இரத்தத்திற்கு விலகியிருக்க நமக்கு உதவும் ஏற்பாடுகள்
தேதி அச்சிடப்படாத அல்லது 3/99 என்ற தேதி அச்சிடப்பட்ட மருத்துவ முன்கோரிக்கை/விடுவிப்பு அட்டையை அல்லது அடையாள அட்டையை ஏற்கெனவே பூர்த்தி செய்திருக்கும் முழுக்காட்டப்பட்ட பிரஸ்தாபிகள் இந்த வருடம் புதிதாக மீண்டும் ஓர் அட்டையைப் பூர்த்தி செய்ய வேண்டியதில்லை. புதிதாக முழுக்காட்டப்பட்ட பிரஸ்தாபிகளும், அவர்களுடைய பிள்ளைகளும், வேறொரு அட்டையை மாற்றிக்கொள்ள விரும்புகிறவர்களும் இந்த அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வசதியாக, டிசம்பர் 29-ல் துவங்கும் வாரத்தில் நடைபெறும் ஊழியக் கூட்டத்தன்று போதுமானவை கையிருப்பில் இருக்கும்படி செயலர் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆகஸ்ட் மாதத்தில் ஒரு வருடத்திற்கு வேண்டிய படிவங்களை எல்லா சபைகளுக்கும் அனுப்பியபோது இந்த அட்டைகளும் அனுப்பப்பட்டன. அப்படி போதுமானவை சபையின் கையிருப்பில் இல்லாவிட்டால், அவற்றை அருகிலுள்ள சபைகளிலிருந்து செயலர் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது அடுத்த முறை பிரசுர ஆர்டரை அனுப்புகையில் கூடுதல் அட்டைகளை சபை ஆர்டர் செய்யலாம்.
அட்டைகளை வெகு கவனமாக வீட்டில் வைத்து பூர்த்தி செய்து வரவேண்டும், ஆனால் கையெழுத்து போடக்கூடாது. அடுத்த சபை புத்தகப் படிப்பின் போது, தேவைப்பட்டால் புத்தகப் படிப்பு கண்காணியின் உதவியோடு, அவை கையொப்பமிடப்பட்டு, சாட்சி கையொப்பமிடப்பட்டு, தேதியிடப்பட வேண்டும். அப்படி கையொப்பமிடுகையில் சாட்சிகளாக இருப்பவர்கள் அதைக் கட்டாயம் பார்க்க வேண்டும்.
மருத்துவ முன்கோரிக்கை/விடுவிப்பு அட்டையிலும் அடையாள அட்டையிலும் காணப்படும் வாசகத்துக்கு இசைய, தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் அத்தகைய முன்கோரிக்கை அட்டைகளை முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகள் தாங்களாகவே எழுதி வைத்துக்கொள்ளலாம்.