உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w08 8/15 பக். 29
  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
  • இதே தகவல்
  • ஆளும் குழு எப்படி ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
  • யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு என்பது என்ன?
    யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
  • இவர்களை உயர்வாக மதியுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
  • பிரச்சினைகளைத் தீர்த்தல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
w08 8/15 பக். 29

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

சமீபத்தில் வெளியான காவற்கோபுரம் பத்திரிகைகளை நீங்கள் வாசித்து மகிழ்ந்தீர்களா? பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்.

• கிறிஸ்தவர்கள் சிலர் திருமணத்திற்குப் பிறகு என்ன மிக மோசமான பிரச்சினைகளை எதிர்ப்பட்டிருக்கிறார்கள், அவர்கள் என்ன செய்ய முயல வேண்டும்?

திருமணத்திற்குப் பிறகு, தங்கள் துணையோடு ஒத்துப்போக முடியாது என்பதாக கிறிஸ்தவர்கள் சிலர் உணரலாம். பைபிளுக்கு முரணாக விவாகரத்து செய்வது சரியான தீர்வு அல்ல என்பதை அவர்கள் அறிந்திருப்பதால், திருமண பந்தம் நிலைத்திருக்க அரும்பாடு பட வேண்டும்.—4/15, பக்கம் 17.

• முதியோர் இல்லத்தில் இருக்கிற ஒரு கிறிஸ்தவருக்கு என்னென்ன பிரச்சினைகள் வரலாம்?

அந்த முதியோர் இல்லம் இருக்கிற பிராந்தியத்திலுள்ள சபையாரோடு அவருக்குப் பழக்கமில்லாதிருக்கலாம். அந்த இல்லத்திலுள்ள பெரும்பாலோர் வெவ்வேறு மதத்தவராக இருக்கலாம். அவர்களுடைய மதச் சம்பிரதாயங்களில் கலந்துகொள்ளும்படி அவரை வற்புறுத்தலாம். சத்தியத்தில் இருக்கிற அவருடைய உறவினர்களும் சபையாரும் இப்படிப்பட்ட பிரச்சினைகளைக் கண்டறிந்து அவருக்கு உதவியும் ஆதரவும் அளிக்க வேண்டும்.—4/15, பக்கங்கள் 25-27.

• நம் கடன்களை மன்னிக்கும்படி கேட்டு ஜெபம் செய்யுமாறு இயேசு அறிவுரை கூறியதன் அர்த்தம் என்ன?

மத்தேயு 6:12-ஐ லூக்கா 11:4-உடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது பண சம்பந்தமான கடன்களைப் பற்றி இயேசு குறிப்பிடவில்லை என்பது தெளிவாகிறது. பாவங்களைத்தான் கடன்கள் என்பதாக அவர் குறிப்பிட்டார். நாமும் கடவுளைப்போல் மன்னிக்க மனமுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.—5/15 பக்கம் 9.

• ஆளும் குழுவினர் எந்தெந்த குழுக்களில் சேவை செய்கிறார்கள்?

ஒருங்கிணைப்பாளர்களின் குழு, ஊழியர்களின் குழு, பிரசுரிக்கும் குழு, ஊழியக் குழு, போதனாக் குழு, எழுத்துக் குழு.—5/15, பக்கம் 29.

• ரோமர் 1:24-32-ல் விவரிக்கப்பட்டிருக்கும் நடத்தை யூதருக்குப் பொருந்துகிறதா புறஜாதியாருக்குப் பொருந்துகிறதா?

இதிலுள்ள விவரிப்பு இருசாராருக்கும் பொருந்தலாம்; என்றாலும், பல நூற்றாண்டுகளாகவே நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றாமற்போன பண்டைய இஸ்ரவேலரைப் பற்றியே பவுல் இங்கு குறிப்பாகப் பேசுகிறார். அவர்கள் கடவுளுடைய நீதியான கட்டளைகளை அறிந்திருந்தபோதிலும் அதன்படி நடந்துகொள்ளவில்லை.—6/15, பக்கம் 29.

• கணவனும் மனைவியும் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள உதவும் நான்கு வழிகள் யாவை?

பிரச்சினைகளைப் பேசுவதற்கென்று நேரம் ஒதுக்குங்கள். (பிர. 3:1, 7) ஒளிவுமறைவில்லாமல், மரியாதையோடு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். (எபே. 4:25) உங்கள் துணை பேசும்போது கேளுங்கள், அவருடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள். (மத். 7:12) சேர்ந்து முடிவெடுங்கள், அதற்கிசைய சேர்ந்து உழையுங்கள். (பிர. 4:9, 10)—7/1, பக்கங்கள் 10-12.

• நோவாவின் காலத்தில் பூமியெங்கும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை நாம் எப்படி நம்பலாம்?

இயேசு, பெருவெள்ளம் வந்ததாகவும் அது பூமியெங்கும் வந்ததாகவும் நம்பினார். அந்தப் பெருவெள்ளத்தை அடிப்படையாக வைத்தே பைபிள் எச்சரிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.—7/1, பக்கம் 24.

• நியாயமான எதிர்பார்ப்புகள் நம் மகிழ்ச்சியைக் கூட்டுவதேன்?

அடைய முடியாத இலக்குகளை வைத்துக்கொண்டு, என்னவானாலும் சரி அவற்றை அடைந்தே தீருவேன் என்று விடாப்பிடியாகச் செயல்பட்டால், தேவையில்லாத மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். மறுபட்சத்தில், நம்மால் செய்ய முடியாது என்று அசதியாகவும் இருந்துவிடக் கூடாது. நம் வரம்புகளைச் சாக்காக வைத்து ஊழியத்தில் மந்தமாகிவிடவும் கூடாது.—7/15, பக்கம் 29.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்