கடவுளுக்கும் அயலானுக்கும் செயல்மூலம் அன்பு காட்டுதல்
1 “போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது?” என்று கேட்டவனுக்கு பதில் அளிப்பவராக இயேசு இவ்வாறு கூறினார்: “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக. இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக.”—மத். 22:36-39.
2 இயேசு தன் வாழ்க்கையை வாழ்ந்த விதத்திலிருந்து கடவுள் பேரில் அவருக்கிருந்த ஆழ்ந்த அன்பு தெளிவாக இருந்தது. “நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாக இருக்கிறது” என்று அவர் கூறினார். (யோவான் 4:34) பிறனிடத்தில் அவருக்கு இருந்த மெய் அன்பு, அவர் வைராக்கியத்துடன் யெகோவாவின் ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படி தூண்டிற்று. அவர் சுகப்படுத்தும் காரியத்தையும் செய்தார். மனிதவர்க்கத்தின் சார்பாக அவர் தம்முடைய உயிரை மீட்கும்பொருளாக கொடுக்கையில் அன்பின் எத்தகைய உன்னத வெளிகாட்டாக அது இருந்தது! கடவுளுக்கும் அயலானுக்கும் அன்பை செயல்மூலம் காட்டுவதில் நாம் எவ்வாறு இயேசுவை பின்பற்றக்கூடும்?
அன்பை எவ்வாறு செயல்மூலம் வெளிக்காட்டுவது
3 கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை மற்றவர்களுக்குச் சொல்வது இதைச் செய்வதற்கு பிரதான வழியாகும். நாம் நம்பிக்கைக்கு ஆதாரமும் இன்றைய நெருக்கடியான காலங்களை சமாளிக்க தகவலும் உதவியும் மக்களுக்கு கொடுப்பது அவசியம். (2 தீமோ. 3:1) கடவுளுடைய ராஜ்யத்தில் நமக்கு இருக்கும் விசுவாசம், நாம் சத்தியத்தைக் குறித்து கேட்க யாவருக்கும் ஒரு வாய்ப்பைக் கொடுக்க ஊக்கமான விருப்பத்துடன் அதைப்பற்றி பேசும்படி நம்மைத் தூண்டுவிக்க வேண்டும். கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றியும் பூமியைக் குறித்த அவருடைய நோக்கங்களைப் பற்றியும் பேசுவது அவரைக் கனப்படுத்துகிறது. நமக்கு கடவுளிடமாகவும் அயலானிடமாகவும் இத்தகைய அன்பு இருக்கிறதா? ராஜ்ய பிரசங்க வேலையில் நாம் முழு பங்கை கொள்கிறோமா? உறவினரிடமும், அக்கம் பக்கத்திலுள்ளவர்களிடமும் மற்றவர்களிடமும் சாட்சி கொடுக்க கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் நாம் பயன்படுத்துகிறோமா? நாம் யாவரும் கடவுள் பேரிலும் அயலான் பேரிலும் நமக்கு இருக்கும் அன்பின் இத்தகைய மெய்யான அத்தாட்சியை அளிக்க வேண்டும்.
4 திறமை வாய்ந்தவர்களும் நன்கு கல்வி பெற்றவர்களுமே இத்தகைய முக்கிய செய்தியை எடுத்துச் செல்ல தகுதியுள்ளவர்கள் என்று சிலர் நினைத்திருக்கிறார்கள். இதற்கு மாறாக, யெகோவாவின் பேரில் நாம் சார்ந்திருப்பது தானே முக்கியம். (லூக்கா 11:13; 1 கொரி. 1:26, 29, 31) கடவுள் பேரிலும் அயலான் பேரிலுமுள்ள அன்பு நாம் தயக்கமுள்ள உணர்ச்சியை மேற்கொண்டு ஊழியத்தில் மெய்யான மகிழ்ச்சியை அனுபவிக்க உதவும். “மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய்” இருக்கிறார்கள் என்பதை நாம் உணரும்போது நாம் இனிமேலும் நம்மைக் குறித்து அதிக கவலையுள்ளவர்களாய் இருப்பதில்லை.—மத். 9:35, 36.
மார்ச் மாதத்தில் எவ்வாறு பங்குகொள்ளலாம்
5 மார்ச் மாதம், சங்கத்தின் பழைய புத்தகங்களை, ஒன்று ரூ.5/-க்கு அளிப்பதன் மூலம் கடவுளுக்கும் அயலானுக்கும் அன்பு காட்ட சிறந்த வாய்ப்பு நமக்கிருக்கிறது. இந்த பழைய புத்தகங்கள் பற்பல பொருட்களைச் சிந்திக்கின்றன. அவற்றில் சில நிச்சயமாகவே நம் பிராந்தியத்திலுள்ள மக்களுக்கு கவர்ச்சியுள்ளதாக இருக்கும். நற்செய்திக்குப் பிரதிபலிக்க இந்த பிரசுரங்கள் அநேகருக்கு ஏற்கெனவே உதவியிருப்பதன் காரணமாக, அவற்றின் பிரயோஜனத்தை அவை நிரூபித்து காட்டியிருக்கின்றன. ஆகவே இந்தப் பிரசுரங்கள் கையிருப்பில் இருக்குமானால், ஜீவனின் வழியில் உதவப்படக்கூடிய அக்கறை காட்டும் ஆட்களின் கைகளில் அவை கிடைக்குமாறு செய்ய நாம் ஒருமுகப்பட்ட முயற்சியை எடுக்க உற்சாகப்படுத்தப்படுகிறோம்.
6 கையிருப்பில் பழைய புத்தகங்கள் இல்லாத சபைகள் 192 பக்கங்களைக் கொண்ட வேறு எந்த புத்தகத்தையும் அளிக்கலாம். உங்கள் சபையில் கையிருப்பிலுள்ள மற்றெல்லா பழைய புத்தகங்களையும் பயன்படுத்த விசேஷ முயற்சி எடுக்க வேண்டும்.
7 நல்ல வீட்டுக்கு-வீடு பதிவு சீட்டை வைக்க நிச்சயமாயிருங்கள். பிராந்தியத்தை அடிக்கடி வேலை செய்கையில், இது மிகவும் முக்கியம். ஒருவர் அக்கறை காட்டும்போது, அவருடைய பெயரைக் கண்டுபிடிக்க முயற்சி எடுங்கள். பிரசுரங்கள் விட்டுவந்த எல்லா இடங்களையும் குறித்துக்கொள்ளுங்கள், பிரசுரங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அக்கறை காட்டுபவர்களையும் குறித்துக்கொள்ளுங்கள். எதைக் குறித்து பேசினீர்கள், அந்த நபர் எதில் அக்கறை காட்டினார், அவரை பெரும்பாலும் வீட்டில் காணக்கூடிய நேரம், இவற்றை குறித்துக்கொள்ளவும். ஆட்கள் வீட்டில் இல்லாத இடங்களையும் கவனமாக குறித்து வைத்துக்கொள்ளவும். இந்த விஷயத்தில் நல்ல ஒழுங்கமைப்பானது நாம் ஊழியத்தில் அதிக பலன்தருபவர்களாய் இருக்க உதவும்.
8 இரண்டு பிரதான கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது முதற்நூற்றாண்டில் இருந்ததுபோலவே, இன்றும் கிறிஸ்தவர்களுக்கு முக்கியமானது. மார்ச் மாதம் நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் யெகோவாவின் ராஜ்யத்தைப் பற்றி அறிவிப்பதன் மூலமாக கடவுளிடமாகவும் அயலானிடமாகவும் நாம் நம்முடைய அன்பை செயல்மூலம் காட்டுவோமாக!