மற்றவர்களில் தனிப்பட்ட அக்கறையைக் காண்பித்தல்
1 மற்றவர்களில் யெகோவாவுக்கு அக்கறை இருப்பது வெகு தெளிவாயிருக்கிறது. தம்முடைய சிருஷ்டிப்புகளின் பொருளாதார தேவைகளைப் பூர்த்தி செய்ய தாராளமாக அவர் ஏற்பாடு செய்யவில்லையா? (ஆதி. 1:29, 30; 2:16, 17; மத். 5:45; லூக். 6:35-ஐ ஒப்பிடுக.) அதிமுக்கியமாக, பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மை விடுவிப்பதற்காக ஏற்பாடு செய்வதன் மூலம், அவர் நம்மில் தனிப்பட்ட அக்கறையைக் காண்பிக்கவில்லையா?—யோ. 3:16.
2 இயேசு பூமியில் இருந்தபோது, மற்றவர்களில் தனிப்பட்ட அக்கறையைக் காண்பிப்பதில் தம் தகப்பனின் பரிபூரண முன்மாதிரியைப் பின்பற்றினார். (மத். 11:28–30; 1 பேதுரு 2:21) “ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும்” என்று குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனிதன் இயேசுவிடம் சொன்னபோது, “எனக்குச் சித்தமுண்டு” என்று இயேசு பதிலளித்து அந்த மனிதனை குணமாக்கினார். (மத். 8:2, 3) நாயீன் பட்டணத்தை நெருங்குகையில், இயேசு ஓர் இளம் மனிதனைத் தாங்கிய சவ அடக்க ஊர்வலத்தை எதிர்ப்பட்டார், அவன் ஒரு விதவையாயிருந்த தாயின் ஒரே மகனாயிருந்தான், இயேசு இரக்கத்தால் உந்தப்பட்டு, அவனை மீண்டும் உயிர்பெறச் செய்தார். (லூக். 7:11–15) அவரைக் கேட்பதற்கு முன்பே இயேசு மற்றவர்களில் தனிப்பட்ட அக்கறை காண்பித்தார். சிறு பிள்ளைகளும்கூட அவருடைய நேரத்துக்கும், கவனத்துக்கும் தகுதியுள்ளவர்களாக இருந்தார்கள், மற்றவர்களை தேற்றுவதற்கும் உற்சாகப்படுத்துவதற்கும்’ நேரம் இல்லாதபடி அவர் ஒருபோதும் அதிக வேலையுள்ளவராக இருந்ததில்லை.—மத். 20:31–34; மாற்கு 10:13–16.
குடும்பமும் நண்பர்களும்
3 மற்றவர்களில் தனிப்பட்ட அக்கறையைக் காண்பிப்பதற்கான வழிகளுக்காக யெகோவாவும், இயேசு கிறிஸ்துவும் பார்த்துக்கொண்டிருப்பது போல நாமும் இருக்க முயற்சி செய்ய வேண்டும். ஆகையால், அதைச் செய்வதற்கு சில சந்தர்ப்பங்களை நாம் சிந்திப்போம்.
4 சகோதரர்கள் தங்களுடைய சொந்த குடும்ப அங்கத்தினர்களில் உண்மையான தனிப்பட்ட அக்கறையை எடுத்துக்கொண்டு, குடும்பத்தின் ஆவிக்குரிய தன்மையை புறக்கணிக்காமல் இருப்பது தான் மிகப்பெரிய தேவைகளில் ஒரு தேவையாயிருக்கிறது. இது குடும்பத்தோடு ஒழுங்காக படிப்பதை உட்படுத்துகிறது. உங்கள் குடும்ப படிப்பில், விஷயத்தை ஆர்வமூட்டும் விதத்திலும், நடைமுறையான மதிப்புள்ளதாக்கும் விதத்திலும் நீங்கள் சிந்திக்கிறீர்களா? அதைப் பின்தொடர உங்கள் வீட்டிலுள்ள ஒவ்வொரு அங்கத்தினரோடும் ஒழுங்காக வெளி ஊழியத்தில் வேலை செய்கிறீர்களா? நீங்கள் அவ்வாறு செய்கையில், அது ஒரு மகிழ்ச்சியான ஒரு நேரமாயிருக்கிறதா? அயலான் பேரிலுள்ள கிறிஸ்தவ அன்பைக் காண்பிப்பதற்கு மற்ற ஜனங்களுக்கு உதவிசெய்யும் ஆவலை நீங்கள் உங்கள் பிள்ளைகளில் வளர்க்கிறீர்களா? நீங்கள் திருமணமாகி, வீட்டில் பிள்ளைகள் இல்லாவிட்டாலும்கூட, நீங்கள் ஒரு குடும்ப படிப்பை நடத்துகிறீர்களா?
