சீஷராக்குவதற்கு நமக்கு உதவும் கூட்டங்கள்
ஜூலை 8-ல் துவங்கும் வாரம்
பாட்டு 202 (18)
10 நிமி: சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து பொருத்தமான அறிவிப்புகளும்.
20 நிமி: “சமாதானமும் பாதுகாப்பும்—ஒரு நிச்சய நம்பிக்கை.” முதல் ஐந்து பாராக்களிலிருந்து மூப்பர் 12 நிமிட பேச்சைக் கொடுக்கிறார், அதைத் தொடர்ந்து பாரா 6–8 வரை சபையாரோடு கலந்தாலோசிப்பு. பாரா 7-ல் உண்மையான சமாதானம் புத்தகத்திலிருந்து குறிப்பிடப்பட்டுள்ள பேச்சுக் குறிப்புகளை எவ்வாறு உபயோகிப்பது என்பதை ஒரு திறமையான பிரஸ்தாபி வீட்டுக்காரரோடு நடித்துக் காட்டுமாறு செய்யுங்கள்.
15 நிமி: “மழைக்காலத்திலிருந்து தேவராஜ்ய விதத்தில் அதிகத்தைப் பெறுதல்.” பேச்சும் ஒரு குடும்ப கலந்தாலோசிப்பும்.
(3 நிமி.) அக்கிராசினர் முதல் இரண்டு பாராக்களை கலந்தாலோசித்து, குடும்ப கலந்தாலோசிப்பை அறிமுகப்படுத்துகிறார். குடும்பத்தின் ஆவிக்குரிய தன்மை மழைக்காலத்தில் புறக்கணிக்கப்படக்கூடாது. குடும்பத் தலைவர்கள் ஆவிக்குரிய தேவைகள் எல்லா சமயங்களிலும் கவனிக்கப்படுகின்றனவா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும்.—உபா. 6:6, 7.
(10 நிமி.) பாராக்கள் 3–6 வரை உள்ள குறிப்புகளின் பேரில் குடும்ப கலந்தாலோசிப்பு. மழைக்காலத்தில் ஆவிக்குரிய கிரியைகள் சேர்க்கப்படும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள, குடும்பத் தலைவர் தேவைப்படும் ஏற்பாடுகளை குடும்பத்தோடு கலந்தாலோசிக்கிறார். அவர்கள் விஜயம் செய்யப்போகும் இடத்தில் உள்ள உள்ளூர் சபையின் விலாசத்தையும், கூட்டத்தின் நேரத்தையும் குடும்பத்தின் ஓர் அங்கத்தினர் பெற்றுக்கொண்டார். வெளி ஊழியத்தில் சபையோடு கூட பங்கு கொள்ளவும், அதோடு சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கு சந்தர்ப்பங்களை அனுகூலப்படுத்திக் கொள்வதற்கும் குடும்பத்துக்குப் போதுமான பிரசுரங்கள் இருக்கின்றன. ஒரு சாட்சி கொடுப்பதற்கு சந்தர்ப்பங்களை அளிக்கும் சூழ்நிலைகள் குறிப்பிடப்படுகின்றன. “சுயாதீனப் பிரியர்” மாவட்ட மாநாட்டுக்கு ஆஜராவதற்கான திட்டங்களுக்கு குடும்பத் தலைவர் கவனத்தைத் திருப்புகிறார், ஒவ்வொரு மாநாட்டு நாளின் இறுதியிலும் அந்த நாளின் நிகழ்ச்சிநிரலிலிருந்து குறிப்புகளை அவர்கள் விமர்சிப்பார்கள் என்று ஞாபகப்படுத்தி, அவ்வாறு செய்வதன் நன்மைகளை அவர் விளக்குகிறார். மழைக்காலம் மற்றும் மாநாட்டு சமயங்களிலிருந்து தேவராஜ்ய விதத்தில் அதிகம் பெறுவதற்காக எல்லாரும் ஆர்வத்தோடு எதிர்ப்பார்க்கின்றனர்.
(2 நிமி.) பாரா 7-ல் உள்ள தகவலோடு அக்கிராசினர் முடிக்கிறார். நாம் என்ன திட்டங்களை போட்டாலும், குடும்பத்தின் ஆவிக்குரிய தேவைகளை புறக்கணிக்காமலிருக்க நிச்சயமாயிருங்கள்.
பாட்டு 100 (81), முடிவு ஜெபம்.
ஜூலை 15-ல் துவங்கும் வாரம்
பாட்டு 116 (108)
5 நிமி: சபை அறிவிப்புகள், கணக்கு அறிக்கை. உலகளாவிய வேலைக்கு பண ஆதரவுக்காக சங்கம் போற்றுதல் தெரிவித்திருப்பதை வாசியுங்கள். பெற்றுக்கொண்ட நன்கொடைகளுக்காகவும் சபைக்கு நன்றி சொல்லுங்கள்.
20 நிமி: “மற்றவர்களில் தனிப்பட்ட அக்கறையைக் காண்பித்தல்.” கேள்விகளும் பதில்களும். உள்ளூரில் தகவலை பொருத்துவதற்காக என்ன செய்யப்படலாம் என்பதை சபையோடு சிந்தியுங்கள்.
