பிப்ரவரி மாத ஊழியக் கூட்டங்கள்
பிப்ரவரி 3-ல் துவங்கும் வாரம்
பாட்டு 201 (102)
5 நிமி: சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியம் பிரதியிலிருந்து பொருத்தமான அறிவிப்புகளும்.
20 நிமி: “உலகளாவிய பாதுகாப்பு அண்மையில் இருக்கிறது என்பதை அனைவரும் அறியட்டும்.” சுருக்கமான முன்னுரைக் குறிப்புகளைச் சொல்லிய பின்பு, ஒவ்வொரு இணைப்புக்கூற்றையும் சிந்தியுங்கள். நேரம் அனுமதிக்குமானால், நன்கு தயார் செய்திருக்கும் பிரஸ்தாபிகள் அவற்றை உபயோகிப்பதை நடித்துக் காட்டுமாறு செய்யுங்கள். நடைமுறையானதாக இருக்குமேயானால், ஒரு இளைஞன் பாரா 4-ஐ நடித்துக் காட்டும்படி செய்வது நன்றாயிருக்கும். ஒரு அக்கறைக்குரிய வேதப்பூர்வ எண்ணத்தையாவது பிரஸ்தாபி வீட்டுக்காரரின் மனதில் விட்டு வரும்படி பாரா 5-ல் இருக்கும் இடை இணைப்புக்கூற்று அனுமதிக்கிறது. பக்கம் 4-ல் இருக்கும் முன்னுரைகளில் ஒன்றையும், இணைப்புக்கூற்றுகளில் ஒன்றையும் உபயோகிக்கும்படி சகோதரர்களை உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: “மனச் சோர்வுற்றிருப்பவர்கள் மகிழ்ச்சியைத் திரும்பவும் பெறுவதற்கு எவ்வாறு உதவி செய்யலாம்?” ஆங்கில காவற்கோபுரம், மார்ச் 15, 1990, பக்கங்கள் 26-30 வரை உள்ள கட்டுரையை அடிப்படையாகக் கொண்ட பேச்சு. (இந்திய மொழிகளில்: “உங்களை மகிழ்விக்கக்கூடிய வேலை,” காவற்கோபுரம், அக்டோபர் 1, 1990.
பாட்டு 30 (117), முடிவு ஜெபம்.
பிப்ரவரி 10-ல் துவங்கும் வாரம்
பாட்டு 126 (25)
5 நிமி: சபை அறிவிப்புகள்.
10 நிமி: “வெளி ஊழியத்துக்காகத் தயாரிப்பதன் பேரில் ஒரு நடைமுறையான அணுகுமுறை.” சபையாரோடு கட்டுரையைக் கலந்தாலோசியுங்கள். இந்த அணுகுமுறை அவர்களுக்குப் பயனளிக்கும் வழிகளைப் பற்றி திட்டவட்டமான குறிப்புகளைச் சொல்லும்படி முன்னதாகவே நியமிக்கப்பட்ட மூன்று அல்லது நான்கு பிரஸ்தாபிகளைப் பின்பு அழையுங்கள். உதாரணமாக, பல வகையான அளிப்புகள், சபை பிராந்தியத்துக்கு ஏற்றவாறு பொருளை மாற்றியமைத்துக் கொள்ளும் வழிகள், வளைந்து கொடுக்கும் தன்மை, அல்லது பிரஸ்தாபிகள் அளிப்புகள் செய்வதற்குப் பொருளைத் தேர்ந்தெடுக்க இந்த அணுகுமுறை அனுமதிக்கிறது ஆகியவற்றின் பேரில் அவர்கள் குறிப்பு சொல்லலாம். வெளி ஊழியத்திற்கான கூட்டங்களுக்குப் பிரஸ்தாபிகள் தங்கள் சொந்த நம் ராஜ்ய ஊழியம் பிரதியைக் கொண்டுவரும்படி உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: “வீட்டுக்காரரைச் செவிகொடுத்துக் கேட்க வைக்கும் முன்னுரைகள்.” சபை பிராந்தியத்தில் எப்படிப்பட்ட ஆட்கள் இருக்கின்றனர் என்பதைச் சிந்தியுங்கள். எத்தகைய பிரச்னைகள் வீட்டுக்காரர்களுக்கு முக்கியமானதாயிருக்கிறது? சபை பிராந்தியத்தில் வெற்றிக்கு வழிவகுக்கக்கூடியதாய் இருக்கும் என்று தோன்றும் முன்னுரையின் பேரிலும் அளிப்பின் பேரிலும் கவனம் செலுத்துங்கள். நன்கு தயாரித்திருக்கும் பிரஸ்தாபி இந்த அளிப்பை நடித்துக் காட்டி, சமாதானமும் பாதுகாப்பும் புத்தகம் (பழைய பதிப்பு) அல்லது வேறு ஏதாவது பழைய புத்தகத்தைச் சிறப்பித்துக் காண்பித்து, விசேஷ அளிப்பைக் கொடுக்குமாறு செய்யுங்கள். பிரஸ்தாபி கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் அளிப்பைச் செய்ய வேண்டும். பிறகு பள்ளி-வயது இளைஞன் ஒருவன் இதே அளிப்பை நடித்துக் காட்டி, பத்திரிகைகளை அளிப்பதன் மூலம் முடிக்கலாம். வெளி ஊழியத்தில் இம்முறையை முயற்சி செய்து பார்க்கும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
10 நிமி: சபை தேவைகள் அல்லது “உலகத்தினிடமாகவும், அதன் பாகமாக இருக்கும் ஜனங்களிடமாகவும் மெய்க் கிறிஸ்தவர்களின் மனநிலை.” நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம், பக்கங்கள் 437-8-ஐ அடிப்படையாகக் கொண்ட, மூப்பரால் கொடுக்கப்படும் பேச்சு.
