நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—சந்தாக்களை தைரியமாகஅளிப்பதன் மூலம்
1 இந்தப் பூமியிலே, மிகச் சிறந்த பைபிள் படிப்பு பத்திரிகை காவற்கோபுரம் என்பதில் சந்தேகமில்லை! இது உண்மை என்பதை நீங்கள் மனதார நம்புகிறீர்களா? அப்படியானால் அதற்கு சந்தா செய்யும்படி எல்லாருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டுமல்லவா?
2 காவற்கோபுரம் வாசிப்பதன் மூலம் நீங்கள் தனிப்பட்ட முறையில் எவ்வாறு உதவப்பட்டிருக்கிறீர்கள்? இந்தப் பத்திரிகைகள் நமக்கு உதவியிருக்கக்கூடிய வழிகளை பெரும்பாலும் நாம் ஒவ்வொருவரும் விவரித்துச் சொல்லக்கூடும். நாம் வாழ்ந்துகொண்டிருக்கக்கூடிய காலத்தின் முக்கியத்துவத்தைக் குறித்து நமது விழிப்புணர்வை தூண்டுவதில் அது பிரதான கருவியாக இருந்திருக்கிறது என்று சிலர் சொல்லக்கூடும். அல்லது இன்று மனித குலத்தை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கக்கூடிய “காலங்களின் அடையாளங்கள்” பற்றிய உண்மையான அர்த்தத்தைக் கற்றுக்கொள்வதற்கு அது நமக்கு உதவியிருக்கிறது என்று ஒரு சிலர் சொல்லக்கூடும். (மத். 16:3) தங்கள் உடனாளிகளை ஒடுக்கக்கூடியவர்களை கடவுளுடைய ராஜ்யம் அழித்துபோடும் என்ற அந்த நற்செய்தியினால் தாங்கள் ஆறுதலடைந்ததாக வேறு சிலர் சொல்லக்கூடும். காவற்கோபுரம் பத்திரிகையானது இந்தக் கருத்தையே 110 ஆண்டுகளுக்கு மேலாக ஆதரித்து பேசி வந்திருக்கிறது. அபூரண மனிதர் நித்திய ஜீவனின் வாய்ப்பை அடைவதற்காக மீட்கும்பொருள் ஏற்பாட்டின் மீது நாம் நமது விசுவாசத்தை கட்டியமைப்பதற்கு சந்தேகமின்றி இந்தக் குறிப்பிடத்தக்க பைபிள் இதழானது உதவியிருக்கிறது என்று நாம் அனைவரும் சொல்லுவோம். மற்றவர்கள் இந்தச் சத்தியங்களைக் கற்க வேண்டியதாக இருக்கிறது.
உங்கள் நோக்குநிலையில் நம்பிக்கையோடிருங்கள்
3 காவற்கோபுரம் இதழில் மனிதனுடைய நியாய விவாதங்கள் அல்ல, கடவுளுடைய ஞானமே வலியுறுத்தப்படுகிறது. (ஏசா. 55:8, 9) இப்படிப்பட்ட ஞானம் இன்றுள்ள அனைவருக்கும் மிகக் கண்டிப்பாய் தேவைப்படுகிறது. அது வாழ்க்கையை முன்னேற்றுவித்து சரியான உள்ளெண்ணங்களை விருத்தி செய்வதற்கு உதவக்கூடும். தொடர்ந்து “பிழைத்திருப்பதற்கு” இது அவசியமாக இருக்கிறது. (நீதி. 9:1-6) இக்காரியத்தை மனதார ஒப்புக்கொண்டு மற்றவர்களுக்குத் தேவைப்படக்கூடிய காரியம் நம்மிடம் இருக்கிறது என்பதை மதித்துணர்ந்தவர்களாக நாம் நம்பிக்கையான மனநிலையோடு சந்தாக்களை அளிப்போமாக. வீட்டுக்காரருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் நம்பக்கூடிய வாக்கியங்களை ஒவ்வொரு இதழிலும் கண்டுபிடிப்பதற்கு கவனமாய் கருத்தூன்றி பாருங்கள். இப்படிப்பட்ட முன்தயாரிப்பு ஊழியத்தில் பத்திரிகைகளை அளிப்பதில் நீங்கள் நம்பிக்கையான மனநிலையை கொண்டிருப்பதற்கு உதவி செய்யும்.
