உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • wp16 எண் 1 பக். 5
  • கடவுள் நம்மை ஏன் ஜெபம் செய்ய சொல்கிறார்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுள் நம்மை ஏன் ஜெபம் செய்ய சொல்கிறார்?
  • காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2016
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கடவுள் உங்களுடைய நண்பராக வேண்டும் என்று விரும்புகிறார்.
  • கடவுள் உங்களுக்கு உதவி செய்ய ஆசைப்படுகிறார்.
  • நமக்குக் கடவுளுடைய ஆலோசனை தேவை.
  • உங்கள் ஜெபத்தைக் கடவுள் கேட்கிறாரா?
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2021
  • பைபிள் தரும் பதில்கள்
    கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
  • ஜெபம்—நமக்குக் கிடைத்திருக்கும் ஒரு பாக்கியம்
    பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?
  • ஜெபத்தில் கடவுளிடம் நெருங்குதல்
    கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?
மேலும் பார்க்க
காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2016
wp16 எண் 1 பக். 5

அட்டைப்படக் கட்டுரை | கடவுளிடம் வேண்டினால் பலன் கிடைக்குமா?

கடவுள் நம்மை ஏன் ஜெபம் செய்ய சொல்கிறார்?

கடவுள் உங்களுடைய நண்பராக வேண்டும் என்று விரும்புகிறார்.

நல்ல நண்பர்கள் அடிக்கடி பேசிக்கொள்வார்கள். கடவுளிடம் நாம் அடிக்கடி பேச வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். ஏனென்றால், நாம் அவருடைய நண்பராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். “நீங்கள் என்னைக் கூப்பிடுவீர்கள்; என்னிடம் வந்து வேண்டிக்கொள்வீர்கள். அப்போது நான் உங்களுக்குப் பதில் சொல்வேன்” என்று கடவுள் சொல்கிறார். (எரேமியா 29:12, NW) கடவுளிடம் நீங்கள் அடிக்கடி பேசினால், “அவர் உங்களிடம் நெருங்கி வருவார்.” (யாக்கோபு 4:8) “தன்னை நோக்கிக் கூப்பிடுகிறவர்களின் பக்கத்திலேயே யெகோவா இருக்கிறார்.” (சங்கீதம் 145:18, NW) நாம் கடவுளிடம் பேசப்பேசத்தான் அவரோடு நல்ல நண்பராக இருக்க முடியும்.

“தன்னை நோக்கிக் கூப்பிடுகிறவர்களின் பக்கத்திலேயே யெகோவா இருக்கிறார்.” —சங்கீதம் 145:18, NW.

கடவுள் உங்களுக்கு உதவி செய்ய ஆசைப்படுகிறார்.

“உங்களில் எந்த மனிதனாவது, தன் மகன் ரொட்டியைக் கேட்டால் அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? . . . நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்கத் தெரிந்திருக்கும்போது, உங்கள் பரலோகத் தகப்பன் தம்மிடம் கேட்கிறவர்களுக்கு நன்மையானவற்றை இன்னும் எந்தளவுக்குக் கொடுப்பார்!” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 7:9-11) கடவுள் “உங்கள்மீது அக்கறையாக இருப்பதால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.” (1 பேதுரு 5:7) “எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்; எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை நன்றியுடன்கூடிய ஜெபத்தினாலும் மன்றாட்டினாலும் கடவுளுக்குத் தெரியப்படுத்துங்கள்.”—பிலிப்பியர் 4:6.

நமக்குக் கடவுளுடைய ஆலோசனை தேவை.

கடவுளை நம்புகிறவர்கள் நம்பாதவர்கள் என எல்லாருமே ஜெபம் செய்கிறார்கள்.a (அடிக்குறிப்பை பாருங்கள்.) ஏனென்றால், கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும், அவரை வணங்க வேண்டும், அவருடைய ஆலோசனையைக் கேட்க வேண்டும் என்று நாம் எல்லாருமே நினைக்கிறோம். கடவுள் நம்மை அப்படித்தான் படைத்திருக்கிறார். கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறவர்கள் “சந்தோஷமானவர்கள்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 5:3) கடவுளிடம் ஜெபம் செய்யும்போதுதான் அவருடைய ஆலோசனை நமக்கு கிடைக்கும்.

கடவுளிடம் ஜெபம் செய்தால் வேறென்ன நன்மைகள் கிடைக்கும்? (w15-E 10/01)

a 2012-ல் பியூ ஆராய்ச்சி நிறுவனம் அமெரிக்காவில் ஒரு ஆய்வு செய்தது. அதில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களில் 11 சதவீதம் பேர் மாதம் ஒரு முறையாவது ஜெபம் செய்கிறார்கள் என்று தெரியவந்தது.

எதற்கெல்லாம் ஜெபம் செய்யலாம்?

நமக்கு தேவையான எல்லா விஷயத்தையும் பற்றி ஜெபம் செய்யலாம் என்று பைபிள் சொல்கிறது. உதாரணமாக...

  • மன்னிப்பு கேட்கலாம் “நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை [அதாவது, தவறுகளை] உமக்கு அறிவித்தேன்.”—சங்கீதம் 32:5.

  • நன்றி சொல்லலாம் ‘ஆண்டவருக்கு நன்றி உரைப்பது நன்று.’—சங்கீதம் 92:1, (திருப்பாடல்கள்) பொது மொழிபெயர்ப்பு பைபிள் [பொ. மொ.].

  • கடவுளைப் புகழலாம் “ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.”—சங்கீதம் 34:1, பொ. மொ.

  • ஆலோசனை கேட்கலாம் “கர்த்தாவே, என்னை உமது கட்டளைகளின் பாதையில் வழிநடத்தும், நான் அவ்வாழ்க்கை முறையை உண்மையாகவே நேசிக்கிறேன்.”—சங்கீதம் 119:35, பொ. மொ.

  • உதவி கேட்கலாம் “தேவனே, நீர் எனக்குச் செவிகொடுப்பதை எனக்கு காண்பித்து, என்மீது தயவாயிரும். . . . எனக்கு பெலனைத் தாரும்.” —சங்கீதம் 86:16, ஈஸி டு ரீட் வர்ஷன்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்