20 நிமி: “1991 ‘சுயாதீனப் பிரியர்’ மாவட்ட மாநாட்டில் ஆஜராவதற்கு இப்பொழுதே ஏற்பாடு செய்யுங்கள்”—பகுதி 1. பாராக்கள் 1–9 வரை சபையார் கலந்தாலோசிப்பு, நேரம் அனுமதிக்குமேயானால், “மாவட்ட மாநாடு நினைப்பூட்டுதல்கள்” பேரில் சுருக்கமான விமர்சனம். மாநாட்டுக்கு ஆஜராகப் போகும் தங்கள் பைபிள் படிப்புகளோடு பிரஸ்தாபிகள் பொருத்தமான குறிப்புகளை கலந்தாலோசிக்க விரும்பக்கூடும்.
பாட்டு 177 (52), முடிவு ஜெபம்.
ஜூலை 22-ல் துவங்கும் வாரம்
பாட்டு 133 (68)
10 நிமி: சபை அறிவிப்புகள். தற்போதைய பத்திரிகைகளிலிருந்து ஒன்று அல்லது இரண்டு குறிப்புகளை சிறப்பித்துக் காட்டுங்கள். இந்த வார இறுதியில், வெளி ஊழியத்தில் முழுமையான பங்கைக் கொண்டிருக்க பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துங்கள்.
23 நிமி: “நற்செய்தியை அறிமுகப்படுத்துல்—அடிக்கடி செய்து முடிக்கப்படும் பிராந்தியத்தில் பத்திரிகைகளோடு.” கேள்விகளும் பதில்களும். 3-வது பாராவை சிந்திக்கையில், வாலிப பிரஸ்தாபிகள் எவ்வாறு வீட்டுக்காரர்களோடு சம்பாஷித்துப் பிரசுரங்களை அளிக்க முடியும் என்பதை நன்கு தயாரித்த இளைஞன் தற்போதைய பத்திரிகையை உபயோகித்து நடித்துக் காட்டுமாறு செய்யுங்கள். ஒருவேளை சொல்லலாம்: “வணக்கம். என்னுடைய பெயர் ——. அதிக மதிப்பு வாய்ந்த தகவலை நான் கொண்டு வந்துள்ளேன். [பொருள் அல்லது தலைப்பைக் கொடுங்கள்.] நான் இந்தக் குறிப்பை அனுபவித்தேன். [திட்டவட்டமான குறிப்பை காண்பியுங்கள் அல்லது உதாரணத்தை விளக்குங்கள்.] இது எனக்கு உதவியாக இருந்தது. [நீங்கள் எவ்வாறு பயனடைந்தீர்கள் என்பதைச் சொல்லுங்கள்.] இதை நீங்களும் அனுபவிப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் இந்தப் பத்திரிகையை வாசிப்பீர்கள் என்றால், ரூ2.50 என்ற நன்கொடையின் பேரில் இதை உங்களிடம் விட்டுச் செல்ல நான் சந்தோஷப்படுவேன்.”
12 நிமி: கேள்விப் பெட்டி. பள்ளி கண்காணியால் கையாளப்படும் கலந்தாலோசிப்பு.
பாட்டு 216 (108), முடிவு ஜெபம்.
ஜூலை 29-ல் துவங்கும் வாரம்
பாட்டு 139 (74)
7 நிமி: சபை அறிவிப்புகள். தேவராஜ்ய செய்திகள். வார இறுதி நாட்களில் வெளி ஊழிய ஏற்பாடுகளை ஆதரிக்குமாறு சபையை உற்சாகப்படுத்துங்கள்.
18 நிமி: “வெளி ஊழியத்தில் நம்முடைய ராஜ்ய ஊழியத்தை நிறைவேற்றுதல்.” கட்டுரையின் பேரில் கேள்வி-பதில் சிந்திப்பு. பாராக்கள் 2–6 வரை உள்ள குறிப்புகள் எவ்வாறு நடைமுறையான விதத்தில் உபயோகிக்கப்படலாம் என்பதை உதாரணங்கள் மூலம் எடுத்துக் காட்டுங்கள். பாரா 5-ஐ சிந்திக்கையில், பைபிள் படிப்பை ஆரம்பிப்பதற்கு கஷ்டப்படும் பிரஸ்தாபி எவ்வாறு உதவிக்காக ஊழிய கண்காணியை அணுகுகிறார் என்பதைக் காண்பிக்க நடிப்பைக் கொண்டிருங்கள். ஊழிய கண்காணி பிரஸ்தாபிக்கு உதவி செய்வதில் இன்டெக்ஸ்-ஐ உபயோகிக்கிறார்.
20 நிமி: “1991 ‘சுயாதீனப் பிரியர்’ மாவட்ட மாநாட்டில் ஆஜராவதற்கு இப்பொழுதே ஏற்பாடு செய்யுங்கள்”—பகுதி 2. பாராக்கள் 10–25 வரை சபையார் கலந்தாலோசிப்பு. காவற்கோபுரம் ஜூன் 15, 1989, பக்கங்கள் 10–20-ல் உள்ள தகவலின் பேரில் சார்ந்த பொருத்தமான நினைப்பூட்டுதல்களை சேர்த்துக்கொள்ளுங்கள். மாநாட்டுக்கு ஆஜராவதற்கு முன், குடும்பத் தொகுதிகள் இக்கட்டுரைகளில் இருக்கும் குறிப்புகளை விமர்சிக்குமாறு உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 14 (6), முடிவு ஜெபம்.