4 ஒரு சிலர் சந்தாக்களை அளிப்பதில் எதிர்மறையான மனநிலையைக் கொண்டிருக்கக்கூடும். அவர்கள் வீட்டுக்காரரை உரையாடலில் உட்படுத்தக்கூடும் சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளையும்கூட கலந்தாலோசிக்கக்கூடும். ஆனால் சந்தாவை அளிப்பதற்கு மாறாக, இரண்டு பத்திரிகைகளையும் ஒரு புரோஷுரையும் சேர்த்து ரூ7-க்கு அளிக்கக்கூடும். ஏன்? விலையின் காரணமாகவா? அப்படியிருக்குமானால் அது நடைமுறையான யோசனையல்ல. உலகப்பிரகாரமான பிரசுரங்களோடு ஒப்பிடுகையில் சந்தாவின் விலை மிகக் குறைவே. வாசகருக்கு அது அருளும் மதிப்புடன் ஒப்பிடுகையில் அது விலைமதிப்பற்றது. ஆகவே நம்பிக்கையான மனநிலையோடிருந்து காவற்கோபுரம் இதழை (ஆங்கிலத்தில்) சந்தாவாக ரூ40-க்கு அளியுங்கள் அல்லது அதன் துணைப் பத்திரிகை விழித்தெழு!-வோடு ரூ80-க்கு அளியுங்கள்.
5 ஒரு சகோதரி சந்தா அளிக்க தீர்மானமாயிருந்தார்கள். எனவே இரண்டு மாத காலப் பகுதியினூடே 50 சந்தாக்களை பெறுவதற்கு தனக்கு இலக்கை வைத்துக் கொண்டார்கள். முதல் மாதத்தில் அவர்கள் 31 சந்தாக்களை பெற்றார்கள். அந்த இரண்டு மாத காலப் பகுதிக்குள்ளாக மொத்தம் 50 சந்தாக்களைப் பெற்றார்கள். சந்தா எடுக்க விரும்பிய ஒரு சிலரிடம் பணம் இல்லாதபோது அந்த வீட்டுக்காரரிடம் மொத்த பணம் இருக்கும் வரையில் தான் மூன்று அல்லது நான்கு தடவைகள் அவர்களிடம் திரும்ப போய் பார்த்ததாக அந்தச் சகோதரி குறிப்பிடுகிறாள். (yb89, பக்.60-1 மற்றும் yb90 பக்கங்கள் 47-9-ஐயும் பார்க்கவும்.) ஜப்பானில் ஓராண்டுக்குரிய சந்தா சுமார் ரூ235-க்கு இணையாக இருக்கையில் சகோதரர்கள் 71,600 சந்தாக்களை அக்டோபர் மாதத்தில் பெற்றிருக்கிறார்கள். ஓராண்டுக்கு முன்பு அதே மாதத்தில் இருந்ததைக் காட்டிலும் 57 சதவிகித அதிகரிப்பின் புதிய உச்சநிலை.
தைரியமாக தொடருங்கள்
6 நமது ஊழியத்தில் நாம் தைரியமாக இருப்பதற்கு எல்லாக் காரணங்களும் இருக்கின்றன. நாம் யெகோவாவின் ஆதரவைக் கொண்டவர்களாக இருக்கிறோம். (அப். 14:3) இன்று நற்செய்தியைப் பரப்புவதற்கு யெகோவா பயன்படுத்தும் பிரதான கருவிகளில் ஒன்று காவற்கோபுரம். நாம் சந்தாவை அளித்துவிட்டு அதன் பின்பு அதை வாசிக்கும்படி உற்சாகப்படுத்துவதற்கு அவர்களைத் திரும்ப திரும்ப சந்திப்போமானால், நமது ஊக்கமான முயற்சி மக்களின் உயிரைப் பாதுகாக்கக்கூடும். எனவே, நாம் நமக்கு அறிமுகமான எல்லாரிடமும் மற்றும் நாம் ஊழியத்தில் சந்திக்கக்கூடிய ஆட்களிடமும் அதிக உற்சாகத்துடனும் தைரியத்துடனும் சந்தாக்களை அளிப்போமாக.