உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w15 10/1 பக். 16
  • பைபிள் தரும் பதில்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பைபிள் தரும் பதில்கள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
  • இதே தகவல்
  • நம்மை எப்படி வாழ வைக்க கடவுள் நினைக்கிறார்?
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
  • வாழ்க்கைக்கு மகத்தானஒரு நோக்கமுண்டு
    வாழ்க்கையின் நோக்கமென்ன? அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?
  • வாழ்க்கையின் அர்த்தம் என்ன?
    பைபிள் தரும் பதில்கள்
  • பைபிள் தரும் பதில்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
w15 10/1 பக். 16

பைபிள் தரும் பதில்கள்

இதுதான் வாழ்க்கையா?!

ஒரு பெரியவரும் குழந்தையும் தூரத்தில் இருப்பதை பார்க்கிறார்கள்

நம்முடைய வாழ்க்கை, சட்டென மறையும் பனி போல் இருக்கிறதா?

நாம் பிறக்கிறோம், சிறு பிள்ளைகளாக விளையாடுகிறோம், வளர்ந்து பெரியவர்களாக ஆகும்போது வேலைக்கு போகிறோம். பிறகு கல்யாணம் செய்து பிள்ளைகளை பெற்றெடுக்கிறோம், கடைசியில் வயதாகி சாகிறோம். இதுதான் வாழ்க்கையா!? நீங்கள் எப்போதாவது இப்படி யோசித்து இருக்கிறீர்களா? (யோபு 14:1, 2) இந்த உலகத்தில் வாழ்ந்த சில ஞானிகளும் இப்படி யோசித்ததாக பைபிள் சொல்கிறது.—பிரசங்கி 2:11–ஐ வாசியுங்கள்.

நாம் வாழும் வாழ்க்கைக்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? இதை தெரிந்துக்கொள்ள, முதலில் உயிர் எப்படி தோன்றியது என்ற கேள்விக்கு பதில் தெரிந்துக்கொள்ள வேண்டும். நம் மூளையும் மற்ற உடல் பாகங்களும் செயல்படும் விதத்தை பார்க்கும்போது, அறிவும் ஞானமும் நிறைந்த ஒரு படைப்பாளர்தான் நம்மை படைத்திருக்க வேண்டும் என்று நிறையப் பேர் ஒத்துக்கொள்கிறார்கள். (சங்கீதம் 139:14-ஐ வாசியுங்கள்.) அப்படியென்றால், அவர் நம்மை படைத்ததற்கு நிச்சயம் ஒரு காரணம் இருக்க வேண்டும்! அந்த காரணத்தை தெரிந்துகொள்ளும்போது, நம்மால் ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ முடியும்.

மனிதர்களை கடவுள் ஏன் படைத்தார்?

கடவுள் முதலில் ஒரு ஆணையும் பெண்ணையும் படைத்து, அவர்களுக்கு அருமையான வேலையை கொடுத்தார். அவர்கள் குழந்தைகளை பெற்று எடுத்து, இந்த பூமியை ஒரு அழகான தோட்டமாக மாற்றி, சாவே இல்லாமல் அவர்கள் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று கடவுள் ஆசைப்பட்டார்.—ஆதியாகமம் 1:28, 31-ஐ வாசியுங்கள்.

கடவுளுடைய ஆட்சி வேண்டாம் என்று மனிதர்கள் தீர்மானித்ததால் அவருடைய ஆசை நிறைவேறவில்லை. அதற்காக கடவுள் நம்மை அப்படியே விட்டுவிடமாட்டார்; அவருக்கு உண்மையாக இருக்கும் மனிதர்களை அவர் ஒருநாளும் கைவிடமாட்டார். அவர் ஆசைப்பட்ட மாதிரியே இந்த பூமியை மாற்றப் போகிறார், அதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கிறார் என்று பைபிள் சொல்கிறது. நீங்களும் வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் என்று கடவுள் ஆசைப்படுகிறார்! (சங்கீதம் 37:29-ஐ வாசியுங்கள்.) அப்படியென்றால், கடவுள் தரும் நல்ல வாழ்க்கையை பெற்றுக்கொள்ள நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அதை பைபிளில் இருந்து தெரிந்துகொள்ளுங்கள். (w15-E 08/01)

இன்னும் அதிகமாக தெரிந்துகொள்ள, இந்த புத்தகத்தில் 3-வது அதிகாரத்தைப் பாருங்கள். இது யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட புத்தகம்

www.jw.org வெப்சைட்டிலும் கிடைக்கும்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்