதுப்பித்தல் வேலை தொடர்ந்து நடைபெற்றால், “மனித உடலால் தன்னைத்தானே நீண்டகாலத்திற்கு, ஏன் நித்தியத்திற்கும் புதுப்பித்துக்கொண்டே இருக்க முடியும்” என்று ஆராய்ச்சியாளர்கள் நினைக்கிறார்கள்.

சிகிச்சைக்காக குளோனிங் செய்வது, சர்ச்சைக்குரிய ஓர் ஆராய்ச்சி முறையாக இருக்கிறது. குளோனிங் முறையில் உறுப்புகளை மாற்றுவதற்காக, நோயாளிகளுக்கு கச்சிதமாகப் பொருந்துகிற கல்லீரல், சிறுநீரகம், இருதயம் போன்ற உறுப்புகளை நோயாளியின் ஸ்டெம் செல்களையே பயன்படுத்தி புதிதாக உருவாக்க முடியும் என சொல்லப்படுகிறது.

நேனோ தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்களுக்கும் ஓர் ஆசை. புற்றுநோய்க்குக் காரணமான செல்களையும் கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்களையும் அழிப்பதற்காக செல் அளவிலான ரோபாட்டுகளை உருவாக்கி அவற்றை மருத்துவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரின் இரத்தத்தில் புகுத்தும் நாளுக்காக அவர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்தத் துறையும் மரபியல் சிகிச்சைத் துறையும் செய்துவரும் ஆராய்ச்சியின் பலனாக மனித உடல் என்றென்றும் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ள வழிபிறக்கும் என்பதாகச் சிலர் நம்புகிறார்கள்.

உறைநிலையியலை (cryonics) ஆதரிப்பவர்கள் இறந்தவர்களின் உடலை உறைநிலையில் பாதுகாக்கிறார்கள். இவ்வாறு செய்வதற்குக் காரணம், வியாதிகளுக்கு மருந்து கண்டுபிடித்து, முதுமையை ஒழித்து, இறந்தவர்களை உயிர்ப்பித்து அவர்களுக்கு நல் ஆரோக்கியத்தை வழங்குவதற்குத் தேவையான முறைகளை மருத்துவத் துறை கண்டுபிடிக்கும் வரையில் இறந்தவர்களின் உடலை பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்பதே. “பூர்வகால எகிப்தியர்கள், தைலமிட்டு பிணத்தைப் பாதுகாத்ததற்கு இது ஓர் நவீன நாளைய உதாரணம்” என்கிறது அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் ஜெரியாட்ரிக் சைக்கியாட்ரி என்ற பத்திரிகை.

என்றென்றும் வாழ்வதற்காக மனிதன் இந்தளவு முயற்சி செய்வது, மரணம் என்ற நிஜத்தை அவனால் எதிர்கொள்ள முடியாததையே சுட்டிக்காட்டுகிறது. உண்மையில் மனிதர்கள் என்றென்றுமாய் வாழ முடியுமா? இதைக் குறித்து பைபிள் என்ன சொல்கிறது? பின்வரும் கட்டுரை இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்