யெகோவாவின் சாட்சிகளாக நமது அடையாளம்
நற்செய்தியை அறிவிக்கும் ஊழியர்களாக நாம் யெகோவாவின் சாட்சிகளென்று பகிரங்கமாய் அறியப்பட்டிருக்கிறோம். வெளி ஊழியத்தில் நாம் மனமுவந்தளிக்கும் நமது பங்கு கடவுள் பேரிலும் அயலார் பேரிலுமுள்ள அன்பினால் தூண்டப்பட்டிருக்கிறது. இது எந்த ஒரு மனிதனின் அல்லது அமைப்பின் வற்புறுத்தலின் காரணமாக நிறைவேற்றப்படுவதில்லை. எதிர்மாறாக, “நற்செய்தியை” பிரசங்கிக்கவும் சீஷராக்கவும் கடவுளால் கொடுக்கப்பட்ட கட்டளைக்கேற்றபடி நிறைவேற்றப்படுகிறது. (மத். 24:14; 28:19, 20) ஆகையால் பிரஸ்தாபிகள் தங்களை உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸையிட்டி அல்லது ராஜ்ய அக்கறைகளை அதிகரிக்க “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரர்” பயன்படுத்தக்கூடிய வேறு எந்த ஒரு சங்கமானாலும்சரி, அதனுடைய ஏஜென்டுகளாக அல்லது பிரதிநிதிகளாக தங்களைப் பிரதிநிதித்துவம் செய்வதை தவிர்ப்பது நல்லது.—மத். 24:45-47.
விபத்து நேர்ந்தாலோ அல்லது ஏதாவது எதிர்பாரா நெருக்கடி நிலை ஏற்பட்டாலோ அல்லது பலமாடி கட்டிடங்களில் குறிப்பிட்ட சில பிராந்தியங்களில் ஊழியம் செய்கையிலோ நம்முடைய பெயர் மற்றும் நம்முடைய மதசம்பந்தப்பட்ட வேலையின் தன்மை பற்றிய சுருக்கமான வேதப்பூர்வ விளக்கம் கொடுப்பதோடுகூட, பிரஸ்தாபிகளுக்கு ஒருவகையான தனிப்பட்ட அடையாள அட்டை தேவைப்படக்கூடும். விசாரிக்கப்பட்டால், அல்லது ஆதார சான்று கேட்கப்பட்டால், முழுக்காட்டப்பட்ட பிரஸ்தாபிகள் நடத்தும் கண்காணியால் கையொப்பமிடப்பட்ட அடையாள அட்டையை (S-65) பயன்படுத்தலாம். அந்த அட்டையில் உள்ளூர் சபையின் பெயர் குறிப்பிடப்பட்டு, ராஜ்ய நற்செய்தியை பிரசங்கிக்கும் அந்த நபர் அந்தச் சபையுடன் இணைந்தவர் என்று காட்டப்பட்டிருக்கும்.
அவசியப்படும்போது முழுக்காட்டப்பட்ட பிரஸ்தாபிக்கு கொடுக்கப்படக்கூடிய இந்த அடையாள அட்டைகள் (S-65), சபையின் வருடாந்தர பாரங்கள் அனுப்பப்படுகையில் அத்துடன் சேர்த்து அனுப்பப்படும். சபையின் வெளி ஊழியம் சம்பந்தமாக பிரஸ்தாபிகள் யாராகிலும் தனிப்பட்ட பெயர் அட்டைகளை பயன்படுத்தினால் தாங்கள் உவாட்ச் டவர் சொஸையிட்டியின் பிரதிநிதிகள் என்று அந்த அட்டையில் அச்சிடக்கூடது.