நீங்கள் உங்கள் மறுசந்திப்புகளைச் செய்கிறீர்களா?
1 யெகோவாவின் சாட்சிகளின் 1989 வருடாந்தர புத்தகத்தில் வைராக்கியமான நடவடிக்கையின் எத்தகைய ஒரு அறிக்கையை நாம் காண்கிறோம்! கோடிக்கணக்கான ஆட்கள் நற்செய்தியை கேட்டிருக்கிறார்கள், அக்கறை காட்டுபவர்களிடம் கோடிக்கணக்கான பிரசுரங்கள் விட்டுவந்திருக்கிறோம். சத்தியத்தின் விதைகள் விதைக்கப்பட்ட இடங்களில் மறுசந்திப்புகள் செய்யப்படவேண்டிய அவசியத்தின் ஊக்கமான உணர்ச்சியை இந்த அறிக்கை உண்டுபண்ணுகிறது. (1 கொரி. 3:6, 7) மேலுமான கவனம் அவசியம். கடந்த ஆண்டு 28,80,17,474 மறுசந்திப்புகள் செய்த யெகோவாவின் ஜனங்களுக்கு இந்த வேலையில் முழுவதுமாக பங்குகொள்ளுதல் மிக்க மகிழ்ச்சியை கொண்டுவந்திருக்கிறது.
எப்பொழுது?
2 அக்கறை காட்டும் ஆட்களை நீங்கள் காணும்போது, ஆரம்பத்தில் காட்டும் அக்கறை தணிந்துவிடுவதற்கு முன்பு நீங்கள் மறுசந்திப்பு செய்கிறீர்களா? ஒருசில நாட்களுக்குள் மீண்டும் சந்திப்பது சிறந்த விளைவுகளை உடையதாயிருக்கிறது. நீங்கள் அளிக்கும் பிரசுரங்கள், கவனித்த அக்கறை, இவற்றைப் பற்றிய ஒரு திருத்தமான பதிவை வையுங்கள். ஒழுங்காக இந்த பதிவுகளை விமர்சனம் செய்து, நீங்கள் மறுசந்திப்புகளை உடனடியாக செய்ய நிச்சயமாயிருங்கள். உங்களுடைய ஊக்கமான விடாமுயற்சியை யெகோவா ஆசீர்வதிப்பார். அக்கறை காட்டினவர்களுக்கும் அதிக நன்மை பயக்கும்.
3 உங்கள் இடத்தின் சீதோஷ்ண நிலை நீங்கள் மார்ச் மாதம் ஊழியத்தில் வெளியே செல்வதைக் கடினமாக்கக்கூடும். அப்படியானால், அதிகப்படியான நேரம் மறுசந்திப்புகளைச் செய்வதிலும் வேதப்படிப்புகளைத் துவங்குவதிலும் நீங்கள் ஏன் செலவுசெய்யக்கூடது? ஒழுங்காக பத்திரிகைகளை ஏற்றுக்கொண்டுவரும் ஆட்கள் இப்பொழுது ஒரு வேதப்படிப்பை ஏற்றுக்கொள்ள மனமுள்ளவர்களாக இருப்பார்களா? ஒரு சகோதரர் ஒருவருக்கு இரண்டு பத்திரிகைகளை அளித்தார், ஆனால் அவருக்கு அக்கறை இல்லை என்று எண்ணி மறுசந்திப்பு செய்யவில்லை. அந்த ஆள் ஆவிக்குரிய உதவிக்காக கேட்டு சபைக்கு எழுதினார். பத்திரிகை கொடுத்தவர்களை மீண்டும் சந்திப்பதன் மூலமாக சிறந்த படிப்புகள் கிடைத்திருக்கின்றன என்று அநேக பயனியர்கள் அறிக்கை செய்கிறார்கள். ஞாபகார்த்த தினத்தன்று அல்லது வேறு கூட்டங்களுக்கு எப்போதாவது வந்திருந்த ஆட்கள் யாராகிலும் படிக்க விருப்பமுள்ளவர்களாக இருப்பார்களா?
