சமாதானமும் பாதுகாப்பும்—ஒரு நிச்சயமான நம்பிக்கை
1 இன்று பெரும்பாலான ஆட்கள் சமாதானத்தையும் பாதுகாப்பையும் விரும்புகின்றனர். ஆனால் பாதுகாப்போடுகூடிய மெய் சமாதானம், இவ்வுலகுக்கு கிட்டாததாய் இருக்கிறது. இலட்சக்கணக்கான ஆட்கள் போரினால் பாழாக்கப்பட்ட பகுதிகளில் வாழ்கின்றனர். எண்ணற்ற மற்றவர்கள், பயங்கரவாதிகளின் செயல்களும் அல்லது முறையற்ற போர்களும் இருப்பதால், சமாதானத்தையும் பாதுகாப்பையும் காண்போம் என்பது வீணான நம்பிக்கை என்று உணருகின்றனர். இருட்டிவிட்ட பின்பு குற்றவாளிகள் ஆதிக்கம் செலுத்துவதால், அநேகர் மிகவும் பாதுகாப்பான தங்கள் வீடுகளைவிட்டு வெளியேச் செல்ல பயப்படுகின்றனர். அமைதியாய் வாழ்க்கை நடத்துபவர்கள் உண்மையில் வெகு சிலரே.
2 மேலான நிலைமைகளுக்காக ஏங்குபவர்களுக்கு சமாதானத்தின் செய்தி வரவேற்புக்குரியதாய் இருக்கிறது. கிறிஸ்தவர்களாக நாம் இயேசுவின் கட்டளைக்கு செவிகொடுக்கிறோம்: “ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள். சமாதான பாத்திரன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பி வரும்.” (லூக்கா 10:5, 6) சமாதானத்தின் தேவனின் பிரதிநிதிகளாக, நாம் ஜனங்களை சமாதானத்தோடு அணுகுகிறோம். நம் கால்கள் ‘சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்றும் பாதரட்சையை தொடுத்திருக்கிறது.’—எபே. 6:15.
சமாதானத்தை நாடுகிறவர்களாக முன்மாதிரிகள்
3 ஒரு சமாதானமான செய்தியை சிபாரிசு செய்வதற்கு வெளிப்படையாகவே யெகோவாவின் ஜனங்கள் தங்கள் சமுதாயங்களிலும், சபைகளிலும் சமாதானமாக வாழ வேண்டும். சமாதானத்தை நாடும் ஜனங்களாக நாம் நல்ல முன்மாதிரிகளாக இருக்க வேண்டும். “கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படியாக” இருங்கள் என்று பேதுரு உடன் கிறிஸ்தவர்களுக்கு எழுதினார். (2 பேதுரு 3:14) சமாதானத்தை நாடும் கிறிஸ்தவர்களாக நாம் எவ்வாறு முன்மாதிரிகளாக ஆகிறோம்?
4 முதலாவது, சமாதானத்தின் கடவுளாகிய யெகோவாவோடு சமாதானமான உறவுகளை நாம் காத்துக்கொள்கிறோம். உன்னதமான பேரரசராக அவருடைய அதிகாரத்தை நாம் மதித்துணருகிறோம், அவருடைய கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படிந்திருக்கிறோம். (சங். 34:14) அவருடைய ஆவியின் கனிகளில் ஒன்றான சமாதானம் நம் வாழ்க்கைகளில் தெளிவாக இருக்க வேண்டும்.—கலா. 5:22.
5 சமாதானத்தை நாடும் கிறிஸ்தவர்களாக நம்முடைய முன்மாதிரி, மானிட அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்துவதையும் உட்படுத்தியதாய் இருக்க வேண்டும். இது அரசாங்க அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள், தொழில் அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் மூப்பர்கள் ஆகியோரை உட்படுத்துகிறது. (ரோ. 13:1, 2; கொலோ. 3:22; எபே. 6:1; எபி. 13:17) சமாதானமும் அமைதலுமான வாழ்க்கையை நடத்துவதன் மூலம் நாம் நம் செய்தியை அலங்கரிக்கிறோம். “சமாதானத்துக்கடுத்தவைகளையும் அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாட” விரும்பும் ஆட்களாக நாம் நம்மை வெளிக்காட்டுகிறோம். (ரோ. 14:19) ஒரு புதிய ஒழுங்கு முறையில் சமாதானமும் பாதுகாப்பும் நமக்கு ஒரு நிச்சயமான நம்பிக்கை.
தற்போதைய அளிப்பு சமாதானத்தை முன்னேற்றுவிக்கிறது
6 ஜூலை மாதத்தின் போது உண்மையான சமாதானமும் பாதுகாப்பும்—இதை நீங்கள் எவ்வாறு கண்டடையலாம்? என்ற புத்தகத்தை 12 ரூபாய் நன்கொடைக்கு அளிப்பதன் மூலம் நாம் நம் நம்பிக்கையை பகிர்ந்து கொள்வோம். சமாதானமும் பாதுகாப்பும் இன்றுள்ள இந்தக் குழப்பமான உலகில் உள்ள லட்சக்கணக்கான ஜனங்களின் சிந்தனையில் இருக்கிறபடியால், இந்த அளிப்பு காலத்துக்கு அதிக ஒத்ததாக இருக்கிறது.
7 புத்தகத்தின் முதல் இரண்டு அதிகாரங்களில் மிகச் சிறந்த பேச்சுக் குறிப்புகள் அடங்கியுள்ளன. பக்கம் 5-ல் உள்ள முதல் இரண்டு பாராக்களை வீட்டுக்காரருக்கு வாசித்துக் காண்பிக்க நீங்கள் விரும்பலாம். அல்லது மானிட தலைவர்கள் வாக்களித்திருப்பவைகளோடு கடவுளுடைய நிச்சயமான வாக்குகள் வேறுபடுத்திக் காட்டியிருப்பதை பக்கம் 8-ல் உள்ள பாரா 11-ஐ குறிப்பிட்டுக் காட்டலாம். பக்கங்கள் 20–1-ல் இருக்கும் பாராக்கள் 28, 29-ஐயும் பார்க்கவும். ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்கும் முயற்சியில் அக்கறை காண்பித்த எல்லாரையும் அல்லது அளிப்பை பெற்றுக்கொண்டவர்களையும் நிச்சயமாய் திரும்பச் சென்று பாருங்கள்.
8 சமாதானத்தையும் பாதுகாப்பையும் நாடுபவர்களுக்கு சமாதானத்தின் கடவுளாகிய யெகோவாவால் உறுதியளிக்கப்பட்ட உண்மையான நிச்சய நம்பிக்கையை நாம் தொடர்ந்து சொல்வோமாக. சமாதானப் பிரபுவாகிய இயேசுவின் கைகளில் இருக்கும் ராஜ்யத்தின் மூலம் அது எவ்வாறு சாதிக்கப்படும் என்பதை கற்பிப்போமாக. (ஏசா. 9:6, 7) நம்முடைய சமாதானமான வாழ்க்கையின் முன்மாதிரி, “சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடரும்” கிறிஸ்தவர்களாக நம்மைத் தொடர்ந்து சிபாரிசு செய்யட்டும்.—1 பேதுரு 3:10, 11.