மறுசந்திப்புகள் செய்ய வேண்டிய உத்தரவாதத்தைஏற்றுக் கொள்ளுங்கள்
1 மறுசந்திப்புகளைச் செய்வதில் நம்மால் ஆனவரை முழுமையாகப் பங்கு கொள்வதற்கு அநேக காரணங்கள் இருக்கின்றன. பவுல் செய்ததைப் போலவே, நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வேலையை முழுமையாக செய்து முடிக்க நாம் விரும்புகிறோம். (அப். 20:21, 24) அக்கறை காண்பிக்கும் அனைவரையும் நாம் திரும்பச் சென்று சந்திப்பதில் நாம் முழுமையாய் இருந்தால், நம்முடைய ஊழியத்தை முழுமையாக செய்து முடிக்க முயற்சி செய்கையில் ஒரு நல்ல மனச்சாட்சியைக் காத்துக் கொள்வோம்.—2 தீமோ. 4:5.
2 அறிவு நம்மை உத்தரவாதமுள்ளவர்களாக ஆக்குகிறது: ஜீவன்கள் இக்காட்டான நிலையில் இருக்கின்றன என்ற உண்மை, மறுசந்திப்புகள் செய்வதில் நாம் ஊக்கமாக இருக்கும்படி நம்மை உந்துவிக்க வேண்டும். (யோவான் 17:3) யெகோவாவின் நியாயத்தீர்ப்பைப் பற்றிய நம்முடைய அறிவும், அர்மகெதோன் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது என்பதும், துன்மார்க்கரை எச்சரிக்கும்படி நம்மைத் தூண்ட வேண்டும். அது மட்டுமல்லாமல், ‘பூமியின் மேல் செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற’ ஆட்களுக்கு உதவி செய்யவும் நம்மைத் தூண்ட வேண்டும். (எசேக். 9:4) யெகோவாவின் காணக்கூடிய அமைப்போடு கூட்டுறவு கொள்ள அவர்கள் கொண்டுவரப்பட வேண்டும்.
3 சத்தியத்தைத் திருத்தமாகப் புரிந்து கொள்வதற்கு, ஜனங்களுக்கு உதவி தேவைப்படுகிறது. (அப். 8:30, 31; 18:26) விதைக்கப்பட்ட சத்திய விதைகளுக்கு “நீர்ப்பாய்ச்சு”வதற்காகத் திரும்ப செய்யவேண்டிய நம்முடைய உத்தரவாதத்தை ஏற்றுக் கொள்வதற்கு இது மற்றொரு காரணமாகும். யெகோவாவைப் பற்றியும், அவருடைய அதிசயமான நோக்கங்களைப் பற்றியும் நாம் திருத்தமான அறிவைப் பெற்றுக் கொள்வதற்கு யாரோ ஒருவர் நம்மை மறுபடியும், மறுபடியும் சந்தித்ததனால் நாம் இந்தளவு ஆவிக்குரிய முன்னேற்றம் அடைந்திருக்கிறோம் அல்லவா?—மத். 7:12.
4 அன்பையும் வைராக்கியத்தையும் காண்பியுங்கள்: மறுசந்திப்புகள் செய்வது, ஜனங்களிடமாக நாம் கொண்டிருக்கும் அன்பை வெளிக்காட்டுவதற்கு ஒரு சிறந்த வழியாகும். குருடாயிருந்தும் ஒழுங்கான பயனியராக சேவிக்கும் ஒரு சகோதரர் இவ்வாறு சொன்னார்: “பைபிளிலிருந்து நான் கற்றுக்கொண்டவைகளை மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும் என்பது நான் முழுக்காட்டுதல் பெற்றதிலிருந்து என்னுடைய விருப்பமாயிருந்தது. எனக்கிருக்கும் இந்த ஊனம் இதைச் செய்வதிலிருந்து என்னைத் தடை செய்யவில்லை என்பதைக் குறித்து நான் சந்தோஷப்பட்டேன் . . . தெருவில் இருக்கும் ஒவ்வொரு வீட்டைப் பற்றியும் என் மனதிலே ஒரு பதிவை வைத்துக் கொள்ளவும் நான் கற்றுக் கொண்டேன். இந்த விதத்தில், பைபிள் படிப்பில் அக்கறையாயிருக்கும் நபர்கள் பேரில் மறுசந்திப்புகள் செய்ய என்னால் முடிந்தது.” குருடாயிருக்கும் இந்தச் சகோதரர் தன்னுடைய இருதயத்தின் மூலம் உண்மையிலேயே காண முடிகிறது, மறுசந்திப்புகளைச் செய்வதிலிருந்தும், தன்னுடைய கிறிஸ்தவ அன்பை மற்றவர்களுக்கு வெளிக்காட்டுவதிலிருந்தும் அவர் பின்வாங்குவதில்லை.
5 மறுசந்திப்புகள் செய்யும்போது, பைபிளை நன்கு பயன்படுத்துவதற்கும், நம்மில் இருக்கும் நம்பிக்கைக்கான காரணங்களைக் கொடுப்பதற்கும் நமக்கு அடிக்கடி வாய்ப்பு இருக்கிறது. (1 பே. 3:15) இது வீட்டுக்காரருக்கு உதவியாக இருப்பது மட்டுமல்லாமல், சத்தியத்துக்கான நம்முடைய சொந்த வைராக்கியத்தையும், போற்றுதலையுங்கூட தூண்டி எழுப்புகிறது. மறுசந்திப்புகள் செய்வது சந்தோஷத்தைக் கொண்டு வருகிறது, இதை வேறு எந்த வழியிலும் பெற்றுக் கொள்ள முடியாது. அந்தச் சந்தோஷத்தின் தரம் குறைந்து போக வேண்டிய தேவையில்லை. நாம் வைராக்கியத்தோடு மறு சந்திப்புகள் செய்வதன் மூலம், அது எப்போதும் புதுப்பிக்கப்படலாம்.—நீதி. 10:22.
6 மறு சந்திப்புகள் செய்ய வேண்டிய நம்முடைய உத்தரவாதத்தை, நாம் கருத்தார்ந்த விதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். யெகோவாவின் ஜனங்கள் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய நன்மையை நிறுத்தி வைத்துக் கொள்வதில்லை. இது 1991-ம் ஊழிய ஆண்டின் போது நாம் செய்த உலகளாவிய வேலையிலிருந்து தெரிகிறது. (நீதி. 3:27) நாம் 34,49,26,952 மறுசந்திப்புகளைச் செய்தோம். 39,47,261 பைபிள் படிப்புகளை நடத்தினோம். யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்ட 3,00,945 புதிய சீஷர்களும் இருந்தனர். மறுசந்திப்புகள் செய்ய வேண்டிய உத்தரவாதத்தை ஏற்றுக் கொள்வதற்கு நம்முடைய மனமுவந்த விருப்பம்தானே இந்த மகத்தான அதிகரிப்பு ஏற்படுவதற்குக் காரணமாயிருந்ததிருக்கிறது. உத்தரவாதத்தை ஏற்றுக்கொள்ளும் இந்த மனவிருப்பம் இருந்திராவிட்டால், இது ஒருபோதும் ஏற்பட்டிருக்காது.—1 தெச. 2:8.