பாட்டு (130 (58), முடிவு ஜெபம்.
பிப்ரவரி 17-ல் துவங்கும் வாரம்
பாட்டு 176 (1)
10 நிமி: சபை அறிவிப்புகளும், தேவராஜ்ய செய்திகளும், கணக்கு அறிக்கையும், சங்கம் நன்கொடை பெற்றுக்கொண்டதாக தெரிவித்திருக்கும் கடிதங்களும்.
15 நிமி: பயனியர் சேவை எனக்கா? இந்தத் தேசத்தில் இருக்கும் பிரஸ்தாபிகளில் 5 சதவீதத்தினர் ஒழுங்கான பயனியர்களாக இருக்கின்றனர். ஒப்பிட்டுப் பார்ப்பதற்காகச் சபை எண்ணிக்கைகளைக் கொடுங்கள். விரையில் பள்ளிப் படிப்பை முடிக்கப் போகும் இளைஞர்கள் உட்பட நம்மில் இன்னும் அதிகமானோர் முழு நேர சேவைக்காக நேரம் ஒதுக்க முடியுமா? மூன்று ஒழுங்கான பயனியர்களைப் பேட்டி காணுங்கள். கூடுமானால் ஓர் இளம் நபரை, ஒரு மனைவியை, வேலையிலிருந்து ஓய்வு பெற்ற ஒருவரைப் பேட்டி காணுங்கள். (ஒழுங்கான பயனியர்கள் இல்லையென்றால், துணைப் பயனியர்கள் அல்லது பயனியர் ஊழியம் செய்த பிரஸ்தாபிகளை உபயோகித்துக் கொள்ளலாம்.) பண விவரங்களைச் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் இருக்கும் இடத்தில் என்ன விதமான பகுதி-நேர வேலைகள் கிடைக்கும்? ஒவ்வொருவரும் செலவுகளை எவ்வாறு சமாளிக்கின்றனர்? செலவழிக்கும் பழக்கங்களில் என்ன மாற்றங்களை அவர்கள் செய்திருக்கின்றனர்? தேவைப்படும் மணிநேரங்களை அடைவதற்கு அட்டவணையைச் சிந்தியுங்கள். ஆரோக்கியம் அதை அவர்கள் எவ்வாறு வெற்றிகரமாக எதிர்ப்பட்டிருக்கின்றனர்? பேட்டிகள் உடன்பாடானதாகவும், உற்சாகமூட்டுவதாகவும் இருக்க வேண்டும். இன்னும் அநேகர் முழு நேர ஊழியத்தை ஏற்றுக்கொள்ளலாமா என்பதைத் தீர்மானிக்க, தனிப்பட்ட சூழ்நிலைமைகளைச் சிந்தித்துப் பார்க்கும்படி சபையாரை அன்புடன் உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: ஒற்றை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எவ்வாறு உதவி செய்யலாம்? சுருக்கமான முன்னுரை. அதைத் தொடர்ந்து, ஒரு தாயும் இரண்டு பிள்ளைகளும் வெளி ஊழியத்துக்காகத் தயாரிப்பதைப் போன்ற ஒரு நடிப்பு. என்றைக்கும் இல்லாத அளவு இன்று ஒற்றை பெற்றோர் குடும்பங்கள் அமைப்பில் இருக்கின்றன. தீமோத்தேயுவின் தாயும், பாட்டியும் தீமோத்தேயுவுக்குச் சத்தியத்தைப் படிப்படியாகப் புகட்டிய விதம், எல்லா பெற்றோர்களும் பின்பற்றுவதற்கு ஒரு சிறந்த முன்மாதிரியை வைக்கிறது. (2 தீமோத்தேயு 1:5; 3:14, 15) நடிப்பு: தாய், பருவ வயது மகள், இளைய மகள் மாலை உணவை முடித்த பின்பு சமையலறையில் இருக்கும் மேசையில் உட்கார்ந்திருக்கின்றனர். பாத்திரங்களைக் கழுவுவதற்கு