உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ijwbq கட்டுரை 52
  • வாழ்க்கையின் அர்த்தம் என்ன?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாழ்க்கையின் அர்த்தம் என்ன?
  • பைபிள் தரும் பதில்கள்
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பைபிள் தரும் பதில்
  • நம்மை எப்படி வாழ வைக்க கடவுள் நினைக்கிறார்?
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
  • எது வாழ்க்கைக்கு மெய்யான அர்த்தமளிக்கிறது?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • யெகோவாவின் நண்பராகுங்கள்!
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
  • உண்மையிலேயே அர்த்தமுள்ள வாழ்க்கையைக் கண்டடைதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
மேலும் பார்க்க
பைபிள் தரும் பதில்கள்
ijwbq கட்டுரை 52

வாழ்க்கையின் அர்த்தம் என்ன?

பைபிள் தரும் பதில்

வாழ்க்கையின் அர்த்தம் என்னவென்று தெரிந்துகொள்ள நாம் வெவ்வேறு விதத்தில் கேள்விகளைக் கேட்கலாம். உதாரணத்திற்கு, நாம் ஏன் இங்கே இருக்கிறோம்? என் வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் இருக்கிறதா? என்றெல்லாம் கேட்கலாம். கடவுளோடு ஒரு நல்ல நட்பை வளர்த்துக்கொள்வதுதான் நம் வாழ்க்கையின் நோக்கம் என்பதை பைபிள் காட்டுகிறது. பைபிளில் இருக்கும் அடிப்படை சத்தியங்கள் சிலவற்றைக் கவனியுங்கள்:

  • கடவுள்தான் நம்முடைய படைப்பாளர். “அவர்தான் நம்மைப் படைத்தார், நாமே நம்மைப் படைக்கவில்லை” என்று பைபிள் சொல்கிறது.—சங்கீதம் 100:3, அடிக்குறிப்பு; வெளிப்படுத்துதல் 4:11.

  • ஒரு நோக்கத்தோடுதான் கடவுள் எல்லாவற்றையும் படைத்திருக்கிறார், நம்மையும் படைத்திருக்கிறார்.—ஏசாயா 45:18.

  • “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு” இருக்கும் விதத்தில்தான் கடவுள் நம்மைப் படைத்திருக்கிறார்; வாழ்க்கையின் அர்த்தம் என்னவென்று தெரிந்துகொள்வதற்கான ஆர்வப்பசியும் இதில் அடங்கும். (மத்தேயு 5:3) இந்த ஆர்வப்பசியை நாம் தீர்த்துக்கொள்ள வேண்டுமென்று அவர் விரும்புகிறார்.—சங்கீதம் 145:16.

  • கடவுளோடு ஒரு நல்ல நட்பை வளர்த்துக்கொண்டால் நம்முடைய ஆன்மீகப் பசியை நம்மால் தீர்த்துக்கொள்ள முடியும். கடவுளோடு நட்பா? அதெல்லாம் முடியாத காரியமென்று சிலர் நினைக்கலாம். ஆனால், “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்” என்று பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது.—யாக்கோபு 4:8; 2:23.

  • கடவுளுடைய நண்பராக வேண்டுமென்றால், அவர் நம்மை எந்த நோக்கத்துக்காகப் படைத்தாரோ அந்த நோக்கத்தின்படி நாம் வாழ வேண்டும். அந்த நோக்கத்தைப் பற்றி பிரசங்கி 12:13 இப்படிச் சொல்கிறது: “கடவுளுக்குப் பயபக்தி காட்டுங்கள், அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள்; இதற்காக மட்டும்தான் நாம் படைக்கப்பட்டோம்.”—குட் நியூஸ் டிரான்ஸ்லேஷன்.

  • எதிர்காலத்தில், கடவுள் எல்லா துன்பங்களையும் நீக்கிவிட்டு, தன்னுடைய நண்பர்களான தன் வணக்கத்தாருக்கு முடிவில்லாத வாழ்வைக் கொடுப்பார்; அப்போது, அவருடைய ஆரம்ப நோக்கம் முழுமையாக நிறைவேறும்.—சங்கீதம் 37:10, 11.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்