அதிக கவனம்—மேலான சேவை
▪ பின்வரும் குறிப்புகளுக்கு நீங்கள் கூர்ந்த கவனம் செலுத்தினால் சந்தாக்கள் தயாரிப்பதை விரைவுபடுத்துவதற்கு அதிக உதவியாயிருக்கும்:
1. சந்தாதாரர் இதழ்களை பெற்றுக் கொள்ள ஆரம்பிப்பதற்கு 8-10 வாரங்கள் எடுக்கின்றன.
2. தயவு செய்து விலாசத்தை தெளிவாக, பெரிய எழுத்துக்களில் எழுதுங்கள் அல்லது தட்டச்சு செய்யுங்கள்.
3. சந்தா சீட்டுகள் பின்கோட், மொழி ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டும்.
4. விலாசம் உங்களுடைய சபை பிராந்தியத்துக்கு வெளியே இருந்தால், சபை எண் என்று போடப்பட்டிருக்கும் இடைவெளியில் குறுக்காக ஒரு கோடிடவும். (பரிசு சந்தாக்களில் உங்களுடைய சபையின் எண் இருக்கலாம்.)
5. மீண்டும் புதுப்பிக்கும் போது, தீர்ந்து போகும் சந்தா சீட்டுகளை (M-91, M-191) உபயோகித்து, அவைகளை சங்கத்துக்கு திருப்பி அனுப்புவதற்காக சபையிடம் கொடுங்கள்.
6. சந்தாதாரரின் விலாச மாற்றத்தை கேட்டு எழுதும் போது, சந்தா விலாச மாற்றம் சீட்டை (M-205) தயவு செய்து உபயோகியுங்கள்.
▪ காரியதரிசிகள் தயவுசெய்து பின்வருபவற்றை கவனியுங்கள்:
1. சங்கத்துக்கு அனுப்பப்படும் சந்தா சீட்டில் உள்ள விலையும் M-203 சீட்டில் உள்ள விலையும் ஒரே தொகையாக இருக்க வேண்டும்.
2. சந்தா சீட்டுக்களை ஒன்றாக சேர்த்து தைக்க (பின் செய்ய) வேண்டாம்.
3. விநியோகிப்பவர் ஆர்டர் சீட்டு (M-AB-202) சபையின் அஞ்சல் விலாசத்தைக் கொண்டிருக்கக் கூடாது, உங்களுடைய சபையின் பெயர், எண் இருந்தால் போதும். மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், “விநியோகிப்பவர் பத்திரிகைகள் விலாச மாற்றம் மட்டும்” சீட்டை (M-206) தயவு செய்து அனுப்பவும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளுக்கு கவனமான அக்கறை செலுத்தினால், நம்முடைய பத்திரிகைகளுக்கு சந்தா செய்பவர்களுக்கும், காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளுக்கு விநியோகிப்பவர் ஆர்டர்களை கையாளுபவர்களுக்கும் மேலான சேவை கொடுப்பதற்கு ஒரு பெரும் உதவியாய் இருக்கும்.