முன்பு, அவர்கள் ஊழியத்தில் உபயோகிக்கப் போகும் அளிப்புகளைப் பழகிப்பார்க்கலாம் என்றும் தான் வீட்டுக்காரராக இருக்கப் போவதாகவும் தாய் சொல்கிறாள். இளைய மகள் நம் ராஜ்ய ஊழியம், பக்கம் 4-லிருந்து ஒரு முன்னுரையைத் தேர்ந்தெடுத்துத் தன் தாயிடம் சொல்கிறாள். அவள் அதை நன்றாக செய்ததற்காகத் தாய் அவளைப் பாராட்டுகிறாள். சங்கம் கொடுத்துள்ள வசனத்தை வாசிக்கும்படி மகளைக் கேட்கிறாள். இளைய மகள் ஏசாயா 9:6, 7-க்கு விரைவாகத் திருப்பி, அதை வாசிக்கிறாள். பிறகு, அவள் எவ்வாறு புத்தகங்களை அளிப்பாள் என்று தாய் பெரிய மகளைக் கேட்கிறாள். நம் ராஜ்ய ஊழியம் பக்கம் 1-லிருந்து ஓர் இணைப்புக்கூற்றை மகள் தேர்ந்தெடுத்து அதைத் தன் தாயிடம் சொல்கிறாள். தாய் அவளுக்கு பாராட்டுத் தெரிவிக்கிறாள். வெளி ஊழியத்தில் புத்தகங்களை அளிப்பதற்கு முன்னுரைகளையும் இணைப்புகளையும் பழகிப்பார்க்கும்படி தாய் இரண்டு மகள்களையும் உற்சாகப்படுத்துகிறாள். அவர்கள் இன்னும் சிறிது நேரம் பழகிப்பார்த்து விட்டு, பின்பு பாத்திரங்களைக் கழுவ வேண்டும் என்று மகள்களுக்குச் சொல்லப்படுகிறது. சபையில் இருக்கும் எல்லாக் குடும்பங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கு அன்பான உதவி கொடுக்க வேண்டும் என்று உற்காகப்படுத்துவதன் மூலம் மூப்பர் தன் பாகத்தை முடித்துக் கொள்ளுகிறார்.
பாட்டு 183 (73), முடிவு ஜெபம்.
பிப்ரவரி 24-ல் துவங்கும் வாரம்
பாட்டு 192 (10)
5 நிமி: சபை அறிவிப்புகளை மூப்பர் கையாளுகிறார். சபை தேவைகளையும் சிந்திக்கிறார். நேரம் அனுமதிக்குமேயானால், தற்போதைய பத்திரிகளிலிருந்து பல்வேறு பேச்சுக் குறிப்புகளைக் கலந்தாலோசியுங்கள். நம் ராஜ்ய ஊழியத்தின் இந்த இதழில் இருக்கும் முன்னுரைகளிலிருந்தும், இணைப்புக்கூற்றுகளிலிருந்தும் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். பின்பு நன்கு தயாரித்திருக்கும் பிரஸ்தாபி முன்னுரைகளிலிருந்தும், இணைப்புக்கூற்றுகளிலிருந்தும் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். பின்பு நன்கு தயாரித்திருக்கும் பிரஸ்தாபி முன்னுரையையும், இடை இணைப்பையும் உபயோகித்து, பத்திரிகைகளைக் கொடுத்து ஒரு முழு அளிப்பையும் நடித்துக் காட்டும்படி செய்யுங்கள். கொடுக்கப்பட்டிருக்கும் அளிப்புகளை உபயோகிப்பதன் மூலமும் ஜனங்களை சம்பாஷணையில் ஈடுபடுத்துவதன் மூலமும், நம்முடைய செய்தியின் பேரில் ஜனங்களின் இருதயங்களில் அக்கறையைத் தூண்டுவது கடினமானது அல்ல என்பதைச் சுட்டிக் காட்டுங்கள்.