ஒரு வேதப்படிப்பைத் துவங்குதல்
4 என்றும் வாழலாம் புத்தகம் நம்முடைய ஊழியத்தில் ஒரு திறம்பட்ட கருவியாக நிரூபித்திருக்கிறது. ஆனால் அதை அளிப்பதானது ஒரு வேதப்படிப்பை துவங்குவதனிடமாக நாம் எடுக்கும் முதற்படி மட்டுமே. முதற் சந்திப்பில் அல்லது மறுசந்திப்பில் நீங்கள் கேட்கலாம்: “என்றும் வாழ்வதைக் குறித்து நீங்கள் எப்பொழுதாவது சிந்தித்திருக்கிறீர்களா? [பதில் சொல்ல அனுமதிக்கவும்.] நிச்சயமாகவே இன்று அநேகரை வதைத்து வரும் துன்பங்கள், வன்முறை, பசி ஆகியவற்றை நித்திய காலமாக சகிக்க நம்மில் எவருமே ஆசைப்படமாட்டோம்.” பக்கங்கள் 11-13-க்கு நீங்கள் திருப்புகையில், நீங்கள் இவ்வாறு கேட்கக்கூடும்: “ஆனால் இத்தகைய நிலைமைகளின் கீழ் நீங்கள் என்றுமாக வாழமுடியுமென்றால் அது மகிழ்ச்சியூட்டுவதாக இருக்கும் அல்லவா? [பதில் சொல்ல அனுமதிக்கவும்.] இத்தகைய பரிபூரண நிலைமைகளின் கீழ் வாழ நம் பங்கில் ஒன்றைத் தேவைப்படுத்துகிறது. பாரா 19 என்ன சொல்லுகிறது என்பதை கவனிக்கவும். [வாசியுங்கள்.] இத்தகைய அறிவை உட்கொள்ள இந்தப் புத்தகம் எவ்வாறு அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை நான் உங்களுக்கு காண்பிக்க அனுமதியுங்கள்.”
5 ஒழுங்கான பிரசுர அளிப்பை ஏற்றுக்கொள்ளாத ஆட்களிடம் அல்லது ஆட்கள் இல்லாத வீடுகளில் துண்டுபிரதிகளை விட்டுவர பிரஸ்தாபிகள் உற்சாகப்படுத்தப்படுகிறார்கள். மறுசந்திப்புகளின்போது நம்முடைய படிப்பு முறையை நடித்துக் காட்ட இவை திறம்பட்ட விதத்தில் உபயோகிக்கப்படலாம். ஒவ்வொரு துண்டுபிரதியும் இரண்டு அல்லது மூன்று குறிப்புகளைக் கலந்தாலோசிக்கின்றன. வீட்டுக்காரருடன் ஒரு சமயத்தில் ஒரு பாராவை சேர்ந்து வாசியுங்கள். கேள்வி கேட்கப்படுகையில், நிறுத்தி, வீட்டுக்காரர் தன் கருத்தைக் கூறும்படி அழைப்பு கொடுக்கவும். கொடுக்கப்பட்டுள்ள வேதவசனங்களை எடுத்து பார்த்து சிந்திக்கவும்.
6 மறுசந்திப்புகளைச் செய்யவும், அக்கறையை வளர்த்து வேதப்படிப்புகளை நடத்தவும் குறிப்பிட்ட நேரத்தை அட்டவணையிடுவது சிறந்தது என்று அனுபவம் காட்டுகிறது. இந்த வேலைக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை கொண்டிருந்தால், நாம் அக்கறை காட்டுபவர்களை உடனடியாக சந்தித்து, அக்கறையை வளர்க்க உதவியாக இருக்கும். ஒருவேளை சாயங்கால வேளையில், வார கடைசியில், அல்லது வீட்டுக்கு-வீடு ஊழியத்திற்கு பிறகு இதற்காக நேரத்தை ஒதுக்கி வைக்கலாம். உங்களுக்கும் உங்களுடைய பிராந்தியத்திற்கும் ஏற்றதுமான மிகச் சிறந்த நேரம் எது என்பதைத் தீர்மானியுங்கள். பிறகு, சீஷராக்கும்படியாக இந்த வேலையில் ஒழுங்காக பங்கு கொள்ள பிரயாசப்படுங்கள்.—மத். 28:19, 20.