5 நம்மால் முடிந்த அளவு ஒவ்வொருவருக்கும் ஆவிக்குரிய உதவியை அளிக்க நாம் விரும்புகிறோம். ஆனால் அதிக வேலைகள் அடங்கிய நம்முடைய வாழ்க்கையில் விசேஷ தேவைகளை உடைய சபை அங்கத்தினர்களில் தனிப்பட்ட அக்கறையைக் காண்பிப்பதற்கு நாம் மறந்துவிடுகிறோமா? (நீதி. 3:27; கலா. 6:10) கிறிஸ்தவ சபையில் தகப்பனில்லாத பையன்கள், வயதானவர்கள், விதவைகள், உடல் வலிமையற்றவர்கள், சோர்வுற்றவர்கள், இயலாதவர்கள் மேலும் விசேஷ தேவைகளையுடைய மற்றவர்கள் இருக்கின்றனர். யெகோவாவையும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் பின்பற்றுகிறவர்களாக, நம்முடைய எல்லாச் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளிலும் தனிப்பட்ட அக்கறையைக் காண்பிக்க நாம் தவறிவிடக்கூடது.—1 கொரி. 10:24; பிலி. 2:4; எபி. 13:16.
பிராந்தியத்தில் இருக்கும் செம்மறியாட்டைப் போன்றவர்கள்
6 வீட்டு பைபிள் படிப்புகளை உடைய ஜனங்களில் நாம் எவ்வாறு தனிப்பட்ட அக்கறையைக் காண்பிக்கலாம்? இவர்களில் அநேகர் உலகப்பிரகாரமாக அறிமுகமானவர்களோடு கூட்டுறவைத் துண்டித்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை கண்டிருக்கின்றனர். நாம் அதிக வேலையுள்ளவர்களாக இருந்தாலும், அப்பேர்ப்பட்ட மாணாக்கர்களில் நாம் தனிப்பட்ட அக்கறையைக் காண்பித்து, மாற்றங்கள் செய்துகொண்டவர்களை நம்முடைய புதிய நண்பர்களாக உணரச்செய்கிறோமா? நாம் அவர்களோடு படிக்காவிட்டாலும், நாம் அவர்களுக்கு உற்சாகத்தின் ஊற்றுமூலமாய் இருக்கிறோமா?—மாற்கு 10:28–30-ஐ ஒப்பிடுக.
7 நற்செய்திக்கு செவிசாய்க்க மனமுள்ளவர்களாயிருக்கும் ஜனங்களில் உண்மையான தனிப்பட்ட அக்கறையைக் காண்பிப்பதில் நீங்கள் மேலுமதிக பங்கை வகிக்க முடியுமா? அவர்கள் தங்கள் ஆவிக்குரிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உதவ நீங்கள் முயற்சி செய்வீர்களா? தனிப்பட்ட விதமாக, வெளி ஊழியத்தில் மேலும் அதிக பங்கைக் கொண்டிருக்க நீங்கள் என்ன செய்யக்கூடும்? மேலும் முழுமையாக பங்குகொள்ளும் நிலையில் நீங்கள் இப்பொழுது இருந்தால் பின்வாங்காதீர்கள்.—லூக். 9:60–62.
8 மற்றவர்களில் தனிப்பட்ட அக்கைறையைக் காண்பிப்பதில் யெகோவாவையும் இயேசுவையும் நாம் பின்பற்ற வேண்டும். குஷ்டரோகம் முழுமையாக இருந்த மனிதனுக்கு இயேசு செய்தது போல, நாமும் இரக்கமுள்ளவர்களாக உதவி செய்ய முன்வரவேண்டும். ஆம், மற்றவர்களில் தனிப்பட்ட அக்கறையைக் காண்பிப்பதற்கான வழிகளைக் குறித்து நாம் எப்பொழுதும் விழிப்பாயிருக்க வேண்டும்.