18 நிமி: “மறுசந்திப்புகள் செய்ய வேண்டிய உத்தரவாதத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்.” கேள்விகளும் பதில்களும். மறுசந்திப்புகள் செய்வதில் எல்லாரும் முழுமையாக பங்குகொள்ளும்படி உற்சாகப்படுத்துங்கள். மறுசந்திப்பில் என்ன சொல்வது என்பதை அடுத்த வார ஊழிய கூட்டம் கலந்தாலோசிக்கும். அதற்கு வரும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
12 நிமி: நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம், பக்கங்கள் 25–6-லிருந்து “கருச் சிதைவு” பற்றி கலந்தாலோசிப்பு. இது ஆயிரக்கணக்கான ஜனங்களுக்குப் பெரும் கவலைக்குரியதாக இருக்கிறது என்றும், இன்று இது எவ்வாறு செய்தியில் இருக்கிறது என்பதையும் காண்பித்து பொருளுக்கு ஒரு சுருக்கமான முன்னுரையைக் கொடுத்தப் பின்பு, ஒரு சகோதரி பைபிள் படிப்பை நடத்தும் ஒரு நடிப்பை அறிமுகப்படுத்துங்கள். புதிய பைபிள் மாணாக்கர், தான் கர்ப்பிணியாயிருப்பதைக் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டிருப்பதாக சகோதரியிடம் தெரிவிக்கிறாள். குடும்பத்தின் பண நிலைமை நன்றாக இல்லாததால் அவள் அதிக கவலையாயிருப்பதாக விளக்குகிறாள். அவளுடைய உலகப்பிரகாரமான உறவினர்கள் உடனடியாகக் கருச்சிதைவு செய்துகொள்ளும்படி அவளைத் துரிதப்படுத்துகின்றனர். இன்னும் பிறவாத ஒரு குழுந்தையின் ஜீவனை யெகோவா எவ்வாறு நோக்குகிறார் என்பதையும் கருச்சிதைவைச் சரியானதாக அவர் கருதுகிறாரா என்பதையும் பார்ப்பதற்கு நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்துக்குத் திருப்பி, வேத வசனங்களை ஆராய்ந்து பார்க்கலாம் என்று சகோதரி ஆலோசனை கொடுக்கிறாள். அவர்கள் கருச்சிதைவு என்பதன் விளக்கத்தை முதலில் சிந்திக்கின்றனர். பின்பு அவர்கள் கேள்விகள், பைபிள் வசனங்கள், பக்கங்கள் 25-6-ல் இருக்கும் மற்ற குறிப்புகளைக் கலந்தாலோசிக்கின்றனர். உயிரின் புனிதத் தன்மையைக் குறித்துக் காரணகாரிய முறையில் விளக்கவும், அதைப் போற்றவும் சகோதரி அந்த மாணாக்கருக்கு உதவி செய்ய வேண்டும்.
பாட்டு 164 (73), முடிவு ஜெபம்.
மார்ச் 2-ல் துவங்கும் வாரம்
பாட்டு 92 (51)
10 நிமி: சபை அறிவிப்புகள். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் துணைப் பயனியர் உழியம் செய்வதற்கு இப்போது திட்டமிடும்படி பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துங்கள். வெளி ஊழியத்தில் ஒரு பெரும் பங்கைக் கொண்டிருக்க என்ன ஏற்பாடுகள் அவர்கள் செய்யலாம் என்பதைக் காண்பதற்கு ஏப்ரல் அல்லது மே மாதத்தின் போது விடுமுறையில் இருக்கப் போகும் இளைய பிரஸ்தாபிகளையும், குடும்பங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: “நீங்கள் மறுபடியும் செல்லும் போது என்ன சொல்வீர்கள்?” சபையாரோடு கலந்தாலோசியுங்கள். பாராக்களைச் சிந்திக்கையில், அதில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆலோசனைகளை நடித்துக் காட்ட பிரஸ்தாபிகளைத் தயாரிக்கச் சொல்லுங்கள். இந்தச் சுருக்கமான நடிப்புகளை முன்பாகவே ஒத்திகைப் பார்க்க வேண்டும்.
15 நிமி: “உடன் கிறிஸ்தவர்களுக்குப் பணத்தைக் கடன் கொடுத்தல்.” ஆங்கில காவற்கோபுரம், அக்டோபர் 15, 1991, பக்கங்கள் 25-8-ல் உள்ள கட்டுரையின் பேரில் மூப்பர் கொடுக்கும் பேச்சு. (இந்திய மொழிகளில்: லாட்டரி சீட்டுகளைப் பற்றி வாசகரிடமிருந்து வரும் கேள்விகள். காவற்கோபுரம், அக்டோபர் 1, 1990)
பாட்டு 147 (38), முடிவு ஜெபம்.